கிராம மக்களின் வீடுகளுக்கே சென்று தன்னலமின்றி சிகிச்சை அளிக்கும் 87 வயது ஹோமியோபதி மருத்துவர்!

By YS TEAM TAMIL|14th Nov 2020
மஹாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராம மக்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறார் 87 வயது ஹோமியோபதி மருத்துவரான ராம்சந்திரா தண்டேகர்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

இன்றைய கொரோனா பெருந்தொற்று பரவல் சமயத்தில் முதியோர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் வெளியில் செல்லவேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


மஹாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்சந்திரா தண்டேகர். இவருக்கு வயது 87. இவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர். இவர் தன் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து வீட்டில் முடங்கியிருக்காமல் தன்னலமின்றி உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறார்.


தொலைதூர கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் அவர்களால் நகர்புறங்களுக்குச் செல்ல முடிவதில்லை. எனவே ராம்சந்திரா தினமும் இந்தக் கிராமங்களுக்கு பயணித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

“சந்திராபூர் தொலை தூரத்தில் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகள் இருக்கும் பகுதி. இங்குள்ள பல இடங்களுக்கு செல்ல பேருந்து வசதி இல்லை. இங்குள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க நடந்தோ சைக்கிளிலோ மட்டுமே செல்லமுடியும். இந்தப் பெருந்தொற்று சூழலிலும் பலர் மருத்துவமனை செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே அவர்களது வீடுகளுக்கு சென்று தொடர்ந்து சிகிச்சையளிக்கத் தீர்மானித்தேன்,” என்று ராமசந்திரா ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இடம் தெரிவித்தார்.

இவர் தினமும் காலை 6.30 மணிக்கு கிளம்புகிறார். இரண்டு பைகளில் மருந்துகள், பரிசோதனை கிட் ஆகியவற்றைக் கொண்டு செல்கிறார். மதியம் 12.30 அல்லது 1 மணிக்கு வீடு திரும்புகிறார். தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை கிராமத்தை வலம் வந்து மருத்துவ உதவி தேவைப்படுவோர்களுக்கு சிகிச்சையளிக்கிறார்.


கொரோனா பெருந்தொற்று பரவலைக் கண்டு சற்றும் அஞ்சாத இந்த முதிய மருத்துவர் தினமும் மருத்துவச் சேவையை கிராம மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்.

“பெருந்தொற்றுக்கு முன்பு சேவையளித்தது போன்றே இன்றும் தொடர்ந்து மருத்துவ உதவியளித்து வருகிறேன். தொடர்ந்து ஏழை மக்களுக்கு தன்னலமில்லாமல் உதவ விரும்புகிறேன்,” என்று ராமசந்திரா பிடிஐ இடம் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இவர் சிகிச்சையளித்துள்ளார். நோயாளிகளின் குடும்பச் சூழலைப் பொறுத்தே அவர்களிடம் சிறு தொகை பெற்றுக்கொள்கிறார்.

“எனக்கு 87 வயதாகிறது. ஆனால் நான் சோர்வடைந்துவிடவில்லை. எனக்கு ஓய்வும் தேவைப்படவில்லை. நான் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். இதுவே எனக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது,” என்கிறார் இந்த மருத்துவர்.

கட்டுரை: THINK CHANGE INDIA