பதிப்புகளில்

குழந்தைகளுக்கான மறு பயன்பாட்டிற்கு உகந்த துணி டயப்பர்கள் உருவாக்கும் Fig-O-Honey

வழக்கமான டயப்பர்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த துணி டயப்பர்களை வழங்குகின்றனர் Fig-O-Honey

13th Nov 2017
Add to
Shares
216
Comments
Share This
Add to
Shares
216
Comments
Share

பலர் தாங்கள் சந்தித்த பிரச்சனையின் காரணத்தாலும் சந்தையில் ஒரு இடைவெளி இருப்பதை உணர்வதாலுமே ஒரு தொழில்முனைவோராக உருவெடுக்கின்றனர்.

சிநேகா தக்கருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தபோதுதான் இதே போன்ற அனுபவம் அவருக்கு ஏற்பட்டது. பெங்களூரு குடியிருப்புகளில் கழிவுகளை பிரித்தெடுத்து வகைப்படுத்தும் முயற்சி துவங்கப்பட்ட பிறகே குழந்தை இருக்கும் வீடுகளில் உற்பத்தியாகும் மக்காத குப்பைகளின் அளவு குறித்து தெரிந்துகொண்டார். இதற்கு ஒரு சிறப்பான மாற்று தேவைப்படுவதை உணர்ந்தார். சிநேகா கூறுகையில், 

“என்னுடைய முதல் குழந்தைக்கு டயப்பர் உபயோகிக்கையில் பிரபலமான ப்ராண்டுகளையே பயன்படுத்தினேன். ஏனெனில் அப்போது இது குறித்து நான் அதிகம் அறியவில்லை. இரண்டாவது குழந்தை பிறந்தபோது துணி டயப்பர்களைத் தேடத் துவங்கினேன். இது குழந்தையின் சருமத்துடன் அதிக மென்மையாக இருக்கும் என்பதையும் நீண்ட நாட்கள் பயன்படுத்துகையில் குறைந்த விலையில் இருக்கும் என்பதையும் கழிவுகள் பெருந்திரளாக குவிக்கப்பட்டிருக்கும் நிலப்பரப்பை அடைத்துக்கொண்டிருக்காது என்பதையும் உணர்ந்தேன்,” என்றார்.

image


சிநேகா தனது குழந்தைக்கு பயன்படுத்திய முதல் துணி டயப்பர் அமெரிக்காவில் இருந்த அவரது உறவினர் மூலமாக பெறப்பட்டது. இந்தியாவில் இந்தப் பகுதியில் அதிக நிறுவனங்கள் செயல்படவில்லை என்பதையும் இறக்குமதி செய்யப்படும் டயப்பர்களும் விலையுயர்வானது என்பதையும் உணர்ந்தார்.

Fig-O-Honey பிறந்த கதை

சிநேகா 2016-ம் ஆண்டு துவக்கத்தில் டயப்பர் தயாரிப்பு குறித்து ஆராயத் துவங்கினார். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் Fig-O-Honey-யை அறிமுகப்படுத்தினார். 37 வயதான சிநேகா கூறுகையில், 

“Fig-O-Honey துணி டயப்பர்கள் குழந்தையின் சருமத்தை உலர்வாக வைத்திருக்கும் விதத்தில் மென்மையான, உள்புறம் உலர்வாக இருக்கக்கூடிய துணியால் தயாரிக்கப்படுகிறது. பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியக்கூடிய டயப்பர்களில் காணப்படும் ரசாயனங்கள் காரணமாக சருமத்தில் சிவப்பு தடிப்புகள் ஏற்படுவதை இந்த டயப்பர்கள் குறைக்கிறது.” 

Fig-O-Honey நேப்கின்கள் பாக்கெட் டயப்பர்களின் வெளிப்புறப்பகுதி ஈரம் புகாத விதத்தில் கண்கவர் அச்சுகளிலும் நிறங்களிலும் இருக்கும். இதன் உள்ளே மைக்ரோஃபைபரை உள்நுழைத்து அகற்றக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும். மைக்ரோஃபைபர் செயற்கைப் பொருட்களால் ஆனது என்பதால் சிநேகா விரைவில் டயப்பரின் உட்புறம் நுழைக்கக்கூடிய பகுதியை பருத்தி, மூங்கில் உள்ளிட்ட இயற்கை இழைகளால் உருவாக்க திட்டமிட்டுள்ளார். விலை தடையாக இருக்கும் என்பதால் டயப்பரின் உட்புறத்திற்கு இயற்கை இழைகளை இதுவரை இக்குழுவினர் பயன்படுத்தவில்லை. 

image


ஒரே அளவில் இருக்கும் இந்த டயப்பர்களை XS அளவு முதல் L அளவு வரை பொருந்துமாறு சரிசெய்துகொள்ளலாம். பச்சிளம் குழந்தை முதல் நடைபழகும் குழந்தை வரை இந்த டயப்பர்களின் அளவை சரிசெய்வதன் மூலம் குழந்தைகளின் அளவுக்கேற்றவாறு அமைத்துக்கொள்ளலாம். டயப்பர்களிலிருந்து நீர் சிந்தாமல் இருக்க உள்ளே பொருத்தும் அடுக்குகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளலாம். பெற்றோர்கள் பலர் பழைய டி-ஷர்டுகளைக் கொண்டு சொந்தமாக டயப்பரின் உட்புறப் பகுதியை உருவாக்கிக் கொள்கின்றனர். நான்கு அல்லது ஆறு செட் டயப்பர்கள் இருந்தாலே போதும் என்றபோதும் பலர் அச்சுகள் கவரும் வகையில் இருப்பதால் அதிக எண்ணிக்கையில் வாங்குகின்றனர். சிநேகா கூறுகையில், 

”குழந்தையின் ஆடைக்கு பொருத்தமாக இருக்கும் விதத்தில் தாய்மார்கள் டயப்பர்கள் வாங்குகின்றனர். தயாரிப்பு கண்கவர் வகையில் இருப்பதால் எதிர்பார்த்ததைவிட அதிக வாடிக்கையாளர்கள் மீண்டும் வந்து இதை வாங்கினர்.”

துணி டயப்பர்கள் எவ்வாறு சிக்கமானது?

சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறும் சருமத்திற்கு பாதுகாப்பாகவும் இருப்பதுடன் வழக்கமான டயப்பர்களைக் காட்டிலும் துணி டயப்பர்கள் விலை மலிவானதாகும். பயன்பாட்டிற்குப் பிறகு அகற்றக்கூடிய டயப்பர் ஒன்றின் சராசரி விலை 11 ரூபாயாகும். ஒரு துணி டயப்பரின் விலை 500 ரூபாய் வரையாகும் என்றாலும் இதை பலமுறை பயன்படுத்தலாம். நீண்ட கால அடிப்படையில் இது விலை குறைவானதாகும். ஒரு குழந்தைக்குக் கழிப்பறை பயிற்சி அளிக்கப்படும் வரை சுமார் 4,000 டயப்பர்கள் வரை தேவைப்படலாம். இதற்கு கிட்டத்தட்ட 50,000 ரூபாய் வரை செலவாகலாம். துணி டயப்பர்கள் மறு பயன்பாட்டிற்கு உகந்தது என்பதாலும் அனைத்து அளவுகளுக்கும் பொருந்தக்கூடியது என்பதாலும் ஒரு குழந்தை டயப்பர் பயன்படுத்தவேண்டிய காலகட்டம் முழுவதும் இது பயன்படும். பெற்றோர் வழக்கமான டயப்பர்களுக்கு செலவிடுவதைக் காட்டிலும் நான்கில் ஒரு பங்குதான் இதற்குச் செலவாகும்.

தற்போது இந்த சந்தையின் மதிப்பு சுமார் 300 மில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது. பெங்களூருவைச் சேர்ந்த Bumpadum, மும்பையைச் சேர்ந்த சூப்பர்பாட்டம்ஸ், கொச்சினைச் சேர்ந்த Bumberry போன்றவை இந்தியாவில் செயல்படும் துணி டயப்பர் ப்ராண்டுகளாகும்.

துணி டயப்பர்களை சுத்தம் செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்படும் சிரமம் குறித்து கேட்கையில் சிநேகா, 

“ஆம். பயன்பாட்டிற்குப் பிறகு அப்புறப்படுத்தக்கூடிய டயப்பர்களுடன் ஒப்பிடுகையில் இதற்கு சற்று அதிக சிரமம் எடுத்துக்கொள்ளவேண்டும். முதல்கட்டமாக கழிப்பறையில் பயன்படுத்தப்படும் குழாய் மூலம் திட கழிவுகள் இருப்பின் அகற்றிவிடவேண்டும். அதன் பின்னர் வாஷிங் மெஷினில் மற்ற துணிகளுடன் சேர்த்து துவைத்துவிடலாம்,” என்றார். 

பெற்றோர்கள் வெளியே செல்கையில் பயன்படுத்திய டயப்பர்களையும் பயன்படுத்தாத டயப்பர்களை தனித்தனியே வைப்பதற்கு ஏதுவாக தனித்தனி அறைகள் கொண்ட பைகளை எடுத்துச்செல்லவேண்டும்.

தொழில்முனைவோரின் கற்றல்

தற்போது துணி டயப்பர்களை முக்கிய விற்பனையாகக் கொண்டு செயல்படுவதில் கவனம் செலுத்தி வருகிறார் சிநேகா.

Fig-O-Honey வலைதளம் 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த மூன்றாண்டுகளில் வலைதளம் வாயிலாக 600 டயப்பர்களுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. ஃபேஸ்புக் மற்றும் அமேசான் வாயிலாகவும் ஆர்டர்கள் வந்துள்ளது. ஆச்சரியமளிக்கும் விதத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களிலிருந்தும் பல ஆர்டர்கள் வந்துள்ளது. சிநேகாவின் குழுவில் மூன்று பேர் உள்ளனர். இவர்கள் வடிவமைப்பு, ஆர்டர், போக்குவரத்து ஆகியவற்றை கவனித்துக்கொள்கின்றனர்.

ஐஐடி-மும்பை முன்னாள் மாணவியான சிநேகா தரவுகளை ஆய்வு செய்பவராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அவரது கணவரும் ஒரு தொழில்முனைவோர். இந்த தம்பதி நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணம் செல்ல விரும்புவார்கள்.

ஒரு மோசமான காலகட்டத்தில் எவ்வாறு ஸ்டார்ட் அப் துவங்க தீர்மானித்தார் என்பதை நினைவுகூறுகிறார் சிநேகா. அவர் கூறுகையில், “என்னுடைய தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தால். அவர் குணமடைந்து வந்த காலகட்டத்தில் நான் அவருடன் நேரம் செலவிட்டேன். அப்போது எனக்கு யோசிக்க நேரம் கிடைத்தது. வழக்கமான கார்ப்பரேட் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதைக் காட்டிலும் அர்த்தமுள்ளதாக ஏதேனும் செய்யவேண்டும் என்கிற விருப்பம் அவருக்குள் இருப்பதை உணர்ந்தார். நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்ய இதுதான் மிகச்சரியான நேரம். நீங்கள் உறுதியாக இருந்தால் எப்போதும் அனைத்தும் சரியாகவே நடக்கும்.”

ஆங்கில கட்டுரையாளர் : ஷரிகா நாயர்

Add to
Shares
216
Comments
Share This
Add to
Shares
216
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக