பதிப்புகளில்

ஸ்டார்ட் - அப் ஐயங்களை தீர்க்கும் பயிற்சி பட்டறைகள்.!

தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் புதிய திட்டம்!

Janita
28th Apr 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

'ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா' திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களிடமும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தொழில்முனைவோர் பயிற்சி பட்டறைகளை மத்திய அரசு நடத்த திட்டம் வகுத்துள்ளது. 

திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த பயிற்சி பட்டறைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஐ.சி.ஐ.ஆர். (Institute for Corporate and Industrial Research), மற்றும் என்.இ.எஸ்.பி.யூ.டி ( The National Institute for Entrepreneurship and Small Business Development ) இணைந்து ஏப்ரல் 30 மற்ரும் மே 1 ஆம் தேதிகளில் இரண்டு நாள் செமினார் திட்டத்தை அறிவித்துள்ளனர்.

image


இதில் கலந்து கொள்வோருக்கு தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக வளர்ச்சிக்கான தேசிய நிருவனம் சார்பாக சான்றிதழ் ஒன்றும் வழங்கப்படுகிறது. வாட்ஸ் அப் குரூப் மூலம் தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கலந்து கொள்வோருக்கு பல தகவல் கையேடுகள், புத்தகங்கள் வழங்கப்படுவதால் கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.7000/- வசூலிக்கப்படுகிறது.

* ஒருவர் தொடங்க இருக்கும் தொழில் எத்தகையது?

* அதன் எதிர்காலம் எப்படி இருக்கும்?

* எங்கு, எப்படி சந்தை படுத்துவது?

* நிதி ஆதாரத்தை எப்படி பெருவது?

* என்ன தொழிலுக்கு வங்கிகள் எவ்வளவு கடன் தரும்?

* அதற்கு அரசு வழங்கும் மானியம் என்ன?

இப்படி ஒவ்வொருவர் மனதிலும் எழக்கூடிய அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக இந்த இரண்டு நாள் செமினார் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. கூடவே விர்சுவல் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

"செமினாருக்கு வரும் தொழில் முனைவோரின் திட்டம் என்ன என்பதை கேட்டுத்தெரிந்து கொண்டு அவருக்கு தேவையான அத்தனை உதவிகளையும் வழங்கி அவரை ஒரு வெற்றியாளராக உருவாக்குவதுதான் இதன் நோக்கம். தொழில் சம்பத்தப்பட்ட சந்தேகங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இருக்கும். அவர்களுக்கு இங்கு நூறு சதவீதம் பதில் கிடைப்பதற்கு உத்தரவாதம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.


ஒவ்வொரு தொழிலுக்கும் அரசு என்ன என்ன திட்டங்களை வகுத்துள்ளது?

முதலீடு எவ்வளவு தேவைப்படும்?

மானியத்தை எப்படி பெருவது?

வரிவிதிப்பு முறை என்ன?

அந்த தொழிலின் சட்டதிட்டங்கள் என்ன?

காப்புரிமை பெருவது அவசியமா?

அதனை எப்படி பெற வேண்டும் ? 

இப்படி எழும் நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு பதிலளிக்க எங்கள் நிபுணர்கள் அங்கு தயாராக இருக்கிறார்கள்" என்று விளக்கினார் பவ்னீப் சிங். இவர் ஐ.சி.ஐ.ஆர் ஆய்வு நிறுவனத்தில் வர்த்தக பிரிவு மேலளராக உள்ளார்.

image


தொழில் தொடங்க விரும்புவோர் மட்டுமல்லாமல் மாணவர்கள், பொறியாளர்கள், ஓய்வு பெற்றவர்கள் என்று அனைத்து தரப்பினரும் இதில் கலந்து கொள்ளலாம்.

ஸ்டார்ட் அப், ஸ்டாண்ட் அப் தவிர இ-மார்கெட்டிங், இணையதள வர்த்தகம், சூரிய எரிசக்தி, எல்.இ.டி. லைட்டிங் என்று தனித்தனியான தலைப்புக்களிலும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதற்கான அறிவிப்புகள் உடனுக்குடன் ICIR ஃபேஸ்புக் வாயிலாகவும், சம்பந்தப்பட்ட இணையதளங்களிலும் வெளியிடப்படுகிறது.

தற்போது டெல்லி, ஜெய்பூர், லக்னோ, கான்புர், டெராடூன் போன்ற நகரங்களில் நடத்தப்பட்டுவரும் இந்த பயிற்சி பட்டறைகள் சென்னை, பெங்களூரு நகரங்களுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது.

இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை பற்றிய மேலும் தகவல்களுக்கு க்ளிக் செய்யுக 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் சலுகை பெற உங்கள் ஸ்டார்ட் அப் தகுதியானதா?

பெண்கள் தங்களை குறைத்து மதிப்பிடக்கூடாது - 'ஸ்டார்ட் அப் இந்தியா'

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் சலுகை பெற உங்கள் ஸ்டார்ட் அப் தகுதியானதா?

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags