Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ஸ்டார்ட் அப் வளர்ச்சி சவாலை சந்திக்க உதவும் 8 வழிகள்...

ஸ்டார்ட் அப் வளர்ச்சி சவாலை சந்திக்க உதவும் 8 வழிகள்...

Saturday March 03, 2018 , 5 min Read

வாழ்க்கை கணிக்க முடியாதது என்பதால், சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் தன்மை மிகச்சிறந்த சொத்தாகும். நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் வாழ்க்கை ஓரிரவில் தலைகீழாக மாறலாம்...

image


ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சி.இ.ஓ மற்றும் நிர்வாக இயக்குனரான சந்தா கோச்சாரிடம் இருந்து வரும் இந்த அறிவுரை, மிகவும் மதிப்பு வாய்ந்தது, குறிப்பாக ஸ்டார்ட் அப் துறையில் இருப்பவர்களுக்கு கச்சிதமாக பொருந்தும். ஸ்டார்ட் அப் பயணம், தொழில்நுட்ப புதிய போக்கும் போட்டி மற்றும் நிர்வாக பிரச்சனைகளால் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய நீண்ட, கணிக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

ஒவ்வொரு ஸ்டார்ட் அப் நிறுவனமும் மூன்று முக்கிய சவால்கள் அல்லது பள்ளத்தாக்குகளை கடந்தாக வேண்டும். அவை; கருத்தாக்கத்தில் இருந்து முன்னோட்ட தயாரிப்பு, முன்னோட்ட தயாரிப்பில் இருந்து, வர்த்தக நோக்கில் செயல்படக்கூடிய மாதிரியை உருவாக்குவது மற்றும் ஆரம்ப வாடிக்கையாளர்களில் இருந்து பரவலான சந்தைக்கு வளர்வது. இவற்றை எதிர்கொள்ள, டிசைன் திங்கிங், பிராடக்ட் இடரேஷன், டிஜிட்டல் குரோத் ஹேக்கிங் என பல்வேறு அணுகுமுறைகள் கைகொடுக்கலாம்.

1. தயாரிப்பு நிலை

தயாரிப்பு (பிராடக்ட்) மேலாளர்கள், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் யூ.எக்ஸ் ஆகிய மூன்று முக்கிய துறைகளில் ஒன்றில் அனுபவம் பெற்றிருப்பதோடு, மூன்றில் உள்ளவர்களையும் கையாளக்கூடிய திறன் பெற்றிருக்க வேண்டும். இந்த மேலாளர்கள் செயல்பாடுகளில் சிறந்து விளங்குவதோடு, ஊக்கம் அளிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என பிராடக்ட் லீடர்ஷிப் புத்தகத்தில் வலியுறுத்தப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தொடர்பான எண்ணிக்கை மற்றும் தரம் சார்ந்த தரவுகளை படைப்பூக்கத்துடன் இணைத்து பார்க்கவும், புதிய சந்தை போக்கு மற்றும் ஆய்வு அறிக்கைகளையும் அறிந்திருக்க வேண்டும்.

நிறுவனம் பெரிதாக வளர்ந்து, நிர்வாக அமைப்பு பெரிதாகும் போது, பிராடக்ட் மேலாளர்கள் அனைத்து புதிய ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்கள் தயாரிப்பு தொலைநோக்கை புரிந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும். பல பிராடக்ட் மேலாளர்கள் மற்றும் போர்ட்போலியோ மேலாளர்களை கொண்ட பல அடுக்கு அமைப்பையும் உருவாக்க வேண்டியிருக்கும். சர்வதேச சந்தைக்கு ஏற்ற குழுவையும் உருவாக்க வேண்டும்.

பொருள் அல்லது சேவை வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப போக்குகள் மற்றும் நுகர்வோர், நிறுவனங்களின் மாறிவரும் தன்மைக்கு ஈடுகொடுப்பதாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர் ஒருங்கிணைப்பு, அசெட் டிராக்கிங், ஊழியர் ஒத்துழைப்பு ஆகியவற்றில் செல்பேசி முக்கிய அம்சமாக இருக்கிறது. பொருள்கள் மற்றும் சேவைகள் அதிகமாக டிஜிட்டல்மயமாகி வருகின்றன. எனவே, ஒரு ஸ்டார்ட் அப் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விரிவாக்கம் பெறும் போது மொபைல் முக்கிய மேடையாக இருக்க வேண்டும்.

2. கருவிகள்

ஸ்டார்ட் அப் மேனுவல் மற்றும் ஸ்டார்ட் அப் செக்லிஸ்ட் ஆகிய புத்தகங்கள் ஸ்டார்ட் அப் வாழ்க்கை சுழற்சியில் தேவைப்படக்கூடிய பல்வேறு கருவிகளை (டூல்) குறிப்பிடுகின்றன. அவை வருமாறு: எவிபி டெவலப்மெண்ட், இக்கோ சிஸ்டம்ஸ் மேப், ஐபில் போர்ட்போலியோ, கிரவுட்பண்டிங், பிராடக்ட் ரோட்மேப், இ.எஸ்.ஓ.பி, போட்டி தகவல்கள் மற்றும் தகவல் பாதுகாப்பு கொள்கை.

இந்த பிரிவுகளில் வர்த்தக நோக்கில் உள்ள கருவிகள் மற்றும் மேடைகள்: சிமிலர்வெப், இடேட்டாசோர்ஸ், கூகுள் அலெர்ட்ஸ், குவிக்.எம்விபி.காம், இன்ஸ்டாபேஜ், லாண்டர் ஆப், சர்வே மங்கி, சர்வே கிஸ்மோ, குவிக் புக்ஸ், அகவுண்ட் எட்ஜ், கிஸ்மெடிரிக்ஸ், மிக்ஸ்பேனல் மற்றும் அப்வொர்க்.காம்.

ஸ்டார்ட் அப்களுக்கு கிளவுட் அடிப்படையிலான சேவைகளும் பல்வேறு வடிவங்களில், பல்வேறு கட்டணத்தில் கிடைக்கின்றன: சி.ஆர்.எம் (ஜோஹோ, சேல்ஸ்போர்ஸ், சுகர்சிஆர்.எம்), வாடிக்கையாளர் சேவை (பிரெஷ் டெஸ்க், ஜென் டெஸ்க்), மனிதவள மேம்பாடு (ஜெனிபிட்ஸ், ஜஸ்ட்வொர்க்ஸ், வொரிக்டே), குழு தொடர்பு (ஸ்லேக், யாமர், சோகோகோ), திட்ட மேலாண்மை (டிரெல்லோ, ஆசனா, பேஸ்கேம்ப்), மார்க்கெட்டிங் (மைல்சிம்ப், ஹப்ஸ்பாட், செண்ட்கிரிட்) மற்றும் சமூக ஊடக நிர்வாகம் (ஹூட்சூட், சோசியல்புளோ, ஸ்பிரவுட் சோசியல்).

3. அளவுகோள்கள்

வளர்ச்சி நிலையில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஐந்துவிதமான அளவுகோள்களை கருத்தில் கொள்ள வேண்டும். செயல்பாடு சார்ந்த அளவுகளோகளாக, இணைய பார்வையாளர்கள் எண்ணிக்கை, செயலி பதிவிறக்க எண்னிக்கை அமைகின்றன. ஆனால் இவை மிகவும் அடிப்படையானவை. செயல்முறை அளவுகோள்கள், கையகப்படுத்தல் செலவு, மார்கெட்டிங் திறன், மற்றும் விற்பனை விகிதம் ஆகியவற்றை உணர்த்துகின்றன.

அறிவுசார் அளவுகோள்கள், வழிமுறைகள், வாடிக்கையாளர்கள் தொடர்பான புரிதல் மற்றும் ஐபியை உணர்த்துகின்றன. மக்கள் சார்ந்த அளவுகோள்கள் நுகர்வோர் மற்றும் ஊழியர் திருப்தி ஆகியவற்றை குறிக்கின்றன. வர்த்தக அளவுகோள்கள் வருவாய் வளர்ச்சி, லாபம் மற்றும் சந்தை பங்கை கருத்தில் கொள்கின்றன. சுருக்கமாக சொல்வது என்றால் தெளிவான அளவுகோள்கள் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். வாடிக்கையாளர்களை பெறுவதற்கான செலவு (சி.ஏ.சி), மாதந்திர வருவாய் (சி.எம்.ஆர்.ஆர்) மற்றும் வாழ்நாள் மதிப்பு ( எல்டிவி) ஆகியவற்றை இவை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

4.தலைமை மற்றும் நிர்வாகம்

ஸ்டார்ட் அப் பயண நிலைகளில் திறமை, தலைமை, கலாச்சாரம் மற்றும் நிறுவன அமைப்பு மாறுபடக்கூடும். ஊக்கம் மற்றும் விடாமுயற்சி மட்டும் வளர்ச்சி நிலையில் போதாது. நிறுவனர்கள் தங்கள் சுய விழிப்புணர்வு, சமூக திறன்கள், உறவு மேலாண்மையை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இந்த கட்டத்தில் அதிகார போட்டி, பரிசளிப்பு முறை மற்றும் உரிமையாளர் பிரச்சனை வருவதாக பேராசிரியர்கள் உதய் பாட்கே மற்றும் சைலேந்திர வியாகர்னம் கூறுகின்றனர்.

வெற்றிகரமான தொழில்முனைவோருக்கு சுய விழிப்புணர்வு, ஊக்கம், உறவுகளை வளர்த்தெடுக்கும் தன்மை, மாற்றத்தை வழிநடத்துவது மற்றும் நிறுவன அடிப்படைகள் ஆகிய திறன்களை பெற்றிருக்க வேண்டும். திட்டங்கள் மற்றும் செயல்முறைக்கு இடையிலான வேறுபாட்டை அறிதல் ஆகியவறை நிறுவன அடிப்படைகளில் வரும். ஒரு நிறுவனம் வளரும் போது, திட்ட அனுபவங்கள் எழுதி வைக்கப்பட்ட தன்மையை பெறுகின்றன. ஆரம்ப கட்டத்தில் இருந்து சோதனை முறையிலான கலாச்சாரத்திற்கு பதில் திறன் சார்ந்த கலாச்சாரம் உருவாகிறது.

ஸ்டார்ட் அப் வளரும் போது, தலைமை வழிகாட்டும் மற்றும் பொறுப்புகளை ஒப்படைக்கும் தன்மை பெற்றிருக்க வேண்டும். அணிகள் தட்டையானவற்றில் இருந்து அடுக்குகளாக மாறுகின்றன. வர்ச்சுவல் செயல்முறை இயல்பாகிறது. அமைப்பு, செயல்முறை மற்றும் பொருள்கள் சார்ந்து மேலும் நிறுவன தன்மை பெறுகிறது. உள்ளூர் சந்தையில் இருந்து சர்வதேச சந்தைக்கு மாறும் போது புதிய உத்திகள் மற்றும் திறமைகள் தேவை என்று பேராசிரியர்கள் உதய் பாட்கே மற்றும் சைலேந்திர வியாகர்னம் கூறுகின்றனர்.

5. நிறுவன கலாச்சாரம், வளர்ச்சி

நிறுவனர்கள் அறிந்தும் அறியாமலும் கலாச்சாரத்தை உருவாக்குகின்றனர். மேலும் அதிகமான ஊழியர்கள் இணையும் போது ஸ்டார்ட் அப் கலாச்சாரம் மாறுகிறது. நிறுவனர்களின் அணுகுமுறை மற்றும் செயல்பாடுகள், ஊழியர்களின் விசுவாசம், செயல்பாடு, நேர்மை, பொறுப்பு, வாடிக்கையாளர் மீதான கவனம், அறம் ஆகியவற்றை தீர்மானிக்கின்றன என லெசன்ஸ் பிரம் தி ஸ்டார்ட் அப் டிரென்சஸ் புத்தகம் விவரிக்கிறது.

பணி நியமனம், நீக்கம், பதவி உயர்வு போன்ற சிக்கலான விஷயங்கள் குறித்தும் நிறுவனர்கள் மற்றும் தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும். நிறுவனர்கள் கற்றுக்கொடுக்கவும், கற்றுக்கொள்ளவும், பொறுப்புகளை ஒப்படைக்கவும் தயாராக இருக்க வேண்டும்.

சந்தைக்கு ஏற்ற பொருள் தயாரானவுடன் மூத்த விற்பனை இயக்குனர் நியமிக்கப்பட்டு, நிறுவனர்கள் விற்பனை செயல்முறை மீதான கட்டுப்பாட்டை ஒரளவேனும் விட்டுக்கொடுக்க வேண்டும். இதற்கு காலமும், நம்பிக்கையும் தேவை. நிறுவனர்கள் தங்கள் உள்ளூணரவுடன் தரவுகள் சார்ந்த புரிதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

6. இன்குபேட்டர்கள்

இன்குபேட்டர்கள் முன்னோட்ட தயாரிப்பு நிலையில் ஸ்டார்ட் அப்களுக்கு உதவுகின்றன. ஆரம்ப வாடிக்கையாளர்களில் இருந்து பெரிய அளவில் வாடிக்கையாளர்களை பெற ஆக்சலேரேட்டர்கள் உதவுகின்றன. இந்த கட்டத்தில், ஹேக்கதான், பூட்கேம்ப், வார இறுதி நிகழ்வுகள், சமூக–சந்தை இணை நிகழ்வுகள் ஆகியவை இடம்பெறுகின்றன.

இன்குபேட்டர்கள் மற்றும் ஆக்சலேட்டர்கள் நிதி உதவி அல்லது முதலீடு மூலம் நிதி வழங்கலாம். வர்த்தக ஆக்சலேட்டர்கள் சமபங்கு மீது அதிக பலன் எதிர்பார்க்கின்றன. கார்ப்பரேட் ஆக்சலேட்டர்கள், புதிய வர்த்தகமாக அமையக்கூடிய அல்லது தங்கள் தயாரிப்புடன் பொருந்தக்கூடிய ஸ்டார்ட் அப் தயாரிப்புகளை எதிர்பார்க்கின்றன.

இவைத்தவிர ஸ்டார்ட் அப்கள் வழிகாட்டிகள் மற்றும் நிதி வலைப்பின்னல்களையும் நாடலாம். ஏஞ்சல் லிஸ்ட், சீட் இன்வெஸ்ட், பவுண்டர்ஸ் கிளஒ, சர்கிள் அப் மற்றும் டி.ஐ.இ ஆகியவை இதற்கான உதாரணங்கள்.

7. முதலீட்டாளர்களை அறிதல்

ஸ்டார்ட் அப் முதலீடு, நிதி ஆதாரமாக மட்டும் பார்க்கப்படாமல் ஸ்மார்ட் மணியாக கருதப்பட வேண்டும். முதலீட்டாளர்களை தேர்வு செய்யும் போது, அவர்கள் வலைப்பின்னல் எதிர்கால வாடிக்கையாளர்களை கொண்டிருக்கக் கூடிய வாய்ப்பு, அடுத்த கட்ட முதலீடு, உள் அரங்க நிர்வாக திறன், நிறுவனர்களுடான தனிப்பட்ட உறவு ஆகிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். வலுவான நிர்வாக குழு, வர்த்தக வாய்ப்பு, தலைமை பண்பு, தயாரிப்பு தரம் ஆகிய அம்சங்களை முதலீட்டாளர்கள் நாடுகின்றனர் என்பதை நிறுவனர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தேவதை நிதி முதலீடு கட்டத்தில் இருந்து முழு நேரமாக நிதியை கையாளக்கூடிய ஒருவர் தேவை. சந்தை பங்கு மற்றும் லாப பங்கு இடையிலான சமன் பின்னர் உருவாக்கப்பட வேண்டும். இயக்குனர்கள் குழு மற்றும் பார்வையாளர்கள் நியமனத்தேவையுடன், பல் அடுக்கு நிதி திரட்டலுக்கு தேவையான ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும்.

8. இயக்குனர் குழு

கவனமாக தேர்வு செய்யப்பட்ட இயக்குனர் குழு, ஸ்டார்ட் அப்கள் மைல்கற்கலை புரிந்து கொள்வதில், நிர்வாக பொறுப்பில் உதவியாக இருக்கும். சந்திப்புகள், நேர்காணல், சமூக உறவுகள், இயக்குனர்கள் மற்றம் ஆகியவை இயக்குனர் குழுவின் பணிகளாக ஸ்டார்ட் அப் போர்ட்ஸ் புத்தகம் குறிப்பிடுகிறது.

வளர்ச்சி நிலையில் இருக்கும் ஸ்டார்ட் அப்களுக்கு பல்வேறு குழுக்கள் தேவை: தணிக்கை (அறிக்கை செயல்முறை, சுதந்திரம்), ஈடு ( சமபங்கு ஈடு, ஊதியம்), நியமனம் (சி.இஓ, இயக்குனர்கள்). விதிகள் மற்றும் ஈடு ஆகியவை உருவாக்கப்பட்டு பின்பற்றப்பட வேண்டும். பிரச்சனைகளை தீர்வு காணும் வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இயக்குனர் குழுவில் சுதந்திரமான இயக்குனர்கள் மற்றும் சக சி.இ.ஓ’க்கள் இருக்க வேண்டும்.

தயாரிப்பு வளர்ச்சி முதல் போட்டியாளர் தாக்குதல், வர்த்தக அமைப்பு நிர்வாகம் முதல் வர்த்தக தலைமை வரை ஸ்டார்ட் அப்கள் பெரிதாக வளரும் நிலையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளலாம். மேலே விவரிக்கப்பட்ட எட்டு உத்திகளை ஸ்டார்ட் அப்கள் தங்கள் வளர்ச்சிப்பாதையில் பயன்படுத்தி முன்னேற்றம் காணலாம்.

ஸ்டார்ட் அப் வளர்ச்சி உத்திகள் குறித்து மேலும் அறிய: Vodafone’s Ready Startup microsite.

தமிழில் சைப்ர்சிம்மன்