3 வருடங்களில் 120% ஆண்டு வளர்ச்சி கண்டு 5000 பேருக்கு தனிப்பட்ட பயண திட்டத்தை அளித்துள்ள சென்னை நிறுவனம்!

  சுயமுதலீட்டில் துவங்கி, இன்றளவும் அதே நிலையில் தொடரும் இந்நிறுவனம், பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தனிநபருக்கும் பயண திட்டமிடலில் உதவிகளை ஆன்லைனில் வழங்குகிறது! 

  10th Aug 2017
  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  குடும்பத்துடன், நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ளும்போது வெறும் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் சென்று சுற்றிப்பார்க்காமல், மக்கள் தங்களுக்கு உகந்த வேகத்திலும் ஸ்டைலிலும் புதிய பகுதிகளை காணவே விரும்புவார்கள். ஆனால் பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் நாம் செல்லும்போது அவர்களின் வரம்புக்குள், அட்டவணைப்படியே செல்லவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் களத்தில் இறங்கினார்கள் நண்பர்கள் ஹரி கணபதி மற்றும் ஸ்ரீநாத் ஷங்கர்.

  மக்களின் விடுமுறைப் பயணத்தை மறக்கமுடியாத அனுபவமாக்க 2014-ம் ஆண்டு இவர்களால் நிறுவப்பட்ட தளம் ’பிக் யுவர் ட்ரெயில்’ (Pickyourtrail).

  ஹரி கணபதி மற்றும் ஸ்ரீநாத் சங்கர்

  ஹரி கணபதி மற்றும் ஸ்ரீநாத் சங்கர்


  ஸ்டார்ட் அப்பிற்கான உந்துதல்

  நிறுவனர்கள் ஹரி மற்றும் ஸ்ரீநாத் இருவருக்கும் இருந்த பொதுவான ஆர்வம் பயணம். இவர்கள் யூரோப் பயணம் செல்லத் திட்டமிட்டனர். இந்தப் பயணத்தின்போது இவர்கள் பாரீஸ் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் பலர் கூட்டமாக வந்துகொண்டிருப்பதை கவனித்தனர். அப்போதுதான் ’பிக் யுவர் ட்ரெயில்’ உருவாக்கும் திட்டம் தோன்றியது.

  ”’டூரிங்கை நிறுத்துங்கள், ட்ராவலிங்கை துவங்குங்கள்’ – இதுவே எங்களது தத்துவம். இன்று 14 நாடுகளைச் சேர்ந்த 5000 பயணிகள் தாங்களாகவே தங்களது பயணத்தை திட்டமிட்டுக்கொண்டு ஆன்லைனில் புக்கிங் செய்துகொள்ள பிக் யுவர் ட்ரெயில்-ன் ஆன்லைன் தளத்தை பயன்படுத்துயுள்ளனர்,” என்றார் நிறுவனர் ஹரி.

  இணை நிறுவனர்கள்

  ஹரி, ஐஐஎம் பெங்களூருவில் எம்பிஏ முடித்தவர். விற்பனை, மார்கெட்டிங் மற்றும் முதலீட்டு வங்கி ஆகியவற்றில் பணிபுரிந்துள்ளார். பயணம் செய்வதில் விருப்பமுள்ள இவர் 30 வயதிற்குள் 30 நாடுகளுக்கு பயணிக்கும் கனவை எட்டியுள்ளார். தற்போது ட்ரான்ஸ்-சைபீரியன் ரயில்வே அனுபவத்தை பெற விரும்புகிறார்.

  ஸ்ரீநாத் ஷங்கர் NMIMS-லிருந்து எம்பிஏ பட்டம் பெற்றவர். தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி சேவை பிரிவுகளில் பணிபுரிந்துள்ளார். இவர் தரவுகள், ஆராய்ச்சி மற்றும் பயணம் ஆகியவற்றில் அதீத ஆர்வம் கொண்டவர். பயணம் செய்யப்படும் பகுதிகள் குறித்து இவரது ஆழ்ந்த அறிவு பயணிகளையும் ’பிக் யுவர் ட்ரெயில்’ இருப்பவர்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

  நிதி மற்றும் ஆலோசகர்

  கடந்த மூன்றாண்டுகளாக சுயநிதியில் செயல்பட்டு வருகின்றனர். பயணம் சார்ந்த பிரிவில் நிதி உயர்த்திய பலருக்கு சொத்துக்களில் முதலீடு செய்வதற்கோ (Treebo) அல்லது அதிகமான தள்ளுபடி தேவைப்படுகிற நெட்வொர்க்கை உருவாக்கவோ (Travel Triangle) நிதி தேவைப்பட்டது. ஆனால் பிக் யுவர் ட்ரெயில் தனது வணிக மாதிரிக்கான நேரடி வருவாய் மற்றும் தொடர்புடைய செலவுகளை சுயமாகவே எட்டியுள்ளது. 

  “ஒரு ட்ராவல் ஏஜெண்ட் ஆஃப்லைனில் செயல்படுவது போலான ஒரு பிசினஸ் மாதிரியை நாங்கள் ஆன்லைனில் உருவாக்கியுள்ளோம். கடந்த 3 வருடங்களில் 45-க்கும் அதிகமான ஊழியர்கள் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளோம். தொடர்ந்து சுயநிதியில் தான் இயங்கி வருகிறோம். வளர்ச்சியை பத்து மடங்காக அதிகரிக்க ஆலோசனை வழங்கக்கூடிய சரியான ஆலோசகர் குழு அமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்,” என்கின்றனர் நிறுவனர்கள்.

  ’பிக் யுவர் ட்ரெயில்’ செயல்பாடுகள் 

  ”பிக் யுவர் ட்ரெயில் துவங்கியபோது பெரும்பாலான பயணிகள் தனிப்பட்ட விடுமுறைக்காக திட்டமிட குறைந்தது 38 தளங்களை பார்வையிடுகின்றனர் என்பதை அறிந்த நிறுவனர்கள் அதில் உள்ள குறைபாடுகளையும் ஆராய்ந்தனர்.

  “பயணம் பற்றிய அதிகப்படியான தகவல்கள் திட்டமிடும் முயற்சியை குழப்பிவிடுவதால், பலர் இறுதியில் ஏதாவது பயண ஏஜெண்ட்டை அணுகி, ஒரு போரான பயண திட்டத்துடன் பயணித்ததை தெரிந்து கொண்டோம். மேலும் அவ்வாறு செல்வதில் பல மறைமுக செலவுகளும் பயணிகள் மீது செலுத்தப்பட்டதை கண்டறிதோம்,” என்றார் ஹரி. 

  பத்தாண்டுகளுக்கு மேலாகவே பயணப் பிரிவில் OTA எனும் ஆன்லைன் ட்ராவல் ஏஜெண்டுகள் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தனிநபரின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்திசெய்வது இந்தப் பிரிவில் வழக்கத்தில் இல்லாத ஒன்றாகும்.

  இப்படிப்பட்ட தனிநபரின் தேவையை பூர்த்திசெய்யும் வழிமுறையில் இவர்கள் கவனம் செலுத்தினர். தனிப்பட்ட திட்டமிடலில் இருந்த பிரச்சனையை சரிசெய்வதே இவர்களது நோக்கம். பிக் யுவர் ட்ரெயில் தளத்தில் திட்டமிடலுக்கான குறைந்தபட்ச மேட்சிங் ஸ்கோர் 89 சதவீதம். சராசரி மேட்சிங் ஸ்கோர் 94 சதவீதம். தேர்வு செய்வதில் தனிப்பட்ட விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதே திட்டமிடல் முறையில் கவனம் செலுத்தப்பட்ட அடுத்த பகுதியாகும். வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக துறையில் முன்னணியில் இருக்கும் Amadeus, Expedia, TripAdvisor போன்றோருடன் பார்ட்னர்ஷிப்பில் இணைந்தனர் இவர்கள்.

  சுருக்கமாக ட்ராவல் ஏஜெண்ட்டின் அறிவு, தனிநபர் விருப்பத்திற்கேற்ப திட்டமிடல் மற்றும் ஆன்லைன் புக்கிங் போன்றவற்றை பிக் யுவர் ட்ரெயில் ஒருங்கிணைக்கும் தளமாக செயல்படுகிறது. 

  “ஒருவர் தன் விடுமுறை பயணத்தை தானே திட்டமிடுவதில் கிடைக்கும் பெருமை மற்றும் உற்சாகத்தை இந்தத் தளம் வாயிலாக பெறமுடியும். மேலும் ட்ராவல் ஏஜெண்டுக்காக காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. பயணம் மேற்கொள்ளவிருக்கும் நகரம், போக்குவரத்து முறை, ஹோட்டல்கள், விமானம் என அனைத்தையும் தேவைக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். மேலும் நாட்களை கூடுதலாக்கவோ அல்லது குறைக்கவோ முடியும்.”
  பிக் யுவர் ட்ரெயில் குழு

  பிக் யுவர் ட்ரெயில் குழு


  வளர்ச்சி

  2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் 120 சதவீத வளர்ச்சியை சந்தித்து வருகிறது இந்த நிறுவனம். 2000-க்கும் அதிகமான பாதைகள். 5000-க்கும் அதிகமான பயணிகள். 60 சதவீத வாடிக்கையாளர்கள் மறுமுறை இவர்களது சேவையை பயன்படுத்துகின்றனர் அல்லது மற்றவருக்கு பரிந்துரைக்கின்றனர். இப்படி தொடர் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது பிக் யுவர் ட்ரெயில்.

  குழு விவரம்

  2014-ம் ஆண்டு 4 நபர்களுடன் துவங்கப்பட்டு தற்போது விற்பனை, மார்கெட்டிங், தொழில்நுட்பம், செயல்பாடு, விநியோகம், நிதி என பல்வேறு துறைகளில் 45-க்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர்.

  நாவலாசிரியர்கள், VCs, கிரிக்கெட்டர்கள் என பல்வேறு நபர்கள் இவர்களுக்கு உந்துதலாக இருந்ததாக தெரிவிக்கின்றனர் நிறுவனர்கள். அதில் பிகோ ஐயர் கூறியபடி,

  ”நாம் ஏன் பயணம் மேற்கொள்கிறோம் என்கிற கேள்வியை நிறுவனர்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு விஷயமாகவே பார்க்கின்றனர். இதுவே பிக் யுவர் ட்ரெயில் தனித்துவமாக இருக்கும் காரணம்.”

  அதே போல் வாரன் பஃபே சொல்வது போல்,

  “நீங்கள் தூங்கும்போதும் பணத்தை ஈட்டவேண்டும். இதற்கான வழியை நீங்கள் கண்டறியவில்லையெனில் நீங்கள் சாகும்வரை வேலை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்.”

  இது போன்ற ஊக்க வார்த்தைகள் இவர்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கண்டறிய வழிகாட்டியதாக தெரிவித்தனர். அதிக உற்சாகத்துடன் தொடர்ந்து புதுமைகளை புகுத்தி செயல்படும் மேக் மை ட்ரிப்-ன் வெற்றிக் கதை எப்போதும் முன்னுதாரனமாக இருந்துள்ளது. கவனத்துடன் செயல்பட்டால் போட்டியாளர்களை எதிர்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான சேவையை வழங்கமுடியும் என்பதற்கு அந்நிறுவனம் ஒரு சிறந்த உதாரணம் என்று கருதுகின்றனர்.

  ட்ராவல் ஹாக்கர்களில் சிறந்தவரான ஸ்ரீநாத்திற்கு, நொமாடிக் மாட் மிகப்பெரிய உத்வேகமளித்துள்ளார். மேட்டின் பயணமும் இவருடைய பயணம் போன்றே அமைந்தது. 23-24 வயது வரை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ததில்லை. ஆனால் எதேச்சையாக பயணத்தை தேர்ந்தெடுத்து பணம் ஈட்டுவதற்கு சரியான துறை என்று நம்பினார் ஸ்ரீநாத். அத்துடன் தொழில்நுட்பத்தையும் இணைத்து தனக்கான பாதையை வகுத்துக்கொண்டார்.

  image


  சந்தித்த சவால்கள்

  ”பணியிலமர்த்துவதும் கலாச்சாரத்தை புகுத்துவதும் மிகப்பெரிய சவாலாக அமைந்தது. சுயநிதியுடன் செயல்படுவதால் 15-ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கையை 30-ஆக உயர்த்துவதில் அதிக சிரமத்தை உணர்ந்தோம். ஒட்டுமொத்த பணியிலமர்த்தும் முறையை புரிந்துகொண்டோம். நிறுவனர்களாக எங்களது நோக்கத்தை ஊழியர்களிடம் எடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்தோம்.”

  இரண்டு நபர்களுடன் துவங்கப்பட்டு 50 ஊழியர்களானார்கள். இவர்களிடையே செயல்திறனை அதிகரிக்கும் கலாச்சாரத்தை உருவாக்குவதும் பராமரிப்பதும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. மாதந்தோறும் நடைபெறும் கூட்டத்தில் கலாச்சாரத்தின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டு ஊழியர்கள் தங்களது வெற்றிக்கதையை பகிர்ந்துகொள்கின்றனர்.

  விருதுகள் மற்றும் அங்கீகாரம்

  Amadeus Next Incubated ஸ்டார்ட் அப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்கள் டெக்ஸ்பார்க்ஸ் வெற்றியாளர்கள். Phocuswright APAC Travel Innovation Summit இறுதி போட்டியாளர்களில் இவர்களும் ஒருவர்.

  தொழில்நுட்பம் மூலமாக பயனர்கள் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப திட்டமிட்டுக்கொள்ள உதவுவதால் ’பிக் யுவர் ட்ரெயில்’ பயணப் பிரிவில் செயல்படும் நிறுவனங்களுக்கு அளவுகோளாக இருப்பதாக சமீபத்திய கூகுள் இந்தியா – பாஸ்டன் கன்சல்டிங் க்ரூப் ட்ராவல் ட்ரெண்ட்ஸ் 2017 அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  ஐநூறுக்கும் மேற்பட்ட 5-ஸ்டார் மதிப்பீடுகள் முகநூலில் உள்ளது. இது வாடிக்கையாளர்கள் இந்தத் தளத்தினை அதிகம் விரும்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

  விரிவாக்க திட்டங்கள் மற்றும் புதிய அம்சங்கள்

  இவர்கள் விடுமுறையை ஆன்லைனில் கொண்டுவருகின்றனர். இந்த முயற்சியானது மேக் மை ட்ரிப், போன்ற முன்னணி தளங்கள் ஆரம்பகட்டத்தில் பயணர்களை டிக்கெட்களை ஆன்லைனில் புக் செய்ய ஊக்குவித்தது போன்றதாகும். சர்வதேச பயணங்களுக்கான சிறந்த தளமாக இருப்பதே இவர்களது நோக்கம். இந்த காலாண்டின் இறுதிக்குள் வழிகாட்டியை அறிமுகப்படுத்த உள்ளனர். பெரும்பாலான தகவல்கள் ஆன்லைனில் சிதறிக்கிடப்பதால் பயணர்கள் தங்களது விருப்பம் மற்றும் ஸ்டைலுக்கு ஏற்றவாறான தகவல்களை கண்டறிய இந்த வழிகாட்டி உதவும்.

  ஆங்கிலம் பேசுபவர்களைக் கொண்ட சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற சந்தையில் ஏற்கெனவே சிறிய அளவில் செயல்பட்டு வரும் நிலையில் வெகு விரைவில் விரிவடைய திட்டமிட்டுள்ளனர்.

  அடுத்த காலாண்டில், பயணத் துறையில் முதல் முறையாக சில அம்சங்களை மொபைலில் இணைக்க திட்டமிட்டுள்ளனர். இவர்கள் மொபைல் பராமரிப்பு சேவையை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close
  Report an issue
  Authors

  Related Tags

  Latest

  Updates from around the world

  Our Partner Events

  Hustle across India