பதிப்புகளில்

உலக மார்கெட்டை பிடிக்க விரும்பும் இந்திய கம்பெனிகளின் சரியான இலக்கு லண்டன்

YS TEAM TAMIL
28th Apr 2016
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

பெரும்பாலான நிறுவனங்கள் முதல் நாளிலேயே உலகளாவிய சந்தையை மனதில் வைத்துத்தான் செயல்படத் துவங்குகின்றன. அப்படியான நிறுவனங்களுக்கு இங்கிலாந்தின் தலைநகரும், ஐரோப்பாவில் வெகு வேகமான தொழில் வளர்ச்சியடைந்து வருவதுமான லண்டன் பொருத்தமான தேர்வாக இருக்கும்.

லண்டனில் உலகத் தரம் கொண்ட தொழில்நுட்ப வசதிகள், மனிதவளம், முதலீட்டாளர்கள் என பல்வேறு கவர்ச்சிகள் இருந்தாலும் மிகவும் முக்கியமான அம்சம் அதன் மிகக் குறைவான வரிவிதிப்புதான். அனேகமாக உலகிலேயே மிகக் குறைவான வரிவிதிப்பு கொண்ட சூழல் என்றால் அது லண்டனில் மட்டுமே கிடைக்கும்.

லண்டனின் வளர்ச்சிக்கான ஊக்க சக்தி கூட்டமைப்பு (London Catalyst for Growth - LCFG):

இந்த கூட்டமைப்பு லண்டனில் தங்கள் பாதம் பதிக்க விரும்பும் இந்தியக் கம்பெனிகளுக்கு உதவத் தயாராக உள்ளது. இக்கூட்டமைப்பு பலதரப்பட்ட நிறுவனங்களின் தொகுப்பாகும்.

 லண்டன் பார்ட்னர்ஸ்(London & Partners) – விளம்பர நிறுவனம்

 யூ.கே.டி.ஐ(UKTI) – பிரிட்டனின் அரசுத் துறை

 கிங்ஸ்டன் ஸ்மித்(Kingston Smith) – லண்டனில் அமைந்துள்ள கணக்கு தணிக்கை நிறுவனம்

 பென்னிங்டன் மேன்சஸ்(Penningtons Manches) – முன்னணி சட்ட நிறுவனம்

 ட்ரேட் ஹாரிசான்ஸ்(Trade Horizons) – சந்தைப் படுத்துதலுக்கான நிறுவனம்

லண்டனில் தங்கள் சேவையை துவக்குவது, புது நிறுவனங்களை வாங்கி கையகப்படுத்துவது, முதலீடுகளைத் திரட்டுவது, பங்குச் சந்தையில் இடம் பிடிப்பது போன்ற நோக்கங்களுடன் லண்டனுக்குள் நுழையும் இந்திய நிறுவனங்களுக்கு உதவுவதே LCFGயின் முதன்மை நோக்கமாகும். இச்செயல்களுக்குத் தேவையான ஆலோசனைகள், தகவல்களையும் தந்து சர்வதேச சந்தையை நோக்கிப் பாய நிறுவனங்களுக்கு வழிகாட்டுவது LCFGயின் பங்கு.

image


LCFG தொடர்ந்து 4வது முறையாக சென்னை, புனே, பெங்களூரு போன்ற நகரங்களில் தங்கள் கருத்தரங்குகளை மார்ச் 8-11 தேதிகளில் நடத்தினர். பிரிட்டனின் முன்னணி தொழில்துறை நிபுணர்கள் கருத்துக்கள், அனுபவங்கள் ஆகியவற்றையும், லண்டன் வழியாக சர்வதேசத் தரத்துக்கு உயர்ந்த நிறுவனங்களின் வெற்றிக் கதைகளையும் பகிர்ந்து கொள்ளும் தளமாக இக்கருத்தரங்கம் விளங்குகிறது.

உலகளாவிய முன்னேற்றத்தை விரும்பும் நிறுவனங்களுக்கு ஏன் லண்டன் ஏற்ற இடமாக இருக்கிறது, அங்கு தொடங்கி ஐரோப்பா முழுமையிலும் தொழில் நடத்துவதற்கான விதிமுறைகள், நுணுக்கங்கள் போன்றவற்றை விளக்குவதே இக்கருத்தரங்கின் நோக்கம். லண்டனின் வரிவிதிப்பு, குடியுரிமை விதிகள் போன்றவற்றில் தொழில் முனைவோருக்கு கிடைக்கக் கூடிய சாதகமான வாய்ப்புகளை புரிந்து கொள்ள இக்கூட்டம் உதவும் என்று லண்டன் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் இந்திய தலைமைப் பிரதிநிதி கௌதம் செகல் கூறுகிறார்.

இதற்கு முன் நடந்த இத்தகைய கூட்டங்களால் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பயனடைந்துள்ளன. டெக்ஸ்லர், ஐ.எம்.ஐ மொபைல், நோகிராஸ் போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்கள் நிறுவனங்கள் லண்டனில் அடைந்த வெற்றிப் பயணத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். நிதி திரட்டுவது, ஊழியர்களை தேர்ந்தெடுப்பது, நிறுவன வளர்ச்சி போன்ற தளங்களில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றன இந்நிறுவனங்கள். டெக்ஸ்லர் நிறுவனத்தின் நிதித்துறை துணைத் தலைவரான விபுல் மல்ஹோத்ரா இக்கருத்தரங்குகளைப் பற்றி சொல்கையில், “லண்டன் வழியாக ஐரோப்பாவில் நிறுவனங்களின் வளர்ச்சியை துரிதப் படுத்த இக்கூட்டங்கள் மிகவும் பயனுள்ளவை” என்கிறார்.

”உலக மார்க்கெட்டுக்கு செல்லவிரும்பும் இந்திய நிறுவனங்களுக்கு எப்படி லண்டன் ஒரு ஏவுதளமாக பயன்படுகிறது என்பதை விளக்கிச் சொல்வதில் இக்கருத்தரங்குகள் இதுவரை வெற்றிபெற்றே வந்துள்ளன. இக்கூட்டங்களில் பகிர்ந்து கொள்ளப் படும் தகவல்கள், வழிகாட்டுதல்கள் மூலம் கடந்த நான்கு வருடங்களில் பல்வேறு இந்திய நிறுவனங்கள் வெற்றிகரமாக லண்டனில் வேரூன்றியுள்ளன என்பதே இவற்றின் வெற்றிக்குச் சான்று. ” என்கிறார் கிஸ்டன் ஸ்மித் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான சந்துரு ஐயர்.

இந்திய - லண்டன் வர்த்தக உறவுகளைப் பற்றி பேசுகையில், ”கடந்த சில வருடங்களில் பல்வேறு இந்திய நிறுவனங்கள் வென்சர் முதலீடுகளை ஈர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளன. லண்டன் கேடலிஸ்ட் தொடர் மூலம் அத்தகைய வெற்றிகரமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் உலகளாவிய வெற்றியை அடைய உதவுவதே எங்கள் நோக்கம். உலக சந்தையை அணுகும் வழியாக விளங்கும் லண்டன் இந்திய தொழில்முனைவோரை ஈர்ப்பதில் முன்னணியில் உள்ளது.” என்கிறார் கௌதம்.

இந்நிறுவனத்தின் இணையதளம்: - http://www.londoncatalyst.in/

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

சீனப் பெருஞ்சுவரை ஊடுருவி இந்திய நிறுவனங்கள் கால் பதிக்க முடியுமா?

ஆங்கிலத்தை மட்டுமே நம்பிய காலம் இனி இல்லை, தொழிலில் மேம்பட தாய்மொழி போதுமே!

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக