பதிப்புகளில்

காற்றிலுள்ள மாசுப் பொருட்களைக் மின்விசிறியில் சேகரிக்கும் கருவியை உருவாக்கிய இந்தியர்!

YS TEAM TAMIL
14th Apr 2017
Add to
Shares
27
Comments
Share This
Add to
Shares
27
Comments
Share

2015-ம் ஆண்டு. பல திரைப்படங்களில் கதாநாயகர்கள் செய்வது போல நமது கதாநாயகரும் ஆழ்ந்த சிந்தனையுடன் மின்விசிறியை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். இன்றைய நவீன உலகத்திலும் மின்விசிறி பயன்பாட்டில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. மின்விசிறியை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு திரைப்படங்களில் வருவது போலவே திடீரென்று ஏதோ ஒரு பொறி தட்டியது. அதிக தெளிவு கிடைத்துவிட்டதாகவே அவருக்குத் தோன்றியது.

அவர் மின்விசிறியில் பார்த்தது இதைத்தான்: தூசு, புழுதி, செல்லப்பிராணியின் முடி, விலங்குகளின் இறகுகள், புகை, பாக்டீரியா போன்றவை இருந்தது. மொத்தத் துகள்களின் அளவு 10 மைக்ரோமீட்டர் விட்டம் (PM10). காற்றில் கலந்திருக்கும் மற்ற மாசுகளை விட இது மக்களை அதிகம் பாதிக்கும். கடந்த மூன்று வருடங்களில் இது பன்மடங்காக பெருகி வருகிறது.

image


காற்றைச் சுத்திகரிக்க விலையுயர்ந்த சாதனங்கள் உள்ளது. அவற்றைக் காட்டிலும் இந்தியாவில் எல்லோர் வீட்டிலும் மின்விசிறி பயன்பாட்டில் இருப்பதால் அந்த மின்விசிறியே சுத்திகரிக்கும் பணியைச் செய்யமுடியும். முக்கியமாக அவரது இந்த எளிய தீர்வு மில்லியனுக்கும் மேற்பட்டோரிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தார்.

தொழில்முனைவில் விருப்பம்

40 வயதான ஹேமல் சரய்யா நிதித்துறையில் இளங்கலை பட்டமும், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் ஐஎஸ், எமோரி பல்கலைக்கழகத்தின் Goizueta பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ ஆகியவை முடித்தார். அவரது வாழ்க்கைப்பாதையில் கார்ப்பரேட் பணியும் தொழில்முனைவும் இருந்தது. 

ஹேமலின் தந்தை ஜவுளி வர்த்தக பிரிவு ஒன்றை நடத்தி வந்தார். அவருக்கு 15 வயது இருந்தபோது அவர் தனது தந்தையுடன் அங்கு சென்றுள்ளார். அங்கு நடைபெறும் வர்த்தக பரிவர்த்தனைகளைக் கண்டு வியந்துகொண்டிருந்தபோதே அவருக்குள் தொழில்முனைவிற்கான உந்துதல் ஏற்படத்தொடங்கியது.

அந்த உந்துதல் இருந்துகொண்டே இருப்பினும் அமெரிக்காவில் வங்கிகள், பண பரிவர்த்தனைகளுக்கான நிறுவனங்களான இந்தியாவின் NPCI, சிங்கப்பூரின் மாஸ்டர்கார்ட் போன்றவற்றில் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேல் பணியாற்றியுள்ளார். முதலில் துவங்கப்பட்ட ஜவுளி உற்பத்தி அமைப்பு இரண்டரை வருடங்களில் வெற்றியடைந்தபோதும் மற்றொரு முயற்சியான ஹெல்த்கேர் ஸ்டார்ட் அப் பெரிதாக வெற்றியடையவில்லை.

சிங்கப்பூரில் இருந்தபோது நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தபோது காற்றை தூய்மையாக்கும் சாதனம் ஒன்றை கண்டார். இந்தியாவில் காற்றின் தரம் குறித்து அறிந்துகொள்ள அவருக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே காற்றை மாசின்றி தூய்மையாக்கும் பிரிவில் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. இது குறித்து ஆராயத் தொடங்கினார். 

ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது. இந்தியாவில் வீடுகளிலும் அலுவலகங்களிலும் காற்றை தூய்மையாக்க எவையெல்லாம் பயன்பாட்டில் உள்ளது என்பது குறித்து ஆராய்ந்தார். காற்றை தூய்மையாக்கும் ஆலை மற்றும் மின்னணு சாதனங்கள் ஆகிய இரண்டும் சந்தையில் உள்ளதை அறிந்தார். ஆலைகளை பராமரிப்பது கடினம் என்பதால் அவை பெரிதாக பிரபலமாகவில்லை. மின்னணு சாதனங்கள் விலையுயர்ந்தவை என்பதால் அதிக வருமானமுள்ள குடும்பங்கள் மட்டுமே வாங்கக்கூடிய நிலை இருந்தது. 

”தெற்காசியா மதிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் சமூகமாகும். இதை கருத்தில் கொண்டே தீர்வுகளை உருவாக்கவேண்டும். உதாரணத்திற்கு குப்பைகளை நீக்க துடைப்பம் அல்லது வேக்யூம் க்ளீனர் பயன்படுத்தலாம். குளிர்ந்த காற்றிற்கு ஏசி அல்லது மின்விசிறி பயன்படுத்தலாம். எனினும் காற்றை தூய்மையாக்கும் சாதனங்களுக்கு குறைந்த விலையில் எந்த ஒரு மாற்றுப்பொருளும் இல்லை.” என்று விவரித்தார்.

பயன்பாட்டில் இருக்கும் பொருளில் புதுமை

பொதுவாக சிங்கப்பூரில் வசிப்பவர்களின் வீடுகளில் மின்விசிறியைப் பார்ப்பது அரிது. மற்றொரு நண்பரின் வீட்டில் அதைப் பார்த்தபோது மின்விசிறி காற்றைப் பெருமளவு பரப்பியதை உணர்ந்தார். 

”மின்விசிறியின் பரப்பும் சக்தியை சுத்தமான காற்றைப் பெறுவதற்கு ஏன் பயன்படுத்தக்கூடாது என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன். ஏசியில் வடிகட்டிகள் இருப்பதுபோல் மின்விசிறியிலும் ஏன் இருக்கக்கூடாது?” என்று விவரித்தார். 

அதிக வருவாய்

ஈட்டும் குடும்பத்தினராக இருந்தாலும் குறைந்த வருவாய் ஈட்டுபவர்களாக இருப்பினும் இந்தியாவிலும் தெற்காசியாவின் பிற நாடுகளிலும் அனைத்து தரப்பினரும் மின்விசிறியை பயன்படுத்துகின்றனர். இதனால் மலிவான விலையில் காற்றை தூய்மையாக்கும் சாதனங்கள் உருவாக்குவது வெளிப்படையான பயணப்பாதையாகும்.

நான்கு மாதங்களில் மும்பையின் மேக்சிமம் சிட்டியில் ஏர் கேர் இன்னோவேஷன்ஸ் என்கிற நிறுவனத்தை ஹேமல் நிறுவினார். முதல் தயாரிப்பாக காற்றை சுத்தப்படுத்தும் சாதனத்தை அறிமுகப்படுத்தினார். 

”குறைந்த விலையிலான புதுமைகளை புகுத்தி எங்கள் தயாரிப்புகளை விரிவுபடுத்துவதே எங்களது நோக்கமாகும்.” என்றார்.

ஏரோஃபில் ஏர் க்ளீனர் (Airofil Air Cleaner) தனித்தன்மை வாய்ந்தது. பயன்பாட்டிற்குப் பின் தூக்கியெறிந்து விடக்கூடியது. மின்சாரமின்றி காற்றை சுத்தப்படுத்தக்கூடியது. இதன் விலை 189 ரூபாய். அறையின் காற்றில் நிறைந்திருக்கும் தூசி, புழுதி போன்ற ஒவ்வாமைப் பொருட்களைக் சேகரிக்க மின்விசிறியுடன் இணைந்து இந்த தயாரிப்பு செயல்படும். இதைப் பொருத்துவது மிகவும் எளிது. 

image


காற்றைச் சுத்தப்படுத்தும் தயாரிப்புகளில் ஒன்றை மின்விசிறியின் இறக்கையின் மேல் பொருத்திவிட்டால் போதும். மின்விசிறி பணியைச் செய்யத் தயாராகிவிட்டது எனலாம். மின்விசிறி ஒவ்வொரு முறை சுழலும்போதும் காற்றை சுத்தப்படுத்தும் தயாரிப்பானது காற்றிலுள்ள தூசுப்பொருட்களை உறிஞ்சத் தொடங்கிவிடும். பொருத்தப்படும் ஒவ்வொரு தயாரிப்பும் சுற்றுச்சூழலைப் பொருத்து 30 முதல் 60 நாட்கள் வரை நீடிக்கும்.

சவால்கள் மற்றும் வளர்ச்சி

ஏரோஃபில் தயாரிப்பு நுகர்வோர், வணிகத் துறை, அரசாங்கத் துறை என்று மூன்று வெவ்வேறு சந்தைப் பிரிவுகளில் விற்கப்படுகிறது. “ஆரம்பத்தில் நகர்புறத்தைச் சேர்ந்த நுகர்வோரை இலக்காகக் கொண்டு ஆன்லைன் மார்கமாகவும் பல்பொருள் அங்காடிகள்/ஹைப்பர்மார்கெட் போன்றவற்றிலும் தயாரிப்பை வழங்க திட்டமிட்டோம். நுகர்வோர்களுக்கும் வர்த்தக பிரிவிற்கும் நேரடி மற்றும் விநியோகஸ்தர்கள் மாதிரியை பின்பற்றுகிறோம்.” என்று விவரித்தார்.

”ஆன்லைன் பிரச்சாரங்கள், ஒருவர் மற்றொருவருக்கு பரிந்துரைத்தல், கடைகளில் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.” என்றார்.

கடைகளில் தயாரிப்பை வைப்பதற்காக ஒதுக்கப்படும் பகுதியை சில்லறை வர்த்தகர்களிடமிருந்து கட்டணமின்றி பெறுவது, கட்டணம் மற்றும் கையகப்படுத்தும் செலவு ஆகியவற்றை சமன்படுத்துவது, ஆன்லைனில் பிரிவை வகைப்படுத்துவது, மிக முக்கியமாக தயாரிப்பு குறித்து குறைந்த செலவில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை மிகப்பெரிய சவாலாக அமைந்தது. ஆனால் விரைவில் பிக் பஜாருடன் இணைந்தது எங்களது மிகப்பெரிய வெற்றியாகும், என்றார்.

2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறுவனம் நிறுவப்பட்டது. அடுத்த ஒரே மாதத்தில் தயாரிப்பின் சோதனை ஓட்டம் நடைபெற்று ஆன்லைனில் முதல் தயாரிப்பு விற்கப்பட்டது. இதன் பிறகு அடுத்த நான்கு மாதங்களில் மும்பையிலுள்ள பல்பொருள் அங்காடிகள் போன்ற பல்வேறு சில்லறை வர்த்தக பகுதிகளில் இணைக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிக் பஜாருடன் இணைந்தது. அதிலிருந்து தற்போதுவரை மும்பை, நோய்டா, காசியாபாத், பூனே, ஹைதராபாத், பெங்களூரு, புதுடெல்லி போன்ற பகுதிகளில் 31 ஸ்டோர்களுடன் இணைந்துள்ளது. பிக்பேஸ்கட், பேடிஎம், அமேசான் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது. 

அற்புதமான வாய்ப்பு

இந்தியாவில் 20 கோடிக்கும் மேற்பட்ட மின்விசிறிகள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 2.5 முதல் 3 கோடி மின்விசிறிகள் விற்கப்படுவதாகவும் 8 முதல் 10 சதவீத முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுவதாகவும் துறையைச் சார்ந்த ஆய்வுகள் மதிப்பிடுகிறது.

”எங்களது மதிப்பீட்டின் படி மொத்த சந்தையின் அளவு 800 முதல் 1000 கோடி ரூபாய். நேரடியாக எந்த போட்டியும் இல்லை. எனினும் காற்றை தூய்மைப்படுத்தும் ஆலைகள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் விலையுயர்ந்த காற்றை தூய்மைப்படுத்தும் சாதனங்கள் போன்ற மாற்று தயாரிப்புகள் நுகர்வோருக்கு கிடைக்கின்றன. 

ஒவ்வொன்றிலும் அதற்குரிய நன்மை தீமைகள் அடங்கியுள்ளன. பராமரிப்பது கடினமாக இருக்கும் அல்லது விலையுயர்ந்ததாக இருக்கும். தூய்மைப்படுத்தும் அம்சத்தில் கவனம் செலுத்துவதாக இருக்கவேண்டும், எளிதாக இயங்கக்கூடிய வகையில் இருக்கவேண்டும், மின்விசிறியின் தற்போதைய செயல்பாட்டுடன் ஒன்றியிருக்கவேண்டும். இப்படிப்பட்ட மதிப்புமிக்க அம்சங்களைக் கொண்ட தயாரிப்பை உருவாக்குவதே எங்களது நோக்கமாகும். 

இதனால் மாற்று தயாரிப்புகளுக்கு பதிலாக பலதரப்பட்ட நுகர்வோரும் பயன்படுத்தும் விதத்தில் குறைந்த விலையில் எங்களது தயாரிப்புகள் கிடைக்கிறது. தற்போது சுய முதலீட்டிலேயே இந்நிறுவனம் இயங்கி வருகிறது. ஹேமல் தனியாகவே வடிவமைப்புப் பணிகளை மேற்கொள்கிறார். உற்பத்தி மற்றும் விநியோகத் தேவைகளுக்கென பல்வேறு விற்பனையாளர்கள் உள்ளனர்.

மேலும் பல விநியோகஸ்தர்களை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் இணைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார். பத்து முக்கிய பெருநகரங்களில் நவீனத்துவம் வாய்ந்தவர்களுடன் இணைந்து செயல்படும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மும்பை, பெங்களூரு, புதுடெல்லி ஆகிய பகுதிகளில் தனித்து இயங்கும் பல்பொருள் அங்காடிகளுடன் கையொப்பமிட்டுள்ளனர். 

”இது தவிர அரசு அலுவலகங்களுக்கு சந்தைப்படுத்தும் நோக்கத்துடன் வணிகரீதியாக செயல்படத் துவங்கியுள்ளோம்.” என்றார் ஹேமல்.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜால் ஷா

Add to
Shares
27
Comments
Share This
Add to
Shares
27
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக