Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

புதிய இணைய பயனாளிகளில் 10ல் 9 பேர் இந்திய மொழிகளில் உள்ளடக்கத்தை அணுகுபவர்கள்!

இந்திய இணையம் 2019 அறிக்கை, நகர்புற இணைய பயனாளிகளில் 72% பேர் மற்றும் கிராமப்புறங் இணைய பயனாளிகளில் 57% பேர் இணையத்தை தினசரி பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது.

புதிய இணைய பயனாளிகளில் 10ல் 9 பேர் இந்திய மொழிகளில் உள்ளடக்கத்தை அணுகுபவர்கள்!

Friday December 06, 2019 , 2 min Read

இந்தியாவில் தற்போது, புதிய இணைய பயனாளிகளில் 10 பேரில் ஒன்பது பேர் இந்திய மொழிகளில் உள்ளடக்கத்தை அணுகுவதாக கூகுள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2015-18 ஆண்டு கால கட்டத்தில் இணைந்த இணைய பயனாளிகளில் 40 மில்லியன் பேர், இந்திய மொழிகளைச்சேர்ந்த பயனாளிகள் என்று கூகுள் இந்தியா சீனியர் பிராடகட் மேனேஜர் நிதி குப்தா தெரிவித்துள்ளார்.
இணையம்
2015 -16 ஆண்டில், இந்தி மொழி மூலமான வலை பயன்பாடு 90 சதவீதம் அதிகரித்த நிலையில் ஆங்கில உள்ளட்டக்க வளர்ச்சி 19 சதவீதமாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

கூகுள் சேவைகள் பயன்பாட்டில் ஆங்கிலத்திற்கு பிறகு, இந்தி தான் இரண்டாவது பிரபலமான மொழியாக இருப்பதாக, செய்திக்குறிப்பு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

"இணையத்தில் பயனாளிகளுக்கு இந்திய மொழிகளில், பிராடக்ட், சேவைகள் மற்றும் உள்ளடக்கத்தில் குறைவான தேர்வுகளே உள்ளன. இந்திய மொழி உள்ளடக்கத்தின் தேவையை கூகுள் உணர்ந்து கொண்டு, தனது பொருட்கள் மற்றும் சேவைகளில் முக்கிய இந்திய மொழிகளை ஒருங்கிணைத்துள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.

இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் ( ஐ.ஏ.எம்.ஏ.ஐ) அண்மையில் நடத்திய ஆய்வில், சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 451 மில்லியன் மாதாந்திர இணைய பயனாளிகளை கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது.


இந்திய இணையம் 2109 எனும் தலைப்பிலான இந்த அறிக்கை, நகர்புற பயனாளிகளில் 72 சதவீதம் பேர் (139 மில்லியன்) மற்றும் கிராமப்புற பயனாளிகளில் 57 சதவீதம் பேர் (109 மில்லியன்) தினசரி இணையத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது.


16 முதல் 29 வயதானவர்கள் அடிக்கடி இணையத்தை பயன்படுத்துகின்றனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் இணைய ஊடுருவல் என்பது 38 சதவீதமாக மட்டுமே இருப்பதால் வளர்ச்சிக்கான சாத்தியம் கொண்டுள்ளது.


இணைய பயன்பாட்டில் பாலின வேறுபாடும் இருக்கிறது. நாட்டின் இணைய பயனாளிகளில் ஆண் பயனாளிகள் 67 சதவீதமாக இருக்கின்றனர். கிராமப்புறங்களில் பெண் பயனாளிகள் எண்ணிக்கை 28 சதவீதமாக மட்டுமே இருக்கிறது.

கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளில் ஏற்பட்ட மேம்பாடு காரணமாக, 85 சதவீத பயனாளிகள் 4ஜி இணைப்பு பெற்றுள்ளனர். 360 மில்லியன் பயனாளிகள் கொண்ட ஜியோ நெட்வொர்க் இதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது.

கேபிஎம்ஜி இந்தியா மற்றும் கூகுள் நடத்திய அண்மை ஆய்வு ஒன்று, இந்திய மொழிகளில் இணையத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் 18 சதவீதம் வளர்ச்சி காண இருப்பதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு 10 புதிய பயனாளிகளிலும் 9 பேர் இந்திய மொழி பயனாளிகளாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கிறது.


தமிழில்: சைபர்சிம்மன்