பதிப்புகளில்

வர்த்தக தளம் ‘The Postbox’ மூலம் நம் பழைய நினைவுகளை நினைவுக் கூறும் சென்னை நண்பர்கள்!

3rd Feb 2017
Add to
Shares
192
Comments
Share This
Add to
Shares
192
Comments
Share

போஸ்ட் பாக்ஸ் எனும் பொருள் நம் பழைய நினைவுகளை திரும்பக் கொண்டுவரக்கூடியது. பேப்பர், பேனா, இன்க் போன்றவற்றை பயன்படுத்திய நினைவுகள் வரும். இந்த உற்சாக உணர்வுதான் சென்னையைச் சேர்ந்த இரண்டு இளம் வயதினரை ஸ்டார்ட் அப் துவங்க ஊக்குவித்தது. 

image


மதுவந்தி செந்தில்குமார் (23), நிகில் ஜோசஃப் (26) ஆகிய இரு நண்பர்களும் இணைந்து தங்களது ப்ராடக்ட் வடிவமைக்கும் நிறுவனத்திற்கு ’தி போஸ்ட்பாக்ஸ்’ ‘The Postbox’ என்று பெயரிட்டுள்ளனர். மக்கள் ஒவ்வொருவரையும் அவர்களது பழைமையான தனிப்பட்ட அனுபவங்களுடன் இவர்களது வடிவமைப்பு மூலமாக மீண்டும் இணைத்துக்கொள்ள உதவுவதால் இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தனர். மதுவந்தி கூறுகையில், 

“பாரம்பரிய முறையுடன் மறுதொடர்பிற்கான அடையாளம்தான் போஸ்ட் பாக்ஸ். அதனால்தான் உடனடியாக இந்தப் பெயரை தீர்மானித்தோம்.”

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் இணை கலாச்சாரத்தின் தாக்கத்துடனே போஸ்ட்பாக்ஸின் வடிவமைப்பு மற்றும் ப்ராடக்ட் டெவலப்மெண்ட் அமைந்துள்ளது. 

”பயன்பாடு மற்றும் அழகான தோற்றம் இரண்டையும் உறுதிசெய்யும் வகையில் இந்திய பயனாளிகளுக்கு தயாரிப்புகளை வடிவமைத்து உருவாக்குகிறோம்.” என்றார் நிகில். 

அவர்களது அட்டவணையில் கலை மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்த பகுதிகள் உள்ளன. கலை பிரிவில் போஸ்ட்கார்ட் மற்றும் சுவர் ஓவியங்களும் வாழ்க்கைமுறை பிரிவில் குஷன் கவர்கள், பீங்கான் மக் போன்றவை காணப்படுகிறது. இந்த இரண்டு வருட ஸ்டார்ட் அப்பின் மாத வருவாய் 20-22 லட்ச ரூபாய். இதில் லாபம் 45 சதவீதம். இந்த வருடம் அதிக லாபத்தை எதிர்நோக்கி இருந்தாலும் இவர்களது பயணம் சற்றே நீண்டதாக உள்ளது. 

தி போஸ்ட் பாக்ஸ் உருவான விதம் 

இருவருக்கும் பொதுவான ஒரு நண்பர் மூலம் நிகில் மற்றும் மதுவந்தி அறிமுகமாயினர். மதுவந்தி சிங்கப்பூரின் நன்யாங் அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்-ல் (NAFA) ஃபேஷன் டிசைனிங் படிப்பையும் மிலனின் Istituto Marangoni-ல் ஃபேஷன் மேனேஜ்மெண்ட் படிப்பையும் முடித்ததால் வடிவமைப்பு நிபுணத்துவத்தை நிறுவனத்திற்கு வழங்குகிறார். ஃபேஸ்புக்கில் பணிபுரிந்த நிகில் ஸ்ட்ராடெஜி, தொழில்நுட்பம் மற்றும் மார்க்கெட்டிங் துறையை கவனித்துக் கொள்கிறார். மதுவந்தி வடிவமைப்புக்கு முதலிடம் அளிக்கிறார். 

”வடிவமைப்பாளர்கள் கலைஞர்கள் அல்ல. நாங்கள் முனைந்து செயல்படும்போது இயல்பாகவே தொழில்முனைவோராகி விடுகிறோம். ஆகவே வடிவமைப்பு மூலமாக மக்களை சென்றடையவேண்டும் என்கிற எங்களது விருப்பத்துடன் ஒரு அங்கமாக இணைந்து வருவதுதான் தொழில்முனைவு,” என்கிறார் மதுவந்தி.

இரண்டு இணை நிறுவனர்களுக்கும் அதிர்ஷ்ட்டவசமாக குடும்பத்தின் ஆதரவு கிடைத்தது. கேரளாவில் தொழில்முனைவோர் குடுபத்தைச் சேர்ந்தவர் நிகில். 

“முதல் தலைமுறை தொழில்முனைவோரான எனது தந்தை ’தி போஸ்ட்பாக்ஸ்’ நிறுவனத்தை நிலையாக உருவாக்க வலியுறுத்தினார். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட சட்டரீதியான மற்றும் நிதி சார்ந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றவும் வலியுறுத்தினார்.”
image


மதுவந்தியின் தாத்தா பாட்டி ஆகியோரும் வளங்கள் மற்றும் விநியோக அமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். ”பேக்கேஜிங் பகுதிக்கு சரியான குழு அமையும் வரை என்னுடைய அம்மா அதிகபட்ச நேரத்தை இதில் செலவிட்டார். என் அப்பா அவருக்கு பரிச்சயமான மனிதர்களின் தொடர்புகளையும் மனிதவளத் துறையில் அவருக்கு இருந்த நிபுணத்துவத்தையும் வழங்கினார்,” என்கிறார் அவர்.

2014-ம் ஆண்டு செப்டம்பரில் கலைஞர்களாகவும் வடிவமைப்பாளர்களாகவும் உருவெடுக்க நினைத்த பலருக்கு ’தி போஸ்ட்பாக்ஸ்’ ஒரு சிறந்த தளமாக அமைந்தது. ”அறிமுகப்படுத்திய சில மாதங்களுக்குப் பிறகு மும்பை, டெல்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர், குர்கான் போன்ற இடங்களுக்கு சந்தையை புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் சென்று கைவினை கலைஞர்களுடனும் நெசவாளர்களுடனும் பணிபுரிந்தேன். முக்கிய ப்ராடக்ட் வடிவமைப்பில் இடைவெளி இருப்பதை நான் உணர்ந்தேன். மக்கள் குறைந்த விலையுடைய தனித்தன்மை வாய்ந்த வடிவமைப்பையே விரும்புகிறார்கள்” என்று நிகில் நினைவுகூர்ந்தார்.

2015-ம் ஆண்டு மே மாதம் முதல் புதுச்சேரி, போச்சம்பள்ளி, கொல்கத்தா, ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளில் ’தி போஸ்ட்பாக்ஸ்’ சொந்தமாக உற்பத்தி செய்யும் தயாரிப்புகளை விற்கத் தொடங்கினார்கள். ”ஏப்ரல் மாதம் 2015-ல் எங்களது மாத வருவாய் 40,000. லேப்டாப் பேக் உள்ளிட்ட எங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதும் 2015-ம் ஆண்டு செப்டம்பரில் எங்களது மாத வருவாய் 9 லட்ச ரூபாயாக உயர்ந்தது.” என்றார் மதுவந்தி.

நிகில், மதுவந்தி இருவரும் ஆரோவில்லில் உள்ள கைவினைஞர்களை சந்தித்தனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 80 பெண்கள் விளக்குகள் வடிவமைப்பதில் திறன் கொண்டவர்களாக இருந்தனர். ’தி போஸ்ட்பாக்ஸ்’ இந்தப் பெண்களின் பணியை சமகால தயாரிப்பிற்கு பயன்படுத்த இணைத்துக்கொண்டது.

”2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தி போஸ்ட்பாக்ஸின் அனைத்து டெராகோட்டா தயாரிப்புகளையும் கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 கைவினைஞர்கள் தயாரிக்கத் தொடங்கினர். ஒரு வாரத்திற்கு 1,000 பொருட்கள் விற்பனையாகிறது. இன்றும் விற்பனை செய்து கொண்டிருக்கிறது” என்றார் நிகில். இதுவரை 27,000 ஆர்டர்களை ’தி போஸ்ட்பாக்ஸ்’ பெற்றுள்ளது.

பின்புலத்திலுள்ள ரகசியங்கள்

ஷாப்பிஃபை ’தி போஸ்ட் பாக்ஸின்’ வலைதளத்தை வழங்குகிறது. UX மற்றும் UI-யின் அனைத்து மாற்றங்களும் உள்ளுக்குள்ளே நடத்தப்படும். ”ஒவ்வொரு முறை UX அல்லது UI-யின் மாற்றத்திற்கு பணிபுரியும்போதும் அதிகபட்ச உள்ளடக்கத்தை சில நிமிடங்கள் தொடர்ந்து காண்பித்து பயனாளிகள் வாங்கும் முறை போன்ற விவரங்களின் அடிப்படையில் பயனாளிகள் எதை பார்க்க விரும்புகிறார்கள் என்பது அளவிடப்படும்.”

தி போஸ்ட்பாக்ஸ் வாடிக்கையாளர் டேட்டாவிற்காக பலவற்றை பின்பற்றினாலும் அவற்றும் முக்கியமானது கூகுள் அனாலிடிக்ஸ். ”R &D-யை நாங்கள் அதிகம் நம்புகிறோம். ஒவ்வொரு தயாரிப்பையும் நாங்கள் பலவிதமாக ஆய்வு செய்தபின் அதன் நீடிப்புத்தன்மை, பயன்பாடு, அழகிய தோற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்கிறோம்” என்றார் நிகில். வடிவமைப்பு முறையில் கைவினைஞர்கள் மற்றும் உற்பத்தியாளர்களும் பங்கேற்பதால் ஒவ்வொரு தயாரிப்பையும் உருவாக்கும் முறை எளிதாகிறது. தி போஸ்பாக்ஸ் 18 முதல் 34 வயதினரை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.

image


”இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மூலமாகவும் ஒன்றிணைத்த கதைகளை சில வலைதளங்கள் மற்றும் பாப்அப் மூலமாக பயனாளிகளை அணுகுகிறோம்,” என்றார் நிகில்.

தயாரிப்புகள் குழுவின் தரப்பிலும் வாடிக்கையாளர்கள் தரப்பிலும் ஆய்வு செய்யப்படும். “ஒவ்வொரு முறை ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியதும் முதல் 50 வாடிக்கையாளர்களை 14-21 நாட்கள் கழித்து அணுகி சில குறிப்பிட்ட கேள்விகளை கேட்போம். இந்த ஆய்வின் அடிப்படையில் எதை நீக்கவேண்டும் என்றும் நீண்ட கால அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் தீர்மானிப்போம்.”

ஒவ்வொரு தயாரிப்பும் சோதனை முடிந்ததும் குழுவினரால் கிட்டத்தட்ட 14-21நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஆய்வு செய்யப்படும். முக்கிய பயன்பாட்டில் ஏதேனும் மாற்றம் இருப்பின் உடனடியாக உற்பத்தி குழுவிற்கு எடுத்து செல்லப்படும்” என்றார் நிகில். ப்ராடக்ட் வடிவமைப்பு குறித்த கருத்துக்களை பெற்றுக்கொண்டபின் அவை எவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு கொடுப்பது என்பது குறித்தும் விலை குறித்தும் வாடிக்கையாளரின் அனுபவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். 

“உதாரணத்திற்கு பேக் பயன்படுத்தியவர்களின் கருத்திற்கு இணங்க பேக்கிற்குள் சாவி வைப்பதற்காக ஒரு பகுதியை இணைத்தோம். இதனால் வாடிக்கையாளர்கள் எளிதாக சாவியை கண்டெடுக்கலாம். அறிமுகத்திற்குப் பின் எங்களது பலதயாரிப்புகளை மாற்றியமைத்துள்ளோம். பயன்பாட்டை பொருத்தே அமைவதால் தயாரிப்புகளை இன்னும் சிறப்பாக எவ்வாறு வடிவமைக்க முடியும் என்று வாடிக்கையாளர்களிடம் கேட்போம்.” என்றார் நிகில்.

வழிகாட்டிகள் மற்றும் நிதி

பெரும்பாலான ஸ்டார்ட் அப் போலவே தி போஸ்ட்பாக்ஸ் நிதியை உயர்த்துவதில் பல கடினமான தருணங்களை சந்தித்தனர். சிஃபியின் நிறுவனரும் சென்னை ஏஞ்சல்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளருமான ஆர் ராமராஜ் இவர்களது வழிகாட்டியாவார். அப்போது அவர்கள் சுய நிதியில் இயங்கி வந்ததால் மாதத்திற்கு 15-16 லட்ச ரூபாய்க்கு மேல் அதிகரிக்க இயலவில்லை. ராமராஜ் முதலீட்டை அடுத்த சுற்றிற்கு எடுத்து செல்லும் விதமாக கன்வல்ஜித் சிங்-கிற்கு இவர்களை அறிமுகப்படுத்தினார். விரைவில் சென்னை ஏஞ்சல்ஸ்,ஃபேஸ்புக்கின் ரிதேஷ் மேத்தா (தென்கிழக்கு ஆசிய பொருளாதார கொள்கைகளின் தலைவர்), பெங்களூருவைச் சேர்ந்த தியேட்டர் கலைஞர் அருணா கணேஷ் ராம் ஆகியோரும் இணைந்தனர்.

”நிதி முழுவதும் கரைந்ததும் ரத்தன் டாடா உட்பட பலருக்கும் இ-மெயில் அனுப்பினோம். அதிர்ஷ்ட்டவசமாக எங்களை சந்திக்க ரத்தன் டாடா அழைப்பு விடுத்தார். எண்கள் சார்ந்த்து அல்லாமல் தயாரிப்பு, உத்தி ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. தோல் எங்கிருந்து வருகிறது என்றும் எவ்வளவு பழமையானது என்றும் கேட்டறிந்தார். எங்களது ப்ராண்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான ஒரு தெளிவு எங்களுக்கு கிடைத்தது. ப்ராண்டை நிலைநிறுத்த பலவற்றில் கவனம் செலுத்தாமல் தற்போது இயங்கி வரும் முறையில் ஒன்றில் கூடுதல் வலு சேர்ப்பதே சிறந்தது என்று அறிவுரை வழங்கினார். அவர் முதலீடு செய்யவில்லையெனினும் அவரது அறிவுரைகளை நாங்கள் நடைமுறைப்படுத்தினோம்.” என்றார் நிகில்.

எதிர்கால திட்டங்கள்

தி போஸ்ட்பாக்ஸ் மார்கெட்டிங், செயல்பாடு, வடிவமைப்பு, வாடிக்கையாளர் அனுபவம் ஆகிய பிரிவுகளுடன் 13 பேர் அடங்கிய குழுவாக தற்போது செயல்படுகிறது. டிசைனர் பேக்கள் மற்றும் அதன் துணைப்பொருட்களின் தனித்துவமான வடிவமைப்புகளுக்கான சந்தை வாய்ப்புகள் சிறப்பாக உள்ளது. குறிப்பாக சம்பக் மற்று் திக்ரேசிமீ போன்றவை சிறப்பாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

சென்னையை சேர்ந்தது என்பதால் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. நிகில் கூறுகையில், 

“இது போன்ற ஸ்டார்ட் அப்கள் இங்கு இல்லை. இந்நகரத்தில் விலைவாசி அதிகமில்லை. தோல் மையம். பாண்டிச்சேரி அருகாமையில் இருப்பதால் அதிலுள்ள கைவினைஞர்களை அணுகுவது எளிது. எங்களது தோல் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் லேண்ட்ரூவர் போன்ற ப்ராண்ட்களுடனும் பணியாற்றுகிறார்கள்.” என்றார்.

எந்த கைத்தொழிலுடன் வளர்ந்தார்களோ அதை மீண்டும் வலிமையடையச் செய்து அதில் வளர்ச்சியடைய நினைக்கும் 300க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் தற்போது இவர்களுடன் இணைந்திருப்பதுதான் இவர்களது வெற்றியாக கருதுகிறது ‘தி போஸ்ட்பாக்ஸ்’. பல்வேறு சேனல்களில் செயல்படவும் திட்டமிட்டுள்ளது. மதுவந்தி கூறுகையில், “நாங்கள் ஆஃப்லைனிலும் செயல்படுவோமா என்று பலர் கேட்டனர். அவர்களது கோரிக்கைகளுக்கு இணங்க சென்னையில் மார்ச் மாதம் ஆஃப்லைன் சேவையை அறிமுகப்படுத்த உள்ளோம்.”

பெரும் பகுதி மக்களை சென்றடைவதை நோக்கமாக கொண்டுள்ளது தி போஸ்ட்பாக்ஸ். அதற்கு இதை விட சிறந்த நேரம் வேறில்லை. 

ஆங்கில கட்டுரையாளர் : அதிரா ஏ நாயர்

Add to
Shares
192
Comments
Share This
Add to
Shares
192
Comments
Share
Report an issue
Authors

Related Tags