பதிப்புகளில்

நீங்கள் ஐஃபோன் எக்ஸ் வாங்க விரும்புகிறீர்களா? தவணை முறையில் தொகையை செலுத்த உதவுகிறது HappyEMI

POS மற்றும் ஆன்லைன் தளம் வாயிலாகவும் நுகர்வோருக்கு உடனடி நிதி வழங்குகிறது பெங்களூருவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப்

YS TEAM TAMIL
29th Sep 2017
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

நீங்கள் எத்தனை முறை பணம் இல்லாத காரணத்தால் ஒரு பொருளை வாங்காமல் தாமதப்படுத்தியிருப்பீர்கள்? ஒரு மாலில் இருக்கும்போதோ அல்லது இ-காமர்ஸ் வலைதளத்தைப் பார்வையிடும்போதோ இவ்வாறு நடந்திருக்கும். இங்குதான் ஹேப்பிஇஎம்ஐ உதவிக்கு வருகிறது.

'HappyEMI' 'ஹேப்பிஇஎம்ஐ' மனிதர்களின் செயல்பாடுகளில்லாத பேப்பர் சார்ந்த சிரமங்களில்லாத நுகர்வோர் நிதி தளம். ஸ்டோர்களிலிருக்கும் பாயிண்ட் ஆஃப் சேல் அல்லது ஆன்லைன் தளத்தில் இருக்கும் ஷாப்பர்களுக்கு உடனடி நிதி வழங்கப்படுகிறது. எண்ணற்ற பேப்பர்களில் கையெழுத்திடுவதும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுவதும் தவிர்க்கப்படுகிறது. இதனால் எளிதாகவும் விரைவாகவும் ஷாப்பிங் செய்யலாம்.

31 வயதான சுஹாஸ் கோபிநாத், 30 வயதான அன்மோல் விஜ் ஆகிய இரு நண்பர்களாலும் நிறுவப்பட்டது இந்த ஸ்டார்ட் அப். சுஹாஸ் இதற்கு முன்பு எண்டர்ப்ரைஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனமான Global Inc. நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வாக இருந்தார். அன்மோல் கோவையைச் சேர்ந்த கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பான கீமைண்ட் லேர்னிங் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வாக இருந்தார்.

ஷாப்ஸ் அப் முதல் ஹேப்பிஇஎம்ஐ வரை

சுஹாஸ் துவக்கம் பற்றி பேசுகையில், 

“அலிபாபா நிறுவனரான ஜாக் மா இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்ட போது நாங்கள் இருவரும் அவரை சந்தித்தோம். முழுமையான உந்துதலளித்தார். எதிர்காலம் வெவ்வேறு ஷாப்பிங் முறைகளைக் கொண்ட அணுகுமுறையையே சார்ந்திருக்கும் என்பதை உணர்ந்தோம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தையில் செயல்பட விரும்பினோம்.

இருவரும் நகரத்திலுள்ள ஃபேஷன், லைஃஸ்டைல் மற்றும் பிற பொருட்களுக்கான சிறந்த ஸ்டோரை கண்டறிய உதவும் செயலியான ஷாப்ஸ் அப்பை துவங்கினர். இதில் ஒவ்வொரு முறை ஷாப்பிங் செய்யும்போதும் வெகுமதி அளிக்கப்படும். அதன் பிறகு விரைவில் ஹேப்பிஇஎம்ஐ துவங்கி அதில் கவனம் செலுத்தினர்.

அன்மோல் கூறுகையில், 

”ஷாப்ஸ் அப் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அதிக நபர்கள் இந்தத் தளத்தை பயன்படுத்தியபோதும் அவை அனைத்தும் இறுதியில் விற்பனையாக மாறவில்லை. எளிதான நிதி வாய்ப்புகளுக்கான தேவை இருப்பதை உணர்ந்தோம். உடன் இணைந்திருந்த வழிகாட்டிகள் மற்றும் முதலீட்டாளர்களின் உதவியுடன் ஹேப்பிஇஎம்ஐ உருவானது,” என்றார்.

ஷாப்ஸ்அப் தற்போது தானியங்கி முறையில் இயங்குகிறது. நிதி மற்றும் டிஜிட்டல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டு நிதி பற்றாக்குறை இருப்பவர்களுக்கு எளிதான கடன் வழங்கவேண்டும் என்பதையே தற்போது இவ்விருவரும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளனர். மக்கள் ஹேப்பிஇஎம்ஐ சேவையைப் பயன்படுத்தி உடனடியாக கடன் வசதி பெற்று தங்களுக்கு பிடித்தமான பொருளை வாங்கிக்கொண்டு மாதத்தவணையில் அந்தத் தொகையை திரும்ப செலுத்தலாம்.

இணை நிறுவனர்கள் தங்களது நோக்கத்தில் விருப்பம் கொண்டவர்களை தங்களது நெட்வொர்க்கில் தேடத்துவங்கினர். இன்று இந்தியா மற்றும் சீனாவில் 35 நபர்களைக் கொண்டுள்ளது இந்தக் குழு. ஹேப்பிஇஎம்ஐ தலைமை அலுவலகம் பெங்களூருவில் உள்ளது. இதன் ஆய்வு மற்றும் வளர்ச்சிக் குழு சீனாவில் உள்ளது. யுவர் ஸ்டோரியின் 2017 முக்கிய தலைப்பான ’மேக் இட் மேட்டர்’ டெக்30 ஸ்டார்ட் அப்களில் ஹேப்பிஇஎம்ஐ நிறுவனமும் ஒன்று. 

நிறுவனர்கள் சுஹாஸ் கோபிநாத் மற்றும் அன்மோல் விஜ்

நிறுவனர்கள் சுஹாஸ் கோபிநாத் மற்றும் அன்மோல் விஜ்


வாடிக்கையாளர்கள் கடனை திரும்பசெலுத்தும் திறனை சோதித்தல்

ஸ்கோரிங் என்ஜினை பயன்படுத்தி மாற்று தரவுகள் மூலம் ஹேப்பிஇஎம்ஐ வாடிக்கையாளரின் திறனை ஆய்வு செய்கிறது. இந்தத் தரவுகள் சமூக ஊடகங்கள், டெக்ஸ்ட் மெசேஜ், அழைப்புகள் போன்ற டிஜிட்டல் தகவல் பரிமாற்றங்கள் வாயிலாக சேகரிக்கப்பட்டதாகும். பயனாளி ஹேப்பிஇஎம்ஐ செயலி மூலமாக தேவையான தகவல்களை பதிவு செய்யலாம். ஹேப்பிஇஎம்ஐ eKYC பயன்படுத்தி பயனாளி குறித்த தகவல்களை சரிபார்த்து கடன் ஒப்பந்தத்திற்காக டிஜிட்டல் கையொப்பத்தை கேட்கின்றனர். பயனாளியை அங்கீகரிக்க ஆதாருடன் சரிபார்க்கப்படுகிறது. ரீடெய்லர்களுக்கு இரண்டு நாட்களில் பணம் செலுத்தப்படுகிறது.

அன்மோல் கூறுகையில், 

“ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாங்கள் பயனர்களிடம் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறும் வங்கி அறிக்கையை பகிர்ந்துகொள்ளுமாறும் குறிப்பிடுவோம். வங்கி அறிக்கை, லாயல்டி அனுபவங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி அதற்கான வழிமுறைகளின் மூலம் அவர்களது வரவு செலவுகளை கண்காணிப்போம். Perfigos என்கிற ஸ்டார்ட் அப்புடன் இணைந்தும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.” 

இவர்கள் நிதி நிலைமை குறித்த ஆய்வு, சரிபார்த்தல், நிதி தொடர்பான தரவுகள் சேகரித்தல் என ஒட்டுமொத்த செயல்முறைகளுக்கும் நுண்ணறிவுகளை வழங்குகின்றனர்.

மொபைல், நுகர்வோர் சாதனங்கள், வீட்டை மேம்படுத்தும் சாதனங்கள், கார் உபரி பாகங்கள் உள்ளிட்ட பிரிவுகளின் முன்னணி ரீடெய்ல் ப்ராண்டுகளுடன் இணைந்துள்ளது ஹேப்பிஇஎம்ஐ. எனினும் மொபைல் ஃபோன் மற்றும் ஆஃப்லைன் விநியோகம் போன்றவற்றிலேயே அவர்கள் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஹேப்பிஇஎம்ஐ எவ்வாறு வருவாய் ஈட்டுகிறது?

உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்களிடமிருந்து உதவி நிதி (Subvention) பெறுவதன் மூலமும் நுகர்வோரிடமிருந்து செயலாக்கக் கட்டணம் பெறுவதன் மூலமும் ஹேப்பிஇஎம்ஐ வருவாய் ஈட்டுகிறது. இந்த ஸ்டார்ட் அப் சில்லறை வர்த்தக பார்ட்னரின் விற்பனை அதிகரிக்கவும் நுகர்வோர் செலவிடும் சராசரி தொகையை அதிகரிக்க ஊக்குவிக்கவும் வாடிக்கையாளரின் மகிழ்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.

அன்மோல் கூறுகையில், 

”நாங்கள் பயனர்களிடன் எந்தவித வட்டியும் வசூலிப்பதில்லை. ஆனால் சில்லறை வர்த்தகர்களிடமும் உற்பத்தியாளர்களிடமும் கிட்டத்தட்ட ஏழு முதல் எட்டு சதவீத கமிஷன் வசூலிக்கிறோம்,” என்றார்.

இதுவரை மொத்த கடன் தொகை 10 மில்லியன் ரூபாயுடன் 1,000-க்கும் அதிகமான பயனர்களுக்கு கடன்கள் வழங்கியுள்ளது. சராசரி கடன் அளவு 10,000 ரூபாய். INCRED மற்றும் IREP கிரெடிட் கேப்பிடல் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு கடன் வழங்குவோருடனும் இணைந்துள்ளது ஹேப்பிஇஎம்ஐ. சங்கீதா, பூர்விகா, ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட பெங்களூருவைச் சேர்ந்த சுமார் 400 சில்லறை வர்த்தகர்களுடன் இணைய உள்ளது. நேரடி உதவி நிதி முறையில் ஓப்போ மற்றும் வீவோ நிறுவனங்களுடன் கையொப்பமிட்டுள்ளது ஹேப்பிஇஎம்ஐ.

ரீடெய்லர்களின் பில்லிங் சிஸ்டத்துடனான தொழில்நுட்ப இணைப்பு ஹேப்பிஇஎம்ஐ பன்முக வளர்ச்சியடைய உதவியது.

விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் சங்கேஷ்வர் மற்றும் Swipal Technologies நிறுவனத்தின் சிஇஓ யாங் ஷூ ஆகியோர் ஹேப்பிஇஎம்ஐ-க்கு ஒரு மில்லியன் டாலர் வரை நிதி வழங்கியுள்ளனர். மேலும் வெளியிடப்படாத தொகையை சென்னையைச் சேர்ந்த ஏஜே இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து ஹேப்பிஇஎம்ஐ பெற்றுக்கொண்டுள்ளது.

சவால்களை எதிர்கொள்ளுதல்

அன்மோல் கூறுகையில், “இந்தப் பகுதியை புரிந்துகொள்ளுதல் ஆரம்பகட்ட சவாலாக இருந்தது. குறிப்பாக நடவடிக்கைகளிலுள்ள விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்குதல் போன்றவை சவாலாக இருந்தது. எங்கள் சார்பாக கடனளிக்கும் NBFC-யுடன் இணைய வேண்டியிருந்ததால் இந்தப் பகுதியில் செயல்படுவதில் இருக்கும் இடர்பாடுகளை எடுத்துரைத்து அவர்களை சம்மதிக்க வைப்பது கடினமாக இருந்தது.”

முதலில் 100 சதவீத ஃபர்ஸ்ட் லாஸ் டீஃபால்ட் கேரண்டியுடன் (FLDG) துவங்கினர். தற்போது 10 சதவீத FLDG-யுடன் பணிபுரிகின்றனர். இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக நிறுவனர்கள் நினைக்கின்றனர்.

அவர்களை வேறுபடுத்திக் காட்டும் விஷயம் குறித்து சுஹாஸ் பகிர்ந்துகொள்கையில், “எங்களது தரவுகள் சார்ந்த அணுகுமுறை க்ரெடிட் ஸ்கோரைத் தாண்டியதாகும். இதனால் மாற்று தரவு புள்ளிகள் உதவியுடன் பெரியளவிலான நுகர்வோரை சென்றடைய முடிகிறது.”

”ஹேப்பிஇஎம்ஐ CIBIL ஸ்கோரை அடிப்படையாக எடுத்துக்கொள்ளாமல் தனது தனித்துவமான வழிமுறைகளை பின்பற்றுகிறது. இதில் 180-க்கும் மேற்பட்ட காரணிகளின் அடிப்படையில் நுகர்வோர் கடனை திரும்பசெலுத்தும் திறன் சோதிக்கப்படுகிறது.”

இந்த ஸ்டார்ட் அப் ஸ்மார்ட்ஃபோனை ‘டீப் லாக்கிங்’ செய்யும் முறையை உருவாக்கியுள்ளது. பயனாளி மாதத்தவணைத் தொகையை செலுத்தத் தவறிவிட்டால் ஃபோன் செயல்படாமல் பயன்படுத்த முடியாமல் போய்விடும். இதை நடைமுறைப்படுத்த மொபைல் உற்பத்தியாளர்களுடன் இணைந்துள்ளனர்.

சந்தை மதிப்பு

இந்தச் சந்தையின் மதிப்பு வருடத்திற்கு 391 பில்லியன் டாலராகவோ அல்லது கிட்டத்தட்ட நுகர்வோர் ஒரு வருடத்திற்கு செலவிடும் தொகையில் 3.5 சதவீதமோ மதிப்பிடலாம் என PoS நிதி குறித்து Filene Research Institute மற்றும் CU Direct நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கிறது. ஹெல்த்கேர், எலக்ட்ரானிக்ஸ், முன்னணி வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் ஃபர்னிச்சர்கள் போன்ற பிரிவுகள் நுகர்வோர் செலவிடும் பட்டியலில் அடங்கும்.

PoS நிதி, கடன் சங்கங்களுக்கு சிறப்பான வாய்ப்பளிக்கிறது. அதன் உறுப்பினர்களுக்கு ஒரு மலிவான மாற்றாக இது உள்ளது. ஏனெனில் வங்கிகள் மற்றும் ஊதிய நாளன்று கடனை திரும்பச்செலுத்தும் விதத்தில் கடன் வழங்குவோர் போன்றோர் உயர்ந்த விகிதத்துடன் நிதி வழங்குகின்றனர்.

இந்தியாவில் ஃபின்டெக் பகுதி சமீபத்தில் சிறப்பாகச் செயல்படுகிறது. இதன் மாற்று தளமான EarlySalary சமீபத்தில் 4 மில்லியன் டாலர் தொகையை IDG மற்றும் DHFL நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளது. ஸ்லைஸ்பே, கேப்பிடல் ஃப்ளோட், ஃப்ளெக்ஸி லோன்ஸ், இன்ஸ்டாபைசா போன்ற தளங்களும் இந்தப் பகுதியில் செயல்படுகிறது.

எதிர்காலத்தில் ஹேப்பிஇஎம்ஐ எந்த ஒரு வியாபாரியும் POS-ல் கடனளிக்க உதவி செய்து இந்தியாவின் மிகப்பெரிய நம்பகமான இஎம்ஐ என்ஜினாக உருவாக திட்டமிட்டுள்ளது. மக்கள் வசதியாக பொருட்களை வாங்கி எளிதாக மாதத் தவணைகளில் செலுத்தும் வசதியளிக்கிறது ஹேப்பிஇஎம்ஐ.

ஆங்கில கட்டுரையாளர் : நேஹா ஜெயின்

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக