பதிப்புகளில்

GST : சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் ஜூலை மாதம் முதல் பெறப்போகும் பயன்கள் என்ன?

YS TEAM TAMIL
30th Jun 2017
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

அரசாங்கம் இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தில் ஜிஎஸ்டியை அமல்படுத்த உள்ளது. ஜூலை 1 முதல் ஒற்றை வரி முறையினால் ஸ்டார்ட் அப்பில் ஈடுபட காத்திருப்பவர்களுக்கு அதிகாரத்துவம் குறைக்கப்பட்டு ஆவணங்கள் சார்ந்த பணிச்சுமையும் குறையும்.

image


சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாடெங்கும் நாளை ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்போது சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக மிகப்பெரிய மறைமுக வரி சீர்திருத்தமாக இது இருக்கப்போகிறது.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் ஜிஎஸ்டி என்பது அதன் புதிய சட்டத்தில் குறிப்பிடபட்டவைகளைத் தவிர அனைத்து சரக்கு மற்றும் சேவைகளுக்கும் இந்திய அரசாங்கம் விதிக்கும் மறைமுக வரியாகும். பூஜ்ஜிய சதவீத வரி அடுக்கு உட்பட ஐந்து அடுக்குகள் முன்மொழியப்பட்டுள்ளன. எதற்கு எந்த அடுக்குகளில் வரி விதிக்கப்படும் என்பதும் எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பதும் தெளிவுப்படுத்தப்படவில்லை.

கலால், சிஎஸ்டி, வேட், சேவை வரி என தயாரிப்பு மற்றும் விநியோக சங்கிலி சார்ந்த பல்வேறு வரிகளுக்கு மாற்றாகவே இந்த ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுகிறது. அதாவது தயாரிக்கப்படும் புள்ளியிலிருந்து தயாரிப்பு அல்லது சேவை நுகர்வோரை சென்றடையும் வரையிலும் பல்வேறு வரிகள் வழக்கில் உள்ளது. இந்த மத்திய வரி விதிப்பினால் சேகரிக்கப்படும் வரியானது மத்திய மற்றும் மாநில கருவூலங்களுக்கு விநியோகிக்கப்படும். நுகர்வோரைப் பொறுத்தவரை வெளிப்படையான விலை, இரட்டை வரிவிதிப்பு நீக்கப்படுதல் மற்றும் சீரான வரி விதிப்பு ஆகிய பலன்கள் கிடைக்கும்.

ஆனால் ஒருவேளை நீங்கள் ஒரு சிறு தொழில் புரிபவராகவோ அல்லது ஸ்டார்ட் அப் பயணத்தில் ஈடுபடுபவராகவோ இருந்தால், துவக்க நிலையில் இருப்பவர்களுக்கு சரக்கு மற்றும் சேவை மீதான ஒற்றை வரி முறையானது அதிகாரத்துவத்தை குறைப்பதுடன் தற்போதைய வரி முறையையும் குறைக்கும்.

இணக்கம் மற்றும் நிர்வாகம் சார்ந்த பிரிவுகளில் குறிப்பிடத்தக்க பலன்கள் இருக்கும் என்கிறார் மெரிகன் கன்சல்டன்ஸ்-சின் ரோஹன் அரினயா.

இன்று ஸ்டார்ட் அப்கள் பல்வேறு வரி துறைகளை அணுகி பல்வேறு வரிகளுக்கான காலகெடுக்களின் இணக்கத்தை உறுதிசெய்யவேண்டியுள்ளது. ஆனால் இனிமேல் அவர்கள் ஒரே ஒரு அமைப்புடன் மட்டும் தொடர்பு கொள்ளப்போகிறார்கள்.
image


ஜிஎஸ்டி அளிக்கப்போகும் சில பலன்கள் என்னவாக இருக்கும்?

ஸ்டார்ட் அப்பிற்கு நல்ல செய்தி : நீங்கள் தொழில் துவங்க திட்டமிட்டு வருகிறீர்கள் என்றால் ஜிஎஸ்டி உங்களுக்கு நல்ல செய்தியையே அளிக்கப்போகிறது. தற்போதைய வரி விதிப்பு முறைப்படி விற்பனை வரி துறையின் பல்வேறு அடுக்குகளில் வேட் பதிவு அவசியமாகிறது. உங்களது வணிகமானது பல்வேறு மாநிலங்களில் செயல்படும் நிலையில் பல்வேறு பதிவுகள் தேவைப்படும். பல்வேறு விதிமுறைகளுக்கு ஏற்றவாறு செயல்பட நேரிடும். வணிகத்தைப் பொறுத்தவரை இதில் ஆவணங்கள் சார்ந்த அதிகப்படியான பணிகள், இணக்கம் சார்ந்த தேவையற்ற சிக்கல்கள் மற்றும் செயல்முறை கட்டணங்களும் இருக்கும். இது சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு ஒரு சுமையாகவே இருந்து வந்தது. ஒற்றை வரி முறையானது செயல்முறையை ஒழுங்குபடுத்தும்.

புதிய வணிகங்களுக்கு நன்மை பயக்கும் : தற்போது வணிகங்கள் அவர்களது வருவாய்க்கு ஏற்றவாறு வெவ்வேறு ஒழுங்குமுறை அதிகாரிகளிடம் பதிவு செய்திருக்க வேண்டும். 20 லட்ச ரூபாய் வரை பதிவுசெய்கையில் புதிய வரி விதிப்புப்படி வரி விலக்கிற்கான வரம்பு உயர்த்தப்படலாம்

எல்லையற்ற வணிகம் : பழைய வரி அமைப்பின்படி பெரிய நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யும் பல்வேறு சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் செலவுகள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான வரி ஆகியவற்றை குறைப்பதற்காக மாநிலத்தின் எல்லைக்குள் தயாரிப்புகளை விற்கவேண்டிய நிலை இருந்தது. ஒற்றை அமைப்பின் கீழ் கார்ப்பரேட்கள் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்து வேண்டுமானாலும் சரக்குகளை வாங்கலாம். விற்பனையாளர் மற்றும் கொள்முதல் செய்வோர் இருக்கும் இடம் எதுவாக இருந்தாலும் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் செலுத்தவேண்டிய வரித் தொகையிலிருந்து வரிகளை கழித்துக்கொள்ளலாம் என்பதால் அவர்கள் தங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை விரிவுப்படுத்திக்கொள்ளமுடியும்.

குறைந்த விலை, சிறப்பான லாஜிஸ்டிக்ஸ், விரைவான விநியோகம் : நுழைவு வரி விலக்கினால் மாநிலத்தின் எல்லைகளிலும் சோதனைச் சாவடிகளிலும் சரக்குகளை விநியோகம் விரைவாகும். உற்பத்தியாளர்களுக்கு மொத்த சரக்குகளுக்கான லாஜிஸ்டிக்ஸ் செலவு 20 சதவீதம் குறைவும் என்று CRISIL அறிக்கை தெரிவிக்கிறது. இது இ-காமர்ஸை நாடெங்கும் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரக்கும் சேவையும் ஒன்றாகும் : சரக்கு மற்றும் சேவைக்கான வேறுபாடு இருக்கப்போவதில்லை என்பதுதான் ஜிஎஸ்டி அளிக்கப்போகும் குறிப்பிடத்தக்க சீர்திருத்தமாகும். விற்பனை மற்றும் சேவையில் ஈடுபட்டிருக்கும் சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு வரி அமைப்பு எளிதாக இருக்கப்போகிறது. பொருட்கள் மற்றும் சேவை ஆகியவற்றில் வேறுபாடு இல்லாததால் வரி ஏய்ப்பு குறையும்.

நுகர்வோருக்கு குறைந்த விலையில் கிடைக்கும் : ஜிஎஸ்டி-யினால் பல்வேறு வகையான பொருட்களுக்கு வரி இருக்காது. உதாரணத்திற்கு மூலப்பொருட்கள், மத பொருட்கள், கருத்தடை சாதனம் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் உள்ளிட்டவை. பதப்படுத்தப்பட்ட உணவுகளின் விலையும் குறையலாம். எனினும் சில ஆடம்பர பொருட்களின் விலை உயரலாம். திருத்தப்பட்ட வரி அமைப்பின் பலன்கள் எப்போது தங்களை வந்தடையும் என்று நுகர்வோர் காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆங்கில கட்டுரையாளர் : தியா கோஷி ஜார்ஜ்

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக