பதிப்புகளில்

’INDIA 100’- 2016 ஆம் ஆண்டின் முதல் 100 ஸ்டார்ட்-அப் பட்டியலை யுவர்ஸ்டோரி வெளியிட்டது!

YS TEAM TAMIL
9th Jan 2017
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

பல வருடங்களாக யுவர்ஸ்டோரி ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலில் நிலவிவரும் ஏற்ற இறக்கங்கள், டேட்டாவின் அடிப்படையில் துறை வளர்ச்சி குறித்தும் அவ்வப்போது ஆழாமான கட்டுரைகளை வெளியிட்டும் வருகிறது. அதன் அடிப்படையில், 2016 இல் முதல் 100 இடத்தை பிடித்த ஸ்டார்ட்-அப்’கள் எது என்பதை பட்டியிலிட்டுள்ளோம்!

‘INDIA 100’ நிறுவனங்கள் எவை, வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்ற தொடக்க நிறுவனங்கள் எது? 2016 இல் மாற்றத்தை ஏற்படுத்தியவை எவை? தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று ஆண்டு முழுதும் சந்தையில் நிலையாக இருந்து விரிவடைந்த நிறுவனம் என்னென்ன என்பதை விளக்கியுள்ளோம். 

பட்டியிலிட்டுள்ள 100 நிறுவனங்களை தவிர, யுவர்ஸ்டோரி பல புதிய ஸ்டார்ட்-அப்’ களை வெளியுலகின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் சேவை நிறுவனங்கள் வரை ‘டெக்ஸ்பார்ட்ஸ்’, ‘மொபைல்ஸ்பார்க்ஸ்’ போன்ற யுவர்ஸ்டோரியின் விழாக்களின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளோம். 

image


100 ஸ்டார்ட்-அப் பட்டியல் இதோ:

இந்தியா 100 பட்டியல் தயாரித்த முறை: யுவர்ஸ்டோரி டேட்டாபேசில் இருக்கும் 30,000 ஸ்டார்ட்-அப் களில் ஆய்வு செய்ததில், 1700 நிறுவனங்கள் ஜனவரி 2014 முதல் டிசம்பர் 2016 வரை சுமார் 5 லட்சம் டாலர் நிதியை பெற்றுள்ளது. இதை எங்கள் ரேன்கிங் முறையில், நான்கு முக்கிய அளவுருக்கள் கொண்டு- வெப் ரேன்க், ப்ராண்ட் ரேன்க், மொபைல் ரேன்க் மற்றும் ஃபண்டிங் ரேன்க் மூலம் 250 ஸ்டார்ட்-அப்’களை தேர்ந்தெடுத்தோம். பின்னர், நான்கு சம அளவுகளை, வாசகர்களின் ரேன்குடன் ஒப்பிட்டு, YS ரேன்க் என்று தேர்ந்தெடுத்து, முதல் 100 ஸ்டார்ட்-அப்’ களை பட்டியிலிட்டோம். 

image


வெப் ரேன்க்- நிறுவனத்தின் பொது டிராபி ரேன்க்- அலெக்சா, காம்ஸ்கோர் மற்றும் சிமிலர்வெப். இதில் உள்ள தகவலை கொண்டு இணைய வளர்ச்சியை கண்டுபிடித்தோம்.

ப்ராண்ட் ரேன்க்- சர்ச் மற்றும் சமூக சிக்னல்கள். கூகிள் தேடு இயந்திரத்தில் நிறுவனம் எப்படி இயங்கியது? அதை தவிர, ஃபேஸ்புக், பேன் பேஜ், லைக்ஸ், கமென்ட்ஸ், பகிர்வுகள், ட்விட்டர், பின்பற்றுவோர் எண்ணிக்கை, மறுபகிர்வுகள் என்ற அடிப்படைகளில் கணக்கீடு.

ஃபண்டிங் ரேன்க்: முதலீடுகள், நிதி விவரம். கடந்த 3 ஆண்டுகளில் நிறுவனம் எத்தனை சுற்று நிதி பெற்றுள்ளது?

மொபைல் ரேன்க்: பதிவிறக்கங்களின் எண்ணிக்கை. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் ஆப் ரேடிங்

வாசகர்களின் ரேன்க்: வாடிக்கையாளர்களாக அவர்கள் விரும்பிய ஸ்டார்ட்-அப். யுவர்ஸ்டோரி வாசகர்களின் பிடித்தமான ஸ்டார்ட்-அப் எது என்று வாக்கெடுப்பு நடத்தி அதன்மூலம் ரேன்க் பட்டியல். 

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக