பதிப்புகளில்

94 ஆண்டுகளுக்குப் பின் கரைப்புரண்ட வெள்ளம்... தண்ணீர் தேசமாகி தத்தளிக்கும் கடவுள் தேசம்!

jaishree
17th Aug 2018
Add to
Shares
185
Comments
Share This
Add to
Shares
185
Comments
Share

கேரளத்தின் முதன்மையான மழைப் பருவத்தில் ஒன்றான தென்மேற்கு பருவம், ஆண்டுத்தோறும் ஜுன் மாதம் முதல் செப்டம்பர் வரையிருக்கும். விடாது அடித்து ஊற்றும் மழை போன்றல்லாமல், சூரியன் அடிக்கடி எட்டிப்பார்த்து பொன்னிற இடைவேளைவிட்டு தன் ரம்மியமான அழகை காட்டிச் செல்லும் பேரழகியாகவே இத்தனை வருடங்களாய் காட்சிதந்தது. அதனால், இந்த தென்மேற்கு பருவ மழையினையும் கேரளத்து மக்கள் சற்றே அதிகமாகப் பொழியும் சாதாரண பருவமழை என்றே நினைத்திருப்பார்கள். 

ஆனால், கடவுளின் தேசத்தினை ‘தண்ணீர் தேசமாக்கி’, மாநிலத்தையே வெள்ளக்காடாக்கி செல்ல வந்திருக்கும் பேய்மழை என்பதை அவர்கள் உணர்ந்திருக்க மாட்டார்கள். பக்சே, என் செய்ய மழையின் தீவிரத்தை உணரும் முன்னே, அழகிய கேரளம் சிதைந்துவிட்டதே!

பட உதவி:  Newsx

பட உதவி:  Newsx


மேற்கில் அரபிக்கடல் சூழ்ந்திருக்க, கிழக்கில் மேற்குத்தொடர்ச்சிமலை உயர்ந்திருக்க, 44 ஒன்றுடன் ஒன்று இணைந்த ஆறுகள், ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட 40 அணைகள் என நீர் நிறைந்து பசுமையில் மூழ்கியிருக்கும் மாநிலம் கேரளம். இன்று வெள்ளத்தால் மூழ்கிக் கிடக்கிறது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும் மழையின் காரணமாக, எப்போதுமின்றி 27 அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் அவை திறந்து விடப்பட்டுள்ளன.

26 ஆண்டுகளுக்கு பின், கடல் மட்டத்திலிருந்து 2400 அடி உயரமும், 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவும் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணையின் ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. வரலாறு காணாத கனமழையால் மாபெரும் வெள்ளத்தினை சந்தித்துள்ளது கேரளா.

1924ம் ஆண்டுக்கு பிறகு, கேரளம் எதிர்கொள்ளும் இரண்டாவது மிகப்பெரிய வெள்ளப் பேரிடர் இது. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், வயநாடு, மலப்புரம், ஆலப்புழா என பத்து மாவட்டங்கள் வெள்ளக்காடு ஆகிவிட்டது. பாலங்கள் நொறுங்கிவிட்டன. 10 ஆயிரம் கி.மீ நீளத்துக்கு சாலைகள் சேசதமடைந்துள்ளன. குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன. அடுக்குமாடி குடியிருப்புகள் அடையாளம் தெரியாமல் மூழ்கிக் கிடக்கின்றன. மின்சாரம் அறுந்து, நெட்வொர்க்குகள் ஸ்தம்பித்துள்ளன. லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. கால்நடைகள் காணாமல் போயின. வயல், தோட்டங்கள், வீடுகள்... என அந்த மக்களின் அத்தனை வாழ்வாதாரங்களையும் மூழ்கடித்து முடக்கிப்போட்டிருக்கிறது மழை வெள்ளம். 

நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஆயிரக்கணக்கான வாகனங்களும் சேதமடைந்துள்ளன. ஒரே நாளில் மட்டும் 25 பேர் இறந்துள்ள சோகமும், இதில் மலப்புரம் மாவட்டத்தில் வீடு இடிந்ததில் 8 பேர் பலியான சோகமும் நடந்துள்ளது. இதுவரை மழையால் மரணித்தோரின் எண்ணிக்கை 160-ஐ தாண்டிவிட்டது. மேலும் பலரை காணவில்லை என்றும், 41 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது. 

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதப்பட்டுள்ளன என்றும் கேரள அரசு தெரிவித்திருக்கிறது. கடவுள் தேசத்தில் வெள்ளம் விளைவித்த சேதத்தின் மொத்த மதிப்பு முதல் மதிப்பீட்டில் 8,000 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு முகாம்களில் தஞ்சம் புகுந்ததுள்ள 1,65,538 மக்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் குளிரிலும், பசியிலும், இருளிலும் தவிக்கிறார்கள்.

அத்தனைக் குரல்களும் உதவி நாடி அலற, பேரிடர் மீட்புக்குழுவினர், போலீஸார், தீயணைப்பு படையினர், விமானப்படை, கப்பற்படை, ராணுவப்படையும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சுற்றிலும் நீர் சூழ, மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு உதவிக்காக காத்திருப்போரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு வருகின்றனர். ஆனாலும், மீட்புப் பணிகளை விரைந்து முடுக்கிவிட முடியாதவாறு தொடர்மழை பெய்வதாலும், மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதாலும் நிலைமை இன்னும் சிக்கல்! 

பட உதவி: Deccan Chronicle

பட உதவி: Deccan Chronicle


நம் தலைநகர் சென்னை வெள்ளத்தில் தத்தளித்த போது பெரும் உதவிப் புரிந்த சமூக வலைதளங்களிலே கேரளத்தாரும் உதவி நாடி வருகின்றனர். சோஷியல் மீடியாக்களில் உணவுகிடைக்கவில்லை என்று மீட்கப்பட்டவர்கள் கதறல் வீடியோக்கள் ஒருபுறம் வலம்வர, வீட்டின் கோபுரத்தில் அமர்ந்து கொண்டு உதவிக்காக ஏங்குவோரின் புகைப்படங்களும் அதிகமாக பகிரப்பட்டு ஒட்டு மொத்த தேசமே, கடவுளின் தேசத்துக்காக கண்ணீர் சிந்தி வருகிறது.

மனிதனோ மிருகமோ அனைத்தும் உயிரே எனும் பரந்த நோக்கில் ஒவ்வொரு உயிரையும் காத்திட அவர்கள் எடுத்த முயற்சிகள் பல இணையத்தில் வைரலாகி பாராட்டுக்களை பெற்று தந்திருக்கிறது. அவற்றில் கழுத்தளவு தண்ணீரிலும் தான் கொஞ்சி வளர்த்த குட்டி நாயை தலையில் சுமந்தப்படியே நடக்க... பெரியாறு நதியில் வெள்ளம் கரைபுரண்டு வந்த நேரத்தில், இடுக்கியில் ஒரு தந்தையின் கைகளில் இருந்த சிறு குழந்தையை வாங்கிக்கொண்டு, ஒரு பாலத்தை ஓடிக்கடக்கிறார் மீட்பர் ஒருவர். அவர் பாலத்தைத் தாண்டியதும் பாலம் தகர்ந்து அவ்விடமே கடலாய் காட்சியளிக்கிறது... 

இதுபோன்று இன்னும் இன்னும் மனிதம் போற்றும் பல சம்பவங்களும் கேரள தேசம் முழுக்க நடந்துகொண்டிருக்கின்றன.

உண்மையில், ஒவ்வொரு பேரழிவிலும் உலகை மீட்பதும் காப்பதும் மனிதம் மட்டுமே. சென்னை வெள்ளத்தின் பேரிடர் துயரத்திலும் அதுதான் நடந்தது. சக மனிதர்கள் மீது கொண்ட அன்பினால், இணைந்து வந்த இதயங்களால் மட்டுமே சென்னை வெகு விரைவில் மீண்டது. அப்போது, நாம் எழுந்து நிற்க உதவிக்கரம் நீட்டியது கேரளம். உதவி செய்வதர்களுக்கு கைம்மாறு செய்யும் பாக்கியம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நமக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடித் தேவை நிவாரணம்.

அதற்கு முதலில் வணிகர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள்னு எல்லோரையும் ஒன்றிணையுங்கள். உதவிகளைத் திரட்டுங்கள். எந்ததெந்தப் பகுதிக்கு என்னென்ன உதவிகள் தேவை என்பதை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் மக்களிடம் உதவிகளைச் சேருங்கள். 

கேரள மக்களுக்காக நீங்களும் கரம் கொடுக்க விரும்பினால் கீழே குறிப்பிட்டுள்ள இணைதளங்களை நாடுங்கள்...

1. ’அன்போடு கொச்சின்’ அமைப்பை உருவாக்கி, இளைஞர்களை திரட்டி கேரளாவின் பெருவாரியான ஏரிகளை தூர்வாரிய, கேரள உணவு பாதுகாப்புத் துறை ஆணையராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி ராஜமணிக்கம், தலைமையில் நிவாரண நிதிகள் வயநாடுக்கு சென்று கொண்டிருக்கின்றன.

அன்போடு கொச்சின் பேஸ்புக் பக்கத்தில் உடனடி தேவைகள் போஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. ஃபேஸ்புக் லிங்க் 

image


2. நேரடியாய் முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு பணமாக செலுத்த விரும்புவோர், இந்த இணையதளத்தை அணுகவும்.

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான வங்கிகணக்கு தகவல்: 

Name of Donee: CMDRF | Account number : 67319948232 | Bank: State Bank of India | Branch: City branch, Thiruvananthapuram | IFSC: SBIN0070028 | PAN detail: AAAGD0584M | SWIFT CODE: SBININBBT08

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அறியவும், பாதிக்கப்பட்டவர்கள் உதவிக்கோரவும் மாவட்டவாரியாக அறிவிக்கப்பட்டுள்ள அவசர உதவி எண்கள்:

image


கேரளா வெள்ளம் மாவட்ட வாரியான உதவி எண்கள்: இலவச உதவி எண்கள் - 1077

3. கேரள மக்களுக்கு கரம் கொடுக்க முன்வரும் மதுரை மக்கள், ‘அன்போடு கொச்சின்’ அமைப்பை உருவாக்கிய ராஜமாணிக்கம் ஐஏஎஸ் அதிகாரியுடன் இணைந்து செயல்படும் மணிக்கண்டன், ஏற்கனவே ஒரு லாரி பொருட்களை கேரள மக்களிடம் சேர்த்துள்ளார். அடுத்த இரு தினங்களில் மற்றொரு லாரியிலும் கேரளாவை நோக்கி கிளம்ப இருக்கிறது. நைட்டி, பாத்திரங்கள், சானிட்டரி நாப்கின், ரஸ்க், போர்வைகள் போன்றவற்றை கொடுத்து லாரியை நிரப்ப விரும்புவோர் மணிகண்டனைஅணுகலாம். தொடர்புக்கு :- 9244317137 கலெக்டிங் பாண்ட் நேத்ராவதி வலிநிவாரண மற்றும் மறுவாழ்வு மையம், ஆதிசிவன் நகர், விளாச்சேரி, மதுரை.

4. பெட்ஷீட், காட்டன் துண்டுகள், சேலைகள், லுங்கிகள், சட்டைகள், உள்ளாடைகள், டூத்பிரஷ், டூத்பேஸ்ட், வாளிகள், குளியல் மக், விக்ஸ், அமிர்தான்ஜன், நப்கின், தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, சில்வர் தட்டு, பாய்கள், ஸ்கூல் பேக், நே õட்டுபுத்தங்கள், அலுமினிய பாத்திரங்கள், பென்சில், பேனா, ரப்பர், குழந்தை டாயப்பர், டெட்டால், ஓஆர்எஸ் பாக்கெட், பைகளில் கட்டப்பட்ட பல சரக்கு பொருட்கள், தண்ணீர் பாட்டில், பால் பாட்டில், குளியல் சோப், துணி துவைக்கும் சோப், பால் பவுடர்... ஆகிய அத்தியாவசிய தேவையான பொருட்களை சென்னைவாசிகள் கீழ்கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் கொடுத்தால், உங்கள் பொருள் கேரள மக்களை சென்றடையும். தொடர்புக்கு: ஷைலா மோகன் - 9677048048

மாற்றம் கல்வி மற்றும் தொண்டு நிறுவனம், 5/528, டாக்டர். வைதேகி தெரு, வெங்கடேஸ்புரம், கொட்டிவாக்கம். தொடர்புக்கு : குமார் - 9551555550

5. கோயம்புத்துõர் ரோட்டரி கிளப் கேரள மக்களுக்கு தேவையான பொருள்களை சேகரித்து மக்களடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது. உணவு, பயன்படுத்தாத துணி, பெட்ஷீட், டென்ட், காலணிகள், பாத்திரங்கள், மருந்துப்ö பாருட்களை கோயம்புத்துõர் ரோட்டரி கிளப்பில் கொண்டு கொடுக்கலாம். மேலும் தகவல்களுக்கு சிவா - 9677403481

6. திண்டுக்கல் ‘கார்னிவெல் சினிமாஸ்’-ல் இன்றும் (17.08.2018) நாளையும் (18.08.2018) கேரள மக்களுக்கான நிவாரணத் தேவைகளை சேகரிக்க உள்ளனர். முடிந்தவர்கள் முடிந்தவற்றை வழங்கி உதவவும். நிவாரணம் குறித்த அப்டேட் தகவல்களுக்கு கார்னிவெல் சினிமாஸ் பேஸ்புக் பக்கத்தை அணுகவும்.

7. தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் கேரள மக்களுக்காக நிவாரணம் சேர்க்கும் நபர்கள் மற்றும் தொடர்பு எண்கள் இந்த அட்டவணையில் தொகுத்துப்பட்டுள்ளன. அட்டவணையில் உள்ள தொலைப்பேசி எண்களை தொடர்புக் கொண்டு பொருள்களின் தேவை மற்றும் காலக்கெடுவை அறிந்துக் கொண்டு பொருள்களை வழங்கவும்.

https://docs.google.com/spreadsheets/d/16ZbWzTPFqntBaATYRjc--lEBMIEn_gTwq_LyksAeqj4/edit#gid=0

மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்கள்:

திருவனந்தபுரம்- 0471 2730045 , கொல்லம்- 0474 2794002, பத்தனம்திட்டா- 0468 2322515, 2222515, தாலுக்கா அலுவலக கொலென்சேரி 04682222221, அடூர் 0473224826, கொன்னி - 04682240087, மலைப்பள்ளி 04692682293, ரன்னி - 04735227442, திருவல்லா 04692601303, ஆழப்புலா- 0477 2238630, கோட்டயம்- 0481 2562201, இடுக்கி- 0486 2233111 , 9061566111, 9383463036, எர்ணாகுளம்- 0484 2423513, 7902200300, 7902200400, திருச்சுர்- 0487 2362424, 9447074424, பாலக்காடு- 04912505309, 04912505209, 04912505566, மலப்புரம்- 0483 2736320, 04832736326, கோழிக்கோடு- 0495 2371002, வயநாடு - 9207985027, 9207985027, கண்ணூர்- 0468 2322515, 04972700645, 8547616034. 

மற்ற முக்கியமான எண்கள்:

மாவட்ட ஆட்சியர், கோழிக்கோடு - 0495-2371002

பேரிடர் மேலாண்மை மீட்பு இயக்குனர், மலப்புரம் - 04832 736320

பேரிடர் மேலாண்மை மீட்பு இயக்குனர் பத்தனம்திட்டா துணை ஆட்சியர், ( பேரிடர் மேலாண்மை)- 04682322515 , 8547610039

கடந்தாண்டு இதேநேரம், திருவோணத்தை சிறப்பிக்கும்விதமாக வெளியாகிய ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் வழியே ஒட்டுமொத்த இந்தியாவையும் குதூகலமாக்கிய சேட்டன்களும், சேச்சிகளும், பசுமையில் மூழ்கி எல்லா நேரங்களிலும் மிகவும் அமைதியான அனுபவத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு அளித்த கேரளமும், இன்று அமைதியற்று கிடக்கிறது. எங்கு திரும்பினும் பசுமையுடன், வனங்களின் வனப்பும், இயற்கையின் குளுமையுடன் மீண்டு வர, நம் பங்கையும் ஆற்றுவோம். 

Add to
Shares
185
Comments
Share This
Add to
Shares
185
Comments
Share
Report an issue
Authors

Related Tags