பதிப்புகளில்

உலகின் மிகப்பெரிய சமையலறை ’அக்‌ஷய பாத்ரா’

நாள்தோறும் 12 லட்சம் குழந்தைகளுக்கு உணவளிக்கும்  விசாகப்பட்டினத்தில் உலகின் மிகப்பெரிய சமையலறையைக் கொண்டு இயங்குகிறது அக்‌ஷய பாத்ராவின் தலைமையகம் 

12th Jan 2018
Add to
Shares
10.1k
Comments
Share This
Add to
Shares
10.1k
Comments
Share

அனைத்து மாநிலங்களிலும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் ஆரம்பப் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படவேண்டும் என்பதை 2001-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது. மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு முழு உணவு வழங்கிய மரபைக் கொண்ட அக்‌ஷய பாத்ரா ஃபவுண்டேஷன் அதன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது.

ஏ.சி.பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்கள் சில குழந்தைகள் உணவிற்காக வீதியிலிருந்த நாய்களுடன் சண்டையிடுவதைப் பார்த்தார். அதன் பிறகே 2000-ம் ஆண்டு ஒரு கோவிலில் இருந்து இத்தகைய முயற்சியைத் துவங்கி உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனத்தால் இயங்கும் மதிய உணவு திட்டத்தை மேற்கொண்டர். பசியையும் ஊட்டச்சத்து குறைபாட்டையும் எதிர்த்துப் போராட உருவான இந்நிறுவனம் தற்போது 13,839 பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் பன்னிரண்டு மாநிலங்களில் தினமும் 16,75,008 குழந்தைகளுக்கு அக்‌ஷய பாத்ரா ஃபவுண்டேஷன் உணவளித்து வருகிறது.

இந்த பிரம்மாண்ட சமையலறையில் நடந்து சென்ற அனுபவத்தை படமாக விளக்குகிறோம்

இந்த பிரம்மாண்ட சமையலறையில் நடந்து சென்ற அனுபவத்தை படமாக விளக்குகிறோம்


இதன் சிறப்பான செயல்பாடுகளின் மூலம் இந்திய அரசாங்கத்தின் மிகப்பெரிய பார்ட்னராக மாறியது. வகுப்பறையில் இருக்கும் மாணவர்களின் பசியை போக்கவும், பள்ளியில் மாணவர்கள் வருகையை அதிகரிக்கவும், அவர்கள் தவறாமல் வகுப்பிற்கு வருகை தரவும், சாதிப்பிரிவினையின்றி மாணவர்கள் ஒருங்கிணையவும், ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடவும், பணி வாயிலாக பெண்களுக்கு அதிகாரமளிக்கவும் மதிய உணவு திட்டமானது உருவாக்கப்பட்டது. மாநில அரசாங்கம் மற்றும் ஆதரவாளர்களுடன் வெற்றிகரமாக இணைந்து 34 சமையலறைகள் வாயிலாக செயல்படுகிறது அக்‌ஷய பாத்ரா மதிய உணவு திட்டம்.

ஹைதராபாத்தில் அமைந்துள்ள அக்‌ஷய பாத்ரா ஃபவுண்டேஷனின் தலைவர் சத்ய கௌர சந்திரா தாசா மற்றும் விசாகபட்டனத்திலுள்ள ஃபவுண்டேஷனின் தலைவர் நிஷ்கின்சானா பக்ததாசா ஆகியோருடன் நடந்த உரையாடலின் மூலம் விசாகப்பட்டனத்தில் 25,000 பேருக்கு உணவளிக்கக்கூடிய சமையறை குறித்து தெரிந்துகொண்டோம். ஜக்ரிதி யாத்ராவின் 10-ம் பதிப்பின் ஒரு பகுதியாக 2020-ம் ஆண்டில் ஐந்து மில்லியன் குழந்தைகளுக்கு உணவளிக்க விரும்பும் ஒரு நிறுவனம் குறித்து படங்களை பகிர்ந்துகொள்கிறோம்.

ஏசி பக்திவேதாந்தா ஸ்வாமி பிரபுபதா

ஏசி பக்திவேதாந்தா ஸ்வாமி பிரபுபதா


இந்தியாவிலுள்ள குழந்தைகளில் சுமார் 50 சதவீதம் பேர் (சுமார் 60 மில்லியன்) எடை குறைவாக உள்ளனர். கிட்டத்தட்ட 45 சதவீதம் பேர் உயரம் குறைவாக உள்ளனர். 20 சதவீதம் பேருக்கு உயரத்திற்குத் தகுந்த உடல் பருமன் இல்லை. இது ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பதையே சுட்டிக்காட்டுகிறது. 75 சதவீதம் பேருக்கு ரத்தசோகை உள்ளது. 57 சதவீதம் பேருக்கு வைட்டமின் ஏ குறைபாடு உள்ளது. இது 2001-ம் ஆண்டு உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின் தகவலாகும்.

சத்ய கெளர சந்திர தாசா, தலைவர் அக்‌ஷய பாத்ரா பவுண்டேஷன், ஹைதராபாத் மற்றும் நிஷ்கின்சனா பக்ததாசா, தலைவர், விசாகபட்டினம் பிரிவு

சத்ய கெளர சந்திர தாசா, தலைவர் அக்‌ஷய பாத்ரா பவுண்டேஷன், ஹைதராபாத் மற்றும் நிஷ்கின்சனா பக்ததாசா, தலைவர், விசாகபட்டினம் பிரிவு


image


ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகளின் வாழ்நாளை குறைக்கிறது, பல தொற்றுநோய்கள் வர காரணம் ஆகிறது. கற்றலுக்கான திறனை குறைத்து, பள்ளியில் இருந்து இடைநிற்றல் செய்ய வழி செய்கிறது. மேலும் செயல்பாட்டை தடுத்து வாழ்வின் அடுத்த பகுதிகளில் அவர்களை வலுவிழந்தவர்கள் ஆக்கிவிடுகிறது.  

image


2000-ம் ஆண்டு துவக்கப்பட்ட அக்‌ஷய பாத்ரா, தொடக்கத்தில் ஐந்து பள்ளிகளில் பயிலும் 1500 குழந்தைகளுக்கு உணவு அளித்து வந்தது. ஆனால் இன்று இவர்கள் சுமார் 1.6 மில்லியன் குழந்தைகளுக்கு இந்தியா முழுதும் உள்ளன்12 மாநிலங்களுக்கு உணவு அளித்து வருகின்றனர். 

image


விசாகபட்டினம் பிரிவு மூலம் சுமார் 25 ஆயிரம் குழந்தைகளுக்கு தினம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் உற்பத்தி மற்றும் அளித்தலில் 250 பேர் பணிபுரிகின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது. 

image


இந்தியாவில் இந்த தன்னார்வ தொண்டு இயக்கத்தின் திட்டத்தை முதன்முதலில் இணைத்துக் கொண்டது கர்நாடகா மாநிலம். தனியார்-அரசு கூட்டில் அமைந்த இத்திட்டத்தின் வெற்றி மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் இது குறித்து 2005-ல் தெரிந்து கொள்ள முன் வந்தது இதன் சிறப்பு. 

image


விசாகப்பட்டினம் பிரிவில், குறிப்பாக வட இந்தியா கொண்டு செல்வதற்கான உணவு தயாரிக்கப்படுவதால், ஹை-டெக் உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிறது. அங்கு 6 பாய்லர்கள் உள்ளனர். ஒரே சமயத்தில் இவற்றில் 500 குழந்தைகளுக்கு அறை மணி நேரத்தில் உணவு சமைத்து விடமுடியும். 

image


ரூபாய் 45 லட்சம் மதிப்பில் உணவு சோதனை லேப் அமைக்கப்பட்டு, உணவு தரம் மதிப்பீடு கருவி ஆகியவை திவிஸ் லேபராட்டரியால் இலவசமாக அக்‌ஷய பாத்ரா-விற்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அக்‌ஷ்ய பாத்ராவின் சமயலறை ஆராய்ச்சி செய்யக்கூடிய ஒரு தலைப்பாக இன்று மாறியுள்ளது அதன் பெருமை. 

ஆசிரியர் குறிப்பு : ஸ்ருதி மோகன். ஜக்ரிதி யாத்ராவின் 10-ம் பதிப்பில் யுவர்ஸ்டோரி குழு பங்கேற்றது. இது நாடு முழுவதும் 15 நாட்களில் 8,000 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய ரயில் பயணதிட்டமாகும்.

Add to
Shares
10.1k
Comments
Share This
Add to
Shares
10.1k
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக