பதிப்புகளில்

வெள்ளத்தால் வீடு இழந்தோர்க்கு தற்காலிக இருப்பிடம் வழங்க விரும்புவோரை இணைக்கும் தளம்!

சென்னையைச் சேர்ந்த தொழில்முனைவோர்கள் சிலர் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தொழில்நுட்ப தளம் மூலம், வீடுகளை இழந்து கேரள வெள்ள முகாம்களில் இருப்போர் தங்கள் அருகாமையில் உள்ள விருப்பம் தெரிவிப்போர் வீடுகளில் சில நாட்கள் தங்கலாம்!

YS TEAM TAMIL
22nd Aug 2018
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

கேரளா வெள்ளப்பாதிப்பு அம்மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது. வரலாறுகாணாத மழை பொழிந்து கொட்டித் தீர்த்த நிலையில் பல இடங்களில் இருந்து நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் வந்து கொண்டே இருக்கிறது. தற்பொழுது மழை நின்று இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சி செய்து வரும் அம்மாநில மக்களுக்கு உதவ ஸ்டார்ட்-அப்கள் மற்றும் சில தன்னார்வளர்கள் ஒன்றுகூடி “eachonehostone.com” என்னும் தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் தங்களது இடம் பழைய நிலைக்கு திரும்பும் வரை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க உதவும் நோக்கில் இந்த தளம் துவங்கப்பட்டுள்ளது. இதுவரை 20000 முகாம்கள் மக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்திருந்தாலும் பாதிக்கப்பட்ட 2லட்சத்திற்கும் மேலான மக்களை முகாம்களில் தங்க வைப்பது கடினம் என்பதாலும் உதவ மக்கள் தயாராக இருப்பதாலும் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பட உதவி: Hindustan Times

பட உதவி: Hindustan Times


இந்த இணயத்தின் முக்கிய நோக்கம் கேரளத்தை தாண்டி மற்ற மாநிலங்களில் இருக்கும் மக்களும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட தயாராக உள்ளனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போல் கேரளத்தை சுற்றி உள்ள மாநிலங்களில் உள்ள மக்கள், பாதிக்கப்பட்டோரை தங்களது இடங்களில் தங்க வைக்க விரும்பினால் இந்த தளத்தில் தங்களது இடத்தின் முகவரி, அலைபேசி எண்ணை குறிப்பிட்டால் போதும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் இந்த இணையம் மூலம் அவர்களை தொடர்புக்கொண்டு தற்காலிகமாக இடம்பெயரலாம். இது அரசாங்கத்தின் சுமையை குறைப்பதோடு உதவத் தயாராக இருக்கும் மக்களுக்கும் ஒரு வாய்ப்பளிக்கிறது.

“தற்போது நடந்து கொண்டிருக்கும் நிவாரணப் பணிகளை நிறுத்துவது இதன் நோக்கம் அல்ல. நிவாரண உதவிகளை தாண்டி அடுத்தக்கட்டமாக மக்களை பாதுக்காப்பான இடத்தில் தங்க வைப்பது மிக அவசியம் என்கிறார்,” ஒறுங்கினைப்பாளர், சந்தோஷ்.

மேலும் இவர்கள் பாதிக்கப்பட்டோரை மீட்டு குறிப்பிட்ட பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க பேருந்து வசதியையும் தயார் செய்து வருகின்றனர். கேரளத்தைச் சுற்றி உள்ள நகரங்கள் இவர்களுக்கு உதவ முன் வர வேண்டும்.

“அரசாங்கமே அனைத்தும் தயார் செய்வது சற்று சவாலான செயல் தான்; மேலும் மக்களும் உதவத் தயாராக இருக்கும்பொழுது அதற்கான தளத்தை உருவாக்கி தருவதே சிறந்தது,” என்கிறார்.

உதவ நினைக்கும் மக்கள் இந்த தளத்தை பயன்படுத்தி உதவுங்கள். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தாண்டி அடுத்தக்கட்டமாக தங்க பாதுகாப்பான இடம் அமைத்து தருவது மிகவும் அவசியம்.

உதவி அளிப்போர் மற்றும் தேவைப்படுவோர் அணுகவேண்டிய தளம்: eachonehostone.com 

கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்

Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக