பதிப்புகளில்

இரு முறை புற்றுநோய், 5 புத்தகங்களின் ஆசிரியர், மனம் தளராத பெண்மணி நீலம் குமார்!

YS TEAM TAMIL
9th Jan 2016
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை தூரத்திலிருந்து நோயாளியாகவும், அவர்களின் சிகிச்சை காலத்தில் ஏற்படும் அளவிகடந்த வலியைப் பற்றியும், ஓரளவு உணர்ந்திருப்போம். புற்றுநோயிலிருந்து குணமடைந்து வெளிவந்த பின்னர் வாழ்வைக் கையாளும் விதத்தில் ஒரு பெரும் மாற்றம் ஏற்படுகின்றது. இதனை அனுபவம் மட்டுமே உணர்த்த முடியும்!

ரஷ்யாவின் ஏதோவொரு பகுதியில், ஸ்ட்ராபெரி தோட்டங்களின் காடு, குஷ்வந்த் சிங் முத்தமிட முயன்ற பெண், கருங் கடலில் நீந்தும் குழந்தை, கீமோதெரபிக்கு போகும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண், ‘நாம் ம்யோஹோ ரென்கே க்யோ’ என மந்திரம் சொல்லும் பெண், கருத்தரங்கில் ஊக்கமளிக்கும் நம்பிக்கையான பெண், என பல தரப்பட்ட விஷயங்கள் எதையோ நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தது. தீடிரென தூக்கத்திலிருந்து எழுந்து பார்க்கையில் விடியற்காலை 4 மணி. பிறகுதான் புரிந்தது, நீலம் குமாரின் கதையை நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்தது. அப்போதுதான், எழுதத் தொடங்கினேன் இந்தக் கதையை...

image


ஸ்ட்ராபெரி ஆண்டுகள்

ரஷ்யாவில் ஒரு தேவதைக் கதைப் போல நீலம் தன்னுடைய குழந்தைப் பருவத்தைக் கடந்தார். மாஸ்கோவில் தனது சகோதரி பூனமுடன் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தார். இந்தக் காலகட்டத்தை ‘ஸ்ட்ராபெரி ஆண்டுகள்’ என அவர் குறிப்பிடுகின்றார். புத்தகங்களை பொதிசுமக்கும் கழுதை போல தூக்கிச்செல்ல வேண்டி வரவில்லை. புத்தகங்கள் இன்றிதான் ரஷ்ய ஆரம்பப் பள்ளிகள் இயங்கின. மாணவர்களை ஸ்ட்ராபெரி பழங்களை பறித்து உண்ண அவ்வப்போது ஆசிரியர்கள் அழைத்துச் செல்வர். “கோடைக் காலத்தின் மூன்று மாதங்களுக்கு சிறப்பான ‘அனாப்பா’ ரெசார்ட்டுக்கு அழைத்து சென்றனர். கருங் கடலோரத்தின் வண்ண வண்ண சிப்பிகளை எடுப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டோம். நீச்சல் முதல் ‘சன்பாத்’ வரைக் கற்றுக்கொண்டோம். அங்கு பயின்ற ஆறு ஆண்டு காலத்தில், புத்தகங்களைத் தொடவேயில்லை. மாறாக இயற்கை மூலம் கற்றோம்.” (அவரது பெற்றொரான திரு.ஓ.என். பஞ்சாலர் மற்றும் திருமதி. ஊர்மிளா பங்சாலர் இருவருமே இந்திய தூதரகத்தால் ரஷ்யாவின் பொக்கிஷப் புத்தகங்களை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க மாஸ்கோவுக்கு அனுப்பப்பட்ட மூவர் குழுவைச் சேர்ந்தவர்களாவர்.)

பெற்றோர்களின் பணி இனிதே முடிந்ததும் ஒரு கட்டத்தில் நீலம் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது. ஆங்கில வழிக் கல்விக்கு மாற்றப்பட்ட அவர் மீண்டும் ஆரம்பத்திலிருந்து கற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அவரது ஆங்கில ஆசிரியர் பாடத்தில் மந்தமாக இருந்த நீலத்தை ‘மரத்தின் மீது உட்காரும் மரம் என ஏளனமாக நடத்தினார். நீலத்தால் எந்நாளும் ஆங்கிலம் கற்க முடியாது என உறுதியாக நம்பினார். இந்தக் கருத்துக்களே தனது முன்னேற்றத்துக்கு வழிவகுத்ததாகக் கூறும் நீலம்,

“என் வாழ்க்கை முழுவதையும் அவரது கருத்து தவறு என உணர்த்தவே உழைத்தேன். நான் ஆங்கிலத்திலேயே ஐந்து புத்தகங்களை எழுதினேன்.” அதுமட்டுமல்லாது ஆங்கிலத்திலேயே இளங்கலை பட்டம், கல்வியியலில் இளங்கலை, மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரத்தில் முதுகலைப் பட்டமும், இதழியலில் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
image


கடினமான ஆண்டுகள்

1996-ம் ஆண்டு தான் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்ததும் நீலத்தின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிப்போனது. ‘எப்பேற்பட்ட போர்வீரர்களும் ஆயுதங்களின்றி போராட முடியாது. இது எனக்கு மட்டும் ஏன் வந்தது? என நானும் நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளப்பட்டேன்.’ இதன் பின்னர் வாழ்வின் மிக மோசமான நிலையை அடைந்தார். தனக்கு ஆதரவாகவும், உந்து சக்தியாகவும் விளங்கிய கணவனை 1993-ம் ஆண்டு இழந்திருந்தார். விதவையாகவும், தனியாளாக தனது குழந்தைகளை பார்த்துக்கொள்வதும், நிதிநிலையை சமாளிக்க முடியாமலும் தவித்தார். இந்த எல்லா கடினமான காலகட்டங்களை கடப்பதன் மூலம் புதிய சக்தி கிடைத்தாலும், அவரது பிள்ளைகளான ராஜ்நீல் மற்றும் அபிலாஷா, சகோதர சகோதரிகளும் அவரது துணைவரும், அவரது பாட்டியும்தான்; அவரது நண்பர்களும், மருத்துவர்களும் புற்றுநோயிலிருந்து உடல்நிலை தேறும் வரை பக்கபலமாக இருந்தனர். மும்பை நகரிலேயே சிறப்பான மனப்பாங்கு கொண்ட மருத்துவர்களால் சூழப்பட்டதற்கு மனதார நன்றி தெரிவிக்கிறார். “டாடா நினைவு மருத்துவமனையின் மருத்துவர் ராஜேந்திர பாட்வே, பி.டி. ஹிந்துஜா மருத்துவமனையின் முஸாமில் ஷேக் மற்றும் வினய் ஆனந்த் எனது மருத்துவர்களாகக் கிடைத்தது வரம். நான் இயல்புநிலைக்கு திரும்புவதற்கு நம்பிக்கை கொடுத்தனர்” என்கிறார். 

உடல்நிலை முற்றிலுமாக தேறிய பின்னரும் துயரங்கள் அவரைப் பின்தொடர்ந்தன. மார்பகப் புற்றுநோய் மீண்டும் 2013-ம் ஆண்டு வந்தது. இரண்டாவது முறை எதையும் ஏற்பதற்குத் தயாராக இருந்ததாகக் குறிப்பிட்டார். 

“இம்முறை வித்தியாசமாக அதை அணுக முடிவெடுத்தேன். நிச்சேரென் புத்தமதத்தின் தத்துவங்களை ஆழ்ந்து படித்த பின்னர் மாபெரும் அண்டத்தின் சிறு துளியான தன்னைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தியது. இது அனைத்தையும் சிறப்பாக்கியது. சில சாதாரண வார்த்தைகளில் உள்ள ‘நாம் ம்யூஹோ ரெங்கி க்யோ’ என்ற மந்திரம் என்னை செதுக்கியது. எனது நோயுடனான பயணம், மகிழ்ச்சியால் நிறைய இந்த மந்திரங்கள் உதவின.”
டு கேன்சர் வித் லவ்(புற்றுநோய்க்கு அன்புடன்)

டு கேன்சர் வித் லவ்(புற்றுநோய்க்கு அன்புடன்)


புற்றுநோயைத் தோற்கடித்த போராளி

தன்னை புற்றுநோயை தோற்கடித்த போராளி என அழைப்பதை, புற்றுநோயிலிருந்து மீண்டவர் என கூறுவதை பெரிதும் விரும்புகின்றார் நீலம். நேர்மறை எண்ணங்கள் மட்டுமே மேலோங்கியுள்ள நீலம், “இருமுறை புற்றுநோய் வருவதை விட சிறப்பான விஷயம் என்ன இருக்க முடியும்? எத்தனை விதமான பரிசுகள்- சுருள் முடி (முன்பு குச்சி போல நிற்கும் முடிதான் இருந்தது), புதிய செல்கள், பெருங்கடலைப் போல விரிவான பார்வை, கடலைப் போல ஆழமான மனம் மற்றும் குறும்பான நகைச்சுவை உணர்வு. மனதை பூங்காவாக செதுக்க முடிந்தால், நமக்குள் இருக்கும் சக்தியைப் பற்றிய புரிதல் நம்மை ஆச்சர்யப்படுத்தும்.”

மறக்க முடியாத நீலம்

நீலம், குஷ்வந்த் சிங்கை 1996-ம் ஆண்டு ஜம்ஷெத்பூரில் நடைப்பெற்ற ஒரு ரோட்டரி கிளப் கூட்டத்தில் சந்தித்தார். நீலம் இந்தக் கூட்டத்தில், குஷ்வந்த் சிங்கை வரவேற்கும் பொறுப்பில் இருந்தார். ஆகையால், குஷ்வந்த் எழுத்துக்களின் தாம் சித்தரிக்கப்படுவதைப் பற்றிய பெண்களின் எண்ணம் என்ன? என்பதையும் அவர் சொல்லத் தவறவில்லை. பொது வெளியில் பெரிதும் விரும்பத்தகாத வகையில் நடந்துகொள்ளும், குஷ்வந்த், நீலத்தைப் பாராட்ட எண்ணி முத்தமிட விழைந்தார். இது அப்போதைய செய்தித்தாள்களில் பேசப்பட்டது. குஷ்வந்த் நீலமுடனான தன்னுடைய அனுபவத்தை ‘மறக்கமுடியாத நீலம்’ என்ற கட்டுரையை வெளியிட்டார். நீலமின் எழுத்து மற்றும் பேசும் சிறப்பைப் பற்றி அவர் பாராட்டத் தயங்கவில்லை.

image


இந்த சம்பவமே, குஷ்வந்த் சிங் குடும்பத்தினருடன், நீலம் நட்புபாராட்ட காரணமானது. இணை- எழுத்தாக்கத்தில் உருவான இந்தப் புத்தகம் ‘நமக்கு பிடித்த இந்தியக் கதைகள்’ என வெளியாகியது. இந்தப் புத்தகம் நீலத்தை இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கு பயணிக்க வைத்தது. இதற்கான ஆராய்ச்சி செய்து எழுதி, குஷ்வந்த் சிங்கின் விருப்பத்திற்கேற்ப இல்லாததால், மறுமுறை எழுதப்பட்டது. இத்தனை வேலைகளைக் கொடுத்து, எழுதும் கலையை தெரிந்துகொள்ள வாய்ப்பு கொடுத்தற்காக நன்றிக்கடன் பட்டுள்ளதாகவே தோன்றுகின்றது என்கிறார்.

படைப்பாற்றல் மிக்க எழுத்தாக்கம்

தனது சொந்தக் கதையான ‘டு கேன்சர் வித் லவ்- மை ஜர்னி கேம் அபவுட்’-ஐ வாழ்வின் அனுபவத்தால் எழுதியுள்ளார். இரண்டாவது முறையாக புற்றுநோயின் தாக்கத்துக்கு உள்ளானபோது, தனக்குத் தானே ஊக்கமளித்துக்கொள்ள பல சிறப்பாக விற்பனையான புத்தகங்களை நாடினார். “ரேண்டி பாஷின் கடைசி விரிவுரையில், நாயகன் இறக்கின்றான். மிட்ச் ஆல்போம் எழுதிய ‘டியூஸ்டேஸ் வித் மோரி’ கதையிலும், நாயகன் மறித்துப்போகின்றான். கென் விப்லரின் ‘கிரேஸ் மற்றூம் க்ரிட்’ கதையில் நாயகி மறித்துப் போகின்றதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் படித்த பின்னர் புற்றுநோய் கொடுமையான நிகழ்வுகளை உள்ளடக்கி உள்ளது எனத் தோன்றுகின்றது. மகிழ்ச்சியான முடிவைக்கொண்ட கதைகளைப் படிக்கத் தோன்றியது. வாழ முடிவு செய்துவிட்டேன். எனக்கு உத்வேகமளிக்க புத்தகம் எழுதினேன்.

image


தொடர்ந்து ஐந்து புத்தகங்களை எழுதினார். ‘அவர் ஃபேவரைட் இந்தியக் கதைகள்’ (ஜெய்கோ, 2002), டு கேன்சர், வித் லவ்- மகிழ்சியான பயணம்(ஹேஹவுஸ் பப்ளிஷர்ஸ், 2015 - டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் பென்குயின்)’ இரண்டுமே சக்கைப் போடு போட்டன. 

இது தவிர,

  • லெஜண்ட்ரி லவ்வர்ஸ் - 21 டேல்ஸ் ஆஃப் அன்என்டிங் காதல் (ஜெய்கோ, 2004),
  • மைரா - காதல், மனம் விரும்பும் பாடல், இறப்பு(இமேஜ் இந்தியா-2011). 
  • ஐ, அ வுமன் (ஒரு எழுத்தாளர்கள் பயிற்சிப் பட்டறை ரெட்பர்ட் புக், 1991)

வேலையில் மூழ்கிப்போன நீலம்

ஒரு எழுத்தாளராக, வெற்றியடைந்துவிட்ட நீலம், பல்வேறு வேலைகளில் மூழ்கி தொடர்ந்து பரபரப்பாக பணியாற்றி வருகின்றார். மும்பையின் ஆர்.என்.போடார் பள்ளியில் வாழ்க்கை திறன்கள் பயிற்சியாளராக உள்ளார். தலைசிறந்த பல கார்ப்பரேட் நிறுவனங்களின் பணியாளர்களுக்குத் தனி மேம்பாட்டுத்திறன்களையும் இவர் கற்பிக்கின்றார். நீலத்தைப் பற்றி மேலும் தொடர்பு கொள்ள www.thetraininghub.co என்ற இணையதளத்தை அணுகவும். 

டாடா நினைவு மருத்துவமனையில் பெண்களுக்கு வரும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மேடையில், இருநூறு புற்றுநோய் பாதித்து மீண்டவர்கள் முன்னிலையில் உரையாற்ற அவருக்கு அழைப்புக்கு விடுக்கப்பட்டது. மேலும், மேக்ஸ் அமைப்பு நடத்திய புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான மாநாட்டிலும் ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தியுள்ளார். 

“ஊக்கமளிக்கும் விதமான மாநாட்டுக்கு சென்ற நான், ஊக்கத்தைப் பெற்றேன்.” டாடாவின் 6-ம் இலக்கியத் திருவிழாவிலும் உரையாற்றினார் என்பது குறிப்பிடுக்கத்தக்கது.
இணை -ஆசிரியர் குஷ்வந்த் சிங்குடன் நீலம்

இணை -ஆசிரியர் குஷ்வந்த் சிங்குடன் நீலம்


நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும்

புற்றுநோய் தொடர்பான முறையான விழிப்புணர்வை அளிக்க விரும்பும் நீலம், குறிப்பாக முன்கூட்டியே நோய்ப் பரிசோதனை செய்ய வேண்டியதற்கான அவசியத்தை எடுத்துரைக்க எண்ணுவதாகக் குறிப்பிட்டார். இந்த நோயைப் போக்குவதற்கான செலவுகள் குறைவாக இருந்தால் நன்றாக இருக்கும் என குறிப்பிட்டார். முடிந்த அளவு பல ஊர்களிலுமுள்ள புற்றுநோயிலிருந்து மீண்டவர்களிடம் உரையாடவும், அவர்களுக்கு ஊக்கம் கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். இவற்றையெல்லாம் செய்வதற்கு பலரும் தனக்கு உதவ முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

நாம் நீலத்திடமிருந்து கற்றுக்கொள்ள எத்தனையோ விஷயங்கள் உள்ளன. நம்மில் பலரும் தினசரி வாழ்க்கையைப் போராட்டமாக உணர்வதால், விரக்தியாக ஏதோ அதைப்பற்றி குற்றம்சொல்லியே வாழ்கின்றோம். நீலத்தின் வாழ்க்கை நமக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கின்றது. 

“வாழ்க்கை வாய்ப்பளித்துக்கொண்டேதான் உள்ளது. சோர்ந்து கிடப்பதும், பாதையில் உள்ள முட்களைத் தாண்டிச் செல்வதும், நமது கையில்! எல்லா தீமையிலும் ஏதோவொரு நன்மை உள்ளது. மகிழ்ச்சியாக வாழ நமது பார்வையை மாற்றிக்கொள்வதே போதுமானது. நான் மகிழ்ச்சியாக வாழவும், மகிழ்ச்சியைப் பரப்பவும் பிறப்பெடுத்துள்ளோம் என என் மனதில் தோன்றுகின்றது. மகிழ்ச்சியில்லையேல், வாழ்வதில் என்னதான் அர்த்தமுள்ளது!” என்கிறார் நீலம்.

ஆக்கம்: சுமித்ரா கே. சாட்டர்ஜி | தமிழில்: மூகாம்பிகை தேவி

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக