பதிப்புகளில்

உணவகங்களில் வீணாகும் உணவை இல்லாதோர்க்கு வழங்கும் ’ராபின் ஹுட் ஆர்மி’

வீடில்லாத 150 பேருக்கு உணவளிக்கத் துவங்கிய முயற்சி, இப்போது உலகின் 80 நகரங்களில் 2.75 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உணவளித்து வருகிறது.

16th Nov 2018
Add to
Shares
117
Comments
Share This
Add to
Shares
117
Comments
Share

ஜெயநகரில் ஒவ்வொரு வாரமும் பச்சை நிற டி-ஷர்ட் அணிந்தவர்கள் அடங்கிய குழு ஒன்று அருகாமையில் இருக்கும் உணவகங்களில் இருந்து உணவை சேகரித்து விநியோகிப்பதற்குத் தயார்நிலையில் இருக்கும் வேன்களில் ஏற்றுகின்றனர்.

இவர்கள் ராபின் ஹுட் ஆர்மியைச் சேர்ந்தவர்கள். ராபின் ஹுட் ஆர்மி உணவகங்களுடன் பார்ட்னர்களாக இணைந்து அங்குள்ள அதிகப்படியான உணவை சேகரித்து தேவை இருப்போருக்கு விநியோகிக்கிறது. வீடின்றி தவித்த 150 பேருக்கு உணவளிக்கத் துவங்கிய இந்த முயற்சியானது ஒரு மாதத்தில் 80 நகரங்களில் 2,75,000-க்கும் அதிகமானோருக்கு உணவளிக்கும் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது.

இந்தப் பயணமானது வெறும் ஆறு தன்னார்வலர்களுடன் டெல்லியில் துவங்கப்பட்டது. இவர்கள் 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹாஸ் காஸ் பகுதியில் இருந்த 150 பேருக்கு உணவளித்தனர். 

image


செயல்படும் மாதிரி

ராபின் ஹுட் ஆர்மி ஒரு ஹைப்பர்லோக்கல் ஹப் அண்ட் ஸ்போக் மாதிரியில் செயல்படுகிறது. இதன் சாப்டர்கள் வெவ்வேறு பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு சாப்டரிலும் ஒரு முக்கியக் குழு உள்ளது. இந்தக் குழு தன்னார்வலர்களை நிர்வகித்தல், உணவகங்களைக் கையாளுதல், தகவல்களை சேகரித்தல், விநியோகித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. 

பச்சை நிற ஆடை அணிந்த இந்தக் குழு தங்களுக்குள் தீர்மானிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கின்றனர். உணவை சேகரிக்க உணவகங்களுக்குச் செல்கிறனர். பின்னர் ஒன்றிணைந்து பேக் செய்து விநியோகிக்கின்றனர்.

”பரவலாக்கப்பட்ட அமைப்பை உருவாக்கி மெட்ரிக்ஸ், ஆவணப்படுத்துதல், விரிவாக்கக் குழுக்கள் போன்றவை வாயிலாக நிகழ்நேர அடிப்படையில் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துகிறோம். பாயிலர் ரூம் என்பது எங்களது வாட்ஸ் அப் குழுவின் பெயர். இதில் அனைத்து நகரங்களின் தலைவர்களும் தொடர்ந்து சிறப்பான நடைமுறைகளையும் அப்டேட்களையும் பகிர்ந்துகொள்கின்றனர்,” என்றார் ராபின் ஹுட் ஆர்மி நிறுவனர் நீல் கோஸ்.

ஒவ்வொரு குழுவும் மக்களுக்கு வெவ்வேறு பணிகளை ஒதுக்குகிறது. இந்த செயல்முறையில் தகவல் சேகரித்தல் முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக ஊடகங்கள் ராபின் ஹுட் ஆர்மியை வழிநடத்தும் நிலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் உணவகங்கள் உதவுகின்றன.

”சமீபத்தில் கேரளாவில் வெள்ளம் பாதித்தபோது நாங்கள் இண்டிகோவுடன் இணைந்து பாதிக்கப்பட்டோரிடம் வளங்களைக் கொண்டு சேர்த்தோம். அதேபோல் சுதந்திர தினத்தன்று #Mission1Million முயற்சியின் கீழ் மக்களுக்கு சேவையளிக்க ஊபர், சொமேடோ, Viacom போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டோம்,” என்றார் நீல்.

இந்த முயற்சியானது பணம் சம்பந்தப்பட்டது இல்லை என்பதால் புதிய தன்னார்வலர்களை இணைத்துக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டே வளர்ச்சியும் தாக்கமும் மதிப்பிடப்படுகிறது.

image


எப்போது துவங்கப்பட்டது?

நீல் சொமேடோ நிறுவத்தில் சர்வதேச செயல்பாடுகள் பிரிவில் விபி-யாக இருந்தபோது இந்த எண்ணம் தோன்றியது. 2014-ம் ஆண்டு இந்நிறுவனம் லிஸ்பனில் சேவையை அறிமுகப்படுத்தியபோது அவர் போர்சுகலில் தங்கி பணியாற்றி வந்தார். உள்ளூர் பார்டனர்ஷிப்பில் பணியாற்றி வந்தபோது ReFood என்கிற நிறுவனம் தன்னார்வலர்களைக் கொண்டு உணவகங்களில் அதிகமாக இருக்கும் உணவை சேகரித்து தேவையிருப்போருக்கு விநியோகித்து வருவதைக் கண்டார்.

இதைக் கண்டு வியந்து இதன் லாஜிஸ்டிக்ஸ் செயல்பாடுகள் குறித்து புரிந்துகொள்ள அந்தக் குழுவுடனும் அந்நிறுவனத்தின் நிறுவனருடனும் நேரம் செலவிட்டேன். ஆகஸ்ட் மாதம் இந்தியா திரும்பியபோது என்னுடைய நெருங்கிய நண்பர் ஆனந்தை அணுகினேன். தேவை அதிகம் இருக்கும் இல்லங்களில் இதை முயற்சி செய்ய தீர்மானித்தோம். அந்த சமயத்தில் மக்களிடையே தேவை எந்த அளவிற்கு இருந்தது என்பது குறித்து நாங்கள் அதிகம் அறியவில்லை,” என்றார் நீல்.

முதல் முயற்சியில் டெல்லியில் இருக்கும் நண்பர்கள் இணைந்துகொண்டனர். ஆனந்தின் இடத்தில் அனைவரும் சந்தித்து செயல்பட தீர்மானித்தனர்.

பணியைத் துவங்குவதுற்கு முன்பு அவர்கள் திட்டமிட்ட 150 பேருக்கான உணவை விநியோகிக்க தேவையிருப்போரைக் கண்டறியமுடியுமா என்கிற சந்தேகம் அவர்களுக்கு எழுந்ததாக நீல் தெரிவித்தார்.

”உணவுத் தேவை இருப்போர் ஆயிரக்கணக்கானோர் இருந்தனர். எனவே குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவேண்டுமெனில் விரைவாக எங்களது செயல்பாடுகளை வளர்ச்சியடையச் செய்யவேண்டும் என்பதை உணர்ந்தோம். ஆரம்ப நாட்களில், சில உணவகங்கள் எங்களுடன் முழுமனதாக இணைந்துகொண்டன. ஒரு சிலர் உணவு எங்கு எடுத்துச்செல்லப்படும் என்பது புரியாமல் சற்று குழம்பினர்,” என நீல் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களின் பங்கு

உணவகங்களின் உரிமையாளர்களின் கவலையைப் போக்க நீல் மற்றும் அவரது நண்பர்கள் தாங்கள் மேற்கொண்ட முயற்சியில் இணைந்துகொள்ள அவர்களையும் அழைத்தனர்.

“உணவு எங்கு எடுத்துசெல்லப்படுகிறது என்பதை சரிபார்க்க சமூக ஊடக சானல்கள் வாயிலாக விநியோகம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் துவங்கினோம்,” என்றார்.

இவ்வாறு சரிபார்ப்பதற்காக துவங்கப்பட்ட முயற்சியானது ராபின் ஹுட் ஆர்மியை நிலைப்படுத்த உதவியது.

”சமூக ஊடகங்கள் வாயிலாக எங்களது நண்பர்கள், உடன் பணிபுரிவோர், பரிச்சயமானவர்கள் என பலர் எங்களது செயல்பாடுகளைக் கண்டு ஆர்வம் ஏற்பட்டு ராபின் ஹுட் ஆர்மியை தங்களது நகரங்களுக்கும் எடுத்துச் செல்ல விரும்பினர். நாங்கள் ஒரு அடிப்படை நிறுவன அமைப்பை உருவாக்கினோம். இது உள்ளூர் தன்னார்வலர்களின் எண்ணிக்கையையும் நகரங்கள் முழுவதும் தாக்கத்தையும் அதிகரிக்கச் செய்தது,” என்றார் நீல்.
image


எனினும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவரும் தன்னார்வலர்கள் என்பதால் நேரம் மட்டும் எப்போதும் சவாலாக இருந்து வருகிறது. “இதை சரிசெய்ய நாங்கள் தொடர்ந்து அடுத்த தலைமுறை தலைவர்களை இந்தப் பணிகளில் ஈடுபடுத்தி பரவலாக்கி வருகிறோம். இது எங்கள் நோக்கம் நிலைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதாற்கான நீண்ட கால அடிப்படையிலான உத்தியாகும்,” என்றார்.

”எங்களது அனுபவங்களை முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் பகிர்ந்துகொள்கிரோம். இதில் பார்வையாளர்கள் பச்சை நிற உடையணிந்த ராபின்கள் உள்ளூர் சமூகத்திற்கு உணவை வழங்குவதைப் பார்க்கலாம். சமூக வலைதளம் வாயிலாக எங்களது செயல்பாடுகள் மீடியாக்கள் மற்றும் TEDx டாக் போன்ற தளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது இது RHA என்ஜின் ஸ்ட்ராடஜிக் பார்ட்னராக உள்ளது. இதன் மூலம் 1,800-க்கும் அதிகமான புதிய தன்னார்வலர்களுக்கான கோரிக்கைகள் வருகிறது,” என்றார் நீல்.

எதிர்காலம்

“நாங்கள் 16,000-க்கும் அதிகமான ராபின்கள் நெட்வொர்க் வாயிலாக 8.5 மில்லியன் பேருக்கு சேவையளித்திருப்பினும் உலகளவில் இருக்கும் பட்டினி பிரச்சனைக்கு இது வெறும் ஆரம்ப நிலை மட்டுமே. வேகமாக வளர்ச்சியடைவது எப்போதும் சிக்கலாகவே உள்ளது,” என்றார்.

இந்தியா முழுவதும் உள்ள சிறு நகரங்களில் வளர்ச்சியடைவதிலும் ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் விரிவடைவதிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம். அத்துடன் சாலையில் வசிக்கும் குழந்தைகளை பொது பள்ளிகளில் சேர்க்கும் ராபின் ஹுட் அகாடமி முயற்சியை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்துகிறோம்.

”அடுத்த ஆண்டிற்குள் நூறு நகரங்கள் முழுவதும் ஒரு மாதத்திற்கு அரை மில்லியன் மக்களுக்கு சேவையளிக்கும் விதத்தில் வளர்ச்சியடைய வேண்டும் என திட்டமிட்டுள்ளோம். புதுமையான முயற்சிகள் மூலம் வளர்ச்சியடைவதே பட்டினி பிரச்சனைக்கு உண்மையான தீர்வை உருவாக்கமுடியும்,” என்றார் நீல்.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப் | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
117
Comments
Share This
Add to
Shares
117
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக