பதிப்புகளில்

நண்பருடன் தேநீர் சந்திப்பில் தோன்றிய ஐடியா: பணம் செலுத்துதல் பிரிவில் நிறுவனம் தொடங்கிய கதை!

சென்னையைச் சேர்ந்த M2P Solutions, வங்கிகள், பணம் செலுத்தும் தளங்கள், நிதி நிறுவனங்கள், தொழில் மற்றும் தொழில்முனைவோர்களை ஒன்றிணைக்கும் தளம்! 

15th Dec 2017
Add to
Shares
312
Comments
Share This
Add to
Shares
312
Comments
Share

நம்மில் பலர் ஏதோ ஒரு தருணத்தில் வணிக திட்டங்கள் குறித்து அலுவலக வளாகத்திற்கு அருகிலிருக்கும் டீக்கடையில் டீ அருந்தியவாறே விவாதித்திருப்போம். அந்த திட்டங்கள் திட்டமாகவே இருக்குமே தவிர நடைமுறைப்படுத்துவது பலருக்கு சாத்தியப்படாது.

2011–2012-ம் ஆண்டில் Visa-வில் பணியாற்றிய சமயத்தில் மதுசூதனன் (37) மற்றும் முத்துக்குமார் (41) டீ அருந்துகையில் விவாதித்த விஷயமானது பலனளித்தது. மதுசூதனன் கூறுகையில், 

“Visa-வின் புதிய ப்ராடக்ட் டெவலப்மெண்ட் நடவடிக்கைகளில் நான் இணைந்திருந்தேன். அதன் Monitise UK-உடனான மொபைல் ஜாயிண்ட் வென்சர் நிறுவனமான Movida-வில் பொறியியல் சார்ந்த நடவடிக்கைகளில் முத்து இணைந்திருந்தார். நாங்கள் மும்பைக்கு குடிபெயர்ந்திருந்தோம். ப்ராடக்டுகளை சந்தைக்கு எடுத்துச் செல்வதில் நாங்கள் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் சவால்கள் குறித்து விவாதிப்போம். வங்கிகள் டிஜிட்டலை முறையாக ஏற்றுக்கொள்ளாததும் தங்களது வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் வாயிலாக இணைய உதவாததும் ஒரு விதத்தில் காரணமாக இருப்பதை உணர்ந்தோம்.”

இந்த போக்கு தொடர்வதை கவனித்தனர். பி2பி கட்டணங்கள் பிரிவிற்கான தீர்வுகளை வழங்குவதகான வாய்ப்புகள் இருப்பதையும் உணர்ந்தனர். பல விவாதங்களுக்குப் பிறகு 2014-ம் ஆண்டு இறுதியில் M2P சொல்யூஷன்ஸ் துவங்கினர். மதுசூதனனின் குடும்ப நண்பரான 34 வயதான பிரவுவை இணை நிறுவனராக இணைத்துக்கொண்டனர்.

திட்டத்தை உருவாக்குதல்

“நாங்கள் பி2பி பகுதியை கண்காணித்து ஆராய்ந்து ஸ்டார்ட் அப் அமைக்க திட்டமிடுகையில் நுகர்வோர் பணம் செலுத்தும் பிரிவில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. முதலீட்டாளர்கள் டிஜிட்டல் வாயிலாக பணம் செலுத்தப்படும் பிரிவில் முழு வீச்சில் ஆர்வம் காட்டவில்லை. எனினும் அனைவரும் தங்களுக்கான பிரத்யேக செயலியை உருவாக்கினர் அல்லது வெளிப்புற அமைப்புகளை சார்ந்திராமல் உள்ளடக்கிய சுற்றுச்சூழலை உருவாக்கினர் என்பதை உணர்ந்தோம்,” என்றார் மதுசூதனன்.

பத்தாண்டுகளுக்கும் மேல் இந்த பிரிவில் இருந்ததால் ஒருங்கிணைந்த விளைவைப் பெறுவதும் சரியான பொருளாதார மாதிரியைப் பெறுவதுமே வெற்றிக்கு முக்கியம் என்பதை உணர்ந்திருந்தனர். தற்போதைய தொழில்நுட்பங்கள் சிறியளவில் செயல்படும் குறைந்த மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்கு பயனுள்ளவகையில் இல்லை என்பதை உணர்ந்தனர். மேலும் வருங்காலத்தில் மொபைல் வாயிலாக பணம் செலுத்தும் முறையே பயன்பாட்டில் இருக்கும் பட்சத்தில் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் சவால்களுக்கு தீர்வு காணவேண்டும். அத்துடன் வணிகர் தரப்பில் சில்லறை வர்த்தக பணம் செலுத்துவதற்கான இயங்குதன்மை (interoperable mobile payments) சார்ந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இதனைத் தொடரந்து மூவரும் இணைந்து M2P என்கிற பேமெண்ட் ஆஸ் ஏ சர்வீஸ் நிறுவனத்தையும் (Paas) YAP தளத்தையும் துவங்கினர்.

டிஜிட்டல் கட்டண தளம்

இந்தியாவின் அனைத்து சில்லறை வர்த்தகம் சார்ந்த பணம் செலுத்தும் முறைகளையும் உள்ளடக்கிய வங்கிக்கு நிகரான ஒரு ஒருங்கிணைந்த தளத்தை YAP வழங்குகிறது. வாலெட், கார்டுகள், ட்ரான்சிட், QR, NFC, UPI, tokenisation தீர்வுகள் போன்றவை இதில் அடங்கும்.

அனைத்து சில்லறை வர்த்தக கட்டண ப்ராடக்ட்ஸ் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய 200 APIs-களை YAP API என்ஜின் சப்போர்ட் செய்கிறது.

”எங்களது பணம் செலுத்தும் என்ஜினுடன் 40-க்கும் அதிகமான நிறுவனங்கள் இணைந்துள்ளது. நேரடியாக வாடிக்கையாளார்களுடன் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய 60-க்கும் மேற்பட்ட ப்ராடக்டுகளுடன் ஒரு மில்லியன் பயனர்கள் எங்களது தளத்தை பயன்படுத்துகின்றனர்.”

DCB வங்கி மற்றும் YES வங்கி ஆகியவை பணம் செலுத்தும் திட்டங்களுக்கான இவர்களது ஸ்பான்சர் வங்கிகள்.

தங்கநகைக் கடன் கணக்குடன் ப்ரீபெய்ட் கார்டை இணைத்ததுதான் DCB வங்கியுடனான முதல் திட்டம். வங்கிகளுக்கான திட்ட மேலாண்மை அமைப்பாக செயல்படத் துவங்கியபோது சிறயளவிலான கடன் வழங்குதல் மற்றும் வசூலித்தல் நடவடிக்கைகளை டிஜிட்டைஸ் செய்யும் பிரிவு பிரபலமாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும் என்பதை உணர்ந்தோம். இந்தப் பிரிவில் மேலும் ஆழமாக செயல்படத் துவங்கி அடுத்த இரண்டு காலாண்டுகளில் மதுரா மைக்ரோ ஃபைனான்ஸ், பெல்ஸ்டார், எஸ்கேஎஸ் மைக்ரோஃபைனான்ஸ் (தற்போது பாரத் ஃபைனான்ஷியல் இன்க்ளூஷன்), உத்கர்ஷ் மைக்ரோ ஃபைனான்ஸ், இந்தியா இன்ஃபோலைன், முத்தூட் ஃபைனான்ஸ் போன்ற 12-க்கும் மேற்பட்ட NBFCக்களும் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களும் எங்களது தளத்தை பயன்படுத்தத் துவங்கியது,” என்றார் மதுசூதனன்.

M2P குழு 

M2P குழு 


வருவாய் மாதிரி

விரைவில் ரூபே, விசா, மாஸ்டர்கார்ட் நெட்வொர்க்குகளையும் இணைத்துக்கொண்டு ப்ரீபெய்ட் கார்ட் சேவையை வழங்கினர். வங்களுக்கான வொயிட்-லேபிள் வாலட்களிலும் கவனம் செலுத்தினர். கடந்த சில ஆண்டுகளில் UPI, NETC சுங்க கட்டணங்கள், NFC, HEC, ஆதார்பே, பாரத்QR உள்ளிட்டவைகளையும் இணைத்துக்கொண்டனர். ஈக்விடாஸ் சிறு நிதியுதவி வங்கி பல்வேறு வகையில் டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையில் இணைத்துக்கொண்டனர். அத்துடன் நாட்டில் 12-க்கும் மேற்பட்ட வங்கிகள் புதிதாக துவங்கப்பட்டுள்ள BharatQR வணிக தளத்தை பயன்படுத்துவதற்கு உதவினர்.

இரண்டாம் ஆண்டில், வருடாந்திர பணம் செலுத்தப்படும் தொகையின் அளவாக 2,000 கோடி ரூபாயை இந்நிறுவனம் ப்ராசஸ் செய்தது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 4 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்தது.

தளத்தின் வாயிலாக பணம் செலுத்தப்படும் அளவு, வழங்கப்பட்ட கார்டுகளின் எண்ணிக்கை சார்ந்த வருவாய், API இணைப்புகளுக்கான சந்தா கட்டணம் என மூன்று விதங்களில் வருவாய் ஈட்டப்படுகிறது. மேலும் நாட்டின் பல வகையான ஸ்டார் அப்களுக்கு சேவையளிக்கும் விதத்தில் கீழ்கண்ட பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

• பணம் செலுத்துதல் (Safexpay, PayVega, Slonkit)

• கார்ப்பரேட் / செலவு மேலாண்மை (Paysack, Cingo, Techmojo)

• மாற்று கடன் (Stashfin, Olly Credit)

• சில்லறை வர்த்தகம் / குறைவான வருவாய் ஈட்டுவோரையும் உள்ளடக்கிய நிதிச்சேவை (Financial inclusion) (BharatPay, Payzello)

• வணிகர்களுக்கான சேவை (Benow, Trupay, Slonkit)

மதுசூதனன் கூறுகையில், 

“ஸ்டார்ட் அப்கள் தங்களது போட்டியாளர்களை எதிர்த்து வணிகத்தில் சிறப்பிக்கவேண்டும் என்கிற முக்கிய நோக்கத்தில் கவனம் செலுத்த உதவுகிறோம். கட்டணங்கள் சார்ந்த தொழில்நுட்பம் குறித்தோ அல்லது அது தொடர்பான வங்கி சார்ந்த நடவடிக்கைகள் குறித்தோ அவர்கள் கவலை கொள்ளவேண்டாம்,” என்றார்.

அனுபவம் நிரம்பிய வங்கி சேவை

மூன்று நபர்கள் அடங்கிய குழுவாக துவங்கப்பட்ட M2P இன்று 25 பேரைக் கொண்டுள்ளது.

பணம் செலுத்தும் பிரிவில் 15 ஆண்டு அனுபவமிக்கவர் மதுசூதனன். நிறுவனத்தை துவங்குவதற்கு முன்பு Visa-வில் இந்தியா மற்றும் தென் ஆசியாவிற்கான ப்ரீபெய்ட் மற்றும் ஃபைனான்சியல் இன்க்ளூஷன் ப்ராடக்டுகள் பிரிவில் தலைமைப் பதவியில் இருந்தார். Visa-வில் பணியாற்றிய சமீபத்திய காலத்தில் UIDAI சார்ந்த ப்ராடக்டுகளை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டார். மேலும் ஹெல்த்கேர் போன்ற பிற ப்ராடக்டுகள் சந்தையில் முதல் முறையாக அறிமுகமாகையில் இவரும் இணைந்திருந்தார்.

முத்துக்குமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிய பசிபிக் பிராந்தியம் முழுவதும் தொழில்நுட்பம் மற்றும் பணம் செலுத்தும் பிரிவில் செயல்படும் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். நவீன தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதற்காக தனது அனுபவங்களை புகுத்திவருகிறார். ஸ்டார்ட் அப் துவங்குவதற்கு முன்பு Paypal நிறுவனத்தில் தொழில்நுட்ப அவுட்சோர்சிங் பிரிவில் தலைமைப் பதவி வகித்தார். அதற்கு முன்பு Movida நிறுவனத்தில் பொறியியல் சார்ந்த நடவடிக்கைகளில் தலைமைப் பதவி வகித்தார்.

பிரபு Verizon, CTS போன்ற மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப தளங்களை நிர்வகித்து வரும் பொறுப்பில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். வணிகத்தில் சிக்கலான செயல்பாடுகள் மற்றும் அமைப்புகளை நிர்வகிப்பதில் அனுபவமிக்கவர்.

தற்போது வரை சுயநிதியில் இயங்கி வரும் இந்நிறுவனம் மேலும் வளர்ச்சியடைய ஸ்ட்ராடெஜிக் பார்ட்னர்களுடன் இணைய திட்டமிட்டுள்ளது. மதுசூதனன் கூறுகையில், “ஆரம்ப காலம் முதலே நிறுவனத்திற்குள் இரண்டு ஸ்டார்ட் அப்களை நடத்தி வருகிறோம். அதாவது துவக்கத்திலிருந்து வருவாய் ஈட்டிவரும் B2B பணம் செலுத்துவதற்கான தீர்வுகளை வழங்கும் வணிகம். அடுத்ததாக மொபைல் வாயிலாக பணம் செலுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளும் பிரிவானது (mobile acceptance) தற்போது வளர்ந்து வரும் முறை என்பதால் உருவாக்குதல்-அறிமுகப்படுத்துதல்-சோதனை முயற்சி-தோல்வியடைதல்-மீண்டும் செயல்படுத்துதல் என்கிற செயல்பாட்டு முறை பின்பற்றப்படுகிறது. எனவே நாங்கள் வாடிக்கையாளர்கள் வாயிலாகவே நிதியுதவி பெறுகிறோம்.”

சந்தை நிலவரம்

இந்தியாவில் டிஜிட்டல் வாயிலாக பணம் செலுத்தும் வழக்கமானது அடுத்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் அதிகரிக்க உள்ளது. இந்தத் துறை 2020-ம் ஆண்டில் 10 மடங்கு வளர்ச்சியடைந்து 500 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும் என்றும் இந்தியாவின் ஜிடிபி-யில் 15 சதவீதம் பங்களிக்கும் என்றும் கூகுள்-பிசிஜி அறிக்கை தெரிவிக்கிறது.

அரசாங்கத்தின் ரொக்கமற்ற இந்தியாவை உருவாக்குதல் போன்ற முயற்சிகளும் புதிய பணம் செலுத்தும் முறைகளான யூபிஐ, ஆதார் பே, யூஎஸ்எஸ்டி பணம் செலுத்தும் முறை போன்ற முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களும் வணிகங்களும் ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தும் முறையில் அதிக சிரமமற்ற நிலையை உணர்வார்கள்.

பேடிஎம், Mobikwik போன்ற நிறுவனங்கள் பணம் செலுத்தும் பிரிவிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில் Instamojo, Razorpay போன்றவை வீட்டிலிருந்தே செயல்படும் தொழில்முனைவு நடவடிக்கைகள் மற்றும் சிறியளவிலான வணிகங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது.

வருங்காலம் குறித்து மதுசூதனன் குறிப்பிடுகையில், “2018-ம் ஆண்டைப் பொருத்தவரை B2B தீர்வுகள் பிரிவில் முன்னணியில் இருக்க விரும்புகிறோம். அடுத்த நிதியாண்டிற்குள் பணம் செலுத்துதலை ப்ராசஸ் செய்யும் அளவாக 1 பில்லியன் டாலரை எட்ட திட்டமிட்டுள்ளோம். நாட்டின் முன்னணி ஐந்து merchant acquirers-ல் ஒன்றாகி கடன் வழங்குதல் மற்றும் இன்வாய்ஸ் அடிப்படையில கடன் வழங்குதல் சார்ந்த ப்ராடக்டை உருவாக்க விரும்புகிறோம்.”

மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, தெற்காசியா உள்ளிட்ட சந்தைகளுக்கும் விரிவடைய திட்டமிட்டுள்ளனர்.

ஆங்கில கட்டுரையாளர் : நேஹா ஜெயின்

Add to
Shares
312
Comments
Share This
Add to
Shares
312
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக