பதிப்புகளில்

SHAREit, தென்னிந்திய திரைப்பட ஸ்ட்ரீமிங் ஆப் 'Fastfilmz' நிறுவனத்தை கையகப் படுத்தியது!

YS TEAM TAMIL
9th May 2018
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

ஷேர்இட், அதிகம் பதிவிறக்கம் செய்யப்படும் இந்தியாவின் ஐந்தாவது ஆப் ஆகும். இந்த கையகப்படுத்தல் மூலம் மக்களின் பங்கு அதிகரிக்கும் ஓர் தளமாகும் அமையும்.

ஆப் மற்றும் ஃபைல்களை பகிர உதவும் ஷேர்இட் ஆப் இன்று பாஸ்ட்ஃபிளிம்சை கையகப்படுத்தியுள்ளது. பாஸ்ட்ஃபிளிம்ஸ் தெனிந்திய படங்களை ஸ்ட்ரீமிங் செய்யும் தளமாகும். இதன் மூலம் ஷேர்இட் தனது உள்ளடக்க சூழலை அதிகம் பகிர முடியும் மேலும் பாஸ்ட்ஃபிளிம்ஸின் விரிவான பிராந்திய பயனாளர் தளத்திற்குள் நுழைய முடியும்.

Fastfilmz நிறுவனத்தின் நிறுவனர் கரம் மல்ஹோத்ரா இந்த தளத்தை 2015ல் துவங்கினார்; இவர் தற்பொழுது ஷேர்இட் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை ஏற்றுக்கொள்வார். பாஸ்ட்ஃபிளிம்ஸின் உள்ளடக்க நூலகம் முழுவதும் ஷேர்இட் உடன் இணைந்திருக்கும், இதன் மூலம் பயனாளர்கள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களை அணுகலாம்.

Fastfilmz நிறுவனத்தின் நிறுவனர் கரம் மல்ஹோத்ரா மற்றும் டொமினிக் சார்லஸ் <br>

Fastfilmz நிறுவனத்தின் நிறுவனர் கரம் மல்ஹோத்ரா மற்றும் டொமினிக் சார்லஸ்


மீகர் இணையதள போக்கின் படி ஷேர்இட், இந்தியாவின் அதிக பதிவிறக்கம் செய்யப்படும் ஐந்தாவது அப் ஆகும். மேலும் இந்த மூலோபாய கையகப்படுத்தல் மூலம் ஷேர்இட் அதிக பயனாளர்களை சென்றடையும். இதைப்பற்றி, ஜேசன் வாங், சேர்இட் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் பேசுகையில்,

“ஸ்மார்ட்போன்கள் அதிகம் பயன்படுத்தப்படும் இந்தியா போன்ற சூழலில் ஷேர்இட் எல்லா பொழுதுபோக்கையும் நிச்சயம் அளிக்கும். பாஸ்ட்ஃபிளிம்ஸ் எங்களுடன் இணைந்ததால் மில்லியன்கணக்கான பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க எங்களுக்கு உதவும்,” என்றார்.

பாஸ்ட்ஃபிளிம்ஸ் கையகபப்டுத்துதலை ஷேர்இட் அறிவிக்கும் முன்பு தங்களது இசை உலடக்கத்தை அதிகரிக்க டைம்ஸ் மியூசிக் உடன் இணைந்தது. அதனால் டைம்ஸ் மியூசிகின் 27க்கும் மேலான மொழி இசை உள்ளடக்கத்தையும் ஷேர்இட் பயனாளர்கள் அணுக முடியும்.

13 மில்லியன் டாலர் மதிப்புள்ள பாஸ்ட்ஃபிளம்ஸ் தெனிந்திய பயனாளர்களை அணுக இது சுலபமாக அமையும். பாஸ்ட்ஃபிளிம்ஸ் மற்றும் ஷேர்இட் சேர்க்கை பயனர் வளர்ச்சி மற்றும் சமூக பயன்பாட்டை இயக்கும். கரம் மல்ஹோத்ரா, நிறுவனர், பாஸ்ட்ஃபிளிம்ஸ், கூறியது,

“ஷேர்இட்-க்கு இந்தியாவில் அதிக பயனாளர்களும், வியக்கவைக்கும் வகையில் இந்த ஆப் மீது அதிக நம்பிக்கையும் உண்டு. இந்தியர்கள் தங்களது 60% நேரத்தை வீடியோக்கள், திரைப்படங்கள், மொபைல் டிவி ஆகியவற்றைப் பார்த்து தொலைபேசிகளில் தான் செலவழிக்கின்றனர். அதேபோல் ஷேர்இட்டும் பல புது உள்ளடக்கத்துடன் பபயனாளர்களை நிச்சயம் ஈர்க்கும்.”

200 நாடுகளில் 15 பில்லியனுக்கும் மேலான பயனாளர்கள் ஷேர்இட்-ஐ பயன்படுத்துகிறார்கள். தற்பொழுது 39 மொழிகளில் ஷேர்இட் இயங்கி வருகிறது, இன்னும் மொழிகளை சேர்க்கவும் உள்ளது. பெரும்பாலும் 16- 28 வயதுடைய இளைஞர்கள் தான் இந்த ஆப்-ஐ அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்: மஹ்மூதா நௌஷின்

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக