பதிப்புகளில்

இந்தியா முழுதும் 7 லட்சம் ஏழை மக்களுக்கு உதவிய சென்னையைச் சேர்ந்த சமூக நிறுவனம் 'GiveAway' !

YS TEAM TAMIL
30th Jan 2017
Add to
Shares
341
Comments
Share This
Add to
Shares
341
Comments
Share

மிஞ்சிய உணவுவகைகள் வீணாகாமல் நிர்வகிக்கும் முயற்சியாக உருவான 'கிவ்அவே' 'GiveAway' தற்போது நன்கொடை அளிக்க விரும்புபவர்களையும் பயனாளிகளையும் ஒன்றிணைத்து தேவைப்படுவோருக்கு உதவும் தளமாக செயல்படுகிறது.

”நாங்கள் மூவரும் மெரினா கடற்கரையில் இருந்தபோது ஒரு முதியவர் குப்பைக் குவியலில் சாப்பிடும் பொருள் ஏதேனும் உள்ளதா என்று தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்தோம். அதே கடற்கரையில் ஒரு குடும்பத்தினர் ஒரு உணவுப் பொட்டலத்தில் மிகக் குறைந்த அளவே சாப்பிட்டுவிட்டு கிட்டத்தட்ட முழு பொட்டலத்தையும் வீசி எறிந்ததைப் பார்த்தோம். அப்போதுதான் உணவுப் பொருட்கள் வீணாகும் பிரச்சனைக்கான தீர்வை நோக்கி செல்ல முடிவெடுத்தோம்,” 

என்றார் கிவ்அவே நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மொஹமத் ஆசிஃப். 

image


உணவிலிருந்து அடிப்படைத் தேவை வரை 

ஆசிஃப் (24), நரேஷ்வர் ஸ்ரீநிவாசன் (25), ஃபத் கலீல் வாலாஜா (25) ஆகிய மூவரும் கிவ்அவேவின் நிறுவனர்கள். நாட்டில் இருக்கும் பட்டினி பிரச்சனைகள் குறித்து இவர்கள் எப்போதும் கவலை கொண்டிருந்தனர். பசி மற்றும் உணவுப் பொருட்கள் வீணாகுதல் ஆகிய இரண்டு பிரச்சனைகளும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இதற்கு தீர்வுகாணும் முயற்சிக்காக இவர்கள் 2015-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ’கிவ்அவே’ எனும் நிறுவனத்தை தொடங்கினர்.

’கிவ்அவே’ தனது பயணத்தின் துவக்கமாக சென்னை முழுவதுமுள்ள வீடுகள், திருமண ரிசப்ஷன்கள், ரெஸ்டாரண்ட்ஸ் மற்றும் பார்ட்டிகள் போன்ற இடங்களிலிருந்து மிஞ்சும் உணவுகளை சேகரித்தனர். இந்தக் குழுவினர் அவர்களே இந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று உணவுப் பொருட்களை சேகரித்து தேவைப்படுவோர்க்கு வழங்குவதற்கு ஏதுவாக பாதுகாப்பாகவும் சுத்தமான முறையிலும் பேக் செய்கின்றனர்.

இந்தக் குழு வாட்ஸ் அப் மூலமாகவும் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கி ஐந்து மாதங்களில் சென்னையில் மட்டும் ஐந்து லட்சம் மக்களுக்கு சேவை செய்துள்ளனர். ஒவ்வொரு நாளும் தங்குமிடமின்றி தவிக்கும் 1000 நபர்களுக்கு உணவளித்து வருகின்றனர். சென்னையில் உணவுப் பொருட்களை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம் குறித்து ஆசிஃப் பகிர்ந்து கொள்கையில்,

“செய்தித்தாளில் எங்களைப் பற்றி தெரிந்துகொண்ட ஒருவர் எங்களை தொடர்புகொண்டார். எங்களது சேவை குறித்து மனதார பாராட்டினார். அவரது வாழ்வில் நடந்தவற்றை எங்களுடன் பகிர்ந்துகொண்டது உணர்ச்சிப்பூர்வமாக மனமுருகச் செய்தது. தமிழ்நாட்டின் உட்புறப் பகுதியில் தெருவோரத்தில் அவர் வளர்ந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். தாய் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் வளர்ந்தார். அவரது குழந்தைப் பருவத்தில் ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு வாழ்ந்தார். சில நேரங்களில் அதுவும் கூட கிடைக்காது. ஆங்காங்கே மிஞ்சியிருக்கும் உணவுகளை சேகரித்து உண்டு வாழ்ந்தார். இன்று ஒரு ரைஸ் மில்லுக்கு அவர் சொந்தக்காரர். ஒவ்வொரு மாதமும் ’கிவ்அவே’விற்காக குறைந்தது 100 அரிசி மூட்டைகளை அனுப்புகிறார். யாரும் பட்டினியுடன் படுக்கைக்குச் செல்லக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு அதற்காகவே பாடுபடுகிறார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் அவருடன் உரையாடியிருப்போம். எங்களது பணிக்கு இவரைப் போன்றோர்தான் ஒவ்வொரு நாளும் ஊக்கமளித்து வருகின்றனர்.”

2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது பசியுடன் இருந்தவர்களுக்கு உணவளிப்பதில் இருக்கும் சவால்களை குழுவினர் உணரத்தொடங்கினர். வெள்ளப் பெருக்கால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி, ஆதரவின்றி, உதவியின்றி தவித்தனர். எல்லாவற்றிற்கும் மேல் உணவின்றி தவித்தனர். கிவ்அவேவின் கண் முன்னால் பல்வேறு பணிகள் வரிசையாக இருந்தது. இந்த அவசர நிலையிலிருந்து மீட்டெடுக்கும் பணிகளுக்காக பத்து கார்ப்பரேட்களை அணுகினார்கள். இந்த முயற்சியின் காரணமாக பலவிதமான நிவாரணப் பொருட்களை சேகரித்தனர்.

மெக்டொனால்ட் பத்து லட்சம் மதிப்புள்ள கூப்பன்களை வழங்கியது. குழந்தைகளிடமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்களிடமும் அளிக்கப்பட்டது. கிவ்அவே பிக்பாஸ்கெட்டுடன் இணைந்து தனது வலைதளத்தில் சென்னைவாசிகளுக்காக க்ரௌட்ஃபண்டிங் பிரச்சாரம் மேற்கொண்டது. இந்த பிரச்சாரம் தொடங்கிய ஏழு நாட்களில் 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் சேகரிக்கப்பட்டது.

க்ரௌட்ஃபண்டிங் பிரச்சாரம் செய்து வந்த ஃபுட்பாண்டா எனும் நிறுவனத்தின் உதவியுடன் குழுவினர் ஹைதராபாத்தின் பாவார்ச்சி ரெஸ்டாரண்டிலிருந்து 20,000 பேருக்கு பிரியாணி சேகரித்தனர். மழை காரணமாக விமான நிலையங்கள் மூடியிருந்ததால் இரண்டு விமாங்கள் மூலம் இண்டிகோ ஏர்லைன்ஸ் உதவியுடனும் பர்வீன் ட்ராவல்ஸ் உதவியுடனும் உணவை சென்னைக்கு கொண்டு வந்தனர். அனைத்து கார்ப்பரேட்களிடமிருந்தும் பெற்ற நிவாரணப் பொருட்களை வெள்ளம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த 5000 குடும்பங்களுக்கு வழங்கினர். வெள்ளம் ஏற்பட்டபோது கிவ்அவே குழுவினர் கிட்டத்தட்ட ஐந்து கோடி மதிப்புள்ள 200 டன் உணவுகளையும் அத்தியாவசியப் பொருட்களையும் சேகரித்தனர்.

image


நன்கொடை அளிப்பவர்களையும் பயனாளிகளையும் இணைக்கும் பாலம் 

வெள்ளத்தின் போது அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உலகெங்கிலுமிருந்தும் இக்குழுவினரை தொடர்பு கொள்ளத் தொடங்கினர். அந்த சமயத்தில்தான் உலகளவிலுள்ள ஒரு இக்கட்டான பிரச்சனைக்கு நிரந்தரமான மற்றும் நிலையான தீர்விற்கான தேவையை உணர்ந்தனர். நன்கொடை அளிப்பவர்களையும் பயனாளிகளையும் இணைக்கும் தளத்தை உருவாக்கி அதன் மூலம் அடிப்படை தேவையிருப்பவர்களுக்கு உதவலாம் என்று குழுவினர் முடிவெடுத்தனர்.

உலகெங்குமுள்ள நன்கொடை அளிப்பவர்களையும் பயனாளியையும் இணைக்கும் ஆன்லைன் மற்றும் மொபைல் தளத்தை உருவாக்க நினைத்தனர். நன்கொடை அளிப்பவர் பணமாக அல்லாமல் அடிப்படை தேவைகளை அளிப்பதில் பங்களிக்கலாம். ஆன்லைன் மற்றும் மொபைல் தளத்தின் மூலம் இயங்கும் க்ரௌட்சோர்சிங் தளம் நன்கொடை அளிக்க விரும்புபவர்களையும் பயனாளிகளையும் இணைக்கும். இதனால் உலகெங்கிலும் உள்ள நன்கொடை அளிப்பவர்கள் பலதரப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை அளிக்கலாம். மேலும் அவர்களது பங்களிப்பின் தாக்கத்தையும் கண்காணிக்க முடியும். இந்த தளத்தை கிவ்அவே சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

”இந்த வெளிப்படையான தளத்தின் மூலம் நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் மளிகைப்பொருட்கள், ரெடிமேட் உணவு, புத்தகம், கல்வி, மருத்துவ உதவி போன்ற தாங்கள் அளிக்க விரும்பும் எந்த உதவியாக இருந்தாலும் அதன் உண்மையான தேவையுள்ளவர்களிடம் சென்றடைய பல்வேறு கார்பரேட்களின் பார்ட்னர்ஷிப்புடன் உதவலாம். நன்கொடை அளிப்பவர்கள் அவர்கள் அளிக்கும் பொருட்கள் எங்கே சென்றடைகிறது என்பதை அந்தந்த நேரத்தில் கண்காணித்துத் தெரிந்துகொள்ளலாம்.” 

என்று விவரிக்கிறார் ஆசிஃப். 12 நபர்களைக் கொண்ட இந்தக் குழு இந்தியா முழுவதும் இன்று வரை ஏழு லட்சம் பேரைச் சென்றடைந்து அவர்களது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளம், மஹராஷ்டிர வறட்சி, 2016-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வர்தா புயல் போன்ற நாட்டின் முக்கிய சம்பவங்களில் கிவ்அவே சிறப்பாக செயல்பட்டது. நன்கொடை அளிப்பவர்கள் தாங்கள் அளிக்கும் நோக்கத்துடன் தொடர்பு படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் அந்த நோக்கத்திற்கான பிரச்சாரத்தில் தன்னார்வலராக செயல்பட இவர்களது குழு அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. ஆசிஃப் கூறுகையில், 

”நன்கொடை அளிப்பவர்களின் பங்களிப்பிற்காக கிவ்அவே எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை. மேலும் இந்தியாவிலுள்ள மற்ற க்ரௌட்சோர்சிங் தளத்தைப் போலல்லாமல் கிவ்அவே நன்கொடை அளிப்பவர்களிடமும் கட்டணம் வசூலிப்பதில்லை பயனாளிகளிடமும் வசூலிப்பதில்லை.”

ஒவ்வொரு ஹோம், அனாதை இல்லை போன்றவற்றின் தேவையை ஒன்றிணைத்து அவர்களுக்காக டிஜிட்டல் குரல் எழுப்ப விரும்புகின்றனர். இதனால் அவர்களின் தேவைகள் பூர்த்தியடைய நன்கொடை அளிப்பவர்கள் மூலம் க்ரௌட்சோர்ஸ் செய்து அவர்களது தளத்தின் வாயிலாக உதவுவதையே ஆசிஃப் மற்றும் அவரது குழுவினர் நோக்கமாக கொண்டுள்ளனர்.

ஆங்கில கட்டுரையாளர் : ஹேமா வைஷ்ணவி

Add to
Shares
341
Comments
Share This
Add to
Shares
341
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக