பதிப்புகளில்

நீங்கள் மன அழுத்தத்திற்கு அடிமையானவரா?

24th Apr 2016
Add to
Shares
63
Comments
Share This
Add to
Shares
63
Comments
Share
image


Stress (மன அழுத்தம்) என்ற வார்த்தை இன்று எல்லோராலும் பேசப்படும் முக்கிய தலைப்பு மாத்திரமல்ல, நம்முடைய தினசரி பேச்சுவார்த்தையில் பரவலாக அடிபடும் ஒரு முக்கியச் சொல்லாகும். “நாள் முழுக்க மன அழுத்தத்தில் இருக்கிறேன்” என்று எனக்கு நானே பலமுறை சொல்லியிருக்கிறேன். என்னுடன் பணிபுரிவோர், “இந்த ப்ராஜெக்ட் மிகவும் ஸ்ட்ரெஸ்ஃபுல்லாக இருக்கப்போகிறது” என்பார்கள். எல்லோருக்கும் பரிச்சயமான கோபம், மகிழ்ச்சி, அமைதி போன்ற உணர்ச்சிகளைப்போலவே மக்கள் ஸ்ட்ரெஸ் என்ற உணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறார்கள். “நான் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன், குடும்பத்துடன் நேரம் செலவிடுகிறேன், நண்பர்களுடன் உற்சாகமாக இருக்கிறேன், பல காலக்கெடுகளை சரியாக முடித்து இலக்குதாண்டி சென்றுகொண்டிருக்கிறேன்.... என்னால் முடிந்த அளவைவிட நான் அதிகமாக செய்கிறேன் என்று நீங்கள் என்னை குற்றம்சாட்ட முடியாது.”

மன அழுத்தம் ஒரு புதிய அடிமைத்தனமா?

ஒரு ஓட்டப்பந்தயத்தில் பங்கெடுத்ததுபோல் உணர்வோம். நேர்மறை மற்றும் எதிர்மறையான ஒரு உற்சாகமான பயணமாக இருக்கும். அட்ரினலைன் அதிகரித்துக்கொண்டே இருக்கும். நாம் அது அட்ரினலைன் என்று நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் அது கார்டிசோலின் அதிகமான அளவு என்று நமக்குத் தெரியாது. நம்முடைய உடல் குறித்து நாம் சிறிதாவது தெரிந்துவைத்திருப்போம். ஆனால் இன்று அதற்கும் நேரமில்லை.

அந்த உணர்வை நம் உடலும் மனதும் தெரிந்துகொள்ளும். ஒரு நிலையில் மன அழுத்தம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம். அல்லது அதன் விளைவுகளை தெரிந்துகொள்வோம். இதில் பிரச்சனை என்னவென்றால் நாம் அதை ரசிக்க ஆரம்பித்துவிட்டோம். இது கிட்டத்தட்ட எப்படி இருக்கிறதென்றால் எனக்கு மன அழுத்தம் இல்லை என்று நான் சொன்னால் நான் வாழ்க்கையில் அதிகமாக எதையும் செய்யவில்லை என்று அர்த்தம். என் சக நண்பர்கள் நிறைய செய்கிறார்கள். நாம் இது குறித்து தெரிந்துகொள்ளாத போது நாம் அமைதியாக அதற்காக போட்டியிட்டுக்கொண்டிருந்தோம். நம்மிடமுள்ள மன அழுத்தம் அதிகமாக அதிகமாக, நமக்கு இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது. இந்த மன அழுத்தம் ஒரு புதிய அடிமைத்தனமா? நீங்கள் மன அழுத்ததிற்கு அடிமையானவரா? இந்தக் கேள்விக்கான விடையை நாம் அடுத்தவருக்கு சொல்லவேண்டிய அவசியமில்லை என்றாலும் நாம் நம்மிடமே கேட்டுக்கொள்ளலாம்.

வாரம் முழுவதும் கடுமையாக வேலை செய்துவிட்டு சில மணி நேரங்களோ அல்லது நாள் முழுவதுமோ அல்லது வார இறுதியிலோ ஒன்றுமே செய்யாமல் அமைதியாக சோபாவில் படுத்திருந்தால் உங்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறதா? அப்படியானால் நீங்களே உங்களிடம் இந்த கேள்வியை கேட்டுக்கொள்ளுங்கள்.

பெரும்பாலான நேரம் உழைத்துக்கொண்டே இருக்கும் நான், இந்த சிறிய ஓய்வெடுத்ததற்காக ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறேன்?  

image


நீங்கள் தனிமையில் அமைதியாக உட்கார்ந்திருக்கும் சமயம் உங்கள் தனிமையே உங்களுக்கு தொந்தரவாக இருந்தால் உடனே ஏதாவது ஒரு சமூக ஊடகங்களில் உங்களை இணைத்துக்கொள்ள உங்கள் மொபைலிலோ அல்லது தொலைக்காட்சியிலோ மூழ்குகிறார்கள் அல்லவா? வேறு ஒரு விஷயத்தில் திசைதிருப்புவதைவிட அமைதியாக இருப்பது உங்களுக்கு அதிக தொந்தரவு அளித்தால் சர்வ நிச்சயமாக நீங்கள் ஸ்ட்ரெஸ் அடிக்ட் ஆகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

நாம் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான நடவடிக்கைகளால் அதிகமான சுமையை சுமக்கிறோம். ஏனென்றால் நமக்கு நாமே துணையாக இருப்பதை நம்மால் ரசிக்கமுடியவில்லை. ஆன்மாவின் தேவையைப் பார்ப்போம்.

உடலுக்கு எப்படி உணவு தேவைப்படுகிறதோ மூளைக்கு தகவல்கள் தேவைப்படுகிறது. அதேபோல் நம் ஆன்மாவிற்கு தேவை அமைதியான மனநிலை. நாம் நம் ஆன்மாவிற்கு அந்த மனநிலையை அளிக்கிறோமா? உடனே நீங்கள் என்ன பதிலளிப்பீர்கள், எனக்கு நேரமில்லை என்றுதானே?

எனக்கும் நேரம் இல்லை இருந்தாலும் நான் நேரம் ஒதுக்கி இந்த ஸ்ட்ரெஸ் கேமை ஆராய்ந்துப் பார்த்தேன்.

ஒன்றிரண்டு வழிகளில் என்னுடைய மன அழுத்தத்துடன் போராட முயன்றேன். அப்படித்தான் ஒரு பழக்கத்தை நடைமுறைப்படுத்தினேன். அதுதான் Mindfulness. அதாவது அந்தந்த குறிப்பிட்ட தருணங்களில் நம்முடைய எண்ணங்களில் கவனம் செலுத்துதல். இது தத்துவம் அல்ல. எப்படி காலை எழுந்ததும் பல் துலக்குவோமோ அதேபோல் இதுவும் ஒரு பழக்கம். அவ்வளவுதான். 

நீங்கள் தனியாக குளிக்கிறீர்களா? : இதென்ன கேள்வி என்கிறீர்களா? காலையில் ஷவரில் குளிக்கச் செல்லும்போது அன்றைய தினத்திற்கான பல்லாயிரக்கணக்கான ஸ்ட்ராடெஜிகள், எண்ணங்கள், திட்டங்கள் நம்முடன் சேர்ந்து வரும். நம் மனதில் இத்தனை சிந்தனைகள் அடைக்கப்பட்டு மேலோட்டமாக நம்மை சுத்தம் செய்துகொள்கிறோம். அந்த எண்ணங்கள் அனைத்தையும் வெளியே வீசிவிட்டு தண்ணீர் நம் உடலையும் மனதையும் சுத்தம் செய்வதை உணரமுடியுமா? இது நச்சுக்களை வெளியேற்றும் ஒரு அனுபவம். இதில் கவனம் செலுத்தினால் தியானம் செய்தது போல நம்முடைய நாள் இனிமையாக தொடங்கும்.

பழைய உணவுப்பழக்கத்தை கொண்டுவரவும் : நாம் உண்ணும் உணவிற்கு நன்றி தெரிவிப்பது உணவிற்கான நம் அணுகுமுறையை மேம்படுத்தும். நாம் உணவு உட்கொள்ளும் நேரம் நிம்மதியாக இருந்தால் உடலின் தேவை அமைதியாக நிறைவேறுவதற்கான நேரத்தை நாம் அளிக்கிறோம் என்று அர்த்தம். சிறந்த செயல்களுக்கு அது நமக்குத் துணைநிற்கும். மன அழுத்தத்தை உடலளவில் நாம் எதிர்கொள்ள உதவும்.

மூச்சை சீராக்க ஐந்து நிமிடம் ஒதுக்கவும் : நாம் இந்த கிரகத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் லைஃப் ஃபோர்ஸ் அல்லது ப்ராணா. சுவாசித்தல் என்பது தனிச்சை செயல். அதனால் நாம் அதைப்பற்றி சிந்திக்க முயற்சி செய்வதில்லை. நம்மால் அதை அடக்கவும் முடியாது. எண்ணங்களுக்கும் மூச்சிற்கும் தொடர்புடையதால் அது நேரடியாக நம் மனநிலையுடன் தொடர்புடையது. அதனால்தான் பேரின்ப நிலையை அடைவதற்கு மூச்சுப்பயிற்சிகள் வழிவகுக்கிறது. நாம் இந்த பயிற்சிக்கான ஐந்து நிமிடங்களை எங்கு வேண்டுமானாலும் செலவிடலாம். ட்ராபிக்கில் சிக்கியிருக்கும்போது, நடக்கும்போது எங்குவேண்டுமானாலும் செல்லலாம்.

image


கண்காணிக்கவேண்டும் : வெளியில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் கண்காணிக்க நம் மனதை செலுத்தலாம். டேபிள், பேனா, சேர், தலையணை, புல், வாகனங்கள் போன்றவற்றை கண்காணித்தல்தான் அந்த நொடியில் வாழ்வதற்கான தருணம். ஒரு விஷயத்தை கவனித்து அதிலிருந்து செய்யவேண்டியன ஒன்றுமில்லை எனும் நிலையில்தான் அமைதியாக அந்த நொடியை மனம் அனுபவிக்கமுடியும். மன அழுத்தம் என்பது எதைக்குறித்தது என்று ஆராய்ந்தால் தெரியும். என்னவாக இருந்திருக்கலாம்? என்னவாக இருக்கப்போகிறது? என்ன தவறு நடந்தது? அதாவது கடந்தகாலத்தையோ அல்லது எதிர்காலத்தையோ குறிக்கிறது.

மோசமானதை எதிர்கொள்ள தயாராகுங்கள் : சிறந்தவற்றிற்காக திட்டமிடுங்கள். மோசமானதை எதிர்கொள்ள தயாராகுங்கள். இது ஒரு எதிர்மறை விஷயமல்ல. எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படி நடக்காமல்போகும் சூழலில்தான் மன அழுத்தம் ஏற்படுகிறது.

ஒப்பிடாமல் ஏற்றுக்கொள்ளுங்கள் : நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகுங்கள். ஒவ்வொரு விஷயத்தை செய்யவும் உங்களுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கும். தொழில், வேலை அல்லது முன்னேற்றம் எதிலுமே உங்களது வேகத்தை அடுத்தவருடன் ஒப்பிடாதீர்கள். அதிக போட்டி நிரம்பிய உலகம்தான். ஒத்துக்கொள்கிறேன். ஆனால் தனித்துவமான திட்டங்களை உருவாக்குங்கள் எதிர்வினையாக அல்ல.

தண்ணீர் சிகிச்சை : இதற்கு நான் உத்தரவாதமளிக்கிறேன். ஒவ்வொரு முறை நாம் தண்ணீர் குடிப்பதும் நம் உணர்வுகளுக்கு ஒரு வடிகால். திரவ நிலையில் இருப்பதால் விரைவில் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. நான் குடிக்கும் தண்ணீருக்கு அடிக்கடி நன்றி தெரிவிப்பேன் காரணம் அதன்பின் என் எண்ணங்களிலும் ஆற்றலிலும் மாற்றத்தை என்னால் உணரமுடியும்.

மன அழுத்தத்தை அடுத்தவரிடம் காட்டாதீர்கள் : பலர் தங்களால் மன அழுத்தத்தை கையாள முடியாத நிலையில் அடுத்தவரிடம் அதைக்காட்டுவார்கள். இது கார்ப்பரேட் சூழலிலும் பொருந்தும் நம் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழலிலும் பொருந்தும். நான் அந்த சூழ்நிலையிலிருந்து தள்ளி இருக்க முயற்சித்தேன். அப்படிப்பார்க்கும்போது அடுத்தவர் நடந்துகொள்ளும் விதத்தை அறிந்துகொள்ளமுடிந்தது. மேலும் உணர்ச்சிகளை பக்குவமாக கையாளும் திறமையும் வளர்ந்தது.

நான் சில வழிமுறைகளை முயன்றுப் பார்த்தேன். என் அன்றாட வாழ்க்கைக்கு அது உதவியது. நீங்கள் உங்களுக்கான செக் லிஸ்டை தயாரிக்கலாம். மன அழுத்தம் நம் வாழ்க்கையை ஒரு தனிச்சையான செயலாக மாற்றிவிடும். நாம் அதை உணர்ந்துகொள்வதற்கும் வாழ்க்கையில் பலவற்றை இழந்திருப்போம். அதனால் நம் மன அழுத்தம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொண்டு நம் வாழ்க்கைமுறையை மாற்றியமைப்போம்.

ஆக்கம் : சுகிர்த்தி ஷர்மா | தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

மனஅழுத்தத்தை விரட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் தீபிகா படுகோன்!

பதின்ம வயதினர் மனம் திறப்பதற்கான ஓர் இடம் 'அட்வைஸ்அட்டா.காம்'

மக்களின் மன அழுத்தத்தை போக்க உதவும் ஜானகி விஸ்வநாதின் 'சாத்தி ஹாத் பதானா'

Add to
Shares
63
Comments
Share This
Add to
Shares
63
Comments
Share
Report an issue
Authors

Related Tags