பதிப்புகளில்

கர்நாடகாவின் முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கி காஜல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

2nd Jan 2018
Add to
Shares
119
Comments
Share This
Add to
Shares
119
Comments
Share

சாரங் 107.8 மங்களூருவின் சமூக வானொலியாகும். கர்நாடக கடற்கரைப் பகுதியின் இந்த வானொலி முதல் முறையாக ஒரு திருநங்கையை ரேடியோ ஜாக்கியாக நியமித்துள்ளது. மஹாராஷ்டிராவின் மண்டியா பகுதியைச் சேர்ந்தவர் காஜல். 27 வயதான இவர் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரேடியோ ஜாக்கியாக தனது பணியைத் துவங்கினார்.

image


’சுபமங்களா’ என்றழைக்கப்படும் காஜலின் நிகழ்ச்சி ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மங்களூருவின் செயிண்ட் அலோசியஸ் கல்லூரியிலிருந்து ஒளிபரப்படுகிறது.

ஒரு அறிக்கையின் அடிப்படையில் ’டெக்கான் ஹெரால்ட் வெளியிடுகையில்,

கர்நாடக கடற்கரைப் பகுதியில் இது முதல் சோதனை முயற்சியாகும். திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்து முக்கிய பணியளிக்கப்படவேண்டும் என்று பலர் வார்த்தைகளால் போதித்தாலும் நடைமுறைப்படுத்துவதில்லை.

காஜல் 14 வயதிருக்கையில் உடலளவில் தன்னிடம் ஏற்பட்ட மாற்றத்தை கவனிக்கத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் உடலளவிலும் மனதளவிலும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தபோதும் தனது பன்னிரண்டாம் வகுப்பில் 85 சதவீதம் பெற்றார்.

அடிக்கடி மும்பை பயணித்தார். அங்கு வாழ்க்கையை நடத்த பார் டான்ஸராக பணியாற்றத் துவங்கினார். ஒரு சர்க்கஸ் நிறுவனத்தில் நடனம் ஆடுபவராக பணிக்குச் சேர்ந்தார். இதன் மூலம் ஒன்பதாண்டுகளுக்கு முன்பு கர்நாடக கடற்கரைப் பகுதிக்குச் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.

காஜல் ’தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ உடன் பேசுகையில்,

இங்குள்ள மக்கள் என் மீது அளவுக்கதிகமான அன்பும் மரியாதையும் காட்டினர். இதனால் நான் இந்தப் பகுதியிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டேன். இதுவரை இந்த அளவிற்கு என்னிடம் யாரும் மரியாதை காட்டியதில்லை.

காஜல் பிராமவர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார். அஞ்சல் வழியில் பட்டப்படிப்பை முடிக்கவுள்ளார். வருங்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்பதே அவரது லட்சியம்.

பல்வேறு திறமைகள் கொண்ட காஜல் ஒரு நடனக்கலைஞர். தொலைக்காட்சி மற்றும் தியேட்டர் தயாரிப்புகளுடன் இணைந்துள்ளார். ரங்கபூமி தியேட்டர் மூலமாகவே அவருக்கு ரேடியோ ஜாக்கி ஆகும் வாய்ப்பு கிடைத்தது.

’மங்களூரியன்’ தகவல்படி காஜல் கூறுவதாவது,

ஒரு திருநங்கைக்கு வேலை கிடைப்பது என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாத விஷயமாகும். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே எங்களால் எங்களது திறமைகளை நிரூபித்துக் காட்டமுடியும். எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம். என்னுடைய சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் கனவுகளும் நனவாகி அவர்கள் வாழ்வில் வெற்றி பெற அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவேண்டும்.

கட்டுரை : Think Change India

Add to
Shares
119
Comments
Share This
Add to
Shares
119
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக