பதிப்புகளில்

GES2017: நரேந்திர மோடி, இவங்கா டிரம்பை சந்தித்த 5 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்!

29th Nov 2017
Add to
Shares
56
Comments
Share This
Add to
Shares
56
Comments
Share

உலக தொழில்முனைவு மாநாட்டில் (GES) இவங்கா டிரம்ப் அளித்த தொடக்க உரை தாண்டி 5 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இவங்கா டிரம்புடன் பேச வாய்ப்புக்கிடைத்துள்ளது.

நவம்பர் 28 காலை ஆறு மணி முதல் ஹைதராபாத் விமான நிலையத்தில் 16 பலகைகளுடன் வரவேற்பிற்காக காத்திருந்தனர். விமான நிலையம் மட்டும் அல்லாமல் செல்லும் வழியெல்லாம் ஆந்திர பிரதேசம் முழுவதும் இவங்கா டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று பல பலகைகள் அமைந்திருந்தது.

மாநாட்டின் நுழைவில் 1,500 தொழில்முனைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் விமான நிலையம் போல் பாதுகாப்பு சோதனைகளை கடந்து சென்றனர்.

இந்த வருட GES-ல் தொழில்முனைவர்கள், நான்கு முக்கிய தொழில் துறைகளை மையப்படுத்தி இருந்தனர்: எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல், நிதி தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், மற்றும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை ஆகும்.

image


இந்த மாநாட்டின் மையக் கருத்து - “பெண்களுக்கு முக்கியத்துவம் அனைவருக்கும் செழிப்பு”.

இந்த வருட GES-ல் 52.5 சதவீத தொழில்முனைவர் மற்றும் முதலீட்டாளர்கள் பெண்களே. இவ்வளவு பெண்கள் கலந்துக்கொள்வது இதுவே முதல் முறை.

விழா தொடங்கும் முன் நரேந்திர மோடி மற்றும் இவங்கா டிரம்ப் 5 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை சந்தித்து பேசினர். இந்த ஐந்து நிருவனங்களும் நாட்டுக்கு அவர்களின் பங்கு மற்றும் புதுமையை கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்பட்டன.

அந்த 5 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இதோ:

1. ஏதர் எனெர்ஜி

தருண் மேத்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் என்கிற இரு ஐஐடி பட்டதாரிகளால் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் ஏதர் எனெர்ஜி.

மே 2015-ல் இந்நிறுவனம் டைகர் குளோபல் இடம் இருந்து 12 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. ஏதரின் முதல் மின்சார இரு சக்கர வாகனத்தின் தயாரிப்பு மற்றும் சோதனைக்காக அந்த நிதி பயன்படுத்தப்பட்டது. 2014-ல், ஃப்ளிப்கார்ட் நிறுவனர் சச்சின் மற்றும் பின்னி பன்சால் இந்நிறுவனதிற்காக ஒரு மில்லயன் டாலர் நிதி அளித்தது.

Ather S340, லிதியம் பேட்டரி பயன்படுத்தி செயல்படும் வாகனம். இது ஒரு மணி நேரத்திற்கு 75கிமி வேகம் செல்லும், மேலும் டச் ஸ்க்ரீன் வசதிகொண்டது.

2. ஆஹா (Ahhaa)

Ahhaa 2015-ல் அஷ்வின் ஸ்ரீசைலம் மற்றும் டியான் என்பவரால் நிறுவப்பட்டது. துறவியாக இருந்த அஷ்வின், மைக்கல் ஜாக்சன் மற்றும் இசை நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் உடன் பழகியவர். Ahhaa வின் முதல் பகுதி செயலியை ஏ. ஆர் ரஹ்மான் தான் வெளியிட்டார். ஆப் ஆக வெளிவந்த Ahhaa மெய்நிகர் உண்மை (VR) அனுபவமாக மாற்றப்பட்டது.

தற்போது அவர்களின் இலக்கு ’Ahhaa spaces’, VR மையத்தை அமைக்க வேண்டும் என்பதே.

3. ஹைப்பர் லூப் Hyperloop

BITS பிலானியை சேர்ந்த சிறு மாணவர் குழுவால் இந்நிறுவனம் 2015-ல் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் 60 மாணவ தன்னார்வலர்கள் இணைந்து செயல்படுகிறார்கள். இந்தியாவின் போக்குவரத்தில் மாற்றம் கொண்டு வருவதே இவர்களின் இலக்கு.

OrcaPod என்னும் இவர்களின் தயாரிப்புதான் SpaceX Hyperloop Pod வடிவமைப்பு போட்டிக்கு இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற முதல் தயாரிப்பு ஆகும். இந்த Pod பயணிகளையோ அல்லது சரக்கையோ துரிதமாக வெகுவிரைவில் மின்சார மோட்டாரை எஃகு குழாய் மூலம் துரிதப்படுத்தி விமான வேகத்திற்கு ஈடாக எடுத்துச்செல்லும்.

4. அம்புபாட் AmbuPod

புனேவைச் சேர்ந்த இந்நிறுவனம் மருத்துவர் லாவணியன் மற்றும் அவரது மகள் யாமினி லாவணியனால் நிறுவப்பட்டது. விமானப்படையின் மருத்துவர் ஆன லாவணியன் கிராமப்புற மக்களுக்கு பல மருத்துவ உதவிகளை செய்துள்ளார்.

அம்புபாட் ஒரு சிறிய ஆம்புலன்ஸ் மற்றும் கிளினிக், ஒரு நேரத்தில் ஒரு நோயாளியை பார்க்கக் கூடிய அளவிற்கு 3.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டதாகும். இதில் உள்ள அனைத்து மருத்துவ சாதனங்களும் சூரிய ஒளி மூலம் சார்ஜ் செய்துக்கொள்ளலாம். இது போன்ற பல அம்புபாட்களை தயாரிக்க நிதி திரட்டி வருகின்றனர்.

5. Ethereal Machine

இந்நிறுவனத்தின் நிறுவனர்களான கௌஷிக் முடா மற்றும் நவீன் ஜெயின் துறைகளில் பொறியாளர்கள். இவர்கள் 2014 இல் ஆர்.வி.சி.சி பெங்களூரில் பட்டப்படிப்பை முடித்தனர்.

பல சவால்களை எதிர்கொணடு, சுமார் 63 முறை நிராகரிக்கப்பட்ட பின்னர் இவர்கள் வெற்றியை நோக்கி சென்றுள்ளனர். சாம்சங், நிஸ்ஸான், எல்’ஜி போன்ற ஜான்பவான்களுக்கு இடையில் CES - சிறந்த கண்டுபிடிப்பு விருதை பெற்ற முதல் இந்திய நிறுவனம் இது.

உலகின் முதல் 5 அச்சில் சேர்க்கை மற்றும் கழித்தல் பிரிண்டரைக் கண்டுபிடிப்பதற்காக இந்த விருது இவர்களுக்கு வழங்கப்பட்டது.

Add to
Shares
56
Comments
Share This
Add to
Shares
56
Comments
Share
Report an issue
Authors

Related Tags