பதிப்புகளில்

கடற்கரைப் பகுதிகளை தூய்மைப்படுத்த ஒன்றுதிரண்ட 4,500 சென்னைவாசிகள்!

24th Jun 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

கடந்த வாரம் சென்னை மெரினா பீச்சில் தொடங்கி கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி வரை, சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் 4500 தன்னார்வலர்கள் இணைந்து கரையோரத்தை சுத்தம் செய்ய களம் இறங்கினர். சுத்தம் செய்யத் தேவையான கை உறைகள் மற்றும் குப்பை பைகள் வழங்கப்பட்டவுடன், கரையோரம் மற்றும் குளங்களை ஒட்டி கொட்டிக்கிடக்கும் கண்ணாடி பாட்டில்கள், ப்ளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைகளை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்தும் பணிகளைத் தொடங்கினர் தன்னார்வலர்கள். 

image


சென்னை கரையோர சுத்தம் செய்யும் பணிகளை 'சென்னை ட்ரெக்கிங் க்ளப்' (CTC) ஏழாவது முறையாக ஏற்பாடு செய்திருந்தது. 

"இந்த ஆண்டு முக்கியமாக இரண்டு முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தோம். முதலில், ப்ளாஸ்டிக் உபயோகிப்பதன் எதிர்மறை பாதிப்புகளைப் பற்றி பொது மக்களுக்கு தெரியப்படுத்துவது. இரண்டாவதாக, பொது மக்கள் அவரவர் வீடுகளில் குப்பைகளை சரிவர பிரித்து, (ஈரக்கழிவு மற்றும் உலர் கழிவு) பெருகி வரும் கழிவுகளை குறைக்க தெரிந்து கொள்ள வேண்டும்," என்றார் CTC வின் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் வேன் கெயிட்.

சென்னை மற்றும் 12 நகரங்களில் கடந்த ஞாயிறு அன்று, சுமார் 5800 தன்னார்வலர்கள், 59 டன் கழிவுகளை அகற்றியுள்ளனர். செனை ட்ரெக்கிங் க்ளப், சென்னையில் 140 தன்னார்வ தொண்டு அமைப்புகளைச் சேர்ந்த 4500 தன்னார்வலர்களைக் கொண்டு 38 டன் கழிவுகளை பிரித்தெடுத்து, 56 சதவீதம் குப்பைகளை மறுசுழற்சி செய்து மீதியை கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். 

"எல்லாரும் கழிவுகளை பள்ளிக்கரணையில் கொட்டுகின்றனர். ஆனால் நாம் அதை செய்யப்போவதில்லை. கரையோரம் அப்புறப்படுத்தும் குப்பைகளை அழகிய பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கொட்டுவது சரியாக இருக்காது. எனவே கழிவுகளை பிரித்து கொட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த உள்ளோம். ஈரக் கழிவுகள் உரமாக பயன்படுத்த முடியும், உலர் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படவேண்டும். இது 90 சதவீத கழிவுகள் உற்பத்தியை குறைக்கும்," என்கிறார் பீட்டர். 
image


அமைப்பின் தன்னார்வலர் எழில் இதுபற்றி கூறுகையில், "தன்னார்வலர்கள் கழிவுகளை வெற்றிகரமாக பிரித்தெடுத்தனர். ஒரு லாரி முழுதும் கண்ணாடி மற்றும் ப்ளாஸ்டிக் குப்பைகளை ஏற்றி மறுசுழற்சிக்கு அனுப்பிவைத்து சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க உதவினர்," என்றார். 

திருநெல்வேலி, திருச்சி, ஏலகிரி, புதுச்சேரி, ஹைதராபாத், கம்பம், தூத்துக்குடி, கோவை, பார்வதி வேலி, கன்யாகுமரி, கடலூரி மற்றும் தென்காசியில் 1300 தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து அங்குள்ள கடற்கரை, குளங்கள் மற்றும் ஆறுகளை சுத்தப்படுத்தினர். 

நன்றி: Think Change India


Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக