பதிப்புகளில்

ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் கொண்டாடும் ‘ஸ்டார்ட்-அப் பொங்கல் 2.0’- கலந்து கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்!

8th Jan 2018
Add to
Shares
97
Comments
Share This
Add to
Shares
97
Comments
Share

பொங்கல் நம் தமிழர் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் ஒரு பண்டிகையாகும். இயற்கை அன்னை அளித்த விளைச்சலுக்கு நாம் செலுத்தும் நன்றியாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை அங்கீகரிக்கும் வகையில் சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் ஒன்று கூடி இந்த ஆண்டு பொங்கலை கொண்டாட முடிவெடுத்துள்ளனர். இது இவர்கள் இணைந்து கொண்டாடும் இரண்டாவது ஆண்டாகும். 

‘ஸ்டார்ட்-அப் பொங்கல் 2.0’, என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விழா, சென்னை தொடக்க நிறுவனர்களை ஒருங்கிணைக்கும் ஒரு திருவிழா. இது ஒருவருக்கொருவர் அறிமுகத்தை ஏற்படுத்திக்கொள்ளவும், தங்களின் தொடர்புகளை விரிவடையச் செய்யவும் நடத்தப்படும் நிகழ்வு ஆகும். ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலில் உள்ள பலதுறை நிறுவனங்களை பற்றி அறிந்து கொள்ளவும் இது உதவும்.

image


கடந்த ஆண்டு நடைப்பெற்ற ‘ஸ்டார்ட் அப் பொங்கல்’ விழாவில் சுமார் 160 ஸ்டார்ட்-அப்’கள் கலந்துகொண்டனர். அதே போல் இந்த ஆண்டும் மேலும் கூடுதலாக தொடக்க நிறுவனங்களின் நிறுவனர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னை வந்து கலந்து கொள்ள உள்ளதாக இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளரும், சாய்கிங்க் நிறுவனருமான சுரேஷ் ராதகிருஷ்ணன் தெரிவித்தார். 

சென்னையில் உள்ள எம்.என்.எம் ஜெயின் கல்லூரி வளாகத்தில், வருகிற 11 ஆம் தேதி ஜனவரி மாதம் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை ‘ஸ்டார்ட்-அப் பொங்கல் 2.0’ விழா நடைப்பெற உள்ளது. இதில் தமிழர் விளையாட்டுகளான பம்பரம், கோலி, பாண்டி, நொண்டி, கபடி நிறுவனர்கள் இடையே நடத்தப்படும். பொங்கல் சமைப்பது, துடும்பாட்டம் மற்றும் தமிழ் பாரம்பரிய உணவுகள் பங்கேற்பாளர்களுக்கு இவ்விழாவில் வழங்கப்படும்.

ஸ்டார்ட்-அப் பொங்கல் 2.0’ விழாவில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனர்கள் உடனடியாக கீழே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். 

Startup Pongal 2.0

நுழைவுக் கட்டணமாக ரூ.100 அளித்து உங்கள் டிக்கெட்டை பெறுங்கள். இவ்விழாவை பற்றி தொடக்க நிறுவன நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு:

ஸ்டார்ட் அப் பொங்கல் ஃபேஸ்புக் பக்கம் | அருள் முருகன்: 9843824949, சுரேஷ் ராதாகிருஷ்ணன்: 9710931622

Add to
Shares
97
Comments
Share This
Add to
Shares
97
Comments
Share
Report an issue
Authors

Related Tags