பதிப்புகளில்

ஊர் மக்களுக்கு உதவிடும் ‘ஊருணி’- கார்ப்பரெட்டில் பணியாற்றிக் கொண்டே சமூக சேவை புரியும் நண்பர்கள்!

11th May 2017
Add to
Shares
587
Comments
Share This
Add to
Shares
587
Comments
Share
"சிறுவயதிலிருந்தே பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும் என்னும் எண்ணத்துடனே வாழ்ந்து கொண்டு இருந்தேன். பிறருக்கு உதவி செய்து, அதன் பயனால் அவர்கள் பெறும் இன்பத்தில் உள்ள சந்தோஷம் எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடுயில்லை,"

என்று தொடங்கினார் ரத்தினவேல் ராஜன். தனது பள்ளி படிப்பை சொந்த ஊரான திருநெல்வேலியில் முடித்து, சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தார். படித்து முடித்த பின் தனியார் நிறுவனத்தில் மனிதவள அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அவ்வப்போது தன்னால் முடிந்த உதவியை பிறருக்கு நண்பர்களுடன் இணைந்து குழுவாகவோ தனியாகவோ செய்து வந்தார். இப்படி தனது வாழ்க்கையை பிறருக்காகவும் தனக்காகவும் வாழ்ந்து கொண்டு இருந்தார் ராஜன்.

ரத்தினவேல் ராஜன் மற்றும் சங்கர் சுந்தரலிங்கம்

ரத்தினவேல் ராஜன் மற்றும் சங்கர் சுந்தரலிங்கம்


2015ஆம் ஆண்டில் வரலாறு காணாத அளவிற்கு சென்னையில் மழை பெய்தது. அப்போது மக்களுக்காக அரசாங்கம் உழைத்த நிலை மாறி, மக்களுக்காக மக்களே உதவிகள் புரிந்தனர். தனது பக்கத்து வீட்டுக்காரர் பெயர் கூட தெரியாமல் ஓடி உழைத்துக் கொண்டு இருந்த மக்கள், யார் என்றே தெரியாதவர்களுக்கு கூட உதவி செய்து, மனிதர்களாக வாழ்ந்த நேரம் அது….

அப்போது ராஜன் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு வெள்ளத்தால் பாதித்த இடங்களுக்கு சென்று அங்கு உள்ளவர்களுக்கு உணவு, உடை அளித்து உதவி செய்தார். தனது நண்பரான சங்கர் சுந்தரலிங்கம் வீட்டில் உணவை சமைத்து பார்சல் செய்து வெள்ளத்தால் பாதித்த இடங்களிலுள்ள மக்களுக்கு கொண்டு கொடுத்தனர். சைதாப்பேட்டை தீடீர் நகர் வெள்ளத்தால் மிகவும் பாதித்த இடம், அரசாங்கமும் அங்கு உள்ளவர்களை கவனிக்காமலிருந்தது… ராஜன் மற்றும் அவரது குழு இணைந்து அங்கு உள்ளவார்களுக்கு உணவு, உடை, மருத்துவ உதவி போன்றவற்றை செய்தனர். அதன் பிறகு, தனது நண்பர்களிடம், 

“நாம் ஏன் ஒரு அமைப்பாக செயல்படக் கூடாது?“ என தனது விருப்பத்தை நண்பர்களிடம் வெளிப்படுத்த, அவர்களும் சம்மதிக்க ’ஊருணி’ என்ற பெயரில் அமைப்பை தொடங்கினேன்,” என்றார் ராஜன். 

ஊருணி தொடக்கமும், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பும்

2016 மார்ச், ஊருணி அமைப்பாக உருவாகிய பின் சென்னை அடையாரில் உள்ள St.லூயிஸ் காது கேட்காதவர்கள், வாய் பேச முடியாதவர்களுக்கான கல்லூரில் பயிலும் மாணவர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்ததை அறிந்தார். ”நாம் ஏன் அவர்களுக்கு வேலை வாய்ப்பை அமைத்துத் தரக் கூடாது “ என எண்ணினோம். அதற்காக ’வீ அர் யுவர் வாய்ஸ்’ (WE ARE YOUR VOICE) எனும் நிகழ்ச்சியை, Opportunity Infotech எனும் அமைப்புடன் இணைந்து நடத்த முடிவு செய்தனர். அந்த நிகழ்ச்சிக்கு மூத்த வருமானவரித் துறை அதிகாரியாக பணிபுரியும் மகாலிங்கம் மற்றும் சென்னையில் உள்ள அனைத்து பெறுநிறுவனத்தின் மனித வளம் அதிகாரிகளையும் (HR) அழைத்துள்ளனர். 

நிகழ்ச்சியில் பங்குபெற்ற அதிகாரிகள் அனைவரும் எங்களிடம் கேட்ட ஒரே கேள்வி 

”எப்படி காது கேட்காதவர்களுக்கும் வாய் பேசமுடியாதவர்களுக்கும் வேலை அமைத்து தருவது?? என்று.” 
image


அதற்கு ஃப்ளக்ஸ் (flex) எனும் பெறுநிறுவனம், இது போன்ற குறைபாடுகள் உள்ளோர்க்கு வேலை வாய்ப்பு அமைத்து கொடுத்து உள்ளனர். பின் நம்மால் ஏன் முடியாது என்று விவாதித்து, வி அர் யுவர் வாய்ஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம் என்றார்.

அந்த கல்லூரியில் பயின்ற 71 மாணவர்களுக்கு வேலை அமைத்து கொடுத்தோம். வி அர் யுவர் வாய்ஸ் முடித்த பிறகு எங்களுடன் பல பெருநிறுவன ஊழியர்கள் இணைந்தனர். மேலும் சில மேலாண்மை மாணவர்களும் இணைந்தனர். அனைவரையும் ஒன்றிணைத்து ’வீக் எண்டு வாரியர்ஸ்’ (week end warriors) எனும் திட்டத்தை கொண்டு வந்தோம். 

அதாவது வாரம் முழுவதும் வேலை செய்துவிட்டு வாரக் கடைசியில் சமூக சேவை செய்வது தான் இந்த திட்டத்தின் குறிக்கொள். ஊருணி வேறு சில அமைப்புகளுடன் இணைந்து வார இறுதியில் சேவை செய்வது வழக்கம். அதில் முடிந்தவர்கள் மட்டும் பங்குபெறலாம், கட்டாயம் இல்லை. 

அப்படி நாங்கள் சென்னை எமர்ஜன்சி வாலண்டியர்ஸ் (chennai emergency volunteers) குழு உடன் இணைந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள சுகந்திர பூங்காவில் இன்டிபென்டேன்ஸ் பார்க், ஆயிரம் காலத்து ஆலமரத்தை துளிர்விக்க உதவினோம். அடுத்து யு அர் லவ்டு (YOU ARE LOVED) அமைப்புடன் இணைந்து சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் படித்துக் கொண்டு இருக்கும் மாணவர்களில் இருந்து சிறந்த மாணவர்களை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு மாணவர் புரட்சியாளர் விருது அளித்து உச்சாகப் படுத்தினோம். 

image


மேலும் ஜல்லிக்கட்டுக்காக போராடிய பொழுது போரட்டக்காரர்களுக்கு உணவு அளிப்பது, சாலை ஓர குப்பைகளை அகற்றுவது, வாகன நெரிசலை சரி படுத்துவது போன்ற செயல்களிலும் ஊருணி ஈடுப்பட்டது. ஊருணி பொதுவாக 3E கொள்கையில் உழைத்து வருகிறது, என்றார் ராஜன். அதாவது

E= education (கல்வி)

E= empowerment (அதிகாரம்)

E= equal opportunity (அனைவருக்கும் சம உரிமை)

இந்த 3E-யை அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்பதே ஊருணியின் லட்சியம்.

பெண்கள் மற்றும் நடுத்தர மக்கள் பணி

மேலும், ஊருணி பெண்களின் முன்னேற்றத்திற்காக AWAKE(அவேக்) எனும் திட்டத்தை உருவாக்கியது. நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்கு பெரும்பாலும் ஆண்களே வேலைக்கு போய் குடும்பத்தை பார்த்து கொள்கிறார்கள், பெண்கள் அவர்களோடு இணைந்து உதவ வேண்டும் என்று நினைந்தாலும் குடும்பச் சூழ்நிலை அவர்களை தடுக்கிறது. அதனால் AWAKE திட்டத்தின் மூலம் அவர்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்க முடிவு எடுத்தோம். இந்த திட்டத்தை ராகவி ஒருகிணைத்தார். 

AWAKE என்றால் Advocacy to Women Ability and Knowledge for Empowerment. அதாவது, பெண்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்வதற்கு ஆலோசனை கொடுப்பது, மற்றும் தங்களுக்காக அதிகாரத்தை தெரிந்து கொள்வதற்கும் இந்த திட்டம் செயல்படும்.

சுய தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று நினைக்கும் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை நிற்போம். AWAKE திட்டத்தை உலக மகளிர் தினத்தன்று செயல்படுத்தினோம். உலகம் எங்கும் இருக்கும் எங்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு தெரிந்த பெண் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் LETS AWAKE NOW எனும் வாசகத்தை கூற சொல்லியும் அவர்கள் கையில் LETS AWAKE NOW என்று எழுதப்பட்டு உள்ள காகிதத்தை இந்த உலகத்திற்கு காட்டி AWAKE திட்டத்தை துவங்கினோம் என்றார்.

image


சர்வதேச குழந்தைகள் புத்தகம் தினத்தை ஊருணி குடும்பத்தினர் சென்னை குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் கொண்டாடினார்கள். அந்த குழந்தைகளில் பெற்றோர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள். ஊருணி உறுப்பினர் தங்களால் முடிந்த புத்தகங்களை அந்த குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்தனர். 

உணவிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தோம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம் என்று உணர்த்தினோம். நாங்கள் அனைவரும் ஒரு நாள் முழுவதும் அங்கேயே இருந்து அவர்களுடன் பேசி, விளையாடி கொண்டும் அவர்களை மகழ்வித்தோம்.

2017 ஏப்ரல் மாதத்தில் எங்களது அடுத்த திட்டத்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக உருவாக்கினோம். கிவ் தெயர் ஒல்டு (GIVE THEIR WORLD) என்று இந்த திட்டத்திற்கு பெயர் வைத்தோம். மேலும் சென்னை வள்ளியம்மா பள்ளியில் ஆட்டிச நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்கள். அந்த குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்களுக்கு பரிசு பொருட்களை அளித்து மகிழ்வித்தோம்.

ஆட்டிச நோய் இந்தியாவில் சுமார் ஆயிரம் பேரில் நான்கு பேருக்கு உள்ளது.பெரும்பாலும் குழந்தைகளே ஆட்டிசத்தால் பாதிக்கபடுகிறார்கள். இரண்டு வயதிற்குள் இந்த நோய் கண்டறியப்பட்டால் எளிதில் குணப்படுத்த முடியும். ஆனால் பெற்றோர்கள் தனது குழந்தைக்கு ஒன்றும் இல்லை என்று எண்ணிக்கொள்வதால், அந்த நோய் பற்றிய பின்விளைவு அவர்களுக்கு தெரிவது இல்லை.

இந்த உலகில் பெரிதாக சாதித்த பல பேர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தான். அவர்களுக்கு உள்ள திறமைகள் பல நம்மை மிஞ்சும். நாம் அவற்றை வெளிப்படுத்த அவர்களுக்கு துணை நிற்போம் என்று ஊருணியின் நெடுநாள் பயணத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார் நிறுவனர் ரத்தினவேல் ராஜன்.

மேலும் WE ARE YOUR VOICE 2.0 எனும் புதிய திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கும் மூன்றாம் பாலினர்த்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு அமைத்துத் தர திட்டமிட்டு உள்ளார்கள்.

ஊருணியின் பயணம் தொடர வாழ்த்துக்கள்..

Add to
Shares
587
Comments
Share This
Add to
Shares
587
Comments
Share
Report an issue
Authors

Related Tags