பதிப்புகளில்

பார்ட் டைம் மீனவர்; புரோபஷனல் சாதனையாளர்: அலை சறுக்கில் தொடர் வெற்றிகளை குவிக்கும் சேகர்!

படிப்பு... ஐந்தாம் வகுப்பு, பதக்கப் பட்டியலோ வெகு நீளம். சாதனைகளை படைக்கும் சர்ப்பர் சேகர் பச்சையின் சமீபத்திய சாதனை, சர்ப்பிங் ஓபன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம்.

14th Jul 2018
Add to
Shares
251
Comments
Share This
Add to
Shares
251
Comments
Share
“பீச் மணலை பீறிட்டு பறக்கச் செய்யும் காற்றுக்கு இடையே நடந்து வரும் அழகிய தேவதைகள், கையில் ஒரு போர்டுடன் சென்று கடலலையில் சறுக்கி விளையாடி மகிழ்வர்...” 

மோஸ்ட் ஆப் தி ஹாலிவுட் படங்களில் இந்த மொமண்ட் ஒரு முறையேனும் வந்து போகும். அந்த விளையாட்டு தான் அலைசறுக்கு (சர்ப்பிங்). அயல் நாடுகளில் பெரும்பாலானோர் அசால்டாய் சர்ப்பிங் போர்டுடன் அலையை நோக்கி செல்வர். நம்மூரில் யாருப்பா சர்ப்பிங் பண்ண போறாங்க என்ற கொஸ்டினுடன் இருப்பவர்கள் கோவளம் போயிட்டு வாங்கோ. 

image


சும்மா அங்குட்டும் இங்குட்டும் கடல் அலையில் புகுந்து விளையாடுகின்றனர் நம்ம சென்னை பாய்ஸ். சென்னை கோவளத்தில் அலைசறுக்கு பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் மூர்த்தி, பிஷ்ஷர்மேன். அவரது பட்டறையில் உருவான சர்ப்பர் தான் ‘சேகர் பிச்சை’. அவரும் கோவளவாசி தான். 

கடந்த ஒரு மாதம் முழுக்க ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், மீண்டும் ஸ்விட்சர்லாந்து என அடுத்தடுத்த போட்டிகளை சந்தித்து பதக்கங்களுடன் சொந்தஊர் திரும்பியிருக்கிறார். ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற ஓபன் சாம்பியன்ஷிப்பில், ‘ஸ்டாண்ட் அப் பெடல்’ போட்டியில் 70 சர்ப்பர்களுடன் முட்டி மோதி வெள்ளியை தனதாக்கிக் கொண்டுள்ளார். 

சாப்பாட்டுக்கு மீன் பிடித் தொழில், சாதனைக்கு சர்ப்பிங் என வாழும் மீனவர் தான் சேகர் பச்சை. அஞ்சாம் கிளாஸ் டிராப் அவுட் ஸ்டூடன்ட். சர்ப்பராகியதற்கு பின் பெரிய பிளாஷ்பேக் எல்லாம் வைத்திருக்கவில்லை. பள்ளிக்கு செல்வதை நிறுத்தியவுடன், மீன் பிடித் தொழிலில் இறங்கியிருக்கிறார். அப்போது தான், சர்ப்பிங் செய்யும் மூர்த்தியிடமிருந்து சர்ப்பிங் போர்டு வாங்கி முதல் முறையில் அலையில் பாய்ந்திருக்கிறார். பின், அவரது தினசரி வாழ்வின் ஒரு பகுதியாகியுள்ளது. இது 8 ஆண்டுகளுக்கு முன்பு, இன்று சர்ப்பிங் அவர் வாழ்வின் முக்கிய அங்கம். 

13 தேசிய அளவில் வெற்றி வாகைச் சூடியதுடன், கடந்த மூன்று ஆண்டுகளாய் சர்வதேச போட்டிகளிலும் கால் பதித்து வருகிறார். 2016ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற உலக சர்ப்பிங் சாம்பியன்ஷிப் மற்றும் 2017ம் ஆண்டு டென்மார்க்கில் நடந்த உலக சர்ப்பிங் சாம்பியன்ஷிப்பிலும் பங்கேற்றுள்ளார். இந்தாண்டும் அதே போட்டி சீனாவில் நடைபெறுகிறது. ஆனால், அதில் பங்கேற்புடன் திரும்பாமல் பதக்கத்துடன் திரும்புவேன் என்கிறார் சேகர். 
image


“எப்போது முதல் முறை நீச்சல் பண்ணத் தொடங்கினேன் என்பது தெரியாது. அது போல தான் மீன்பிடித்தலும், சர்ப்பிங்கும். எங்க வீட்டுக்கு பக்கத்தில் எல்லோரும் மீன் பிடிப்பார்கள் நானும் மீன் பிடித்தேன். சர்ப்பிங் அப்படி தான். புரோபஷனல் ட்ரையினருலாம் எனக்கு யாரும் இல்லை. ஒவ்வொரு போட்டிக்கும் செல்லும் போது மற்ற பிளேயர்ஸ் என்னென்ன டெக்னிக்ஸ் யூஸ் பண்றாங்க, எவ்ளோ டைமிங்கில் முடிக்கிறாங்கனு கத்துகிட்டே வர்றேன். ஸ்டாண்ட் அப் பெடலிங்க்கு பிட்னஸ் ரொம்ப முக்கியம். சோ, தினமும் ஜிம் வொர்க் அவுட் மட்டும் 6 மணி நேரம் செய்து உடலை ஃபிட்டாக வைத்து கொள்வேன். டெய்லி காலை, மாலையில் 2 மணி நேரம் சர்ப்பிங் பயிற்சி செய்வேன். 

”சிறுவயதிலே கடலோடே விளையாடிட்டு இருந்ததால், அலையின் வீச்சு, காற்றின் வேகத்தினையும் கணித்து விடுவேன். கோவளம் கடலை பொருத்தவரை பவர்புல்லான அலைகள் வரும் என்பதால், பயிற்சி மேற்கொள்ள இதுவே பெஸ்ட் சாய்ஸ். ராமேஸ்வரத்தில் காற்றின் வேகம் அதிகம். அதற்காக அங்கு சென்றும் பயிற்சி மேற்கொள்வேன்,” எனும் சேகர் பயிற்சியாளரும் கூட. 
image


சேகர் போன்று இன்னும் பல சேகர்களை உருவாக்கிவரும் மூர்த்தியின், அலைச் சறுக்கு பள்ளியிலே சேகர் பயிற்சியாளராகவும் இருக்கிறார். முழு நேர பயிற்சியாளராக இருந்து பல சர்ப்பர்களை உருவாக்கும் முனைப்பில் இருந்தவர், பீஜிங்கில் நடந்த வேர்ல்ட் சர்ப்பிங் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றபின் முழுவீச்சாய் பயிற்சியில் இறங்கிவிட்டார். 

“வேர்ல்ட் சர்ப்பிங் சாம்பியன்ஷிப்பில் மெடல் அடிக்க வேண்டும் என்பதே இப்போதைய கோல். டிரைனிங்கும் கொடுத்துவிட்டு பயிற்சி செய்ய முடியவில்லை. என்னுடைய போர்டு வாங்கும் செலவுத் தொடங்கி பிளைட் டிக்கெட் செலவு வரை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் என்னுடைய ஸ்பான்சர் அருண் வாசு சாரிடம் விஷயத்தை சொன்னேன். பிராக்டீசில் மட்டும் முழுகவனம் செலுத்துனு சொன்னதுடன், மாதம் மாதம் குறிப்பிட்டத் தொகையை சம்பளமாகவும் கொடுக்கிறார். அவருக்கு தான் முழுநன்றிச் சொல்ல வேண்டும்,” எனும் சேகர், சர்ப்பிங்கில் உள்ள போட்டி வகைகளான, ‘ஸ்டாண்ட் அப் பெடலிங்’ ‘டெக்னிக்கல் ரேஸ்’, ‘சப் சர்ப்பிங்’ என அனைத்திலும் கலக்கும் ஆல் ரவுண்டர். 

image


அனைத்தும் சீராய் சென்று கொண்டிருக்கையில், காயம் என்னும் எதிரியை சந்தித்தார் சேகர். உண்மையில், அனைத்து விளையாட்டு வீரர்களின் பொது எதிரி ‘காயம்’. 2017ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள். நித்தம் நித்தம் காலைப் பொழுதில் பயிற்சிக்கு ஆயுத்தமாகுவது போல், அன்றும் கிளம்பியுள்ளார். ஆனால், அன்று மற்றொரு காலைப்பொழுதாக அமையவில்லை. எப்பொழுதும் பயிற்சி மேற்கொள்ளும் இடத்துக்கு மாறாக, சரளைகள் நிறைந்த பாறைகள் சூழ்ந்திருந்த பகுதிக்குள் சென்றிருக்கிறார். அது ஒரு அபாயகரமான பகுதியாகும். யாரும் சர்ப்பிங் செய்ய அவ்விடத்துக்கு செல்வதில்லை. 

எதிர்பாரா அலைபாய, சேகர் போர்டில் பறக்க, பாறையில் மோதி உடைந்தது. அவரது மேலாடை கிழிந்து, ஷார்ட்சும் அலையில் அடித்து செல்லப்பட்டது. காலில் ரத்தம் வழிய வெற்று உடலுடன் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீருக்குள்ளே நின்றுள்ளார்.

தூரத்தில் நண்பரின் குரல் கேட்க, உதவி கிடைத்து தண்ணீரை விட்டு வெளிவந்துள்ளார். காலில் மட்டும் மொத்தம் 18 தையல்கள். ஆனால், அவைகள் அவரை பெரிதாக வருத்திடவில்லை. ஒரு மாதக் காலம் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியது தான் அவருக்கு பெரும் வலி. ஒரு மாதம் கடலுக்குள் செல்லாமல் இருந்ததை தான் தன் வாழ்வின் கஷ்டக்காலம் என்கிறார் சேகர். அம்மாதத்தையும் கடந்து எதிரியை வீழ்த்தி அடுத்தடுத்த வெற்றியை நோக்கியும் பயணிக்கத் தொடங்கிவிட்டார். 

image


இதுவரை சர்வதேச அளவுகளில் மட்டுமே நடைபெற்று வந்த சர்ப்பிங் போட்டி வரவிருக்கும் 2020 ஒலிம்பிக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், 2024ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தான் சேகரின் ஸ்பெஷல் கேம் ஆன ‘ஸ்டாண்ட் அப் பெடலிங்’ சேர்க்கப்படவிருக்கிறது. நிச்சயம் 2024 ஒலிம்பிக்கில் கலந்துக் கொள்வேன் என்று உறுதிப்பூண்டுள்ள சேகரின் பேவரைட் மோட்டோ

 “புகைப் பிடிக்காதீர், மது அருந்தாதீர்... வெறிக்கொண்டு விளையாடுங்கள், வெற்றி நிச்சயம்”
Add to
Shares
251
Comments
Share This
Add to
Shares
251
Comments
Share
Report an issue
Authors

Related Tags