பதிப்புகளில்

5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1 லிட்டர் இலவசம் - புது செயிலி அறிமுகம்!

YS TEAM TAMIL
10th Sep 2018
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் 5 லிட்டர் பெட்ரோலுக்கு 1 லிட்டர் பெட்ரோலை இலவசாமாக வழங்க செயிலியின் சலுகையை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தமிழகம் மட்டும் இன்றி நாடு முழுவதும் இந்த விலையுயர்வு பிரச்சனை தீர்வில்லாமல் நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. இதனால் அவதிப்படும் பொதுமக்கள், விலை உயர்வை எதிர்த்து விலையை குறைக்கக் கோரி வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், இந்த விலை உயர்வு குறித்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு உதவ எச்.பி எண்ணெய் நிறுவனம் ஒரு சலுகையை அறிமுகப் படுத்தியுள்ளது.

image


எச்.பி அறிமுகப்படுத்திய இந்த செயலியை உங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் ஒரு மாதத்தில் 5 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை பெற்றால் 1 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலுக்கான பணம் உங்கள் செயலிக்கு திரும்ப அனுப்பப்படும். செயிலியில் பெற்ற பணத்தை மீண்டும் பெட்ரோல் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த செயிலியில் உள்ள இந்த சலுகை இரண்டு மாதங்களுக்கு மட்டும் பயன்பாட்டில் இருக்கும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதவாது செப்டெம்பர் 01 முதல் அக்டோபர் 31 வரை. அதன் பின் செயிலியின் மற்ற சேவைகள் பயன்பாட்டில் இருக்க தொடரும்.

இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் உள்ள எச்.பி. பெட்ரோல் வங்கியில் இந்த செயிலி அவ்வங்கியின் உரிமையாளர் தலைமையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இவ்வறிமுக விழாவை கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் தலைமை தாங்கி செயிலியை அறிமுகப் படுத்தினார்.

பெட்ரோல் டீசல் விலையில் மிக விரைவாக உயர இதுபோன்ற சிறிய முயற்சி மக்களுக்கு உதவியாக அமையும். மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கவே இந்த செயிலியை அறிமுகப் படுத்தியதாக எச் பி நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட உடன் பல வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் செயலியை பயன்படுத்தத் துவங்கினர்.

செயலி பதிவிறக்கம் செய்ய: HP Re-Fuel 

தகவல் உதவி: புதிய தலைமுறை | கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக