பதிப்புகளில்

உங்களுக்கு பிடித்தமான வேலை இன்னும் கிடைக்கவில்லையா? ஏன் என்று தெரிந்து கொள்ளுங்கள்!

5th Jul 2017
Add to
Shares
228
Comments
Share This
Add to
Shares
228
Comments
Share

பத்தாண்டுகளுக்கு முன்பு 23 வயது இளம் பொறியியல் பட்டதாரியாக ஒரு புதிய உலகிற்குள் நுழைந்தேன். இந்த உலகம் எப்படிப்பட்டதென்றால், ’இதைச் செய்யாமல் இருப்பதற்கு வேறு வழியேயில்லை’ எனப்படும் விஷயங்களால் நிறைந்தது. எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரிந்தது. நான் செய்வது எதுவாக இருந்தாலும் அதை விரும்பிச் செய்யவேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் அப்படிப்பட்ட விருப்பம் உங்களிடம் இல்லையெனில் ஒவ்வொரு நாள் காலையும் உங்களால் அலுவலகத்தினுள் நுழையக்கூட முடியாது. 

அலுவலகத்துடனான தொடர்பு என்பது உங்களை எளிதாக சுவாசிக்க அனுமதிக்கவேண்டும். ஆராய்வதற்கு அனுமதிக்கவேண்டும். முக்கியமாக சமரசம் செய்துகொள்ள வேண்டிய சூழல்களோ அல்லது எதுவும் செய்யத் தோன்றாமல் சோம்பலாக இருக்கும் தருணங்களோ இருப்பது இயற்கைதானே தவிர அசௌகரியமாக உணரவேண்டிய அவசியமில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

image


ஆமாம். என்னைப் பொருத்தவரை நான் என்னுடைய பணியை முழுமனதோடு செய்கிறேன். நீங்கள் ஒருவேளை அப்படிச் செய்யாமல் இருக்கலாம். உங்கள் பணியையோ அல்லது உங்களது மேலதிகாரியையோ நீங்கள் எந்த அளவிற்கு வெறுக்கிறீர்கள் என்று பல மணிநேரம் சிந்தித்துக்கொண்டோ அல்லது பேசிக்கொண்டோ இருப்பீர்களானால் ஒருவேளை பணியின் மற்றொரு பக்கத்திற்கு நீங்கள் அறிமுகமாகவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம். அந்த மற்றொரு பக்கமானது உண்மையில் உங்களை மகிழ்ச்சியாக மாற்றிவிடும். நீங்கள் உற்சாகமாக அடுத்த நிலைக்கு உந்தித் தள்ளப்படுவீர்கள். பணியிடத்தில் முகநூல் பக்கத்தைப் பார்வையிடும் பழக்கத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு உங்களுக்கான பணியை உற்சாகத்துடன் கையில் எடுப்பீர்கள்.

கிட்டத்தட்ட நம் அனைவருக்கும் மாதத்தவணைகள், வாழ்க்கைமுறை சார்ந்த விருப்பங்கள் என பல தனிப்பட்ட பொறுப்புகள் இருக்கும். இவ்வாறு இருக்கும்போது ’உனக்கு பிடித்தமான வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்துவது வெறும் அறிவுரையாக மட்டுமே பார்க்கப்படும். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் செய்யும் பணியை முழுமனதோடு ரசித்து செய்து கொண்டே வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும் முடியும். சமரசம் செய்துகொள்வது குறித்து மார்க் மேன்சன் சுருக்கமாகக் குறிப்பிடுகையில் ’உங்களுக்கு எப்படிப்பட்ட வலி வேண்டும் என்பதுதான் இதில் முக்கிய கேள்வியாகும்’ என்றார். இந்தத் தெளிவு பிறந்தவுடன் வாழ்க்கையின் பெரும்பாலான முடிவுகளை எளிதாக எடுக்கமுடியும்.

உங்களுக்கு பிடித்தமான பணியை எவ்வாறு கண்டறியலாம்?

ஒரு விஷயம் சரியில்லையெனில் எது சரி என்பதைக் கண்டறிய உங்களது ஆற்றலைப் பயன்படுத்துங்கள்

உங்களது ஆர்வத்தில் ஈடுபட்டு உங்களது செலவுகளை சமாளிக்க முடியாமல் திண்டாடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. வாரநாட்கள் முழுவதும் பணியை வெறுத்துவிட்டு வார இறுதியில் தொடர்ந்து உங்களது பணியைக் குறித்து புகார் சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள். எங்கு தவறு நடக்கிறது என்பதில் கவனம் செலுத்துங்கள். அதைச் சரிசெய்ய முடியுமா என்று பாருங்கள். அப்படிச் சரிசெய்ய முடியாது எனில் உங்களது பணியிலிருந்து நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்று சிந்தியுங்கள். அதை எங்கு கண்டறியமுடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள். உங்களது நிலை குறித்து நீங்களே கவலைகொள்ளாமல் சலிப்பில்லாமல் ஒவ்வொரு நாள் காலையும் பணிக்குச் செல்வதற்கு எது தேவைப்படுகிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். அதைக் கண்டறிந்து அவ்வாறே செயல்படுங்கள்.

அதிக ஆர்வத்துடன் செயல்படுங்கள்

நீங்கள் பட்டப்படிப்பு முடித்து விட்டீர்களானால் அது தொடர்பான நடவடிக்கைகளில் மட்டுமே வாழ்நாள் முழுவதும் ஒப்பந்தம் செய்துகொண்டு செயல்படவேண்டும் என்று அவசியமில்லை. வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் நிபுணர்களான நேரடியாக பார்வையாளர் முன்னால் நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்துபவர்கள், பாடலாசியர்கள் போன்றோர்கூட இதற்கு முன்பு பொறியாளராக இருந்தவர்கள். இப்படிப்பட்ட படைப்பாளிகளும் ஒரு காலத்தில் டெஸ்க் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களே. ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள விஷயங்களில் ஈடுபட்டு சிறப்பாக வெளிப்பட்டனர். 

கோடிங் எழுதுவதில் உங்களுக்கு விருப்பமிருந்தால் நல்லது. ஒருவேளை விருப்பமில்லையெனில் கவலையில்லை. உங்களை பணியிலமர்த்துபவர்களுடன் உங்களுக்கு வாழ்நாள் ஒப்பந்தம் ஒன்றும் இல்லை. நீங்கள் வலுவாகச் செயல்படக்கூடிய வேறு ஏதேனும் பணி உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அதேசமயம் உங்களுக்கு நன்மை பயக்கும் விதத்திலும் அமைந்திருக்கவேண்டும் என்பதையும் நினைவில் கொள்க. அப்படிப்பட்ட பணிக்கான வாய்ப்பு அங்கே உள்ளதா என்பதை ஆர்வத்துடன் கண்காணித்து செயல்படவும். சந்தையில் திறமைக்கே முன்னுரிமை அளிக்கப்படும். நீங்கள் தற்போது சௌகரியமாக பணிபுரிந்து வரும் சூழலுக்கு வெளியே உங்களது திறமை இருப்பினும் சற்றும் தயங்காமல் உடனே அப்படிப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்கவும்.

உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடாதீர்கள் 

 நீங்கள் பணிபுரிந்துவரும் துறையிலிருந்து மாற நினைத்தாலோ அல்லது அனுபவம் இல்லாவிட்டாலும் உங்களது படைப்பாற்றலை பிரயோகிக்கும் விதத்தில் பணி கிடைத்தாலோ ஊழியர்களை பணியிலமர்த்தும் ஆலோசகர்கள் உங்களுக்கு தகுந்தவர்களாக இருக்கமுடியாது. என்னுடைய அனுபவம் எவ்வாறு உகந்ததாக இருக்கும் என்றோ ஏன் என்னைப் போன்றவர்கள் அவர்களுடைய நிறுவனத்திற்குத் தேவை என்றோ மனதார நான் வெளிப்படுத்தும் இ-மெயில் ஆனது பல்வேறு துறைகளுக்கும் சந்தைகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். உங்களது திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். ஏனெனில் நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு நீங்கள் ஏன் உகந்தவர் என்பது உங்களுக்கு மட்டும்தான் தெளிவாகத் தெரியும். முயற்சிக்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்.

மிக முக்கியமாக, நடைமுறைக்கு ஏற்றவாறு இருங்கள்

நான் பணிபுரிந்து வந்த துறையையும் பணிபுரியும் முறையையும் இரண்டு முறை மாற்றியுள்ளேன். இருப்பினும் பெரும்பாலான நாட்களில் பல்வேறு பணிகள் வெறும் பணியாக மட்டுமே உணரப்படும் என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பணிபுரிந்து வரும் துறையை மாற்றினால் அளவில்லா படைப்பாற்றலுடன் கூடிய திருப்திகிடைக்கும் என்றோ, சோர்வின்றி பயணிக்கமுடியும் என்றோ அலுப்பான நாட்களே இருக்காது என்றோ எதிர்பார்ப்பது முற்றிலும் நடைமுறைக்கு அப்பாற்பட்டதாகும். 

சில விஷயங்கள் மாறாது என்பதையும் அலுப்பைக் காட்டிலும் சவால் நிறைந்ததில் ஈடுபடுவது சிறந்தது என்பதையும் நீங்கள் உணரவேண்டும். உங்களுக்கு ஆர்வம் இருப்பதில் மட்டுமே ஈடுபட்டு பெருமை கொள்ளுங்கள் என்று ஆலோசனை வழங்குவது நடைமுறைக்கு உகந்ததாக இருக்காது. குறைந்தபட்சம் நிதி சார்ந்த கடமைகளை சமாளித்தாகவேண்டும். உங்களுக்கு விருப்பமான ஒன்றிலோ அல்லது திறமை இருக்கும் ஒன்றிலோ ஈடுபட்டாலும் ரிஸ்க் எடுப்பதும் பணியிலிருந்து மாறும் சூழலும் நிச்சயம் ஏற்படும் என்பதை அவசியம் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் தற்போதைய சூழலில் திறம்பட பணிபுரிந்து சிறப்பாக செயல்படுவதை மட்டுமே எதிர்பார்க்கின்றனர். உற்சாகமும் ஆர்வமும் மட்டுமே உங்களை அத்தகைய பாதையை நோக்கி நகர்த்தி உயரத்தை எட்ட உதவும்.

ஆங்கில கட்டுரையாளர் : தமன்னா மிஷ்ரா

Add to
Shares
228
Comments
Share This
Add to
Shares
228
Comments
Share
Report an issue
Authors

Related Tags