பதிப்புகளில்

ஒரு தொழில்முனைவரின் அனுபவம்: முதல் தேடல் #FundSeeking - பாகம் 3

ஒரு தொழில்முனைவோராக என் ஸ்டார்ட்அப்பிற்கு தேவையான முதல் தேடும் பயணத்தில் நான் கற்ற பாடங்களும் அனுபவங்களும்...

20th Oct 2017
Add to
Shares
58
Comments
Share This
Add to
Shares
58
Comments
Share

நீங்கள் ஒரு முதலீட்டாளர். நல்ல பொருளாதார வளர்ச்சி கண்டு வருகிறீர்கள். அதன் பயனாக வீடு, நிலம், வங்கி, இன்சியுரன்ஸ், மியுச்சுவல் பண்டு, பங்கு வர்த்தகம் என்று முதலீடு செய்துவிட்டீர்கள். இனி முதலீடு செய்ய புதிய வழி தெரியவில்லை. மீண்டும் வீடு, நிலம் என்று இரண்டாவது ரவுண்டு வர இருக்கிறீர்கள் என்றால் இதை ஒருமுறை படித்துவிடுவது நல்லது.

அதிலும் வீடு, நிலம் எல்லாம் Saturation point ஐ தொட்டு கீழே தான் போய்க்கொண்டு இருக்கிறது. வங்கிகள் கடந்த நவம்பரில் நிகழ்ந்த பணமதிப்பிழப்பிற்கு பிறகு உங்கள் முதலீட்டிற்கு கொடுக்கும் வட்டியை வெகுவாக குறைத்துவிட்டார்கள். சராசரி வட்டி விகிதம் ஐந்தரை சதவீதம் மட்டுமே. இதை கொடுப்பதற்கே வங்கிகளின் கண் பிதுங்குகிறது, கடன் வாங்குவதில் உள்ள ஆர்வம் குறைந்துபோனதால். இன்சியுரன்ஸ், மியுச்சுவல் பண்டு, பங்கு வர்த்தகம் அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகளால் தள்ளாடி வருகிறது. ஆகஸ்ட் இறுதிவாரத்தில் இருந்து நிச்சயமில்லாத நிலைமை தொடர்ந்து நிலவி வருகிறது.

image


இன்றைய தேதியில் ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்வதென்பது தனிநபர்களுக்கும், சமூகத்திற்கும், தேசத்திற்கும் செய்யக் கூடிய மிகப் பெரிய நன்மை விளைவிக்கும் செயல். நல்ல ஸ்டார்ட்அப்பை கண்டுபிடிப்பது கம்பசூத்திரம் அல்ல. இயற்கையின் தப்பி பிழைத்தல் விதி தான் இங்கும் பொருந்தும்.

நாமளும் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று லட்சம் பேர் விருப்பப்படுவார்கள். இந்திய சூழலில் அதில் நூறு பேர் ஆரம்பித்தாலே பெரிது. அந்த நூறு பேரிலும் பத்து பேரால் மட்டுமே எத்தனை சோதனைகள் வந்தபோதும் தொடர்ந்து நடத்திட முடியும். அதற்கு அவர்கள் செயல்படுத்திய யோசனைகள் கொடுக்கும் நம்பிக்கையும், வாடிக்கையாளர்களின் ஆதரவுமே காரணமாக இருக்கும்.

இரண்டு வருடங்களுக்கும் அதிகமாக ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் தாக்குபிடிக்கிறது என்றால்,

*அவர்கள் தங்களது யோசனையை புதுபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

*அவர்கள் பொருளை/சேவையை வாடிக்கையாளர்களிடம் மிக நன்றாக கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.

*இடைப்பட்ட காலத்தில் உருவாகியிருக்கும் எண்ணற்ற நிறுவனங்களின் போட்டியை சமாளித்திருப்பார்கள்.

*சிறிதளவேனும் வருமானத்தை பார்த்திருப்பார்கள் அல்லது அதற்கான வழிகளை துல்லியமாக கணக்கிட்டிருபார்கள்.

நான் இங்கே குறிப்பிட்ட கருத்துகோள்கள் எல்லா நிறுவனங்களுக்கும் பொறுந்துவதில்லை. மூன்றுவகையான பிசினஸ் மாடல்கள் உண்டு. ஒவ்வொன்றிற்கும் மேற்சொன்ன விஷயங்கள் கொஞ்ச கொஞ்சம் மாறுபடும்.

B2C (Business to Customer): நேரடியாக பொதுமக்களுக்கு தேவையான பொருளை/சேவையை தருவது.

B2B (Business to Business): இன்னொரு நிறுவனத்திற்குத் தேவையான பொருளை/சேவையை தருவது.

B2B2C (Business to Business to Customer): இன்னொரு நிறுவனங்களின் மூலம் பொதுமக்களுக்கு சேவையை தருவது.

மூன்றுமே சிறந்த மாடல்கள் தாம். இருந்தபோதும் பொதுமக்களை நேரடியாக சென்றடையும் நிறுவனம் கொஞ்சம் ஸ்திரதன்மை கூடுதலாக இருக்கப்பெரும். ஒரு நிறுவனத்தின் பொருள் அல்லது சேவை நன்றாக இருந்துவிட்டால் மக்கள் என்றுமே கைவிடுவதில்லை. ஆனால் நிறுவனம் மக்களின் தேவைக்கேற்ப தங்களை புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

எங்கள் ஸ்டார்ட்அப்பை எடுத்துக்கொள்வோம். நிறுவனத்தின் முதல் தயாரிப்பு MCX Market Tracker வெளியிட்டு மூன்று வருடங்கள் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. நிறுவனம் பதியப் பெற்று இரண்டு நிறுவனங்கள் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. இரண்டு முறை Hot100.Technology விருது வாங்கி இருக்கிறோம். NASSCOM 10K Startup, Google, Facebook FBStart, Microsoft Bizspark போன்ற ஜாம்பவான்களின் Startup Acceleration ப்ரோக்ராம்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். Yourstory Tamil, Bonnevie போன்ற ஆன்லைன் தொழில்முனைவோர் பத்திரிகைகளில் சிறப்புக் கட்டுரை வந்துள்ளது. போக Get in the Ring (GITR) , ETNOW Lufthansa – Success to runway போன்ற ஸ்டார்ட்அப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்கிறோம். இவையெல்லாம் அவ்வளவு எளிதாக வந்துவிடாது. 

மேற்சொன்ன ஒவ்வொரு நிகழ்விற்கும், போட்டிகளுக்கும் ஐந்தாயிரம் விண்ணப்பங்களுக்கு மேல் அனுப்பப்படும். அதில் வெறும் 20-50 பேர்கள் தான் தெரிந்தெடுக்கப்படுவார்கள். அதில் ஒருவராக வருவதும் தேர்ந்தெடுக்கப்படுவதும் பெரிய விஷயம். இது சாத்தியமானதற்குக் காரணம் எங்களது நிறுவன தயாரிப்புகள் வெற்றி பெறுவதற்கும் நீண்டகால வளர்ச்சிக்கும் தேவையான அடிப்படையான தகுதிகளை பெற்றிருப்பது.

• முதலில் எங்கள் தயாரிப்பு எந்த துறை?

வணிக தொழில்நுட்பம் (Fin Tech) சார்ந்த தயாரிப்பு. இருப்பதிலேயே பணம் வருவதற்கான எளிய துறை.

• என்ன பிசினஸ் மாடல்?

B2C நேரடியாக மக்களை சென்று சேர்ந்திருக்கிறது.

• வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்களா?

Google Play Store-ல் நல்ல ரேட்டிங், கமென்ட் கொடுத்திருக்கிறார்கள்.

• வருமானம் ஏதேனும் வந்திருக்கிறதா?

வெளியிட்ட முதல் மாதம் முதல் இன்று வரை கொஞ்சமாவது வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

• குறைந்தது 20000 பேரை சேர்ந்திருக்கிறதா?

60000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை சென்று சேர்ந்திருக்கிறது.

• எத்தனை முறை புதுபிக்கப்பட்டிருக்கிறது? புதிதாக என்ன நடந்திருக்கிறது?

எட்டு முறை புதுபிக்கப்பட்டிருக்கிறது. மூன்று புது Products வந்திருக்கிறது

• வேறுநாடுகளுக்கும் இந்த தயாரிப்பு செல்லுபடியாகுமா?

கம்மாடிட்டி சந்தையும், பங்கு சந்தையும் உள்ள எல்லா நாடுகளிலும் இது போன்ற App-களின் தேவை இருக்கிறது.

இதையெல்லாம் அவர்கள் கவனத்தில் கொண்டே தேர்ந்தெடுப்பார்கள். நான் குறிப்பிட்ட Accelerator Program வருடாவருடம் ஸ்டார்ட்அப்புகளை தேர்ந்தெடுக்கிறார்கள். கூகிளில் தேடினால் எளிதில் தெரிந்துகொள்ளலாம். ஒரு ஸ்டார்ட்அப்பில் Seed Funding செய்து ஒருவர் முதலீடு செய்திருக்கிறார் எனும்போது அடுத்த கட்ட முதலீடுகள் அந்த நிறுவனத்திற்கு எளிதில் கிடைக்கவே செய்யும். முதலீடுகள் தொடர்ந்து உள்ளேவர, நிறுவனம் வளர வளர உங்கள் முதன்முதலில் முதலீடு செய்தவருக்கு லாபம் பெருகவே செய்யும். 

ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்தே ஒருவர் உலகப் பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். டான் வலன்டைன் 1972-இல் ஆரம்பித்த Sequoia Capital அளவிற்கு எந்த வென்ச்சர் கேபிடல் நிறுவனமும் இதுவரை சம்பாதித்ததில்லை. அதேபோல அத்தனை ஸ்டார்ட்அப்புகளை உருவாக்கியதில்லை. உலகத்தில் குறிப்பிடத்தக்க சில நாடுகளில் மட்டும் இவர்களின் அலுவலகம் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு கிளையிலும் இருபது பேர்கள் வேலைபார்த்தாலே அதிகம். ஆனால் ஸ்டார்ட்அப்புகளில் மட்டுமே முதலீடு 20,000 கோடிகளுக்கும் லாபம் எடுத்திருக்கிறார்கள்.

உங்கள் முதலீடு எப்படி அடுத்தடுத்த முதலீட்டு கட்டங்களில் பெருகுகிறது என்பதை பார்ப்போம்...

(கட்டுரையாளர்: கார்த்திகேயன். இவர் ஃபாஸ்துரா டெக்னாலஜீஸ், நிறுவனத்தின் நிறுவனர். இது விருந்தினர் கட்டுரைப் பகுதி. கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)

Add to
Shares
58
Comments
Share This
Add to
Shares
58
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக