பதிப்புகளில்

ஆதரவற்ற ஆத்மாக்களை சகல மரியாதையுடன் அடக்கம் செய்யும் மணிகண்டன்!

30th Jul 2018
Add to
Shares
1.5k
Comments
Share This
Add to
Shares
1.5k
Comments
Share

மச்சான், மாமன், மைத்துனன் என சகல சொந்தப்பந்தங்கள் இருப்பினும் கடைசி நமிடத்தில் நமக்காக உண்மையாக கண்ணீர் சிந்தும் உறவு இருக்குமோ என்று உணர்வு நம்மில் பலருக்கும் இருக்கையில், பெற்ற பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டவர்கள், வீட்டைவிட்டு வெளியேறி தனித்து வாழ்ந்தவர்கள், பெற்றவர்களே அறியாது வாழ்ந்தவர்கள் என இன்னும் பல வகையான ‘யாருமற்றோர்’ என்ற அடையாளத்துக்குள், அடங்கும் அவர்களது நிலை? 

விடையைத் தேடினால் பல சோகங்களே பதிலாய் கிடைக்கும். ஆனால், தூங்காநகரத்தில் யாருமற்றோராய் மறித்து போவர்களுக்கு மகனாக இருந்து அத்தனை சடங்குகளையும் செய்து அடக்கம் செய்வதில் தன் வாழ்நாளை செலவிட்டு வருகிறார் மணிகண்டன். 

மதுரை விளாத்திக்குளத்தைச் சேர்ந்த அவர், ஏவிஎன் ஆரோக்யா ஆயுர்வேத மருத்துவமனையின் இயக்குனராக பணிப்புரிந்தாலும் யாருமற்று இறப்போரின் ஆத்மா சாந்தி அடைய செய்வதே அவரது முதல் பணியாய் கொண்டுள்ளார். அம்மா தனலெட்சுமியுடன் சேர்ந்து வசித்துவரும் மணிகண்டனின் தந்தை, சிறுவயதிலிருந்தே அவருக்கு எடுத்துரைப்பது காஞ்சி பெரியவர் கூறியுள்ள உபதேசமாம்.

image


“அப்பா தெரிந்தவர், தெரியாதவர் என்று உதவக்கூடியவர். நானும் பள்ளியில் படிக்கும் போதிருந்தே அப்பாவுடன் சேர்ந்து உதவி செய்வேன்,  

‘உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள், வசதியில்லாதவர்கள், இறுதிச் சடங்குகளை செய்ய எவரும் இல்லாதவர்கள், ஆகியோர்களின் சரீரம் கேட்பாடற்று கிடக்கும். அவ்வுடல்களின் ஜீவன்களும் நற்கதி அடைய வேண்டுமானால், இறுதி சடங்குகளை வேறு எவரேனும் செய்ய வேண்டும்,’ 

என்று காஞ்சி பெரியவர் கூறியிருக்கிறாருனு அப்பா அடிக்கடி சொல்வார். அவர் கடத்திய உபதேசத்தை அவருடைய இறப்புக்கு பிறகு இருந்து செய்யத் தொடங்கினேன்.” 2012ம் ஆண்டிலிருந்து இதுவரை எத்தனை ஆத்மாக்களை அடக்கம் செய்துள்ளார் என்ற கணக்கே தெரியவில்லை. இப்போது, மதுரையில் உள்ள முதியோர் இல்லங்களில் ஆதரவற்றோராக எவரேனும் இறந்துவிட்டாலும் சரி, மதுரை மாவட்டத்தில் அனாதையாக யாரும் இறந்துவிட்டாலும் முதலில் உதவி நாடி அழைப்பது மணிகண்டனை தான். அவரும் நேரம் காலம் பாராது, ஆபிசில் இருந்தால் விடுப்போ பெர்மிஷனோ கூறிவிட்டும், வீட்டில் இருந்தால் வாளியில் தண்ணீர் நிரப்பி வாசலில் வைத்துவிட்டு கிளம்பிவிடுகிறார். வாளி தண்ணீர் என்பது 85 வயதான தாயுக்கும் மகனுக்கும் இடையிலான கோட்வேர்டு. 

இறப்பு குறித்த தகவல் கிடைத்தவுடன், மருத்துவச் சான்றிதழ் உட்பட சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு தேவையான டாக்குமென்டகள் பெற்றுவிட்டு, உறவினர்கள் இருப்பின் அவர்களுக்கு தகவல் கொடுத்து விடுகிறார். பின் மாலை, வேட்டி/ சேலைத்துணியுடன் இறுதிச் சடங்குகளை செய்யத் தொடங்குகிறார். இதற்காக யாரிடமும் நன்கொடையாக பெறுவதில்லை. மீறி விருப்பப்பட்டு எவரேனும் பணம் கொடுத்தால், இடுக்காட்டிலே காசை கரைத்துவிட்டே வெளியேறுகிறார். உதவி என்று மணிகண்டன் தாமாக முன்வந்து வேண்டி கேட்டுக் கொள்வது, காசிக்கு எவரேனும் சென்றால் தீர்த்தம் வாங்கி வரச் சொல்லுதல் மட்டுமே. 

இறுதிச்சடங்கில் கங்கை நீர் தெளித்து அத்தனை சம்பிரதாயங்களையும் முடித்து வீடு திரும்புபவர், மறுநாள் பால் ஊற்றவும் மறப்பது இல்லை. இப்படியொரு மகன் தமக்கு இருக்கிறான் என்பது அறியாமலே மறித்து போனவர்களுக்கு அமாவசைகளில் திதியும் கொடுக்கிறார்.

“அப்பாவுக்கு பிண்டம் கொடுக்கையில், அடக்கம் செய்த அனைவருக்கும் சேர்த்து கொடுப்பேன். பிறக்கும் போது அனாதையாக இருக்கலாம், ஆனால் இறக்கும் போது கூடாது. அனாதைப்பிணம் என்று எந்த சரீரமும் அடக்கம்செய்யப்படக் கூடாது. உயிரற்ற அவர்களை ஆத்மா என்றே அழைக்க வேண்டும்.”

எனக்கு என்ன வேதனை என்றால், உயிரிழந்தோருக்கு உறவினர்களோ உடன்பிறப்புகளோ இருந்து அவர்கள் சுடுக்காட்டுக்கு வந்தால், அடக்கம் முழுமை பெறும் வரைக்கூட சிலர் இருக்க மாட்டார்கள். எப்படி இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று வருத்தமாக இருக்கும். ஆனால், இப்போது அதுபோன்று மனிதர்கள் பலரைக் கடந்து வந்துவிட்டதால் பழகிவிட்டது” என்று அவர் கூறினாலும், கடந்த வாரம் செய்தித்தாள்களில் வெளியாகிய, மதுரையில் கண்டெடுக்கப்பட்ட 12 அனாதைப்பிணங்கள் என்ற செய்தி மணிக்கண்டனின் ஒரு வார நித்திரையை கலைத்துள்ளது. 

மணிகண்டன் (வலது)

மணிகண்டன் (வலது)


“ரெகுலராக சுடுக்காட்டுக்கு செல்வதால், மயானத்தில் பணிப்புரிபவர்கள் முதல் போலீஸ் ஆபிசர்கள் வரை கொஞ்சப் பழக்கம் உண்டு. போன வாரம் 12 அனாதைப்பிணங்கள் கண்டெடுப்பு நியூஸ் பாத்ததிலிருந்து தூக்கமே வரலை. தெரிந்த போலீஸ்காரர்களிடலாம் உதவி தேவையா, எப்பானாலும் கூப்பிடுங்க நான் இறுதிச் சடங்குகளை வந்து செய்கிறேன் சொல்லிட்டே இருந்தேன். நல்லவேளையில் எல்லா சரீரமும் அடையாளம் காணப்பட்டு நல்ல முறையில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது” என்கிறார் அவர். 

சகமனிதன் மறிக்கும் காலத்தில் தோள் கொடுப்பதுடன், முதியோர் இல்லங்கள், குழந்தை நல காப்பகங்கள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவரால் முடிந்த உதவிகளை செய்வதுடன், ஆண்டுத்தோறும் களவாசலில் உள்ள ஐயப்பன் கோவிலில் அன்னத்தானம் செய்து, முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு வட பாயாசத்துடன் விருந்தளிக்கிறார். படிப்புக்காக உதவித் தொகை தேடுபவர்களையும், உதவி செய்பவர்களையும் இணைத்துவிடும் பாலமாகவும் செயல்படும் மணிகண்டனால், நித்தம் நித்தம் எவரேனும் பயனடைந்து கொண்டே இருக்கின்றனர். தமக்கு என்று சுயசிந்தனை இன்றி வாழும் மனிநேயத்தின் மாணிக்கம் மணிகண்டனின் ஒரே ஆசை, 

“அம்மாவுடன் காசிக்கு சென்று என் அப்பாவுக்கும், நான் இறுதிச்சடங்கு செய்த அப்பாக்களுக்கும், அம்மாக்களுக்கும் சேர்த்து காசியில் தர்ப்பணம் செய்ய வேண்டும்...” என்பதே.
Add to
Shares
1.5k
Comments
Share This
Add to
Shares
1.5k
Comments
Share
Report an issue
Authors

Related Tags