பதிப்புகளில்

'வின்கேஜ்' வழங்கும் குறைந்த செலவில் வைஃபை வசதி!

siva tamilselva
9th Oct 2015
Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share

இலவச வைஃபை வசதி இன்று சர்வசாதாரணமாக புழக்கத்தில் உள்ள வார்த்தையாக மாறிப் போனது. இப்போதெல்லாம், உணவுவிடுதிகள், காபிஷாப், உடற்பயிற்சி நிலையங்கள், புத்தகக் கடைகள் போன்ற பொது இடங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட் சேவை இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகி விட்டது. ஆனால் வைஃபை வசதியை நிறுவுவதும் அதைப் பராமரிப்பதும் அதிக செலவு பிடிக்கும் விஷயமாக உள்ளது. அப்படி வசதி செய்து கொடுப்பதற்குத் தகுந்த வருமானம் வருவதில்லை. எனவே வைஃபை வசதிக்கான கட்டணத்தை வாடிக்கையாளரிடம் வசூல் செய்வதா, அல்லது தாங்களே அதை இலவசமாகத் தருவதா என்பதிலும் கடைக்காரர்களால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

விங்கேஜ் குழுவினர்

விங்கேஜ் குழுவினர்


கடைக்காரர்கள், வாடிக்கையாளருக்கு இலவச வைஃபை வசதியைச் செய்து தருவதில் உள்ள இந்தப் பிரச்சனையைத் தீர்க்க விஷால் சொவ்திரியும், அனுராக் சிவில்கரும் சேர்ந்து ஒரு வழி கண்டுபிடித்தனர். "வின்கேஜ்" (Wingage) என்ற பிராண்ட்டில் கடைக்காரர்களுக்கான ஒரு புதுமையான தீர்வை அவர்கள் கண்டுபிடித்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலில் இலவசமாக தங்களின் சமூக வலைத்தள தேடலையும் இணைய செயல்பாடுகளையும் மேற்கொள்வதற்கு வசதியாக கடைகளில் க்ளவுட் மேனேஜ்ட் (cloud-managed) வைஃபை நிர்வகிக்கும் சிஸ்டத்தை அவர்கள் வடிவமைத்தனர்.

இது பொதுப் பயன்பாட்டுக்கான ஒரு க்ளவுட் மேனேஜ்ட் 'பிளக் அன் பிளே' (cloud-managed ‘plug n play’) வைஃபை சிஸ்டம். இதை யார் வேண்டுமானாலும் தங்களது வர்த்தக மையத்தில் பொருத்திக் கொள்ளலாம். இதன் மூலம் அவர்களது கடை வளாகத்தில் தங்குதடையின்றி, குறைந்த செலவில் வைஃபை வசதி கிடைக்கும். இந்திய அரசு நிர்ணயித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு இது இயங்கும்.

“வாடிக்கையாளர் வைஃபைக்குள் செல்வதற்கு ஒரு சமூக ஊடக வலைத் தளத்தை உருவாக்கியிருக்கிறோம். அதில் லாகின் (login) செய்ய வேண்டும். லாகின் செய்வதற்கு குறிப்பிட்ட சில்லறை வர்த்தக நிறுவனத்தின் சமூக வலைப் பக்கத்திற்கு லைக் கொடுக்க வேண்டும் அல்லது பின்தொடர இல்லையெனில் ப்ரமோட் செய்ய வேண்டும். இந்த செயல்பாடுகளுக்கிடையே வாடிக்கையாளர் குறித்த தரவுகளை எங்களின் தனித்தன்மை வாய்ந்த இணைய தளம் சேகரித்து வைத்துக் கொள்ளும்” என்கிறார் விஷால் சவுத்ரி, வின்கேஜ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.

அந்தத் தரவுகள் வாடிக்கையாளர் தொடர்பை நிர்வகிக்க (Customer relationship management -CRM) உதவும். தவிர வாடிக்கையாளர் குறிப்பிட்ட வர்த்தக நிறுவனத்தை ப்ரமோட் செய்வதால் சமூக வலைத்தளங்கள் மூலம் அந்த நிறுவனத்திற்கு இலவச விளம்பரமும் கிடைக்கும்.

மும்பையில் வின்கேஜ், 20 இடங்களில் இயங்குகிறது. மென்பொருள் சேவை (Software-As-A-Service) என்ற அடிப்படையில் 11 வாடிக்கையாளர்கள் வின்கேஜிடம் இந்த சேவையைப் பெற்று அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி வருகின்றனர். டிபெல்லா காபி (DiBellaCoffee), மோசெஸ் கபே (Moshes Café), டீ ட்ரயில்ஸ் (Tea Trails), மற்றும் ஐ திங்க் பிட்னெஸ் (iThink Fitness) போன்றவை வின்கேஜின் வாடிக்கையாளர்கள்.

வின்கேஜின் பயணம்

2013 டிசம்பரில் விளம்பரதாரர் பங்களிப்போடு இலவச வைஃபை சேவையை வழங்கினார்கள். இதில் வாடிக்கையாளர்கள் வைஃபை மூலம் விளம்பர வீடியோக்களைப் பார்ப்பார்கள். பதிலுக்கு அவர்களுக்கு இலவச வைஃபை வசதி கிடைக்கும். இது இருமுனை வர்த்தக வழிமுறை (two-sided business model). விளம்பரத்தை வைத்துத்தான் இதில் வருமானம். எனவே இதில் நிலையான வருமானம் வரவில்லை. விஷால் சொவ்திரியும் அனுராக் சிவில்கரும் இந்த முறையில் உள்ள குழப்பத்தை உணர்ந்தனர். ஒரு சில மாதங்களில் இந்த வகை வர்த்தகத்திற்கு முடிவு கட்டினர்.

2015 ஜனவரியில் 5 லட்ச ரூபாய் ஆரம்ப முதலீட்டுடன் புதிதாக இலவச வைஃபை சேவையைத் தொடங்கினர். இந்த முறை மென்பொருள் சேவைக்கு கட்டணம் என்ற அடிப்படையில் (SAAS-based model) தொழிலைத் தொடங்கினர். மாத அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் இந்த முறை மூலம் நிலையான வருமானம் வரத் தொடங்கியது.

இந்த முறையில் வைஃபை கட்டணமும் பெருமளவில் குறைந்தது. அது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களின் இயக்கமும் அதிகரித்து, தரவுகள் சேகரிப்பும் அதிகரித்தது.

எதிர்கொள்ளும் சவால்கள்

“கஃபே மற்றும் ரெஸ்ட்டாரென்ட் உரிமையாளர்கள் இப்போதும் வைஃபை சேவைக்கு கட்டணம் செலுத்துவதை ஒரு சுமையாகத்தான் கருதுகின்றனர். அது வாடிக்கையாளரைக் கவர்ந்திழுக்க ஒரு வழி என்று அவர்கள் நினைப்பதில்லை. இன்னொரு விஷயம், வரும் வாடிக்கையாளர்களும் இந்தச் சேவையை பயனுள்ள வழியில் பயன்படுத்துவதில்லை. சில நேரங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதும் நடக்கிறது.” என்கிறார் விஷால்.

வர்த்தக போட்டியாளர்கள்

இந்தத் துறையில் சிஸ்கோ (CISCO), ஏர்ட்டெல் (Airtel), ரிலையன்ஸ் ஜியோ (Reliance JIO) போன்ற பெரும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள்தான் கோலோச்சிக் கொண்டிருந்தன. பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில்தான் பாய்பை (Bhaifi), விஸ் (Whizz), வின்கேஜ் (Wingage) போன்ற நிறுவனங்கள் நம்ப முடியாத விலையில் புதிய புதிய சலுகைகள் தருவதாகக் கூறி இந்தத் துறையில் நுழைந்திருக்கின்றன.

ரெஸ்ட்டாரென்ட், கெஸ்ட்ஹவுஸ், கபேக்களில் வைஃபை வசதியை வழங்கி வருகிறது பாய்பை. ஃபிரிமியம் சாஸ் எனப்படும் முறையில் (freemiumSaaS model) இந்த வசதியை அது வழங்குகிறது. இந்த முறையில் தேவையான உபகரணங்களை வாடிக்கையாளர் விலை கொடுத்து வாங்க வேண்டும். வைஃபை வசதியைப் பொருத்த விரும்பும் வர்த்தக நிறுவன உரிமையாளர், ரவுட்டர் ஒன்றை விலைக்கு வாங்க வேண்டும். அந்த ரவுட்டரில் பாய்பை தனது மென்பொருளை நிறுவி, அதன் மூலம் வைஃபை வசதியை வழங்கும். இதே ஃபிரிமியம் முறையில் விஸ் நிறுவனம் நடமாடும் ஹாட்ஸ்பாட் (portable hotspot) வசதியை வழங்குகிறது.

தங்களிடம் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் வாடிக்கையாளருக்கான வசதிகளை ஒப்பிடுகையில் மற்ற போட்டியாளர்களை மிஞ்சக் கூடிய வகையில் இருக்கிறது வின்கேஜ் என்கிறார் விஷால். “எங்களின் தனித்தன்மை வாய்ந்த சிறப்பம்சங்கள், விலை போன்றவை சந்தையில் சிறந்த ஒரு நிறுவனமாக எங்களை உருவாக்கியுள்ளது. செல்போனுக்குத் தேவையான ஆப் (app-based) அடிப்படையிலான பொதுப் பயன்பாட்டு வைஃபை செட்அப், கடை வளாகத்திற்குள் தேவையான கண்காணிப்பு (in-store Wi-FI location tracking), நிறுவனங்களுக்கான வெளிப்புற இணைய இணைப்புக்கான வைஃபை (outdoor mesh Wi-Fi system), பொழுது போக்கிற்கான ஆஃப்லைன் வைஃபை, இணைய கற்றலுக்கான (e-learning) ஆஃப்லைன் வைஃபை என நிறைய புதிய தயாரிப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். இத்தகைய வளர்ச்சி அம்சங்களுடன் இந்தத் துறையில் புதிய உயரத்தைத் தொட இருக்கிறோம்.” என்கிறார் விஷால்.

இணையதள முகவரி: Wingage

Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக