பதிப்புகளில்

8k மைல்ஸ் சாப்ட்வேர் நிறுவனம்: வருவாய் 34%, நிகர லாபம் 24% உயர்வு.

தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்த சுரேஷ் வெங்கடாசாரி 2008ல் சென்னை மற்றும் அமெரிக்காவில் தொடங்கிய ’8k Miles சாப்ட்வேர் சர்வீசஸ் நிறுவனம்’ இந்த நிதியாண்டின் 2-ம் காலாண்டின் நிகர லாபம் மற்றும் வருவாய் அதிகரிப்பு குறித்து தெரிவித்துள்ளது.

16th Nov 2018
Add to
Shares
36
Comments
Share This
Add to
Shares
36
Comments
Share

’8K Miles சாப்ட்வேர் சர்வீசஸ்’ சர்வதேச கிளவுட் மற்றும் செக்யூரிட்டி சேவை மற்றும் அடுத்த தலைமுறை கிளவுட் எம்.எஸ்.பி நிறுவனமாகும். தமிழர்களால் துவக்கப்பட்ட இந்நிறுவனம், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவை தலைமையமாகக் கொண்டு செயல்படுகிறது. நிறுவனம் பாதுகாப்பான கிளவுட் சேவைகளை அளித்து வருகிறது. ஆட்டோமேஷன், பாதுகாப்பு, நிர்வாகம் மற்றும் அரசு கட்டுப்பாடுகள் கீழ்படிதல் உள்ளிட்ட அம்சங்களை இணைந்து சேவை வழங்கி வருகிறது.

இந்நிறுவனம் செப்டம்பர் மாதம் முடிந்த இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

8கே மைல்ஸ் சாப்ட்வேர் சர்வீசஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுரேஷ் வெங்கடாசாரி

8கே மைல்ஸ் சாப்ட்வேர் சர்வீசஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுரேஷ் வெங்கடாசாரி


இந்த காலாண்டில் நிறுவன நிகர லாபம் 23.93 சதவீதம் அதிகரித்து ரூ.50.90 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இணையான காலத்தில் இது ரூ.41.08 கோடியாக இருந்தது.
இரண்டாம் காலாண்டிற்கான வருவாய் 34.16 சதவீதம் அதிகரித்து ரூ.282.57 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் நிகரான காலத்தில் இது ரூ.210.62 கோடியாக இருந்தது.

மேலும் இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான நிகர லாபம் 24.31 சதவீதம் உயர்ந்து ரூ.98.42 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.79.17 கோடியாக இருந்தது. இதே காலத்திற்கான வருவாய் 28.76 சதவீதம் உயர்ந்து ரூ.522.79 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டில் இதே காலத்தில் இது ரூ.406.04 கோடியாக இருந்தது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு ஏற்ப மேலும் ஒரு காலாண்டில் சிறந்த செயல்பாட்டை பெற்றிருப்பதாக 8கே மைல்ஸ் சாப்ட்வேர் சர்வீசஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுரேஷ் வெங்கடாசாரி கூறியுள்ளார். 

ஒரு நிறுவனமாக, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் மூலமான வருவாயை அதிகரிக்கும் மற்றும் புதிய வர்த்தக வாடிக்கையாளர்கள் பெறுவதற்கான உத்திகளோடு, வருவாயை அதிகரித்து, புதிய பூகோள பரப்புகளில் சேவையை விரிவாக்குவதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

நிறுவனத்தின் துணை நிறுவனம் அமெரிக்காவின் 8கே மீடியா குழுமத்திடம் இருந்து ஏப்ரல் முதல் நவம்பர் 2018 ல் ரூ.3,671.38 லட்சம் பெற்ற்ய்ள்ளது. நவம்பர் 2018 ல் 8கே மீடியா குழுமத்திடம் வெளியே உள்ள தொகை ரூ.2,137.06 கோடியாகும். (ரூ.5,808.44லட்சம் மார்ச் 2018 வரை).

8கே மைலஸ் நிறுவனத்தின் கிளவுட் நிர்வாகம் மற்றும் தானியங்கி சேவைகளைக் கொண்டு பி.ஓ.டி சார்ந்த ஆக்சலேட்டர்கள், உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் கண்டுபிடிப்பு, மருந்து உருவாக்கம் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் பொருத்தமான சேவைகளை பயன்படுத்திக்கொண்டு, தங்கள் பிராண்ட்களை மேம்படுத்திக்கொள்ளலாம் என்று நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் இயக்குனர் லேனா கண்ணப்பன் தெரிவித்தார். 

இந்த ஆற்றல்கள் மேலும் தனிப்பட்ட மருந்துகள், புதிய பொருட்கள் மற்றும் மருந்தக நிறுவனங்களுக்கான திறன்வாய்ந்த செயல்பாடுகளை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

இரண்டாம் காலாண்டு செயல்பாட்டில் எட்டியுள்ள பல்வேறு மைல்கல்லையும் நிறுவனம் தெரிவித்துள்ளது. காலாண்டில் 4 வாடிக்கையாளர்கள் கூடுதலாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மருந்தக வாடிக்கையாளர் நிறுவனத்துடன் பொது கிளவுட்டில் ஐ.ஓ.டி செயல்பாட்டிற்கான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மருந்தக வாடிக்கையாளர்களுக்கு மைக்ரோசாப்ட் அஜுர் கிளவுட் சேவைகளை வழங்கப்படுகிறது.

பன்னாட்டு நிறுவனம் ஒன்றிடம் இருந்து பொது கிளவுட் நிர்வாக மேடை வாய்ப்பை பெற்றுள்ளது. 8கே மைல்ஸ் கார்னர்ஸ்டோன் அமெரிக்காவின் மிசவ்ரியில் மெடிடெக் எக்ஸ்பான்சை அதன் மருத்துவ மைத்தில் மேற்கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளது. மெடிடெக் எக்ஸ்பான்ஸ் பீல்ட் நோட்ஸ் எனும், வெப்சீரிசையும் துவக்கியுள்ளது. 45 நிமிட இணைய கல்வி தகவல்களை இந்த நிகழ்ச்சி வழங்குகிறது.

கட்டுரையாளர் : சைபர்சிம்மன்

Add to
Shares
36
Comments
Share This
Add to
Shares
36
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக