பதிப்புகளில்

தாக்கத்தை ஏற்படுத்தும் தொழிலுக்கு முதலீடுகள் தேடி வரும்: ஜ்யோத்சனா கிருஷ்ணன்

Sowmya Sankaran
31st Jan 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

'வில்க்ரோ' நிறுவனம் நடத்திய 'அன்கன்வென்ஷன்' கருத்தரங்கத்தில், சமூக நிறுவனத்திற்கான முதலீடுகளும், அதற்குத் தேவையான அம்சங்களைப் பற்றியும், ஜ்யோத்சனா கிருஷ்ணன் (அதிபர், எலிவர் ஈக்விட்டி), அஷ்வின் மகாலிங்கம் (துணை பேராசிரியர், ஐ.ஐ.டி. மெட்ராஸ்) மற்றும் தேவி மூர்த்தி (நிறுவனர், கமல்கிசான்) குழு உரையாடல் நடத்தினர். ராமராஜ் (தலைமை ஆலோசகர், எலிவர் ஈக்விட்டி) இக்கலந்துரையாடலின் நெறியாளராக இருந்தார். இந்த நிகழ்ச்சி சுவாரசியமாகவும், அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருந்தது.

image


சமூக நிறுவனங்கள் முதலீடுகள் பெறுவது எப்படி?

ஜ்யோத்சனா: எந்த சமூக நிறுவனம், வாடிக்கையாளரை முன்வைத்து செயல்படுகிறதோ, அதற்கே நான் முதலீடிகள் அளிப்பேன். எந்த அளவிற்கு ஒரு தொழில் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அந்த அளவிற்கு முதலீடுகள் எளிதாக நடைப்பெறும்.

அஷ்வின்: பொதுவாக சமூக நிறுவனங்களை அடைகாப்பது தாமதாகவோ அல்லது முன்னரேவோ நடைபெறக்கூடாது. அந்த யோசனைக்கான அடைகாக்கும் நேரம் வரும்போது, நாங்கள் நிறுவனங்களை கண்டறிந்து, முதலீடுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வோம். 'கோல்டிலாக்ஸ்' பற்றிய கதையே இதற்கு பொருந்தும். 

போட்டிகளை எப்படி சந்திக்க வேண்டும்

தேவி: ஒரு தொழில்முனைவரின் கண்ணோட்டத்தில், "நான் முதலீட்டாளர்களிடம் அணுகிய போது போட்டிகள் கடினமாக இருந்தது. உங்களுடைய யோசனையில் நம்பிக்கை இருந்தால், முதலீடுகள் என்பது எளிமையான ஒன்றாகும்" என்று கூறிய தேவி, இந்தியாவிற்கு பல சமூக தொழில்முனைவர்கள் தேவை என்பதையும் உணர்த்தினார். 

அஷ்வின்: ஐஐடியில் பயிலும் மாணவர்களும், வெளியே உள்ள வருங்கால தொழில்முனைவோர்களும் ஒன்றாகத்தான் போட்டியிடுவார்கள். அப்போது, போட்டிகளை எளிதாக சந்திப்பதற்கு, எவ்விதமான தொழில் உளைச்சல்களையும் கண்டு கொள்ளாமல், ஆசானின் பயிற்சிகளுக்கேற்ப செயல்பட்டால், வெற்றி என்பது தானாக தேடி வரும்.

யோசனைகளில் வலிமையை அறியும் வழி

ஜ்யோத்சனா: 'தொழில்முனைவோர்களை அறியும் முறையில், அவர்களது நம்பிக்கையை முதலில் அறிவோம். அதற்குப் பின், முதலீடுகளால் ஏற்படும் சாத்தியக்கூறுகளை அறிவோம். சரியான கோப்புகளும், நடைமுறைகளும் யோசனைக்கான வலிமையை அதிகரிக்கும்'.

தேவி: தொழிலைத் துவங்கும் போது, அதனுடைய லாபத்திற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். 'கமல் கிசான்' நிறுவனம் மூலம், ஏராளமான வாய்ப்புகள் கண் முன்னரே தெரிந்தது. யோசனையின் மூலம், ஒரு சமூகப் பிரச்சனையை எளிதாகத் தீர்க்க முடியுமென்றால், அதனுடைய வலிமையின் அளவும் அதிகமே என்று அர்த்தம்.

அடைக்காப்பவர்களின் முக்கியத்துவத்தை கண்டறிவது

அஷ்வின்: 'ஒரு அடைக்காப்பவரால், அந்த தொழிலின் மேன்மையை அதிகரிக்க முடியுமென்றால், அடைக்காக்கும் நேரம் வந்துவிட்டது என்றே அர்த்தம்'.

ஜ்யோத்சனா: மாற்றங்கள் ஏற்படும் போது, சமூக தொழில் முனைவோர் பலருக்கு மாற்றத்தை சந்திக்கும் பக்குவம் எளிதாக வருவதில்லை. இந்தச் சூழ்நிலைகளில், அடைக்காப்பவர் பெரும் பங்கு வகிக்கிறார். அதேப் போன்று, நோக்கமும், தாக்கமும் எதிராக செயல்படும்போது, முதலீட்டாளர்கள் பங்கேற்பதைப் பற்றி சிந்திப்பார்கள்.

ராமராஜ்: அடைக்காப்பவர் இப்போது தேவையா? என்ற கேள்வியை தொழில் முனைவோர் தங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். கேள்விக்கேற்ற பதிலில், வலிமையை அறிய வேண்டும். சமூகத் தொழில் என்பது ஒரு மென்மையான இடம். அதை சரியான, தெளிவான நபர்கள் ஒன்று கூடினால் மட்டுமே செயல்படுத்த முடியும்.

கலந்துரையாடலில் எடுத்த முடிவுகள்

பங்கேற்ற தொழில்முனைவோர்களின் இன்னல்களைத் தீர்க்கும் வகையில், ராமராஜ் மற்ற மூவருடன் சேர்ந்து முதலீட்டார்களையும், அடைக்காபவர்களையும் பற்றி இரண்டாம், மூன்றாம் கட்ட ஊர்களுக்கும் சென்று அனைவரையும் தெளிவுப்படுத்துவோம் என்று கூறினார். வருங்காலத்தில், சமூக நிறுவனங்கள் தலைத்தூக்குவதில் 'வில்க்ரோ' நிறுவனம் பெரும் பங்கு வகிக்கும என்பதையும் கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags