பதிப்புகளில்

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் சிறப்புத் தேவைகளை நிறைவேற்றும் 'தமஹர்'

siva tamilselva
16th Oct 2015
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

ஒருவரை அன்புடன் பராமரிக்க ஏராளமான பணம் செலவு செய்யப்படுகிறது. ஆனால் அவர்களை சுயசார்புடன் நிற்பவர்களாய் மாற்ற அந்த அளவுக்கு செலவு செய்யப்படுவதில்லை என்கிறார் தமஹரின் நிறுவன இயக்குனர் வைஷாலி பாய். இங்கே ஒருவர் என்று வைஷாலி குறிப்பிடுவது சிறப்புத் தேவை உடைய மாற்றுத் திறனாளிக் குழந்தைகளை.

image


பெங்களூருவிலும், பாலியிலும் அவர் நடத்தும் இரண்டு மையங்கள் மூலம் உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கிறார். இதன் மூலம் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கிறார்.

“பொதுவாக குழந்தைகளுக்கு சிந்திக்கவும், அன்றாட நடவடிக்கைகளையும் கற்றுக் கொடுத்தால், அதை அவர்களால் நினைவில் வைத்துக் கொண்டு செயலாற்ற முடியும் என நம்புகிறோம். இதே விஷயம் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கும் பொருந்தும். அவர்கள் புரிந்து கொள்ள உதவியாக கேள்விகளை எழுப்புவதும் அதற்கு அவர்கள் பதிலளிக்க போதுமான அவகாசம் வழங்குவதும் மட்டும் போதும்” என்று வைஷாலி விளக்குகிறார்.

25 வயதாகும் போது வைஷாலி மும்பையில் இருந்து பெங்களூரு வந்தார். அப்போது அவர் ஆக்குபேஷனல் தெரபியில் (Occupational Therapy) முதுநிலைப் பட்டம் பெற்றிருந்தார். இந்திரா நகரில் உள்ள ‘தி ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் கர்நாடகா (The Spastic’s Society of Karnataka)வில் பணியைத் துவக்கினேன். நான் வேலை பார்க்கும் இடம் என் வீட்டில் இருந்து 19 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. மூன்று பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டும். அந்தப் பயணங்களில் சரிவர நடக்க முடியாத தங்களது குழந்தைகளுடன் நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டிருந்த விதவிதமான குடும்பத்தினர் பலரை நான் சந்திக்க நேர்ந்தது.

image


அதன்பிறகுதான் அவர் வடமேற்கு பெங்களூரின் புறநகர் மற்றும் ஊரக பகுதிகளில் "தமஹர்" எனும் திட்டத்தைத் தொடங்க முடிவு செய்தார். அந்தத் திட்டம் குறித்து அவருக்கு ஒரு தெளிவான பார்வை இருந்தது. “புறநகர் பகுதிகளில் ஏழு கிலோ மீட்டர் சுற்றளவிலும் ஊரகப் பகுதிகளில் 15லிருந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்ளும் ஒரு மையம் இருக்க வேண்டும் என நினைத்தேன்” என்கிறார் வைஷாலி.

அணுகுமுறை

”குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் போது, வெறுமனே உடல் உறுப்பு இயக்கம் அல்லது வார்த்தைகளை மட்டும் கற்றுக் கொடுப்பதில்லை. அவர்களின் மொத்த மூளையின் செயல்பாட்டையும் தூண்டுகிறோம்” என்று தங்களின் கற்பிக்கும் முறை குறித்து விளக்குகிறார் வைஷாலி.

குழந்தைகளின் வளர்ச்சிக்கான பல்வேறு விதமான சிகிச்சை முறைகளோடு, பொழுது போக்கு நடவடிக்கைகள் தமஹரின் கற்பித்தல் முறையின் அடிப்படை அம்சமாக அமைந்துள்ளது. “உள்ளரங்கு மற்றும் வெளி அரங்கு விளையாட்டுகளைக் கற்பித்தல் எங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதி. இதன்மூலம் அவர்கள் பிறரின் விளையாட்டு நடவடிக்கைகளையும் புரிந்து கொள்கின்றனர். (ஒரு சில குழந்தைகளுக்கு அவர்களின் உடல் வளர்ச்சி குறைபாடு காரணமாக) விளையாட்டில் பங்கேற்க முடியாமல் போகலாம். அவர்கள் மற்றவர்கள் விளையாடுவதைப் பார்த்து சந்தோஷத்தை அனுபவிக்கின்றனர்.” என்கிறார் அவர்.

image


பாடத்திட்டம்

மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனையின் பெரும் பகுதி குடும்பத்திலும் சமூகத்திலும் அவர்கள் வகிக்கும் பாத்திரம் தொடர்பானது. எனவே அந்தக் குழந்தைகளின் அம்மாக்கள், சக குழந்தைகள் மற்றும் பிற உறவினர்களுக்கென்றே சிறப்பு திட்டங்களையும் தமஹர் வைத்திருக்கிறது. “எங்களின் செயல்பாடு குழந்தைகளோடு நின்று விடுவதில்லை. அவர்களின் குடும்பம் வரையில் தொடர்கிறது. குழந்தைகளின் தன்மையைப் பொருத்து தேவைப்படும் பட்சத்தில் அவர்களின் பெற்றோருக்கும் நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம்.” என்கிறார் வைஷாலி. அவர்களால் பிறரைப் போல இயல்பாக செயல்பட முடியாது என்று கருதுவதை விட, அவர்களை சமூகத்துடன் இணைத்து விடுவது எளிதானது என்பது, தமஹரின் அடிப்படை நம்பிக்கை.

குழந்தைகளின் வாழ்க்கையில் பங்கேற்கும் அனைவரின் மீதும் கவனம் செலுத்துவது முக்கியமானது. “பெரும்பாலான பெற்றோர் தங்களின் குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போல இயல்புக்கு வந்து விட வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் இது முக்கியமல்ல. எனினும் தங்கள் குழந்தைகளுக்கு எது தேவை என்று புரிந்து கொள்ளும் பெற்றோரைப் போன்ற மிகச் சிறந்த மருத்துவர்கள் யாரும் இருக்க முடியாது.” என்கிறார் வைஷாலி.

image


எங்கள் குழு

எங்கள் குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் வேண்டிய அவசிய தகுதி; குழந்தைகளிடம் நேசம், கற்றுக் கொள்வதில் ஆர்வம் ஆகியவைதான். “கல்வித் தகுதி இருந்தால் அது கூடுதல் போனஸ். ஆனால் அது அவசியமல்ல. அறிவைக் காட்டிலும் திறமையும் பணியின் தரமும்தான் மிக முக்கியம்” என்கிறார் வைஷாலி. யோகா சிகிச்சை (yoga therapy), மருத்துவ உளவியல் (clinical psychology), இசை சிகிச்சை (music therapy), இயன்முறை மருத்துவம் (physiotherapy) அல்லது இயற்கை விவசாயம் (organic farming) போன்ற பணி தொடர்பான படிப்புதான் அவர்களுக்குத் தேவையான தகுதிகள்.

கட்டணம்

“இந்தப் பயிற்சிகளுக்காக குறைந்த பட்சக் கட்டணம் வசூலிக்கிறோம். ஏனெனில் கட்டணமில்லா இலவச சேவையை யாரும் சீரியசாக நினைப்பதில்லை.” என்கிறார் வைஷாலி, அந்தக் கட்டணம் அவர்களின் குடும்ப வருமானம் மற்றும் அவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்து வருகிறார்கள் என்பதைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது

image


இந்த மையங்கள் முற்றிலும் நன்கொடைகள் மூலம் மட்டுமே இயங்குகின்றன. இங்கே அன்றாடம் பயன்படுத்தப்படும் உபகரணங்களில் பெரும்பாலானவை வைஷாலியின் குடும்பத்தினரால் நன்கொடை அளிக்கப்பட்டவை. “இது சவாலானதுதான் ஆனால் முடியாதது எதுவுமே இல்லை” என்கிறார் வைஷாலி. தமஹர் பொருளாதார ரீதியில் இன்னும் சுயசார்புடன் நிற்கத் தொடங்கவில்லை எனினும் நிர்வாகத்தில் முற்றிலும் சுயசார்புடன்தான் இருக்கிறது. “அன்றாட வேலைகளில் எனது தலையீடு இருக்காது. அதற்கு மேல் நிர்வாக விஷயத்தை மட்டும் கவனித்துக் கொள்கிறேன்” என்று கூறுகிறார் வைஷாலி. தனக்குத் தலைவர் யார் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இயங்குவதற்குப் போதிய தகுதி பெற்ற அமைப்பு தமஹர் என்று பெருமைப் படுகிறார் அவர்.

“எங்கள் பணி இப்போதுதான் துவங்கியது. எனினும் நகர்ப்புறம் மற்றும் பெருநகரங்களின் சேரிப்பகுதிகள், படிநிலை இரண்டு, மூன்றில் உள்ள நகரங்கள் (Tier II, III cities) அல்லது கிராமங்களில் வசிக்கும் ஏராளமான குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் எங்கள் அமைப்பு சென்று சேர்ந்திருக்கிறது. இந்தக் குழந்தைகளுக்கு தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் ஆக்கப் பூர்வமான குடிமக்களாக தங்களை வளர்த்துக் கொள்வதற்கும் போதிய வாய்ப்புக்கள் வழங்கப்படாததால் ஏராளமான மனித வளம் வீணாய்ப் போகிறது” என்று கவலை தெரிவிக்கிறார் வைஷாலி.

குழந்தைகள் எப்போதும் குழந்தைகள்தான்

“குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று சொல்வது கடினம். ஆனால் அனைவரும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும் என்பது அவசியம். குழந்தைகள் நரம்பியல் நோயாளியாக இருந்தாலும் சரி மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் சரி குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகத்தான் இருக்கின்றனர்” என்று கூறுகிறார் வைஷாலி.

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags