பதிப்புகளில்

கூகுளுக்கு முன் இண்டிக் கீபோர்டை உருவாக்கிய 27 வயது இந்திய டெவலப்பரை தெரியுமா?

YS TEAM TAMIL
13th Apr 2017
Add to
Shares
25
Comments
Share This
Add to
Shares
25
Comments
Share

ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கானோர் உள்ளூர் இந்திய மொழிகளில் பேசவும் எழுதவும் கூகுளுக்கு முன்பே இண்டிக் (Indic) கீபோர்டை உருவாக்கினார் ஜிஷ்ணு மோகன்.

ஒரு சூழலை கற்பனை செய்து பார்ப்போம். உங்களது அலுவலக நேரத்திற்கு பிறகு கிடைக்கும் ஒட்டுமொத்த ஓய்வு நேரத்தையும் செலவிட்டு நீங்கள் ஒன்றை உருவாக்குகிறீர்கள். ஏனெனில் நீங்கள் உருவாக்குவது ஒரு மிகப்பெரிய பிரச்சனைக்கான தீர்வாக இருக்கப்போகிறது என்பதை நீங்கள் உணர்கிறீர்கள். உங்களுக்கு குறிப்பிட்ட இந்தப் பகுதியில் நிபுணத்துவம் இல்லை. இருப்பினும் அதை ஈடுசெய்ய அதிக ஆராய்ச்சி மேற்கொள்கிறீர்கள். அதை அறிமுகப்படுத்துகிறீர்கள். நல்ல வரவேற்பு கிடைக்கிறது. தொடர்ந்து செயல்படுகிறீர்கள். எல்லாம் நன்றாகவே நடந்துகொண்டிருக்கிறது. திடீரென்று ஒரு நாள் பல மில்லியன் டாலர் நிறுவனம் ஒன்று அதே தயாரிப்பை அதே பெயரில் வெளியிட முடிவெடுத்தது. அந்த மிகப்பெரிய நிறுவனம் கூகுள் என்றால் எப்படியிருக்கும்? 

ஒரு சிறு நிறுவனம் மிகப்பெரிய நிறுவனத்தை எதிர்த்து நிற்கும் இது போன்ற பல நிகழ்வுகளை கேள்விப்பட்டிருப்போம். நீங்கள் உங்களது தயாரிப்பை தொடர்ந்து திறம்பட செயல்படுத்த உத்வேகத்தைத் தாண்டி வேறு சில அம்சங்களின் தேவையும் இருப்பதாகவே தோன்றுகிறது.

image


27 வயதான ஜிஷ்ணு மோகனுக்கு இப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டது. முதலில் அவர் திடுக்கிட்டார். அதன் பிறகு அவர் அதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. ஜிஷ்ணு தன்னம்பிக்கை நிறைந்தவர். அவரது நம்பிக்கையை தகர்க்கும் விதமான எந்தவித குறுக்கீடுகளையும் அனுமதிக்கமாட்டார். பொறியியல் படிப்பை ஏழரை ஆண்டுகள் கழித்து நிறைவு செய்தபோதும் அவர் அதற்காக வருந்தவில்லை. ஏனெனில் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்கு பட்டப்படிப்பை முடிக்கும்வரை காத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை அவர் நன்கறிவார்.

அவரது பயணம் குறித்த ஜிஷ்ணுவின் பகிர்வுகள் இதோ:

கேரள மைந்தனின் தொடக்க நாட்கள்

1989-ம் ஆண்டு ஆலப்புழாவில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார் ஜிஷ்ணு. அவர் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அவரது அண்ணன் கம்ப்யூட்டர் வகுப்பில் சேர்ந்தார். அப்போதுதான் கம்ப்யூட்டர் குறித்து முதலில் தெரிந்துகொண்டார் ஜிஷ்ணு. வி்டுமுறை நாட்கள் என்பதால் ஜிஷ்ணு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு கேம்ஸ் விளையாட அவரது அண்ணனுடன் செல்வார். ஒரு வருடம் கடந்த பிறகு ப்ரோக்ராமிங் (பேசிக்) கற்றுக்கொள்ள அதே இடத்தில் சேர்ந்தார். அங்கு க்ராஃபிக்கல் இண்டர்ஃபேசுடன் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் 98 கொண்ட மற்றொரு கம்ப்யூட்டரும் மட்டுமே இருந்தது. மற்ற கம்ப்யூட்டர்கள் அனைத்தும் DOS அல்லது விண்டோஸ் 98 கொண்டது. வகுப்புகளி்ல் அடிப்படை விஷயங்கள் மட்டுமே கற்றுக்கொடுக்கப்பட்டது. 

வகுப்புகளைவிட வகுப்பு நேரம் முடிந்ததும் டேன்ஜரஸ் டேவ், ப்ரின்ஸ் ஆஃப் பெர்ஷியா போன்ற கேம்ஸ் விளையாடுவதிலேயே அதிக ஆர்வம் காட்டினார் ஜிஷ்ணு. ஜிஷ்ணு விளையாட்டு மற்றும் கலைகளில் அதிக ஈடுபாடு இல்லாத ஒரு சராசரி மாணவர். ஆனால் கம்ப்யூட்டர் மீதான ஆர்வம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அவரது அண்ணன் கல்லூரியில் சேர்ந்து ஒரு கம்ப்யூட்டர் வாங்கியதால் ஜிஷ்ணு அதைப் பயன்படுத்தத் தொடங்கினார். அப்போது ஜிஷ்ணு எட்டாம் வகுப்புபடித்துக்கொண்டிருந்தார். 

LINUX பயன்படுத்த கம்ப்யூட்டரை பல முறை ஃபார்மாட் செய்த பிறகு ஆப்பரேடிங் சிஸ்டத்தை எப்படி இன்ஸ்டால் செய்வது என்றும் கம்ப்யூட்டரை பயன்படுத்தவும் கற்றுக்கொண்டார். ஃபோட்டோஷாப், மேக்ரோமீடியா ஃப்ளாஷ் ஆகியவற்றை தாமாகவே கற்றறிந்தார். அவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார். 

பரீட்சை நடந்துகொண்டிருந்த சமயம் என்பதால் ஜிஷ்ணு கம்ப்யூட்டரை பயன்படுத்தாமல் இருப்பதற்காக அவரது அண்ணன் அதை ரகசிய பாஸ்வேர்ட் மூலம் லாக் செய்துவிட்டார். BIOS பாஸ்வேர்ட் என்பதால் வழக்கமாக விண்டோஸ் XP பாஸ்வேர்டை ஹேக் செய்வதுபோல இதை ஹேக் செய்யமுடியாது. அவர் கூறுகையில், 

"எனக்கு அதிக நேரம் கிடைத்ததால் பல விஷயங்களை முயற்சி செய்துபார்த்தேன். நேரத்தை பதிவு செய்யும் ஒரு பேட்டரி அதில் இருந்தது. கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்த பிறகும் அது நேரத்தை பதிவு செய்து கொண்டிருந்ததை நான் கவனித்தேன். பாஸ்வேர்டை சேமிக்கும் பகுதியை இந்த பேட்டரிதான் பவர் செய்கிறது என்பதால் நான் பேட்டரியை அகற்றிவிட்டு திரும்ப பொருத்தியதும் அது பாஸ்வேர்டை ரீசெட் செய்தது. இதனால் என்னால் கம்ப்யூட்டரை இயக்கமுடிந்தது."
image


அப்போது எழுதிய தேர்வுகளை அவர் சிறப்பாக எழுதவில்லை.

ஃப்ரீ சாஃப்ட்வேர்

ஜிஷ்ணு சாஃப்ட்வேரை ஃப்ரீயாகவும், ஃப்ரீ சாஃப்ட்வேர் இரண்டிலும் பணிபுரிந்தார். பதினோராம் வகுப்பு படிக்கும்போது இண்டெர்நெட் கஃபே நடத்தி வந்த ஒரு நண்பருக்காக ப்ரொமோ ஃப்ளாஷ் வீடியோவை உருவாக்கினார். அதற்காக கட்டணம் எதுவும் வாங்கியதாக அவருக்கு நினைவில்லை. பள்ளிப்படிப்பை முடித்தவுடன் ப்ரோக்ராமிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் ஜிஷ்ணு. JEE போன்ற தேர்வுகள் குறித்து அறியாததால் அவர் அதை எழுதவில்லை. ஹார்ட்வேரில் விருப்பம் இல்லாத காரணத்தால் குட்டிபுரம் MES பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் சேர்ந்தார். 

(கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் இடம்பெற்றிருக்கும். ஆனால் தகவல் தொழில்நுட்பத்தில் சாஃப்வேரில் மட்டுமே கவனம் செலுத்தப்படும்.) அவரது வகுப்பில் இருந்த பலரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இடம் கிடைக்காத காரணத்தினாலேயே தகவல் தொழில்நுட்பப் பிரிவை தேர்ந்தெடுத்தனர் என்று நினைவுகூர்ந்தார்.

ஜிஷ்ணுவின் கல்லூரியில் ஓபன் சோர்ஸ் மென்பொருள் கம்யூனிட்டி இருந்தது. இதற்கு பேராசிரியர்களின் ஆதரவும் இருந்தது. FOSS-ன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். ஒரு முறை திருவனந்தபுரத்தில் ரிச்சர்ட் ஸ்டால்மேனை (Richard Stallman – GNU ப்ராஜெக்ட் மற்றும் ஃப்ரீ சாஃப்ட்வேர் ஃபவுண்டேஷன் நிறுவனர்) சந்தித்தார். கல்லூரி பாடங்களை சிறப்பாக கற்கவில்லை எனினும் FOSS-ல் வேகமாக வளர்ச்சியடையத் தொடர்ங்கினார்.

“எங்களால் சுயமாக LINUX Kernel தொகுக்க முடிந்தது. இதற்கு முன்னால் LINUX-ஐ நிறுவுவது அதிகம் சிக்கல் நிறைந்ததாக இருந்தது. இதற்காக ஒருவர் சோர்ஸ் கோட் பெற்ற பின்னரே ஒருவர் அதை தொகுக்கவேண்டும்.”

கற்றலை நடைமுறைப்படுத்துதல்

கல்லூரியின் முதலாம் ஆண்டில் இருந்தபோது ஜிஷ்ணு C ப்ரோக்ராமிங் வலைப்பதிவைத் துவங்கினார். வகுப்பிலும் வெளியிலும் அவர் கற்றறிந்தவற்றை இதில் பதிவேற்றம் செய்தார். அவரது வலைப்பதிவை கூகுள் Adsense-ல் இணைத்தார். இது அவருக்கு ஆறு மாதங்களில் 100 டாலர் ஈட்டித் தந்தது. அதிகம் பேரை ஈர்க்கவும் விளம்பரம் மூலமாக அதிக பணம் ஈட்டவும் அதிக ப்ரோக்ராம்களை எழுதவும் இது உந்துதலாக அமைந்தது. ஆனால் இந்த திட்டம் நினைத்தபடி செல்லவில்லை. அடுத்த ஆறு மாதங்களிலும் 100 டாலர் மட்டுமே ஈட்டினார். இதே போல் ஆறு மாதங்களாக கடந்தது. C ப்ரோக்ராமிங் என்று தேடும்போது முதல் பக்கத்தில் அவரது வலைப்பதிவு வரவேண்டும் என்கிற நோக்கத்துடன் கல்லூரியின் இறுதியாண்டு வரை வலைபதிவைத் தொடர்ந்தார் ஜிஷ்ணு. Adsense வாயிலாக கிடைத்த பணத்தை கொண்டு தனது முதல் லாப்டாப்பை வாங்கினார். 

அவரது கல்லூரியில் நடைபெற்ற இலவச சாஃப்ட்வேர் மீட்அப்பில் ஒன்றில் ’ப்ளெண்டர்’ (Blender) அறிமுகப்படுத்தினார். இது ஒரு ஓபன் சோர்ஸ் 3D கண்டெண்ட் உருவாக்கும் மென்பொருளாகும். எந்த ஒரு ப்ராஜெக்டிற்கும் உதவும் வகையிலான 3D மாடல்களை சேமித்து வைக்க உதவும் லைப்ரரியை உருவாக்க உதவும் மற்றொரு add-on உருவாக்குவதிலும் பங்கெடுத்தார். அந்த நேரத்தில் Ubuntu ஒரு செயலி ஸ்டோரை உருவாக்கிக்கொண்டிருந்தது.

முதலிடம் வகிக்கும் செயலிகளுக்கு பரிசளித்து வந்தது. இது ஜிஷ்ணுவின் ஆர்வத்தைத் தூண்டியது. அவர் விக்கீபீடியாவிற்காக ஆஃப்லைனில் இயங்கக்கூடிய ஒரு டெஸ்க்டாப் க்ளையண்டை உருவாக்கினார். இதை உருவாக்க Python மற்றும் GTK பயன்படுத்தினார். பயனாளிகளின் வாக்கெடுப்பு அடிப்படையில் முன்னணி வகித்த 30 செயலிகளில் இவர் உருவாக்கிய செயலி இடம்பெற்றிருந்தது.

ஜிஷ்ணுவின் கல்லூரியில் இன்டர்னல் தேர்வெழுத குறைந்தபட்சம் 80 சதவீத வருகைப்பதிவு இருக்கவேண்டும் என்பது விதி. மாணவர்கள் வருகைப்பதிவு குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள கல்லூரியின் வலைதளத்திற்கு சென்று பார்க்கவேண்டும். அவரது நண்பர்களில் ஒருவர்,

“கல்லூரி வலைதளத்திற்குள் லாக் ஆன் செய்யாமலேயே மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தகவல்கள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்,” என்றார்.

விடுமுறை நாட்களுக்கு சற்று முன்பாக நடந்தது இந்த உரையாடல். நீண்ட நாட்களாக Python கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்பிய ஜிஷ்ணுவிற்கு இது சரியான வாய்ப்பாக அமைந்தது. கல்லூரி வலைதளத்திற்கும் நுழைந்து ஒரு மாணவரின் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி லாக் இன் செய்து வருகைப்பதிவைத் தெரிந்துகொள்ள ஒரு க்ராலர் (Crawler) எழுதினார் ஜிஷ்ணு குறுஞ்செய்தி அனுப்ப உதவும் சில வலைதளங்களை கண்டறிந்தார். ஆனால் பெரும்பாலான தளங்களில் API இல்லை. மேலும் கட்டணம் செலுத்தவேண்டியிருந்தது. குறுஞ்செய்தி சேவை வழங்குபவர்களை லாக் இன் செய்யவும் குறுஞ்செய்தி அனுப்பவும் அவரே ஒரு ப்ரோக்ராம் எழுதினார். வருகைப்பதிவை எடுப்பதற்கும் குறுஞ்செய்தி அனுப்புவதற்குமான இரண்டு ப்ரோக்ராம்களும் அந்த வலைதளத்தின் API-யாகவே செயல்பட்டது.

ஜிஷ்ணு இரண்டையும் இணைத்ததால் தேவையான விளைவு கிடைத்தது. கல்லூரிக்கு திரும்பியதும் பதிவு படிவத்துடன்கூடிய ஒரு வலைதளத்தை உருவாக்கி மாணவர்களின் யூசர் நேம், பாஸ்வேர்ட், மொபைல் நம்பர் ஆகியவற்றை சேகரித்தார். ஒவ்வொரு நாள் காலையும் இந்த ப்ரோக்ராம் இயங்கி மாணவர்களுக்கு வருகை குறித்த தகவல்களை அனுப்பியது. நாள் முழுவதும் வகுப்பறைக்கு செல்லாமல் வகுப்பை புறக்கணித்திருந்தால் அவர்களது வருகைப்பதிவு எத்தனை சதவீதம் உள்ளது என்கிற தகவல்களை குறுஞ்செய்தி காட்டிவிடும்.

கல்லூரிக்கு செல்லவேண்டுமா என்பதைத் தீர்மானிக்க மாணவர்களுக்கு உதவும். உதாரணத்திற்கு 79 சதவீத வருகைப்பதிவே உள்ளது என்கிற தகவலைப் பார்க்க நேர்ந்தால் நீங்கள் வகுப்பிற்கு செல்லலாம். 80 சதவீதத்திற்கும் மேல் பதிவு இருந்தால் நீங்கள் செல்வதா வேண்டாமா என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம். கல்லூரியின் 1,200 மாணவர்களில் 1000 மாணவர்கள் இந்த சேவையைப் பெற பதிவு செய்தனர். விரைவில் கேரளாவில் செய்தித்தாள்களிலும் வானொலியிலும் ஜிஷ்ணு குறித்து பேசப்பட்டது. உறவினர்கள் மற்றும் அருகிலிருப்போர் மூலம் அறிந்த ஜிஷ்ணுவின் பெற்றோர் அதற்குப் பிறகு அவரை எந்தவித கேள்வியும் கேட்கவில்லை. கல்லூரிப் படிப்பை முடிக்க ஏழரை ஆண்டுகள் எடுத்துக்கொண்டபோது கூட அவரது பெற்றோர் எதுவும் கேட்கவில்லை. 

”பட்டம் பெற இதைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்ட ஓரிரு மாணவர்களும் இருக்கிறார்கள்,” என்றார் ஜிஷ்ணு.

கல்லூரியில் நான்காண்டு காலம் முடிந்த பிறகும் ஜிஷ்ணு பட்டம் பெறவில்லை. தேர்வெழுத மட்டும் கல்லூரிக்கு வந்து சென்றார். இதனால் கேம்பஸில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியற்றவரானார். அவர் கூறுகையில், 

“எந்த நேர்காணலையும் நான் எதிர்பார்க்கவில்லை. இறுதியாண்டில் இரண்டு இலக்க எண்களைக் கொண்ட பாடங்களை முடிக்காமல் வைத்திருந்ததால் என்னுடைய நிலை எனக்குத் தெரியும். கிட்டத்தட்ட அடுத்தடுத்த வாரம் ஒரு தேர்வு எழுதவேண்டியிருந்தது.”
image


ஸ்டார்ட் அப் உந்துதல்

ஜிஷ்ணுவின் துறைத் தலைவர் அவரது நண்பரால் கொச்சியில் துவங்கப்பட்ட Ushus டெக்னாலஜிஸ் என்கிற ஸ்டார்ட் அப்பிற்காக ஜிஷ்ணுவையும் அவரது மூன்று நண்பர்களையும் பரிந்துரை செய்தார். இந்நிறுவனம் LINUX சார்ந்த ப்ராஜெக்டில் செயல்பட இருந்ததால் இந்த மாணவர்கள் பொருத்தமாக இருந்தனர். நான்கு பேரும் தேர்வு செய்யப்பட்டனர். மற்ற மூவரும் சேர்ந்துகொண்டபோதிலும் ஜிஷ்ணு வேறு ஒன்றை முயற்சிக்க திட்டமிட்டார். 

FOSS-சை சேர்ந்த அவரது மூன்று நண்பர்கள் ஸ்டார்ட் அப் துவங்குவதில் மும்முரமாக இருந்தனர். இவர்களுடன் இணைந்தார் ஜிஷ்ணு. ஆறு மாதத்திற்குப் பிறகும் அவர்கள் எதையும் செயல்படுத்தவில்லை. அவர்களை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு சில பகுதிநேர ப்ராஜெக்டுகளை எடுத்துக்கொண்டனர். ஜிஷ்ணு நினைவுகூறுகையில்,

”எங்களிடம் நல்ல திட்டங்கள் இருந்தன. இருந்தும் நாட்களை கடத்திக்கொண்டே இருந்தோம். செயல்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இருப்பினும் இதிலிருந்து ப்ரோக்ராமிங், சமீபத்திய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல புதிய விஷயங்களை கற்றுக்கொண்டோம்.”

ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜிஷ்ணு Ushus டெக்னாலஜிஸ் இணைந்துகொண்டார். LINUX ப்ராஜெக்டிற்காக பணியிலமர்த்தப்பட்ட நான்கு பேரும் வேறு பணியில் நியமிக்கப்பட்டிருந்தனர். அவருக்கு அதில் இணைய விருப்பமில்லாததால் அதிலிருந்து விலக முடிவெடுத்தார். 

ஆண்ட்ராய்டுடன் அறிமுகம்

2011-ல் புதிய இந்திய ரூபாய் சின்னம் யூனிகோட்டில் இருந்தது. ஆனால் ஆண்ட்ராய்ட் கீபோர்டில் அது இல்லை. ஆண்ட்ராய்ட் கீபோர்டில் நேரடியாக இணைக்கமுடியாது என்பதால் ஜிஷ்ணு அந்த சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த ROM CynogenMod–ல் இணைத்தார். மேலும் அந்த நேரத்தில் ஆண்ட்ராய்டை அவரே தொகுத்து அவரது ஃபோனில் இயக்கினார். 

ஆண்ட்ராய்ட் சோர்ஸ் கோட் அந்த சமயத்தில் 20 GBயாக இருந்தது. என்னிடம் 256kbps இணைப்பு மட்டுமே இருந்தது. அதை பதிவிறக்கம் செய்ய முழுதாக இரண்டு மாதங்கள் ஆனது. ஜிஷ்ணு இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது ஆண்ட்ராய்டில் ஆர்வம் உண்டானது. LINUX சார்ந்த ஆப்பரேடிங் சிஸ்டத்தை விட ஆண்ட்ராய்ட் பிரபலாகிக் கொண்டிருந்தது. பல FOSS ஆண்ட்ராய்டை சப்போர்ட் செய்தது. 

கூகுள் இரண்டாவது நெக்சஸ் ஃபோனான நெக்சஸ் S (Nexus S) அறிமுகப்படுத்தியபோது ஜிஷ்ணு அமெரிக்காவில் இருந்த அவரது சகோதரரிடம் தனக்கு ஒரு ஃபோன் வாங்கி வரச் சொன்னார். ஏனெனில் ஆண்ட்ராய்டை மற்ற சாதனங்களைக் காட்டிலும் நெக்சஸ் சாதனத்தில் கம்பைல் செய்வது எளிது. ஆனால் இதற்கு ஜாவா தேவைப்பட்டது. இது ஜிஷ்ணுவிற்கு ஒரு தடையாக இருந்தது. அவருக்கு ஜாவா ப்ரோக்ராமிங் லேங்வேஜ் பிடிக்காது. அதற்கான காரணமாக அவர் தெரிவிப்பது, 

1. ஒரு சிறிய விஷயத்தை செய்வதற்கு கூட நீங்கள் பல்வேறு பக்கங்கள் கோட் எழுதவேண்டும்.

2. ஜாவா ப்ரோக்ராம் எழுத உங்களுக்கு IDE தேவைப்படும். இதனால் ஆட்டோசஜஸ்ட் பல்வேறு விஷயங்களை செய்து முடித்துவிடும். இறுதியாக உங்களால் மிகச்சிறிய அளவிலான ப்ரோக்ராமிங் லேங்வேஜ் மட்டுமே கற்றுக்கொள்ளமுடியும்.

அந்த சாதனத்தை பல்வேறு விதமாக தொடர்ந்து ஆராயந்தார். அவரது நெக்சஸ் S ஃபோனை ரூட் செய்து ROM ஃப்ளாஷ் செய்தார். ஹேக் செய்வது குறித்து அவர் வருத்தப்படுவதில்லை. ஏனெனில் ஒவ்வொரு முறையும் எப்படியோ மீட்டுவிடுவார். ஒரு முறை சாதனத்தை ஃபார்மாட் செய்து பூட் பார்டிஷனை டெலிட் செய்துவிட்டார். இவ்வாறு செய்துவிட்டால் சாதனத்தை பூட் செய்ய இயலாது. அந்த நிலையிலும்கூட அவர் மீட்டெடுத்தார். 

இந்திய மொழிகளுக்கான கீபோர்ட் – துவக்கம்

CynogenMod-க்கு எப்படியாவது பங்களிக்க நினைத்து ரூபாய் சின்னத்திலிருந்து 2012-ல் ஜிஷ்ணுவிற்கு Indic Keyboard யோசனை வந்தது. அப்போது இந்திய மொழிகளில் ஹிந்தி மட்டுமே மொபைல் ஃபோனில் (ஆண்ட்ராய்ட் சார்ந்தது) சப்போர்ட் செய்யப்பட்டது. ஃபோன்களில் இந்திய மொழிகளின் எழுத்துக்கள் இல்லை என்பதையும் கீபோர்ட் அல்லது டெக்ஸ்டை இணைத்தாலும் சாதனத்தில் அதை பார்க்கமுடியவில்லை என்பதையும் உணர்ந்தார். அவர் விவரிக்கையில்,

”இந்த எழுத்துக்களைக் காட்டும் பின்தள என்ஜின் இந்திய கேரக்டர்களை சப்போர்ட் செய்யவில்லை. உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் ஒவ்வொரு எழுத்தும் தனிப்பட்டது. இரண்டு அல்லது மூன்று எழுத்துக்களை இணைத்து ஒரு எழுத்து உருவாவதில்லை. ஆனால் மற்ற இந்திய மொழிகளில் அவ்வாறு இல்லை.”

ஆண்ட்ராய்ட் அதன் ஆப்பரேடிங் சிஸ்டத்தின் 4.3 வெர்ஷனில் இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யத் தொடங்கியது வரை அவர் காத்திருந்தார். முதலில் மலையாளம் கீபோர்ட் உருவாக்கினார். அதன் பிறகு தமிழையும் உருவாக்கி கீபோர்ட் செயலியை ப்ளே ஸ்டோரில் வெளியிட்டார். ஒரு வருடத்தில் இந்த செயலியில் 5000 பதிவிறக்கம் மட்டுமே செய்யப்பட்டது. இருப்பினும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜிஷ்ணு கூறுகையில்,

அப்போது மற்ற கீபோர்ட்களும் கிடைத்தன. ஆனால் அவை ஒரு மொழியின் அனைத்து எழுத்துக்களை பட்டியலிடும் பணியை மட்டுமே செய்யும். ஆனால் எழுத்துக்களை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கைகளில் UI மற்றும் UX தரமாக இல்லை. பின்னணியில் எந்தவித அறிவியலும் இல்லை. அப்போதைய கீபோர்ட்களை உருவாக்கியவர்கள் இந்த மொழிகளை பேசுபவர்கள் அல்ல என்பது தெளிவாக தெரிந்தது.

ஜிஷ்ணு சில செட் ஸ்டேண்டர்ட்ஸ் பயன்படுத்த விரும்பினார். அப்போது பல்வேறு பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் இந்திய அரசாங்கத்தால் இந்திய ஸ்க்ரிப்டுக்கான டிக்ரீட் ஸ்டேண்டர்ட் கீபோர்ட் அவுட்டான இன்ஸ்க்ரிப்ட் (Inscript – இந்திய ஸ்க்ரிப்ட் என்பதன் சுருக்கம்) குறித்து அறிந்தார். சிறிய மாற்றத்துடன் இந்த ஸ்டேண்டர்ட்ஸை பின்பற்றினார் ஜிஷ்ணு. 

இன்ஸ்க்ரிப்ட் மொபைலுக்காக வடிவமைக்கப்பட்டதல்ல. டைப்ரைட்டர்களுக்காக திட்டமிடப்பட்டது என்பதை வெகு விரைவில் உணர்ந்தார். டெஸ்க்டாப்பைவிட மொபைல் ஸ்க்ரீன் அதிக சிக்கல் நிறைந்தது. சராசரியாக விரலால் டைப் செய்யும் விதத்தில் இருந்தால்தான் அனைவரும் பயன்படுத்தமுடியும். LINUX டெஸ்க்டாப்பின் ஃபோனெடிக் லேஅவுட் குறித்து அறிந்தார். அதேபோல மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளுக்காக மேலும் இரண்டு லேஅவுட்களை உருவாக்கினார்.

இண்டிக் ப்ராஜெக்ட் பெரிதாகவும் சிறப்பாகவும் செயல்பட்டது ஜிஷ்ணுவின் இண்டிக் கீபோர்ட் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய மொழிகளை டெஸ்க்டாப் மற்றும் மொபைலில் சப்போர்ட் செய்வதற்கான கேரள அரசின் ப்ராஜெக்டிற்கு ஜிஷ்ணுவின் இண்டிக் கீபோர்ட் தேர்ந்தெடுக்கப்பட்டது. இண்டிக் கீபோர்டை PR-ருடன் மறுபடி வெளியிட்டபோது நிலைமை வேறுபட்டிருந்தது. வெளியிட்ட முதல் வருடத்தில் இருந்த பதிவிறக்கத்தைவிட அதிகமான பதிவிறக்கங்கள் ஒரே நாளில் கிடைத்தது. புதிய கீபோர்ட் முக்கிய மொழிகளில் 12 இந்திய மொழிகளை சப்போர்ட் செய்தது. அந்த நேரத்தில் பல்வேறு மொழிகளை எந்த கீபோர்டும் சப்போர்ட் செய்யவில்லை.

”கேரள அரசு வெளியிட்டு கீபோர்ட் குறித்து அதிகம் தெரியவந்ததால் என்னுடைய ஆர்வம் மேலும் அதிகரித்தது.”

ஆரம்பத்தில் பல்வேறு மொழிகளின் பயன்பாட்டையும் லேஅவுட்டையும் புரிந்துகொள்வதில் ஜிஷ்ணு அதிக நேரம் செலவிட நேர்ந்தது. ஏனெனில் பல மொழிகளை அவருக்கு படிக்கத் தெரியாது. கீபோர்ட்’ஸ் கோர் கோட் ஒரு ஆண்ட்ராய்ட் ஓபன் சோர்ஸ் ப்ராஜெக்ட். இண்டிக் சார்ந்த ப்ராஜெக்டிற்காக வலைதளம் சார்ந்த லைப்ரரியை உருவாக்கினார். இந்த டெஸ்க்டாப் லைப்ரரியை மொபைலிலும் இணைத்தார். ஜிஷ்ணுவிற்கு ஜாவா தெரியவில்லை எனினும் ஹேக் செய்வது குறித்து தெரிந்திருந்தார்.

இண்டிக் கீபோர்டில் செய்யவேண்டிய பணிகள் இன்னும் அதிகம் உள்ளது என்று ஜிஷ்ணு நம்புகிறார். இதனால் வேறு எந்த ப்ராஜெக்டிலும் பணிபுரியவில்லை.

image


கூகுள் கதை

ஆரம்பத்தில் கூகுள் ஓபன் சோர்ஸ் கீபோர்டில் ஹிந்தி மட்டுமே இருந்தது. கூகுள் ஹிந்தி இன்புட் என்கிற ஹிந்தி டைப்பிங் டூலை உருவாக்கினர். கூகுள் மற்ற மொழிகளில் ஈடுபடும் என்று ஜிஷ்ணு எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இண்டிக் கீபோர்ட் இரண்டு வருடங்களாக இயங்கி வருகிறது. இதுவரை கூகுள் இதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் 2014-ல் கூகுள் அவர்களது செயலியின் பெயரை ’கூகுள் இண்டிக் கீபோர்ட்’ என்று மாற்றியபோது ஜிஷ்ணு அதிர்ந்தார். ஒரு வாரத்தில் ’இண்டிக்’ என்ற தேடலின் முடிவுகள் அனைத்தும் ’கூகுள் இண்டிக் கீபோர்டையே’ முதலில் காட்டியது.

நெக்சஸ், ஒரு சில ஸ்மார்ட்ஃபோன்கள், ஆண்ட்ராய்ட் டிவி போன்றவற்றில் கீபோர்டை முன்னரே நிறுவியது கூகுள். இப்படித்தான் ‘இண்டிக் கீபோர்டை’ விட கூகுளுக்கு அதிகமான பதிவிறக்கம் கிடைத்தது. 

”எல்லா தேடல் முடிவுகளிலும் கூகுளே முதலில் இருந்ததால் இண்டிக் கீபோர்டில் பணியைத் தொடரவேண்டாம் என்று நினைத்தேன். எங்களைவிட சிறந்த ப்ராடக்ட் அவர்களிடம் இருப்பது எனக்குத் தெரியும். அங்கே பல முழு நேர பொறியாளர்கள் ப்ராடக்டில் பணிபுரிந்து வருகின்றனர். நான் தனியாக பகுதி நேரமாக பணிபுரிகிறேன். சிறந்த UX பொறியாளர்கள் அவர்களிடன் உள்ளனர். எனக்கு UX-ன் அடிப்படை கூட தெரியாது.”

கூகுள் அதன் கீபோர்டை அறிமுகப்படுத்திய பிறகு கடந்த இரண்டு வருடங்களாக இண்டிக் கீபோர்டில் ஜிஷ்ணுவின் பணி மெதுவாகவே முன்னேறி வருகிறது. எனினும் கடந்த சில மாதங்களாக ஃப்ரீ சாஃப்ட்வேர் தத்துவத்தை ஆதரிக்கும் பலரை ஜிஷ்ணு சந்தித்தார். ஜிஷ்ணு தன் பணியை தொடரவேண்டும் என்று அவர்கள் அனைவரும் வலியுறுத்தினர். 27 வயது ஜிஷ்ணுவிற்கு இவர்களது வார்த்தைகள் உந்துதலாக அமைந்தது. 

கூகுள் சம்மர் ஆஃப் கோட் மெண்டர் சம்மிட்டிற்கு சென்றபோது பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் மொபைல் போனில் ப்ரொப்ரைட்டரி கீபோர்டை இன்ஸ்டால் செய்யவேண்டாம் என்பது குறித்தும் சிந்திக்கும் மக்களை சந்தித்தார். அவர்களது சிந்தனைகள் ஜிஷ்ணுவின் சிந்தனையுடன் ஒத்திருந்தது. இவர்களுடனான உரையாடல்கள் கீபோர்டில் மேலும் பணியை தொடர அதிக ஊக்கமளித்தது. 

தற்போதைய நிலை மற்றும் பிழை (bugs)

தற்போது இண்டிக் கீபோர்ட் 23 இந்திய மொழிகளையும் 54 லேஅவுட்களையும் சப்போர்ட் செய்கிறது. இண்டிக் கீபோர்டை அப்டேட் செய்யும் பணியில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார் ஜிஷ்ணு. அடுத்த மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார். இந்த அப்டேட்டில் அதிக மொழிகளையும் இமோஜிக்களையும் இணைக்கும் திட்டமும் அவரிடம் உள்ளது.

ஸ்மார்ட்ஃபோன்கள் உருவாக்கப்படும் விதத்தினாலேயே சில பிழைகள் (bug) ஏற்படுகிறது என்கிறார் ஜிஷ்ணு ஆண்ட்ராய்ட் இந்திய மொழிகளை சப்போர்ட் செய்தாலும் சில தயாரிப்பாளர்கள் அதை நீக்கிவிட்டனர். அப்படிப்பட்ட ஒரு பிழை குறித்து ஜிஷ்ணு கூறுகையில், “உதாரணத்திற்கு சமீபத்தில் One Plus 3T, 7.1.1 அப்டேட் கிடைத்தபோது ஃபோனில் மலையாள மொழி சப்போர்டை நீக்கியது. மலையாளத்தில் மூன்று எழுத்துக்களை ஒன்றிணைப்பதன் மூலம் உருவாகும் சிறப்பு எழுத்து Atomic Chillu. ஆனால் யூனிகோடில் இதற்கு ஒரே எழுத்து உள்ளது. இரண்டும் ஒன்றையே காட்டவேண்டும். வெவ்வேறு விதமாக காட்டினால் அது பிழை.”

பிழைகளை சரிசெய்ய அந்த சாதனங்களை ஜிஷ்ணு ஆராய வேண்டியிருந்தது. பெரும்பாலான நேரங்களில் அவருக்கு அந்த சாதனம் கிடைப்பதில்லை. அவரது நண்பரை சார்ந்திருந்தார். அவர்களிடம் அந்த குறிப்பிட்ட சாதனம் இருந்தால் மட்டுமே அவரால் சரிசெய்ய முடியும். அவர் கூறுகையில்,

உள்ளூர் மொழி தொழில்நுட்பம் ஓபன் சோர்ஸாக இருக்கவேண்டும் என்று நம்புகிறேன். ஒரு கம்யூனிட்டியாக முன்னேறவேண்டுமானால் உங்களுக்கு சோர்ஸ் கோர்ட் தேவைப்படும். சில பெரு நிறுவனங்கள் தங்களது செயலியில் இண்டிக் கீபோர்டை இணைக்க ஜிஷ்ணுவை அணுகினர். அது ஒரு சிஸ்டம் கீபோர்ட் இன்புட் முறை என்பதால் கீபோர்டை செயலியில் இணைக்க முதலில் ஒரு லைப்ரரியாக மாற்றவேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் இதற்காக முயற்சி செய்வதைக் காட்டிலும் தயார்நிலையிலிருக்கும் உடனடி தீர்வையே விரும்புகின்றனர் என்பதை ஜிஷ்ணு உணர்ந்தார். ஜிஷ்ணு API உருவாக்கும் பணியில் ஈடுபட விரும்பினாலும் தற்போது அதற்கு முன்னுரிமை அளிக்க அவர் விரும்பவில்லை.

முழுநேரப் பணி

Ushus டெக்னாலஜிஸ்க்கு பிறகு ஜிஷ்ணு பெங்களூருவில் இருக்கும் கேம் உருவாக்கும் ஸ்டார்ட் அப்பான Hashcube-ல் சேர்ந்தார். இந்நிறுவனம் ஜாவா பயன்படுத்தி வலைதள கேம் மற்றும் மொபைல் கேம் உருவாக்குகிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் iOS இரண்டிற்கும் ஒரே கோட் பேஸ் கொண்டு இயங்கும் இந்த ஓபன் சோர்ஸ் கேம் என்ஜினில் பணிபுரிந்தார். குறிப்பிட்ட தளம் சார்ந்த கோட் எழுதவேண்டிய அவசியமில்லை என்பதால் அதன் இண்டெர்னல் குறித்து தெரிந்துகொள்ளவேண்டாம். இதுதான் கேம் க்ளோஷரின் தனித்துவம். சிறிது காலம் சென்றதும் கேம் க்ளோஷரில் Hashcube முக்கிய பங்களித்தது.

நான்கு வருடங்கள் கழிந்ததும் ஜிஷ்ணு ஹேஷ்க்யூப்பை விட்டு வெளியேறினார். தற்போது Taro என்கிற அமெரிக்காவைச் சேர்ந்த உணவு விநியோக ஸ்டார்ட் அப்பில் பணிபுரிகிறார். நிறுவனங்களில் தொழில்நுட்ப வல்லுநர்களின் இன்றைய வளர்ச்சியை ஜிஷ்ணு ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் ஜூனியர் பொறியாளராக சேர்கின்றனர் பின்னர் சீனீயர் பொறியாளராகவும், குழு தலைவராகவும் வளர்ந்து அதன் பின்னர் மேலாளராக பதவி உயர்வு பெறுகின்றனர். மேலாளராக பொறுப்பேற்க அவர் விரும்பவில்லை. தினமும் கோட் செய்யவே விரும்பினார். 

“நீங்கள் நிறுவனங்களில் முன்னேற ஒரே வழி மேலாளர் பதவி வகிப்பதுதான். அது நியாயமல்ல என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஏன் ஒன்றை புதிதாக உருவாக்கி அதில் மென்மேலும் சிறந்து விளங்கக்கூடாது? என்று கேட்கிறார்.

மறுபக்கம்

மூன்று வருடங்களுக்கு முன்னால் சைக்கிள் ஓட்டத் தொடங்கினார் ஜிஷ்ணு. அவருக்கு சைக்கிள் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். மற்ற எதையும் விட இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். இண்டிக் கீபோர்டை வெளியிடுவது தாமதமாவதுகூட சைக்கிள் ஓட்டும் ஆர்வத்தினால்தான் என்று நினைக்கிறார். 

“ஓய்வு நேரத்தை கோடிங் செய்வதில் செலவிட்ட நான் இப்போது சைக்கிள் ஓட்டுவதில் செலவிடுகிறேன். எவ்வளவு உறுதியுடன் சவாரி செய்யமுடிகிறது என்று பார்ப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். அதிக தூரம் சவாரி செய்வது பிடித்துள்ளது. சில சமயம் பல நாட்கள் கூட சவாரி செய்கிறேன்.”

Add to
Shares
25
Comments
Share This
Add to
Shares
25
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக