பதிப்புகளில்

கல்வி கற்பதை, கற்பித்தலை கற்கண்டாக இனிக்க வைக்கும் "சயா லேர்னிங் லேப்ஸ்"

YS TEAM TAMIL
23rd Nov 2015
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

தற்போது இந்தியாவில் கல்வித்துறை வளர்ந்து வருகின்றது. அடுத்த 5 ஆண்டுகளில் 1.5 மில்லியன் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், இந்தியா கல்வி சார்ந்த தொழில் நுட்ப முனைவுகளுக்கு, ஒரு இலாபகரமான சந்தையாக திகழ்கிறது. வாய்ப்புகள் உற்சாகத்தை அளித்தாலும், சவால்களுக்கும் இத்துறையில் குறைவில்லை. கல்வியாளர்கள், தொழில்முனைவோர், மற்றும் முதலீட்டாளர்கள் ஒன்றை நன்றாக உணர்ந்துள்ளனர். அது, தொழில்நுட்பம் அனைத்து நேரங்களிலும் எதிர்பார்கப்படும் முடிவுகளை தருவதில்லை. பலாபலன் மீதும், கற்றலுக்கு நல்ல வழி மீதும் கவனம் செலுத்தி, "சயா லெர்னிங் லேப்ஸ்" (Zaya Learning Labs) தனது ஒவ்வொரு அடியையும் கவனமாகவும் அதே நேரம் திடமாகவும் வைத்து வளர்ந்து வருகின்றது.

image


மும்பையில் 2013ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம், கல்வி இடைவெளியை குறைத்து, உலகத்தரம் வாய்ந்த கல்வியை ஒதுக்கப்பட்ட மக்களுக்கும் அளிக்க முயற்சித்து வருகிறது. ஐஐஎமில் படித்த சோமா வாஜ்பாய் மற்றும் முன்னால் சிஸ்கோ பொறியாளர் நீல் டிசோசா இணைந்து துவங்கியுள்ள இந்நிறுவனம், தற்போது 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 20000க்கும் அதிகமான குழந்தைகளுக்கு கல்வியளிகின்றது.

சிஸ்கோவில் பணியாற்றிய போது, நீல் ஒதுக்கப்பட்டோருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டார். தற்போது தனது பார்வையை, உலகின் தொழில்நுட்பம் பரவாத இடங்களில் உள்ள குழந்தைகளுக்கும், தொழில்நுட்பம் பரவியுள்ள இடங்களில் உள்ள குழந்தைகளுக்கும் உள்ள கல்வி இடைவெளியை குறைக்கும் நோக்கத்தில் பதித்துள்ளார். சயா என்ற பெயர் அவரது மங்கோலியா மாணவன் ஐருண் சயா வின் பெயரில் இருந்து தருவிக்கப்பட்டது. அவர் பலதடைகளை கடந்து, மங்கோலியா வின் உள்ளே அமைந்துள்ள ஒரு அனாதை ஆசிரமத்திற்கு டிஜிட்டல் புத்தகங்களை வழங்கியுள்ளார்.

தற்போது இந்தியாவில் நிலையாக கால்பதித்த பின்பு இந்நிறுவனம் சாம்பியா மற்றும் இதர சர்வதேச சந்தைகளை நாடிச்செல்கின்றது. சயா வின் பொருட்கள், தொழில்நுட்பத்தின் தொடர்புக்கு அப்பால் உள்ள பில்லியன் கணக்கான மானவர்களுக்கானது. சாதாரண வகுப்பறைகள் போல் அல்லாமல், சயா, சுழற்சி முறையில் செயல்படுகின்றது. அதற்கு "ப்லென்டெட் லெர்னிங்" (Blended Learning) என பெயரிட்டுள்ளனர். இதன் சிறப்பு, கல்வி கற்கையில் ஆசிரியர் மற்றும் மாணவர் இருவரின் பங்கும் சரிசமமாக இருக்கும். சாதாரண வகுப்பறைகளில் அறிவு ஒரே திசையில் பயணிக்கும். ஆனால் இவ்வகை கல்வி கற்பிக்கும் முறையில், டேப்லட்களில் பாதி கற்றும், ஆசிரியரிடமிருந்து கற்றும், மேலும் சகமாணவர்களோடு இணைந்தும் கற்கின்றனர். மேலும் அவர்களுக்கு இயன்ற வேகத்திலேயே கற்கின்றனர். இதனால், அவர்கள் தரம் மேம்படுகின்றது.

சயா தொழில்நுட்பம்

தரமான டிஜிட்டல் தகவல்கள் இணையத்தில் இருந்தாலும், கல்விச் சங்கிலியின் கடையில் உள்ள மாணவர்கள் அதனால் பயனடைவதில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன; இணைய இணைப்பு சரியாக இல்லாமல் இருப்பது, உத்வேகம் இல்லா ஆசிரியர்கள், விட்டு விட்டு கிடைக்கும் மின்சாரம், இணைய இணைப்பு கட்டணம். எங்கள் தயாரிப்பு இப்படிபட்டஇன்னல்களை சந்திக்கும் சமுதாயதிற்கு உதவுகின்றது. எங்கள் "கிளாஸ் கிலௌட்" தயாரிப்பு இப்படிப்பட்ட இன்னல்கள் சந்திக்கின்ற பள்ளிகளுக்கு உதவும் என்கிறார் அவர்.

சயாவின் இத்தயாரிப்பு எளிதில் எடுத்துச்செல்லகூடிய வகையில் அளவில் சிறியதாக, குறிப்பிட்ட வகுப்பறைக்கு ஏற்றவாறு, கம்பிதொடர்பு இல்லா சாதனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வேண்டிய கல்வி உள்ளடக்கத்தை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.

மேலும் இதில் பதியப்பட்டுள்ள மென்பொருள், பாடங்களை அளிப்பதோடு நில்லாமல், அதன் உபயோகம், கல்வி கற்கும் மாணவனிடம் எவ்வாறு உள்ளது என்பதையும் பதிவு செய்கின்றது. இதன் மூலம், மாணவனின் தேவைக்கு ஏற்ப பாடம் அமைந்துள்ளதா என்பதையும், ஆசிரியர் கண்டறிய இயலும். இதில் மேலும் சிக்கல்களாக இருப்பது, பாடங்களை தயாரிப்போரை கண்டறியும் பணி மற்றும், இந்தியாவின் கால அட்டவணைக்கு ஏற்ப இயங்குவது ஆகியவை. இவர்கள் முயற்சியின் மூலம் கல்வி இடைவெளி வெற்றிகரமாக குறைக்கப்பட்டு வருகிறது.

image


சயாவில் தற்போது முதலீடு செய்திருப்பது, "பியர்சன் அஃபர்டபிள் லெர்னிங் ஃபண்ட்" எனும் பியர்சன் நிறுவனத்தை சார்ந்த முதலீட்டு நிதியாகும். இது வளரும் நாடுகளில் உள்ள கல்வி சார்ந்த தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து வருகிறது. மேலும் பவ்டோஷ் வாஜ்பாய் பார்க்கிலேஸ் நிறுவனத்தில் உலகளாவிய ஆராய்ச்சியின் நிர்வாக இயக்குனராக இருப்பவர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

image


சயா நிறுவனத்தின் கலாச்சாரம் மற்றும் விரிவாக்கம்

மற்ற தொழில் முனைவுகள் போல, இதில் உள்ளவர்கள் தங்கள் இருவதுகளின் மத்தியில் உள்ளனர். நீல் தனது இளைஞர் படையை வளர்ச்சியின் காரணமாக கூறுகிறார். " எங்களிடம் சில அதிபுத்திசாலிகள் உள்ளனர். அவர்கள் பல மில்லியன் மக்களின் வாழ்கையில் ஒரு மாற்றம் கொணரும் நோக்கத்தில் உழைத்து வருகின்றனர். நான் கல்வியின் போக்கையே மக்களின் நன்மைக்காக மாற்றும் நோக்கத்தோடு உழைக்கும் நபர்களோடு வேலைபார்ப்பதில் பெருமைபடுகின்றேன்" என்கிறார் அவர்.

சென்ற வருடம் அவர்கள் அணியின் எண்ணிக்கை 5 இல் இருந்து 30 ஆகியுள்ளது. சயா ஒரு தனித்தன்மை வாய்ந்த கல்வி மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் நிறுவனம். புது முயற்சிகளை புகுத்தி, உலகெங்கும் உள்ள கல்வி இடைவெளியை குறைப்பதற்கே இவர்கள் தீர்வு தேடி வருகின்றனர். எனவே, எதிர்காலத்தில் கல்வி சார்ந்த தொழில் நுட்பத்தில் முன்னோடியாக உள்ள ஒரு நிறுவனத்தை தற்போது நீல் ஒருங்கிணைத்து வருகின்றார் எனக் கூறலாம்.

image


போட்டியாளர்கள்

சயா போன்று இதே தளத்தில் இயங்கும் மற்ற நிறுவனங்களை பார்த்து விடலாம். முதலில் "எஜுகார்ட்" : இந்தியாவில் உள்ள பல பயிற்சி மையங்கள் அளிக்கும் படிப்புகளை மதிப்பிடும் வசதியாக ஆன்லைனில் செயல்பட்டு வருகிறது. அடுத்தது "ஐநர்ச்சர் எஜுகேஷன் சொல்யுஷன்" இது ஆன் லைன் மற்றும் ஆப் லைனில் கற்பித்து வருகின்றது. அடுத்தது மெரிட்நேஷன்.காம். இத்தளம் பள்ளி செல்லும் மாணவர்களை குறிவைத்து இயங்கி வருகின்றது. ஜேஈஈ மற்றும் மருத்துவ நுழைவுத்தேர்வுகளுக்கு ஆன் லைனில் உதவும் வகையில் மும்பையை சார்ந்த "டாப்பர்" நிறுவனம் இயங்கி வருகின்றது.

எனவே கல்வி என்பது வேகமாக வளர்ந்து வரும் துறையாக உள்ளது. இணையம் மேலும் பலரை சென்றடைகையில், இதன் வேகம் மேலும் அதிகப்படும். எனவே சயா லேர்னிங் லேப் நாம் கவனிக்கத்தக்க ஒரு தொழில் முனைவே.

Zaya வலைத்தளம்

ஆக்கம் : சுஷில் ரெட்டி | தமிழில்: கெளதம் தவமணி

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக