பதிப்புகளில்
நியூஸ் வியூஸ்

அம்பேத்கருக்கு குளிராமல் இருக்க, சிலைக்கு போர்வை அணிவித்த நபர்!

posted on 10th January 2019
Add to
Shares
131
Comments
Share This
Add to
Shares
131
Comments
Share

தற்போது வட இந்தியாவில், கடும் குளிர் மக்களை வாட்டி எடுக்கிறது இதனால் குளிரில் இருந்து தம்மை காக்க பல முயற்சிகளை மக்களை கையாளுகின்றனர். இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அம்பேத்கர் சிலைக்கு குளிராமல் இருக்க, சிலைக்கு போர்வை, தலைக்குக் குல்லா அணிவித்து, வெதுவெதுப்பாக இருக்க சிலைக்கு முன் நெருப்பு மூட்டி வைத்துள்ளார்.

பட உதவி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

போர்வை குல்லா என்று சிலை முழுதாக மூடி இருந்ததை கண்ட அத்தெரு மக்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல் துறையினர், அவ்வாறு செய்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் மன நலம் குன்றியவர் என்பதை அறிந்தனர்.

பட உதவி: டைம்ஸ் ஆஃப் இந்தியா


காவல்துரை அவரை விசாரித்தப்போது, அம்பேத்கார் சிலைக்குக் குளிராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைத் தான் செய்தேன் என அப்பாவியாக தெரிவித்துள்ளார் அவர்.

“எனக்கு அதிகமாக குளிர் எடுத்தது, அம்பேத்கருக்கும் என்னைப் போல் குளிரும் என்பதால் போர்வை போற்றி, சிலைக்கு முன் தீ மூட்டி வைத்தேன்,” என்று கூறி காவல் துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளார். 

பின் தங்கியோருக்கு விடிவெள்ளியாக விளங்கிய அம்பேத்கருக்கு அந்த சமூகத்தினர் வாழும் மக்கள் இடத்தில் சிலை வைத்துள்ளனர். சிலைக்கு போர்வை போட்டவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிந்தப்பின் அச்சமூகத்தினரும் காவல் துறையினரும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மனிதனேயம் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கும் இருக்கிறது என்பதற்கு  இது ஒரு உதாரணம்!

கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின் | தகவல் உதவி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

Add to
Shares
131
Comments
Share This
Add to
Shares
131
Comments
Share
Report an issue
Authors

Related Tags

    Latest Stories

    எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக