பதிப்புகளில்

'வீழ்வேனென்று நினைத்தாயோ' 'ஃப்ரஷ்டெஸ்க்'கின் சாதனை கதை!

27th Dec 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
image


2010-ல் ஃப்ரஷ்டெஸ்க் நிறுவனத்தை தொடங்கியபோது அந்த இளைஞர்களிடம் நம்பிக்கையைவிட தயக்கமே அதிகம் இருந்தது. விளைவு, சில திட்டங்களை முன்கூட்டியே யோசித்து வைத்திருந்தார்கள். ஒன்பது மாதங்களுக்குள் தங்கள் படைப்பு முழுமையடையா விட்டாலோ, 20,000 டாலர்கள் சம்பாதிக்காமல் விட்டாலோ தங்கள் நிறுவனத்தை மூடிவிடுவது என்பது அந்த திட்டங்களுக்குள் ஒன்று. அப்படி நடக்கும் பட்சத்தில் ஃப்ரஷ்டெஸ்க்கை நிறுவியவர்களுள் ஒருவரான கிரீஷ் மாத்ரூபூதம் தன் குழுவோடு வேறு நிறுவனத்தில் பணியில் சேர முடிவு செய்திருந்தார்.

நல்லவேளையாக அந்தத் திட்டம் கடைசிவரை நடைமுறைக்கு வரவே இல்லை. இந்த ஐந்து ஆண்டுகளில் ஃப்ரஷ்டெஸ்க் நிறுவனம் இந்திய சாப்ட்வேர் துறையின் பிரதான முகங்களில் ஒன்றாக திகழ்கிறது. இன்று இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 500 மில்லியன் டாலர்கள். மேலும் Google Capital, Tiger Global, Accel Partners ஆகிய நிறுவனங்களில் இருந்து 94 மில்லியன் டாலர்கள் அளவுக்கு இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. 145 நாடுகளில் கிளை பரப்பி 50,000 வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

2010-ல் ஹேக்கர் நியூஸ் தளத்தில், ஜென்டெஸ்க் என்ற நிறுவனம் தன் சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க இருப்பதையும், அது தொடர்பாக ஒரு பயனாளி தெரிவித்திருந்த எதிர்கருத்துக்களையும் படித்தார் கிரீஷ். சட்டென அந்த வெற்றிடத்தை நாம் நிரப்பினால் என்ன என்ற எண்ணம் அவருக்குள் பளிச்சிட்டது. ஜோஹோ கார்ப் நிறுவனத்தில் தன்னோடு பணியாற்றி வந்த ஷான் கிருஷ்ணமூர்த்தியிடம் தன் யோசனையை தெரிவித்தார். இருவரும் இணைந்து எட்டு மாத காலத்தில் தங்கள் ப்ரோட்டோடைப்பை உருவாக்கினார்கள். க்ளவுட் டெக்னாலஜியான அது, வாடிக்கையாளரின் போன்கால், இ-மெயில், சமூக வலைதள மெசேஜ்கள் ஆகியவற்றை டிக்கட்களாக மாற்றி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பும் பணியை செய்தது.

ஜுன் 2011 இந்த நிறுவனத்தின் வரலற்றில் ஒரு முக்கியமான மாதம். SaaS-ஐ அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியாவின் அட்வெல் கல்லூரி முதல் வாடிக்கையாளராய் ஆனது. தங்கள் நிறுவனத்தை உலக அளவில் எடுத்துச் செல்லவேண்டும் என்பதில் தொடக்கத்திலிருந்தே உறுதியாக இருந்த இந்த குழு ஆன்லைன் வழியாக நிறைய வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டது. அதே மாதத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய BizSpark சவாலில் கலந்துகொண்டு வென்றது. அந்த ஆண்டு ஆகஸ்டில் நம்பிக்கைக்குரிய 30 நிறுவனங்களுக்குள் ஒன்றாக நம் இணையதளத்தால் தேர்வு செய்யப்பட்டது ஃப்ரஷ்டெஸ்க்.

image


அடுத்த சில நாட்களிலேயே நூறு வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக வளர்ந்தது.

"தங்கள் வேலையை முழு மனதாக நேசிக்கும் நபர்களைக் கொண்ட ஒரு நிறுவனத்தை உருவாக்க நினைத்தோம். அதில் வெற்றியும் பெற்றுவிட்டோம்" என பூரிப்போடு சொல்கிறார் கிரிஷ்.

500 பேர் வேலை பார்க்கும் இந்த நிறுவனம் சென்னையில் 60ஆயிரம் சதுர அடிப் பரப்பில் பிரமாண்டமாய் அமைந்துள்ளது. 'இங்கு வேலைக்காக ஆட்கள் எடுப்பதில்லை. ஆட்களுக்கு பொருந்தும் வேலையை தருகிறோம்' என்கிறார் கிரீஷ். இந்த கொள்கை அவர்களுக்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. இப்போது சான் பிரான்சிஸ்கோ, லண்டன், சிட்னி ஆகிய நகரங்களில் தங்கள் அலுவலகத்தை திறந்திருக்கிறார்கள் இவர்கள்.

image


இவ்வளவு உயரத்தை தொட்டப்பின்னும் தங்கள் படைப்பில் அதீத கவனம் செலுத்துகிறது இந்த நிறுவனம். "ஒரு உணவகத்தின் வெற்றி அதன் உணவு வகைகளின் சுவையில் இருக்கிறது. அதேபோல் எங்களின் வெற்றி எங்கள் தயாரிப்புகளின் தரத்தில் இருக்கிறது" என்றார்.

இந்த நிறுவனம் ஃப்ரஷ்சர்வீஸ் என்ற ஐ.டி ஹெல்ப்டெஸ்க் ஒன்றையும் நிறுவியிருக்கிறது. மொபிஹெல்ப் என்ற செயலிகளுக்கான பிரத்யேக தளம் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறது. கடந்த ஆகஸ்டில் லைவ் வீடியோ சாட் வசதியை வழங்கும் 1CLICK நிறுவனத்தை வாங்கியுள்ளது. இதன் மூலம் இரு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த வீடியோ சாட், ஸ்க்ரீன் ஷேரிங் ஆகிய வசதிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். கடந்த மாதம் Frilp என்ற நிறுவனத்தையும் வாங்கியிருக்கிறது ஃப்ரஷ்டெஸ்க்.

"வளரும் நிறுவனம் என்ற கட்டத்தை எல்லாம் நாங்கள் தாண்டிவிட்டோம். தற்சமயம் மிகப்பெரிய சந்தையில் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். இந்த வெளியை முழுமையாக பயன்படுத்தி உலகளவில் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்" என்கிறார் கிரீஷ்.

ஆக்கம்- ராதிகா நாயர் | தமிழில்- சமரன் சேரமான்

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக