பதிப்புகளில்

பர்கர் முதல் பாத்ரூம் வரை: எக்கச்சக்க வடிவில் ஆச்சர்ய கார் மியூசியம்!

கார் பிரியர் சுதாகர் கைவண்ணத்தில் உருவாகியுள்ள விதவித கார் வகைகள் கொண்ட மியூசியம் எங்கிருக்கிறது தெரியுமா?

jaishree
23rd Aug 2018
Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share

நீங்க இதுவரை எப்படிப்பட்ட கார்களை பார்த்திருப்பீங்க?

ஒரு காலத்தில் இந்திய சாலைகளை ஆட்சி செய்த அம்பாசிடர் கார், அடிக்கடி ஆங்காங்கே நடைபெறும் வின்டேஜ் கார் ஷோக்களில் கம்பீரமாய் அணிவகுத்து நிற்கும் கிளாசிக் கார்கள். விலையை கேட்டாலே ‘ஆ’ சொல்லும் காஸ்ட்லி கார்கள். இன்னும் பல பிராண்டு கார்களையும் அதன் அப்டேட் வெர்ஷன்களையும் ஓயாமல் போடும் டிவி விளம்பரங்களிலாவது பார்த்திருப்பீர்கள். ஆனால், 

டாய்லெட் வடிவ காரையோ, பர்கர் வடிவ காரையோ எங்கேனும் பார்த்துள்ளீர்களா? ’சுதா கார் மியூசியத்துக்கு’ சென்றால், நாம் அன்றாடம் பார்த்தும், பயன்படுத்தியும் வரும் பொருள்களின் உருவத்தில் கார்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.

பட உதவி : antarik.blogspot.com

பட உதவி : antarik.blogspot.com


சென்டர் ஆப் ஐதராபாத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது ’சுதா கார்ஸ் மியூசியம்’ எனப்படும் அமேசிங் கார் வேர்ல்ட். முகப்பில் ஒரு பெரிய கார் தன்னை காண வந்தோரை வரவேற்பதை போன்று ஒய்யாரமாய் நிற்கிறது. மூன்று பிரிவுகளாய் பிரிக்கப்பட்டுள்ள மியூசியத்தின் மூன்று அறைகளிலும் வின்டேஜ் கார்கள், கிரியேட்டிவ் கார்கள், பைக்குகள் வரிசையாய் நின்று அரங்கத்துக்கு அழகு சேர்க்கின்றன. 

தன் வரலாறு எழுதப்பட்ட தகடுகளை தாங்கிக் கொண்டு நிற்கும் கார்கள் வெறுமனே காட்சிப்படுத்தலுக்காக உருவாக்கப்பட்ட பொம்மை கார்கள் அல்ல, விரட்டென்று ஓடும் கண்டிஷனில் உள்ளவை. ஓல்ட் இஸ் கோல்ட் என்பதை உணர்த்தும் கிளாசிக் கார்களை பார்த்துக் கொண்டே விழி அகன்றபடி மேற்கொண்டு சென்றால், 

‘அட, என்னங்கய்யா இப்படியெல்லாமா’ கார்கள் இருக்கின்றன என்று திகைக்க வைக்கும் வகையில், கட்டில், சோபா செட், கேமிரா, கம்ப்யூட்டர், டாய்லெட், ஹெல்மெட், சிவலிங்கம், ஷூ, கிரிக்கெட் பேட், கத்திரிக்கா மற்றும் டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து என அத்தினி வகையான விளையாட்டு பந்துகளின் வடிவங்களில் உருவாக்கப்பட்ட கார்கள் வரிசையாக நிற்கின்றன. பறக்கும் ராசாளிகளையும், பளபளக்கும் கார்களையும் காதலிப்போருக்கு, மிகப்பெரிய விஷூவல் ட்ரீட் இந்த மியூசியம். ஆனால் என்ன, வெறிக்க வெறிக்க பார்ப்பதற்கு மட்டுமே அனுமதி உண்டு. 
மனைவி மற்றும் மகளுடன் சுதாகர் பட உதவி : டெய்லி மெயில்

மனைவி மற்றும் மகளுடன் சுதாகர் பட உதவி : டெய்லி மெயில்


‘ஆ’ என வாயை பிளக்க வைப்பதுடன் ‘ஆஹா, அசத்தல், அற்புதம், ஆச்சரியம்’, என ‘அ’ வரிசை வார்த்தைகளால் வர்ணிக்க வைக்கும் இன்னும் பல வடிவங்களிலான வாகனங்களை உருவாக்கியவர், சுதாகர் யாதவ். 

வாகனங்களின் மீது கொண்ட தீராக்காதல் மற்றும் வெறித்தன பேஷனால் 14 வயதிலிருந்து வித்தியாசமான வடிவங்களில் கார்களை வடிவமைத்து உருவாக்கி வருகிறார். அனைத்தும் வாகனங்களும் ஃபுல்லி ஹேண்ட்மெட். கார்கள் மட்டுமின்றி கைக்குள் அடங்கக்கூடிய பைக், பத்துபேர் சேர்ந்து தூக்கிவிடக்கூடிய சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில், டபுள் டக்கர் பஸ், உலகிலேயே மிகப்பெரிய மூன்றுசக்கர மிதிவண்டியையும் உருவாக்கியிருக்கிறார். 

41 அடி உயரம் கொண்ட அம்மூன்று சக்கர மிதிவண்டி 'உலகின் மிகப்பெரிய மூன்று சக்கர மிதிவண்டி’ என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
பட உதவி : கெட்டி இமேஜஸ்

பட உதவி : கெட்டி இமேஜஸ்


டெய்லி மெயிலுக்கு அவரளித்த பேட்டியில், 

“எனக்கு 14 வயதிருக்கும் போதிருந்து வித்தியாசமான வடிவங்களில் கார்களை தயாரித்து வருகின்றனர். என் கார்களை பார்க்கும் சிலர், காசை வீணாக்குகிறேன், ரொம்ப எக்ஸ்பென்சிவ் என்று நினைக்கிறார்கள். அக்சுவல்லா, நான் பழைய மெட்டல், இரும்பு விற்கும் கடைகளில் இருந்து தான் தேவையான பொருள்களை வாங்குகிறேன். அதே போல், நான் கார்களில் செலவழிக்கும் நேரத்தால் என் குடும்பத்தாருக்கு கடுப்பாக இருப்பர் என்றும் நினைக்கின்றனர். என்னுடைய இந்த கார் உருவாக்கலுக்கு பின் முழு ஆதரவு அளிப்பது என் மனைவி தான்,” என்கிறார். 

பட உதவி : டெய்லி மெயில்

பட உதவி : டெய்லி மெயில்


பட உதவி : டெய்லி மெயில்

பட உதவி : டெய்லி மெயில்


இந்த கார்கள் அனைத்தும் என் சுயதிருப்திக்காக உருவாக்குகிறேனே தவிர, விற்பனைக்கு அல்ல. ஆனால், பலரும் குறிப்பிட்ட வடிவங்களில் கார் செய்து கொடுக்க சொல்வர். எனக்கு அதில் விருப்பமில்லை. ஒவ்வொரு கார் மற்றும் பைக்கின் அளவு மற்றும் வடிவத்தை பொறுத்து ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை செலவாகும்,” என்றுள்ளார். 

கடந்த 30 ஆண்டுகளில் அவரது சிந்தையில் எட்டிய டெய்லி யூஸ் பொருள்களின் வடிவங்களில் கார்களை உருவாக்கி வருகிறார். தவிர, சில ஸ்பெஷல் தினங்களை சிறப்பிக்கும் விதமாகவும், அந்நாளுக்காக சமர்ப்பிக்கும் விதமாகவும் உருவாக்கியுள்ளார். அப்படி, 

பட உதவி : டெய்லி மெயில்

பட உதவி : டெய்லி மெயில்


‘குழந்தைகள் தினத்துக்காக’ பேனா, பென்சில், ஷார்ப்பனார் வடிவ கார்களும், ‘உலக எய்ட்ஸ் தினத்துக்காக’ காண்டம் வடிவ பைக்கும், ஹேண்ட்பேக், ஹீல்ஸ் ஷூ, லிப்ஸ்டிக் வடிவ கார்களை ‘மகளிர் தினத்தை’ சிறப்பிக்கும் விதமாகவும், புகைப்பிடித்தல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தை முன்வைக்கும் வகையில் சிகரெட் வடிவ பைக்கையும் உருவாக்கியிருக்கிறார்.  
பட உதவி : டெய்லி மெயில்

பட உதவி : டெய்லி மெயில்


சுதாகர் கார் கிரியேட்டர் மட்டுமின்றி அவர் ஒரு வின்டேஜ் கார் கலெக்டரும் கூட. அப்படி அவர் உருவாக்கியவை, சேகரித்தவை என 700 வாகனங்களுடன் செம ராயலாக இருக்கிறது இவரது மியூசியம். 

2010ல் தொடங்கப்பட்ட மியூசியத்தின் லேட்டஸ்ட் வரவு, மெகா சைஸ் கார். 1922ம் ஆண்டு மாடல் ஃபோர்டு டூரர் கார் வடிவத்தில் 50 அடி நீளமும், 19 அடி அகலத்தில், வடிவமைத்து மியூசியத்தின் என்ட்ரசில் பிரம்மாண்டமாய் நிற்க வைத்துள்ளார். இரண்டு அடுக்கு மாடி போன்று இருக்கும் காரின் மேற்கூரையில் செஸ் அமைப்பில் கருப்பு, வெள்ளை சிப்பாய்கள் தொங்கும் தோற்றத்தில் அமைத்துள்ளார். 

மெகா சைஸ் கார் குறித்து சுதாகர் ஹிஸ்துஸ்தான் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், 

“உலகின் மிகப்பெரிய கார் என்று கின்னஸ் சாதனைக்காக இந்த காரை உருவாக்கினேன். பிளஸ், மியூசியத்துக்கு வருகைப்புரியும் குழந்தைகளை கவரும் விதமாக அமைய வேண்டும் என 3 ஆண்டுகள் செலவிட்டு இக்காரை உருவாக்கினேன்.”
பட உதவி : www.india.com

பட உதவி : www.india.com


வாரத்தின் ஏழு நாட்களும் திறந்திருக்கும் மியூசியத்தை நித்தம் நித்தம் 2,000 பேர் விசிட் அடிக்கின்றனர். தினமும் காலை 9:30 மணியிலிருந்து ஈவ்னிங் 6:30 மணி வரை திறந்திருக்கும் மியூசியத்தை முழுவதும் சுற்றிப் பார்க்க 30 நிமிடங்களாகும். 30 நிமிடமும் ஹாப்பினசுக்கு கியாரண்டி. 

பட உதவி : டெய்லி மெயில்

பட உதவி : டெய்லி மெயில்


சோ மக்களே, ஐதராபாத்துக்கு விசிட் அடிப்போர், குதுப் ஷாஹி கல்லறைகள், ஹுசைன் சாகர் ஏரி, கோல்கொண்டா கோட்டை, சார் மினாரை மட்டும் சுற்றி பார்த்துவிட்டு ரிட்டர்ன் அடிக்காமல், சுதா கார் மியூசியத்துக்கு வண்டியை விட்டு செல்பி எடுத்து மகிழுங்கோ... 

தகவல் உதவி : www.india.com

Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக