பதிப்புகளில்

'தொழில்முனைவோர் தோல்வி அடைவதில்லை, நிறுவனங்களே தோல்வி அடையும்' - கே.வைத்தீஸ்வரன்

"தொழில் முனைவோர் தோல்வி அடைவதில்லை, நிறுவனங்கள் தோல்வி அடையும்" - கே. வைத்தீஸ்வரன்

Sowmya Sankaran
1st Nov 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

"ஒரு தொழில் முனைவோராக இருக்கும் போது சரி என்றும், தவறு என்றும் எதுவுமில்லை. இணையதள வணிகத்துறையில் நான் 15 ஆண்டுகளாக பெற்ற அனுபவங்கள் மூலம் சொல்கிறேன்", என்று கே.வைத்தீஸ்வரன் தெரிவித்தார்.

வைத்தீஸ்வரன் மேலும் கூறுகையில் தன்னை தோல்விகளில் நிபுணராக பலர் பார்த்தாலும், நான் ஒரு தோல்வி அல்ல. "ஆனால், தோல்வியுற்ற நிறுவனத்தில் கிடைத்த இன்பம், வெற்றியுற்றதில் பெற்றதில்லை," என்று மேலும் கூறினார். நாம் தோல்வி அடையும் போது அதிகமாக கற்றுக்கொள்கிறோம். அதுவே இப்படி சொன்னதற்கான காரணம்.

image


வெற்றி என்பது அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்டது. தோல்வி அடைந்த எவரிடனும் இதைப் பற்றி கேட்கலாம்.

"இது முற்றிலும் சீட்டுக்கட்டு விளையாட்டை போல தான். விளையாடும் அனைவருக்கும் இதயக் கூட்டில் இருப்பது இதய ராணி சீட்டு தான். ஆனால், அதில் ஒன்று மட்டுமே இருக்கிறது. இந்த ஒன்றை பெறுபவர் வெற்றி பெறுகிறார்," என்றார் வைத்தீஸ்வரன். இதில் மற்றவர்கள் முயற்சி எடுக்கவில்லை அல்லது சரியாக விளையாடவில்லை என்று கிடையாது.

நிறுவனம் தொடங்குபவரில், 95 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இனிமையான விளைவுகள் பெறுவதில்லை. ஆனால், தொடக்க தொழில் முனைவோர்களில், 100 சதவீதத்தினரும் வெற்றியாளர்களாக மாறுவார்கள்.

"தொழில் முனைவிற்கும், நிறுவன விளைவிற்கும் எந்த சம்பந்தகளும் இல்லை", என்று தொழில்களின் விளைவுகள், நிகழ்வுகளால் மட்டும் அறிய முடியும் என்றும், அதை நம்மால் கட்டுப்படித்த முடியாது என்று தெளிவாக சொன்னார். இந்த சூழ்நிலையில், தொழிலை முனைவது மட்டுமே ஒருவரால் செய்ய முடியும். அப்படி செய்யும் போது, வெற்றி தேடி வரும்.

தொழில் முனைவோர் ஆக என்ன தேவை ?

மக்கள், மூலதனம் மற்றும் யோசனை ஆகியவை முக்கியம். அதையும் தாண்டி, விவரங்கள் மிகமிக முக்கியமான ஒன்று. வைத்தீஸ்வரனை பொறுத்த வரை, தொழில் தொடங்குபவருக்கு தைரியமும், சிறு அளவு முட்டாள் தனமும் வேண்டும். தொழில் முனைவர் என்பவர் ஆபத்தான கடலில், ஒரு படகும், ஒரு துடுப்பும் வைத்து முன் வர முயற்சிப்பவர் இந்த பயணம் முற்றிலும் இருட்டான ஒன்று. இடையில், புயலில் சிக்கலாம் அல்லது கரையை அடையலாம் அல்லது மீட்கப்பட்டிருக்கலாம்.

நீங்கள் தொழில் தொடங்க ஒரு புதுமையான யோசனை தேவையில்லை.

"அனைத்து பெரிய, புதுமையான யோசனைகள் செய்து முடிக்கப்ட்டன. இந்நேரத்தில், நான் கண்டிப்பாக சொல்லும் ஒன்று, எந்த புதுமையான யோசனைகளும் இனி வரப் போவதில்லை,". இருக்கும் யோசனைகளையும், கருத்துக்களையும் மேம்படுத்துவதே ஒவ்வொரு புதிய தொழிலிலும் செய்கிறார்கள்.

உங்கள் தொழில் மூன்று காரியங்களை அவசியமாக செய்ய வேண்டும் :

1. உங்கள் செயல்முறை மலிவாகவும், வேகமாகவும், நன்றாகவும் இருக்க வேண்டும்.

2. வேகமாக தோல்வியடைந்து, மீண்டும் அதை மையப்படித்தும் எண்ணம் பலரிடம் இருக்கிறது. வேகமாக தோல்வி அடையும் ஒரு தொழிலை என்றைக்கும் தொடங்காதீர்கள். நீங்கள் செய்ய ஆசைப்படுவதை விடாமுயற்சியுடன் கடுமையாக சிந்தித்து செயல்படுங்கள்.

3. பணம் ஈட்டுவதே ஒரு தொழில் தொடங்குவதன் காரணம். பணம் ஈட்ட முடியவில்லையென்றால் அது பொழுதுபோக்காக மாறிவிடும். "பொழுதுபோக்கு என்பது நல்லது. சிலர் புத்தகம் படிப்பதிலும், படம் பார்ப்பதிலும், பயணிப்பதிலும், விளையாடுவதிலும் அல்ல இணையதளத்தில் வணிகம் தொடங்குவதிலும் ஈடுபாடுடன் இருக்கிறார்கள்", என்று விரிவுபடுத்திகிறார் வைத்தீஸ்வரன். ஒரு தொழில் இயக்க, திட்டத்தை முதலில் உருவாக்க வேண்டும். அதை முடிந்த வரையில் விரிவாக எழுத வேண்டும். விற்பனையை மூன்றாக பிரிப்பதும், மொத்த லாபத்தை இரண்டாக பிரிப்பதும், கட்டணத்தைப் பெருக்குவதும் உங்கள் வணிகத்தைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ளலாம்.

வணிகத்திற்கு நிதி திரட்டுவது என்பது ஒரு சம்பவம் மட்டுமே, விளைவு கிடையாது.

வைத்தீஸ்வரனைப் பொறுத்த வரை பல தொழில் முனைவோர்கள் பணம் ஈட்டுவதே நோக்கமாக வைத்து தங்களை ஏமாற்றி கொள்கிறார். தொழிலின் மூலம் பணத்தை சம்பாதிக்கலாம், ஆனால், திரட்ட முடியாது.

நீங்கள் வளர்ச்சி பெறுவதற்கு மட்டுமே பணத்தை திரட்ட வேண்டும். அதை பல முறை செய்ய வேண்டும் என்றால், உங்களால் வளங்களைச் சரியாக நிர்வகிக்க முடியவில்லை என்பதே காரணம், என்று அவர் சுட்டி காட்டுகிறார்.

உங்கள் நிறுவனத்திற்கு முதலீடு செய்பவர்களைத் தேடுங்கள். பல தொழில்முனைவோர் முதலீடோடு, கூடுதல் யோசனைகளையும் முதலீட்டளர்களிடம் எதிர்பார்க்கின்றனர். "முதலீட்டாளர் உங்கள் நிறுவன சேவையைப் பற்றி தெரிந்தும் கொண்டு, பணமும் வைத்திருந்தால், அவரே அந்த தொழிலைத் தொடங்கியிருப்பாரே?", என்று கேள்வி எழுப்புகிறார் வைத்தீஸ்வரன்.

குடும்பத்தாரிடன் நன்றாக இருங்கள்

அனைத்து தொழில் முனைவோரும் கடினமாக நேரங்களையும், பாதைகளையும் கடந்து வருவார்கள். வைத்தீஸ்வரன் தெரிவிப்பது போல், அந்த கடினமான நேரத்தில் உங்களது குடும்பம் மட்டுமே உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

தொழில் முனையும் போது, உங்கள் வாழ்க்கையே மாறலாம். இந்த நெடும் பயணத்தை தனியாகவே கடந்து வர வேண்டும். வெளிச்சத்திற்கு பின்னர் இருட்டும் இருக்கிறது. அனைத்தையும் இழத்தாலும், உங்கள் குடும்பம் மட்டுமே உங்களை வரவேற்று, அன்பை பொழிவார்கள். நீங்கள் பெரிதாக ஒன்றை செய்யும் முயற்சியில் இருக்கும் போது, அவர்கள் ஆதரவு அளிப்பார்கள், என்று முடித்துக் கொள்கிறார்.

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags