பதிப்புகளில்

பெண்கள் உரிமைக்காக போராடும் ஹைதராபாத்தை சேர்ந்த ருக்மிணி ராவ்

20th Oct 2015
Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share

"எள்ளுப் பாட்டி, கொள்ளுப் பாட்டி, அத்தைகள் என பெண்கள் அதிகம் வசித்த வீட்டில் வளர்ந்த எனக்கு, குழந்தைப் பருவம் மிக இனிமையாகவே அமைந்தது" என்கிறார் சமூக மற்றும் கிராமப்புற வளர்ச்சி ஆர்வலரான ருக்மிணி ராவ். வாசகர் தெரிவு செய்த சமூக தாக்கத்திற்கான பிரிவில் சமீபத்தில் நடைபெற்ற ஃபெமினா விருதை இவர் வென்றுள்ளார்.

image


ஹைதராபாத்தில் வசிக்கும் இவர், தனக்கும் தன் இரு சகோதர்களும் வீட்டில் சமமாகவே நடத்தப்பட்டனர், ஆண் மகன்கள் என்பதால் எந்த சலுகையும் என்னுடைய கொள்ளுப் பாட்டி கூட அவர்களுக்கு காட்டவில்லை. "விடுமறை நாட்களில் சுற்றுலா செல்கையில் எங்கள் அனைவருக்கும் சம பங்காக தான் பணத்தை அளித்தார்" என்கிறார் ருக்மிணி. இரண்டு வயது இருக்கும் பொழுதே அவருடைய தந்தையை இழக்க நேரிட்டது. அதை ஈடுசெய்யும் விதமாக, அவருடைய தாயார் அவருக்கு தேவையான அனைத்தும் கிடைக்கச் செய்தார். அங்குள்ள சிறந்த பள்ளியில் படிக்க வைத்ததுடன், ருக்மிணி மேற்படிப்பையும் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார். தன்னுடைய பெண்ணுக்கு வாழ்கையின் பாதையை தெரிவு செய்துக் கொள்ளும் சந்தர்ப்பம் இருக்க வேண்டும் என்று எண்ணியதாக மிகவும் நெகிழ்ச்சியோடு பகிர்கிறார் ருக்மிணி.

சிறு வயதிலிருந்தே ருக்மிணிக்கு ஆசிரியர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒஸ்மானியா பல்கலைகழக்கத்தில் உளவியல் பாடத்தில் முதுகலை பெற்ற பின்னர் St. பிரான்சிஸ் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்தார். பின்னர் மேற்படிப்பிற்காக டில்லி சென்றார்.

உளவியல் பாடத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றார். டில்லியில் உள்ள தேசிய தொழிலாளர் நலன் மற்றும் தொடர் கல்விக்கான பொது நிறுவன மையத்தில் 1970 வருடம் மத்தியில் இருந்து 1980 ஆம் வருடம் வரை பணி புரிந்தார்.

அந்த காலகட்டத்தில் வரதட்சணை மரணங்கள் அதிகமான அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அது தீவிர பிரச்சனையாகவும் மாறிக் கொண்டிருந்தது. ஒரு இளம் பெண்ணாக, இந்த கொடுமையை எதிர்த்து போராட்டங்களில் கலந்து கொண்டார். பெரும்பாலும் தற்செயலான மரணங்களாகவே சித்தரிக்கப்பட்ட இவற்றை, தீர விசாரிக்குமாறு வலியுறுத்தி வந்தனர். இந்த நிகழ்வை தடுக்க தேவையான நடவடிக்கையில் ஈடுபடுவது அவசியம் என்று தோன்றியது, "சில பேருடன் இணைந்து சஹேலி பெண்கள் வள மையம் (Saheli Resource Centre for Women) என்ற அமைப்பினை 1981 ஆம் ஆண்டு தொடங்கினோம்' என்கிறார்.

image


கிராமப்பெண்கள் மத்தியில் பணியாற்ற வேண்டும் என்று எண்ணியதால் 1989 ஆம் ஆண்டு ஹைதராபாத் திரும்பினார். சட்டத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால் நடுத்தர நிலை பெண்கள் தங்கள் துயரங்களுக்கு சட்ட ஆலோசகர்களை நாட முடிந்தது. ஆனால் கிராமப்புற பெண்களுக்கு அப்படி இயலவில்லை, அவர்களின் நிலை மோசமாக தான் இருந்தது. "கிராம வளர்ச்சி ஒருங்கிணைப்பின் மூலம் அப்பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவ முடியும். ஹைதராபாத் திரும்ப முடிவெடுத்த காரணம் அது என்னுடைய சொந்த ஊர் மற்றும் அங்குள்ள கலாச்சாரம் அறிந்திருந்தது" என்கிறார் ருக்மிணி.

பெண் விவசாயிகளின் நலனை பேணும் டெக்கான் வளர்ச்சி சமூகத்தில் (Deccan Development Society )பல்லாண்டு காலம் பணி புரிந்தார். அங்கு பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வர உதவுதே அவற்றின் பிரதான பணியாக இருந்தது. தொடர் பயிற்சியின் மூலமாக பெண்கள் அவர்களின் நிலையை அறிந்து தன்னம்பிக்கையுடன் வீட்டிலும் அரசுடனும் எவ்வாறு செயல்படுவது என்று பயிற்சி அளித்தார். தற்போது ருக்மிணி அந்த சமூக நிறுவனத்தில் வாரிய உறுப்பினராகவும் இயக்குனராகவும் உள்ளார்.

பின்னர் 1987 ஆம் ஆண்டு கிராம்யா வள மையத்தில் (Gramya Resource Centre) தனது சேவையை தொடர்ந்தார். இரட்டையர்களாக பிறந்த பெண் குழந்தைகளை விற்கும் நிலையை மாற்ற உதவுதே அவரின் பணி. தனது நண்பர் ஜமுனாவுடன் இணைந்து ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். இதன் மூலம் தன்னார்வ நிறுவனங்கள் பெண்களின் பிரச்சனைகளை அறிந்து எவ்வாறு செயல் பட வேண்டும் என்ற புரிதலை உருவாக்க எண்ணினார்கள். சந்தம்பெட் மண்டல் என்ற நிர்வாக அகலில் தான் அவர்களின் இந்த முதல் முயற்சி தொடங்கியது.

image


ஆந்திரா மாநிலத்தில் உள்ள பன்னிரண்டு தொலைதூர கிராமங்களில் படிப்பிற்கு வழிவகை செய்தனர். அங்கு பெண்கள் குழுக்களையும் அமைத்தனர். சுமார் எண்ணூறு பெண்களை ஒருங்கிணைத்து அவர்களின் வாழ்நிலை மேம்படவும் மற்றும் பெண் குழந்தைகளின் மேல் அவர்களின் பார்வையை மாற்றியமைக்கவும் வழி செய்தனர். பல்லாண்டு காலம் அவர்கிளடையே பணி புரிந்ததில், பெண் சிசு கொலை மட்டுமின்றி பெண் குழந்தைகளை சர்வதேச நாடுகளுக்கு தத்து கொடுத்தல் என்ற பெயரில் அவர்கள் கடத்தப்படுவதாகவும் அறிந்து கொண்டனர். பிரச்சாரம் மூலமாக பல சட்டவிரோத தத்தெடுப்பு மையங்களையும் வெற்றிகரமாக செயலிழக்க செய்தனர்.

"நடுத்தர மக்கள் இது போன்ற செயல்களுக்கு அதிக அளவில் ஆதரவு தர வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்"

கடந்து வந்த பாதை

இந்தியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் சீனா போன்ற நாடுகளில் மதிப்புமிக்க ஃபெலோஷிப் பெற்றுள்ளார். பெண்களின் பிரச்சனைகள் மற்றும் முன்னேற்றம் பற்றிய பல்வேறு சர்வதேச கருத்தரங்குகள், பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டுள்ளார். வளர்ச்சிக் கல்வி பற்றி ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் சொற்பொழிவாற்றியுள்ளார்.

ருக்மிணியின் முன்மாதிரி

நிசாமுதீனை சார்ந்த கமலா என்பவரே அவரின் முன்மாதிரி என்கிறார். வீட்டு வேலை பார்க்கும் கமலாவிற்கு நான்கு குழந்தைகள், அவரின் கணவர் குடிபோதைக்கு அடிமையானவர். "அவரின் இந்த நிலையை மீறி, சஹேலி என்ற அமைப்பின் மூலம் அவதிப்படும் மற்ற பெண்களுக்கு உதவிக் கரம் நீட்டினார். பொருளாதார இடர்பாடுகளில் சஹேலி இருந்த பொழுது ஒவ்வொருவரிடமும் ஐந்து ரூபாய் செலுத்தும் படி கேட்டுக்கொண்டார். ஏழைகளிடம் காணப்படும் பெருந்தன்மையை நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்'

சுதந்திரத்தை பெரிதும் மதிக்கும் ருக்மிணி

பதினெட்டு வயதில் திருமணம் நடந்தது. கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கை பட்ட அவருக்கு அந்த சூழலுக்கு தன்னை மாற்றிக் கொள்ள சிரமமாக இருந்தது என்கிறார். "எனது சூழ்நிலையை நான் நன்றாகவே உணர்ந்திருந்தேன்" தனது இருபத்தினான்காவது வயதில் கணவரை விட்டுப் பிரிந்தார், தனது குழந்தையையும் அவருடனே விட்டுச் சென்றார். அவரது இரண்டாவது திருமணமும் நிலைக்கவில்லை. "அடிப்படையில் நான் மிகவும் சுயமாகவே இருக்க விரும்புகிறவள்." என்கிறார்.

Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக