பதிப்புகளில்

வரலாறு படைத்த 'அலிபாபா' மெகா தள்ளுபடி விழா- 24 மணி நேரத்திற்குள் $25 பில்லியன் விற்பனை!

YS TEAM TAMIL
13th Nov 2017
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

சீனாவைச் சேர்ந்த பெரிய சில்லறை வர்த்தக ஜாம்பவான் ஆன ’அலிபாபா’ நிறுவனம் 11.11 அல்லது ஒரு நாள் விற்பனை என அழைக்கப்படும் இரட்டை 11 நிகழ்வின் விற்பனையில் உலகயே திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. இந்த ஒரு நாள் விற்பனையில் இரண்டு மணி நேரத்திற்குள் 12 பில்லியன் டாலர்களும் 24 மணி நேரத்திற்குள் 25 பில்லியன் டாலர்களையும் அலிபாபா சம்பாதித்துள்ளது. இந்த விற்பனையில் அனைத்து பரிவர்த்தனையும் “அலிபே” (Alipay) மூலமே செய்யப்படுகிறது, டெலிவரியின் போது பணம் செலுத்தும் முறை (CoD) சீனாவில் கிடையாது.

image


உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா குழுவின் தலைமை நிகழ்வான 11.11, உலகளாவிய ஷாபிங் விழா நவம்பர் 11 சினாவில் நடைபெறும். இந்த ஆண்டு இந்நிகழ்வின் எட்டாவது பதிப்பாகும், இதில் 1,40,000 பிராண்டுகள் கலந்துக்கொண்டது, அதில் 60,000 சர்வதேச பிராண்டுகள் அடங்கும்.

இந்த நிகழ்வின் போது முதல் இரண்டு நிமிடத்திற்குள் அலிபே மூலம் 1 பில்லியன் டாலர் GMV பெறப்பட்டது.

“மொத்த வர்த்தக மதிப்பு (GMV) விற்பனை என்னை மட்டும் சுட்டிக்காட்டவில்லை; சீனாவில் நுகர்வு எப்படி மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் காட்டுகிறது,”

என்றார் விழாவில் பேசிய அலிபாபா குழு, தலைமை நிர்வாக அதிகாரி, டேனியல் ஜாங். 2009-ல் 27 வணிகர்களுடன் இந்நிகழ்வை அலிபாபா குழு தொடங்கியது, அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் பெரும் வளர்ச்சியை இந்த விழா கண்டு வருகிறது. கடந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேலான வணிகர்கள் இணைந்திருந்தனர், அதில் 24 மணி நேரத்திற்குள் 17.8 பில்லியன் டாலருக்கு விற்பனை நடந்தது. இந்த வருடம் அந்த இலக்கை முறியடித்து விட்டது 11.11. சேல்.

“இந்தியாவில் பண்டிகை காலம் போது, இ-காமர்ஸ் நிறுவனமான Flipkart, Amazon, Shopclues மற்றும் பலர் அறிவித்த தள்ளுபடி விற்பனை இந்த ஆண்டு வெறும் 1.5 பில்லியன் டாலர்களை சம்பாதித்தது, 2016-ல் பெறப்பட்ட 1.05 பில்லியன் டாலரை விட சற்று குறைந்த உயர்வையே பெற்றது,” என்கிறது ஒரு அராய்ச்சி நிறுவனம்,
image


அன்று விழாவில் பேசிய டேனியல் பல லட்ச மக்கள் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு அமைப்பை உருவாக்கிய தொழில்நுட்பவாதிகளை பாராட்டினார்.

“அதிக பயனாளர்கள் இருந்த போதும் எங்கள் அமைப்பில் எந்த வித தடங்களும் ஏற்படவில்லை. அலிபாபா கிலவ்ட் ஒரு நொடிக்கு 3,25,000 ஆர்டர்களை செயல்படுத்தியது,” என்றார் பெருமையுடன்.

ஊடகத்துடன் பேசிய டேனியல், 40 சதவீத விற்பனை சர்வதேச பிராண்டில் இருந்து பெறப்பட்டுள்ளது. சீன வாடிக்கையாளர்கள் சர்வதேச பொருட்களை பெற சீனாவை விட்டு வெளியே செல்ல வேண்டாம். தயாரிப்பில் கூட எல்லை தாண்டிய விற்பனை மூலம் அதன் தரத்தை உயர்த்தியுள்ளது. மேலும் சின பிராண்டுகளையும் அதிகம் விளம்பரம் செய்கிறோம், பல நாடுகளில் இருந்து இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.

சீனாவிற்கு வெளியே வணிகம் செய்யும் அலிஎக்ஸ்பிரஸ் நவம்பர் 11 நான்கு மணிக்கு விற்பனையை தொடங்கி மறுநாள் மதியம் நான்கு மணிக்கு முடித்தது. மதம், மொழியை தாண்டி அனைவருமே வாடிக்கையாளர்கள் தான். இன்னும் வரும் காலங்களில் இது இன்னும் பல மடங்கு பெருகும் என்றார் டேனியல். மேலும் பேசிய அவர் எங்கள் ஆப்-ல் வீடியோ மற்று கேமை இணைத்து சில்லறை வணிகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்றார்.

image


நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்கள்:

• முதல் டெலிவரி, நள்ளிரவுக்குப் பிறகு 12 நிமிடங்கள் மற்றும் 18 வினாடியில் வந்துவிட்டது.

• அலிபே மூலம் பெறப்பட்ட மொத்த வர்த்தக மதிப்பு (GMV) 90 சதவீதம், கடந்த ஆண்டு 82 சதவீதம்

• அலிபே 1.48 பில்லியன் பரிவர்த்தனை செய்துள்ளது, அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 2,56,000 செய்யப்பட்டுள்ளது.

• Cainaio நெட்வொர்க் 812 மில்லியன் மொத்த விநியோக ஆர்டர்களை செயல்படுத்தியது

• சீனாவில் நவம்பர் 11 அன்று இரவு 11.30 மணிக்குள், 167 வணிகர்கள் 100 மில்லியன் ($ 15.1 மில்லியன்) RMB விற்பனை செய்தனர்

• சீனாவில் விற்கும் முக்கிய சில நாடுகளில் ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் தென் கொரியா அடங்கும். 

ஆங்கில கட்டுரையாளர்: ஆதிரா நாயர்

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக