பதிப்புகளில்

'ஆரம்பம்' தொழில்முனைவு போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு!

YS TEAM TAMIL
24th Feb 2016
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

“ஆரம்பம்” – மதுரையின் முதல் புதுயுகத் தொழில் முனைவு சிந்தனைக்கான போட்டி. மதுரையின் தொழில் முனைவு பயணத்தில் இது ஒரு மைல்கல் என்று கூறும் அளவுக்கு மதுரை மாநகரில் சிறந்ததொரு தொழில் முனைவு தாக்கத்தை ஏற்படுத்திய இத்தகைய போட்டியை இந்திய தொழில் கூட்டமைப்பின் துணை அமைப்பான ‘யங் இந்தியன்ஸ்‘ மற்றும் ‘நேட்டிவ்லீட்’ ஆகிய அமைப்புகள் 2014 ஆம் ஆண்டு முதல் இணைந்து நடத்தி வருகிறது.

இத்தகைய சமூக மாற்றத்தை உருவாக்கும் போட்டியின் இரண்டாம் பதிவை இந்த ஆண்டும் நவம்பர் 4, 2015 அன்று அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்து மதுரை மட்டுமல்லாது விருதுநகர், திருச்சி, கோவை, சேலம் மற்றும் சென்னையை சேர்ந்த 117 மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோரின் கவனத்தை இந்த ஆண்டும் ஈர்த்துள்ளது யங்இந்தியன்ஸ் மற்றும் நேட்டிவ்லீட் அமைப்பின் 'ஆரம்பம்' போட்டி.


imageஇந்த ஆண்டும் போட்டியானது இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்டது. விண்ணப்பித்து இருந்தவர்கள் மாணவர்கள், தொழில் முனைவோர் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்த 15 தொழில் முனைவோர் மற்றும் 35 மாணவர்களின் தொழில் முனைவு சிந்தனைகள் முதல் சுற்றில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.

போட்டியின் முதல் சுற்றானது, தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிப்ரவரி 6, 2016 அன்று நடத்தப்பட்டது. அதில் இருந்து 8 மாணவர் அல்லாத தொழில் முனைவு சிந்தனைகளும் 12 மாணவர்கள் சிந்தனைகளும் இறுதி சுற்றுக்காக தெரிவு செய்யப்பட்டு பிப்ரவரி 12, 2016 அன்று தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் நடத்தப்பட்டது.

பரிசளிப்பு விழாவின் போது தியாகராஜர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் மதுரை யங்இந்தியன்ஸ் அமைப்பின் துணை தலைவருமான திரு.க.தியாகராஜன் கூறுகையில், 

“ஆரம்பமானது பல புதிய ஆக்கபூர்வமான தொழில் முனைவு சிந்தனைகளை காட்சிப்படுத்தும் வகையில் அமைந்து மீண்டும் ஒரு வெற்றிகரமான நிகழ்வாக மாறி நிற்கிறது, இது போன்ற தொழில் முனைவை ஊக்கப்படுத்தும் வகையான நிகழ்வுகளை ஆரம்பம் குழுவானது வரும் காலங்களிலும் நிகழ்த்தும்” என்றார்.

ஆக்சிலார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனரும் இன்போசிஸ் நிறுவனத்தின் திட்டமிடல் துறையின் முன்னாள் தலைவருமான திரு. கணபதி வேணுகோபால் மற்றும் மாஃபா குழுமத்தின் இயக்குனரான திருமதி. லதா ராஜன் ஆகியோர் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர்.

இந்தியன் ஏஞ்சல் நெட்வர்க்கின் முதலீட்டாளரும் நேட்டிவ் ஏஞ்சல் நெட்வர்க், மதுரையின் தலைவருமான திரு.நாகராஜா பிரகாசம் பேசும்போது , 

“ஆரம்பம் நிகழ்வானது வளர்ந்து வரும் தொழில் முனைவோர் மற்றும் திறமையான தொழில் முனைவு எண்ணங்களை கொண்டு செயலாற்றும் மாணவர்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் சிறந்த களம் என்றார். 

நேட்டிவ்லீட் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான திரு. சிவராஜா கூறுகையில்,

"புத்தாக்க எண்ணங்களைக் கொண்டு இருக்கும் தொழில் முனைவோருக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கவும் குறிப்பிட்டு சொல்லும் வகையில் சிறந்த நிறுவனங்கள் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலும் தோன்றும் வகையில் சிறந்த முயற்சிகளை மேற்கொள்கிறோம்” என்றார்.

யங் இந்தியன்ஸின் மதுரை கிளை உறுப்பினர்கள், நேட்டிவ் ஏஞ்சல் நெட்வர்க் முதலீட்டாளர்கள், நேட்டிவ்லீட் அமைப்பின் உறுப்பினர்களோடு இணைந்து தியாகராஜர் பொறியியல் கல்லூரி மாணவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசாக முறையே ரூபாய் 25000, ரூபாய் 15000, ரூபாய் 10000 வீதம் வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற தொழில் முனைவோர் வணிக ரீதியிலான முதலீடு பெறுவதற்கான அனைத்து வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு நேட்டிவ்லீட் அமைப்பின் முதலீட்டுக் கரமான நேட்டிவ் ஏஞ்சல் நெட்வர்க்குடன் இணைக்கப்பட்டு முதலீடு வழங்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

இறுதிச் சுற்றிற்காக தேர்வு செய்யப்பட்ட அனைத்து தொழில் முனைவு சிந்தனைகளுமே நேட்டிவ்லீட் அமைப்பின் வழிகாட்டுக் குழுவினால் வழிகாட்டப்படும் எனவும் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

வெற்றி பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு:

மாணவர்கள்:

1. திரு.ராம் பிரகாஷ், Sahayak Edusquare, IIT, சென்னை - 9952291278

2. திரு.விஜய் ராஜ், Foodly, PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை - 9677028060

3. திரு.சண்முகம், 1 is 10, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை - 9486597294

தொழில் முனைவோர்:

1. திரு.ராஜேஷ் கண்ணா (9080737271) & திரு.பிரசன்னா, VE Clean, மதுரை

2. திருமதி.மைதிலி ராமசாமி, & திரு. ஸ்ரீனிவாச ராகவன் (9632966318) iEdutopia, பெங்களுர்

இந்த தொழில் முனைவு போட்டிக்கு கடந்த ஆண்டு 176 விண்ணப்பங்கள் வந்தன. முதல் மற்றும் இரண்டாம் கட்ட சுற்றுகள் நடத்தப்பட்டு இறுதியாக இரு பிரிவிலும் தலா 3 பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வெற்றிப்பெற்று முதல் பரிசை வென்ற மஞ்சுநாத் மற்றும் அசோக் கண்ணன் ஆகியோரின் “ஹேப்பி ஹென்ஸ்” (Happy Hens) என்னும் புதுயுகத் தொழில்முனைவு சிந்தனைக்கு நேட்டிவ்லீட்டின் முதலீட்டுக் கரமான இந்தியன் ஏஞ்சல் நெட்வர்க்கின் மூலமாக முதலீடு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

இது போன்று தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் போட்டிகள்:

'ஸ்டார்ட்- அப் வீக்கெண்ட்' வெற்றியாளர்கள் அறிவிப்பு

'தொழில் முனைவர்கள் பெரிதாக சிந்திக்க வேண்டும்': இக்விட்டாஸ் நிர்வாக இயக்குனர் வாசுதேவன்


Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags