பதிப்புகளில்

2017-ல் சமூக வலைதளத்தை கலக்கிய சில YouTube சேனல்கள்!

20th Dec 2017
Add to
Shares
32
Comments
Share This
Add to
Shares
32
Comments
Share

தொழில்நுட்பம் வளரவளர நம் நாட்டு நடப்பை தெரிந்துக்கொள்ளும் விதமும் மாறிவிட்டது. செய்தித்தாள், தொலைக்காட்சி என தொடங்கி தற்பொழுது மீம் மற்றும் வலைபதிவு என ஆகிவிட்டது. சமூக வலைதளத்தில் எழுத்து வடிவில் செய்திகளை படித்துக்கொண்டு இருந்த நாம் தற்பொழுது வீடியோக்களுக்கு திரும்பி விட்டோம். அரசியல், சினிமா என்று எந்தத் துறையில் எது நடந்தாலும் அதை குறித்து வீடியோ பதிவை செய்து வைரல் ஆக்கிவிடுகிறார்கள் இந்த YouTube நாயகர்கள்.

இது போன்று 2017-ல் சமூக வலைதளத்தை கலக்கிய ஒரு சில பிரபலமான யூட்யூப் சேனல்கள் பற்றி பார்ப்போம்...

image


மெட்ராஸ் சென்ட்ரல்

மூகநூலில் இளைஞர் பட்டாளத்தை அதிகம் கவர்ந்த ஒரு முக்கிய சேனல் இது. பெரும்பாலும் நடப்பில் இருக்கும் அரசியல் கருவை வைத்து இவர்கள் எடுக்கும் நய்யாண்டி வீடியோக்களுக்கு வரவேற்பு அதிகம். 2015 இறுதியில் துவங்கிய இந்த சேனலிற்கு 1,187,450 சப்ஸ்க்ரைபர்ஸ் உள்ளனர். மேலும் கோடிக்கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர். குறைந்த காலத்தில் அதிக ரசிகர்களை சம்பாத்தித்துவிட்டது இந்த குழு.

எரும சாணி

பேரிலே வித்யாசத்தை கொண்டுள்ளது இந்த அணி, இந்த வருடம் தான் தங்கள் பயணத்தை துவங்கியுள்ளனர். ஆனால் அதற்குள் தங்களது நகைச்சுவை வீடியோக்கள் மூலம் 5,36,093 சப்ஸ்க்ரைபர்சை மற்றும் 28,168,415 பார்வையாளர்களை சேர்த்துள்ளனர், இவர்கள் பெரும்பாலும் தற்போதைய காதலில் நடக்கும் சில சிக்கல்களை நகைச்சுவையோடு, பாடலுடன் கலந்து தருகின்றனர். இவர்கள் வெளியிட்ட திருமணத்திற்கு பின் வீடியோ நெடிசன்கள் மத்தியில் பெரும் ஹிட்.


ஜம்ப் கட்ஸ்

நவம்பர் 2016-ல் இந்த சேனல் இரு நண்பர்களால் துவங்கப்பட்டது. சமூக ரீதியான பல நிகழ்வுகளை நகைச்சுவையோடு வழங்குகிறது ஜம்ப் கட்ஸ். துவங்கி ஒரு வருடம் ஆன நிலையில் 7,31,370 சப்ஸ்க்ரைபர்ஸ் மற்றும் 59,483,050 பார்வையாளர்களை கொண்டுள்ளது. ஜம்ப் கட்ஸ் என்னும் எடிட்டிங் முறையை பயன்படுத்தி விடியோக்களை தயாரிக்கின்றனர். ஒரே ஒருவரால் மொத்த காட்சியையும் அமைப்பது இவர்களின் தனிச் சிறப்பு.

புட் சட்னி

மற்ற எல்லா சேனல்களுக்கும் முன்னோடியாக வந்த சேனல் புட் சட்னி. வீடியோ பதிவு பிரபலாமாக துவங்கியபோது புட் சட்னி தமிழில் வீடியோக்களை தந்தனர். ஒரு குறிப்பிட்ட தலைப்புக்குள் இவர்களின் கருவை அடைக்க முடியாது, சினிமா, அரசியல், ஐடி என சகலத்தையும் பேசுகின்றனர் இவர்கள். மேலும் இன்னும் வளர்ந்து பிரபலங்கள் நேர்காணளையும் நடத்துகின்றனர். 2017-ல் இவர்கள் நடத்திய ’பதில் கேள்விகள்’ என்னும் நிகழ்ச்சி பிரபலம் ஆனது.

ஸ்மைல் சேட்டை

ஸ்மைல் சேட்டை நமக்கு பரிச்சியமான முகங்கள் கொண்ட ஒரு சேனல். இவர்களும் புட் சட்னி போல் மற்ற youtube சேனல்கள் பிரபலம் ஆகும் முன் இருந்தே விடியோக்களை வழங்கி வருகின்றனர். ஒரு சிறந்த பொழுதுபோக்கு சேனலாக மட்டும் அல்லாமல் பல சமூக பிரச்சனைகளையும் பேசுகின்றனர். திரை விமர்சனம், அரசியல், நாட்டு நடப்பு என இவை மூன்றில் கவனம் செலுத்துகின்றனர். அரசியல் தகவல்களை நய்யாண்டியுடன் பேசும் ’பீப் ஷோ’ பல பார்வையாளர்களை பெற்று பெரிதும் ஹிட் ஆனது.

தமிழ் டெக்

பொழுதுபோக்கு அல்லாமல் தொழிநுட்பம் ரீதியான தமிழ் சேனல். ஸ்மார்ட்போன்களின் புதிய வரவு, ஸ்மார்ட்போன் விமர்சனம், சிறந்த நெட்வொர்க் ப்ளான், இந்த வருடத்தின் சிறந்த போன் என பலவற்றை அலசுகின்றனர். முக்கியமாக தமிழில் வீடியோக்களை அமைப்பதால் இந்த சேனலிற்கு வரவேற்பு அதிகம். 5,46,025 சப்ஸ்க்ரைபர்ஸ் மற்றும் கோடிக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது இந்த சேனல்.


இவையே 2017 ஆம் ஆண்டின் நாம் கண்ட ஒரு சில முன்னணி தமிழ் Youtube சேனல்கள். வரும் புத்தாண்டில் மேலும் பல புதிய படைப்புகளுடன், புதிய குழுக்கள் யூட்யூபில் தங்கள் திறமையைக் காண்பிக்க காத்திருக்கின்றனர். அவற்றில் எவை ஹிட் அடிக்கும், தற்போதுள்ள பிரபல சேனல்களுக்கு எப்படியான போட்டியை கொடுக்கும் என அடுத்தாண்டு இறுதியில் தெரியவரும். 

Add to
Shares
32
Comments
Share This
Add to
Shares
32
Comments
Share
Report an issue
Authors

Related Tags