பதிப்புகளில்

பெசோஸ்- பியானி கூட்டு: இந்திய ரிடைல் துறையில் காத்திருக்கும் மாற்றங்கள்...

அமேசான் நிறுவனம், வெளிநாட்டு போட்போலியோ முதலீடு (எப்.பி.ஐ) முறையில் கிஷார் பியானியின் பியூச்சர் ரிடைல் நிறுவனத்தில் 9.5 சதவீத பங்கை வாங்க உள்ளது. 

29th Nov 2018
Add to
Shares
11
Comments
Share This
Add to
Shares
11
Comments
Share

மூன்று ஆண்டுகளுக்கு முன் ஜெப் பெசோஸ் மற்றும் கிஷோர் பியானி சந்தித்த போது, இருவருக்கும் இடையே உறுதியான நட்பு உண்டானது. ஒருவர் சில்லறை விற்பனை துறையில் கணிசமான சந்தை பங்கு கொண்டவர் என்றால் இன்னொருவர் ஆன்லைன் ஷாப்பிங் சாம்ராஜ்யத்தை உருவாக்கியர்.

மூன்று ஆண்டுகள் கழித்து, இருவரும் தங்கள் தொடர்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். வெளிநாட்டு போட்போலியோ முதலீடு (எப்பிஐ) முறையில் பியானியின் பியூச்சர் ரிடைல் லிட் நிறுவனத்தில் வெளியிடப்படாத ஒரு தொகைக்கு 9.5 சதவீத பங்குகளை அமேசான் வாங்கியுள்ளது. பின்னர் பியூச்சர் குழுமத்தில் மேலும் பங்குகளை வாங்க அமேசானுக்கு இது வழி வகுக்கும்.

கிஷோர் பியானி 

கிஷோர் பியானி 


ஏற்கனவே qபிளிப்கார்ட்டை கையகப்படுத்தியுள்ள வால்மார்ட்டிடம் இருந்து மற்றும் ஆப்லைன் சில்லறை விற்பனை மூலம் கடும் போட்டியை சந்தித்து வரும் அமேசான், பியூச்சர் குழுமத்தின் மீது கொண்டுள்ள ஆர்வம் புரிந்து கொள்ளக்கூடியதே. பியூச்சர் குழுமம் 5 மில்லியன் விசுவாச உறுப்பினர்களை கொண்டிருப்பதோடு ஆண்டுக்கு 35 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கிறது. 

இது தவிர, இந்தியர்கள் எப்படி சாப்பிடுகின்றனர்? என்ன பருகுகின்றனர்? சமையலறையில் என்ன பொருட்கள் வைத்திருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள அமேசானுக்கு பியானி உதவ முடியும். தன் பங்கிற்கு அமேசான் இந்தியா, வாடிக்கையாளர்களுக்கு இணைய ஷாப்பிங் வசதியை அளிக்கும்.

“நமது விளக்க உரைகள் காலத்திற்கு ஏற்ப மாறுகின்றன. இன்று தரவுகளின் முன்னதாக நிற்கும் தன்மையை உணர்கிறேன். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிக்க பிக்டேட்டா அறிவியலில் நிறைய முதலீடு செய்துள்ளோம்,”என்று யுவர்ஸ்டோரியின் முக்கிய நிகழ்வான டெக்ஸ்பார்க்ஸ் 2018 ல் பேசிய போது பியானி கூறினார். 

அடுத்த ஐந்தாண்டுகளில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் உத்திகள் மூலம் பியூச்சர் குழுமம் 40 மில்லியன் இந்தியர்களுக்கு சேவை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஒருங்கிணைப்பு இரு நிறுவனங்களுக்கும் பயன் அளிக்கும். உதாரணமாக, பியூச்சர் குழுமத்தின் 2,000 க்கும் அதிகமான கடைகள், உணவு மற்றும் மளிகை பொருட்களை வழங்க அமேசானுக்கு உதவியாக இருக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து, பியூச்சர் ரிடைல் நிலையங்களில் இருந்து பொருட்களை பெற்றுக்கொள்ளும் வசதியை அமேசான் அளிக்கலாம். அமெரிக்காவில் இவ்வாறு செய்து தான் வால்மார்ட், அமேசானை வென்றது.

ரிலையன்ஸ் இண்டஸ்டிரிசின் ரிலையன்ஸ் ரிடைல் மூலம் போட்டியை சந்திக்கும் பியூச்சர் குழுமத்திற்கு இது, ஆன்லைன் பரப்பை திறக்கிறது.

ரொக்கம் கொடுத்து வாங்கும் வர்த்தகத்தின் தரவுகளை எப்படி நுகர்வோர் தரவுகளுடன் இணைக்கலாம் என வால்மார்ட் கண்டறிந்தது போல், அமேசானுக்கு சாதகம் இருக்கிறது.

இங்குள்ள இன்னொரு தடை என்னவெனில், இந்தியாவில் பல பிராண்ட் ரிடைலில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி இல்லை. ரொக்கம் கொடுத்து வாங்குவது, ஒற்றை பிராண்ட் ரிடைலிங், லாஜிஸ்டிக்ஸ் ஆகிய துறைகளில் 100 சதவீத அந்நிய முதலீட்டிற்கு அனுமதி இருக்கிறது ஆனால், 2013 முதல் பல பிராண்ட் ரிடைலிங் பல்வேறு கொள்கை மாறுதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. 2013 ல் பல பிராண்ட் ரிடைலிங்கில் 51 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டது. 2014 ல் பாஜக அரசு, மல்டி பிராண்ட் துறையில் அந்நிய முதலீட்டை, போட்போலியோ முதலீடு மூலம் 10 சதவீதமாக சுருக்கியது.

அமேசான், பல பிராண்ட ரிடைலிங் கடையான ஷாப்பர்ஸ் ஸ்டாப்பில் 5 சதவீத பங்கு பெற்றிருக்கிறது.

ரிலையன்ஸ் ரிடைல் மற்றும் சர்வதேச போட்டியாளர்களான அலிபாபா போன்ற நிறுவனங்களை எதிர்கொள்ள பியூச்சர் குழுமத்தில் மேலும் ரொக்கத்தை அமேசான் அளிக்கலாம்.

பியூச்சர் குழுமம், குறிப்பாக சிறிய உணவு தொழில்முனைவோருக்கு தனது கடைகளில் இடம் அளிக்கும் வகையில் செயல்படுவதாக பியானி கூறுகிறார். அமேசானும் இணையும் போது இது இன்னும் எளிதாகிறது. அமேசான் ஏற்கனவே சிறிய கடைகளுடன் செயல்படுவதால் விநியோகம் எளிதாகும்.

“நாம் எல்லோரிடம் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும்,” ஏன்று அண்மையில் பியானி கூறியிருந்தார். அமேசானை அவர் ஆசிரியராக குறிப்பிடுகிறார்.

“ரிடைல் துறையில் தொழில்நுட்பம் சங்கமிக்கும் சுவாரஸ்யமான காலமாகும். இந்திய ஆப்லைன் ரீடைலிங் துறையினர் 15 வருடம் முன்னதாக துவங்கியிருய்ந்தாலும், தொழில்நுட்ப அம்சத்தை கோட்டை விட்டனர். எனவே பணம் கொண்டுள்ள வெளிநாட்டு ரிடைலிங் நிறுவனங்கள் இந்திய ரிடைல் வர்த்தகத்தில் ஆர்வம் கொண்டுள்ளன. ஷாப்பிங் உலகின் மையமாக ஸ்மார்ட்போன்கள் ஆகியுள்ள நிலையில் எதிர்காலம் தரவுகள் சார்ந்த போட்டியாக அமைய உள்ளது,” என்கிறார் ரிடைல் ஆலோசனை நிறுவனமான தேர்ட் ஐசைட் நிறுவன சி.இ.ஓ தேவாங்ஷு தத்தா

ஆலோசனை நிறுவனமான டெக்னோபார்க், இந்திய ரிடைலிங் துறை 700 பில்லியன் கொண்டதாக மதிப்பிட்டுள்ளது.

பெசோஸ்- பியானி கூட்டு காரணமாக மற்றவர்கள் தங்கள் உத்தியை மேம்படுத்த வேண்டும். இந்தியா வால்மார்ட்/ அலிபாபா மற்றும் அமேசான்/ ரிலையன்ஸ் ரிடைல் போட்டியை காண இருக்கிறது.

ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா | தமிழில்; சைபர்சிம்மன் 

Add to
Shares
11
Comments
Share This
Add to
Shares
11
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக