பதிப்புகளில்

12-ம் வகுப்பில் தோல்வியை சந்தித்தாலும் 24 வயதில் மில்லியனர் ஆகியுள்ள இளைஞர்!

YS TEAM TAMIL
4th Jul 2018
Add to
Shares
107
Comments
Share This
Add to
Shares
107
Comments
Share

17 வயதில் நம்மில் பலர் கல்லூரி, நண்பர்கள், குடும்பம் போன்றவற்றை தாண்டி அதிகம் சிந்திக்காத நிலையில் ஒருவர் அந்த இளம் வயதில் தனது முதல் ஸ்டார்ட் அப்பை அறிமுகப்படுத்தினார்.

’ரெட் கார்பெட்ஸ் ஈவண்ட்ஸ்’ 2010-ம் ஆண்டு ரிஷப் லவானியாவால் துவங்கப்பட்டது. அப்போது இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். இவர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ் போன்றோரைக் கண்டு இவருக்கு உந்துதல் ஏற்பட்டது. இளம் வயதிலேயே வெற்றியையும் தோல்வியையும் சுவைத்த இவரது வாழ்க்கை இவரை வேறு கட்டத்திற்கு இட்டுச் சென்றது.  

image


ரிஷப் ஸ்டார்ட் அப் துவங்கியபோது அவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. தேர்வுகளில் தோல்வியடைந்தார். இருப்பினும் மனம் தளர்ந்து போகாமல் நிகழ்வு மேலான்மை நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். இதன் மூலம் டெல்லி என்சிஆர் மற்றும் ஜெய்ப்பூர் பகுதிகள் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட விளம்பர மற்றும் கார்ப்பரேட் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தார் என Menxp தெரிவிக்கிறது. ஆரம்பநிலையில் இருந்து துவங்கப்பட்ட இந்த முயற்சியில் மக்கள் ஒருங்கிணைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து இந்தப் பகுதிகளில் சிறப்பான வாடிக்கையாளர் தொகுப்பை உருவாக்கினார்.

ரிஷப்பின் இரண்டாவது முயற்சி அவருக்கு மிகப்பெரிய படிப்பினையை வழங்கியதாக அவர் தெரிவிக்கிறார். முதல் நிறுவனத்தைப் போல் இவரால் இதில் வெற்றியடைய முடியவில்லை. JustGetIT மளிகை கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை வாடிக்கையாளர்களுடன் இணைக்கும் லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட் அப்பாகும். அதாவது விற்பனையாளரிடமிருந்து பொருட்கள் வாடிக்கையாளரின் இருப்பிடத்தை சென்றடைவதற்கான இறுதிகட்ட லாஜிஸ்டிக்ஸ் சேவையை வழங்கி வந்தது. இந்த நிறுவனம் ஏழு மாதங்கள் மட்டுமே செயல்பட்டது என்றாலும் ரிஷப் சந்தையை புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும் நிறுவனத்தை ஆதரிக்க போதுமான நிதி இருக்கவேண்டியதன் அவசியத்தையும் புரிந்துகொண்டார். Inc 42 உடனான நேர்காணலில் ரிஷப் குறிப்பிடுகையில்,

அந்த சமயத்தில்தான் ஹைப்பர்-லோக்கல் செயல்பாடுகள் இந்தியாவில் துவக்க நிலையில் இருந்தது. 2013-14-ல் க்ரோஃபர்ஸ் மற்றும் பிக்பாஸ்கெட் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. எங்களது வணிக மாதிரி அதிக செலவுகளின்றி லாபம் ஈட்டும் விதத்தில் இல்லை என்பதை உணர்ந்தோம்.

ரிஷப் எதிர்பார்த்த விதத்தில் இந்நிறுவனம் செயல்படவில்லை. இந்த ஸ்டார்ட் அப் இவ்வாறு மூடப்படுவதற்கு போதுமான சந்தை அறிவு இல்லாததே முக்கியக் காரணம் என்பதை உணர்ந்தார். இந்தப் பிரிவில் முதல் முதலாக செயல்படும் நிறுவனங்களில் ஒன்று என்றபோதும் JustGetIT போதுமான நிதி உயர்த்துவதில் தோல்வியுற்றது.

அதன் பிறகு ரிஷப் Xeler8 மற்றும் WeeTracker ஆகிய இரண்டு ஸ்டார்ட் அப்களை அறிமுகப்படுத்தினார். Xeler8 ஸ்டார்ட் அப்பை சீன ஆக்சலரேட்டர் மற்றும் வென்சர் ஃபண்ட் ZDreams Ventures வாங்கியது. WeeTracker ஆப்ரிக்க சுற்றுச்சூழலில் நுழைய தயாராகி வருகிறது. Xeler8 வாங்கப்பட்ட பின்பு ZDreams Ventures நிறுவனத்தின் சிஓஓ மற்றும் முதலீடுகள் பிரிவின் தலைவராக இணைந்துகொண்டு முதலீட்டாளராக தனது பயணத்தை துவங்கினார் ரிஷப்.

இந்த ஆண்டு ஆப்ரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட இவரது அடுத்த நிறுவனமான WeeTracker ஆப்ரிக்க ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலுக்கான பிரத்யேகமான உலகளவிலான தொழில்நுட்ப ஊடகமாகும். கடந்த சில ஆண்டுகளில் இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் முழுவதும் உள்ள நிறுவனங்களின் முதலீட்டாளராக ரிஷப் மாறியுள்ளார் என Kenfolios தெரிவிக்கிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA

Add to
Shares
107
Comments
Share This
Add to
Shares
107
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக