பதிப்புகளில்

நியூஸ் ஹவர் ஸ்டூடியோவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட அர்னாப் கோஸ்வாமி,100 நாளில் சொந்த நிறுவனம் நிறுவிய கதை!

YS TEAM TAMIL
10th Apr 2017
Add to
Shares
48
Comments
Share This
Add to
Shares
48
Comments
Share

புதன் கிழமை. லோயர் பாரல் பகுதி. வழக்கம்போல மும்பையின் போக்குவரத்து நெரிசல் குறித்து கூகுள் மேப்பின் எச்சரிக்கை அலாரம் ஒரு புறம். படுக்கையில் இருந்த எழவேண்டிய நேரம் நெருங்கிவிட்டதை எச்சரிக்கும் கடிகார அலாரம் மறுபுறம். இதற்கிடையில் மும்பையின் சேனாபதி பபாட் மார்க் ஊடக சந்தையில் மட்டும் முக்கிய செய்திகளை ஒளிபரப்புவதற்காக நேரத்தையெல்லாம் பொருட்படுத்தாது சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர்.

அந்தப் பகுதியில் புதிதாக முளைத்த ஊடக சேனல் இன்னும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. எனினும் அது புறநகரின் முக்கிய பகுதியின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது எனலாம். மக்களின் எதிர்பார்ப்பையும் உயர்த்தியுள்ளது. தனித்து தென்பட்டாலும் தன் முயற்சியால் ஒரு ஃபீனிக்ஸ் பறவையைப் போல உயர்ந்துள்ளது. பொற்காலத்தை நினைவுபடுத்தினாலும் போட்டிகளை எதிர்கொண்டு எதிர்காலத்தில் வெற்றியடையும். துறையிலும் நிபுணத்துவத்திலும் வேறுபட்டாலும் எல்லார் உணர்வில் ஒருங்கிணைந்துள்ளது.

ந்யூஸ் ஹவர் என்ற அந்த பிரபல நிகழ்ச்சியின் தலைவர். ஐந்து மாதங்களுக்கு முன்னால் ஸ்டுடியோவிலிருந்து வெளியேற்றப்பட்டார். தனக்கென சொந்தமாக ஒன்றை அதிவேகமாக அமைத்தார். நான் அவரை பார்க்கச் சென்ற காலை நேரத்தில், அர்னாப் கோஸ்வாமியை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட அரைமணிநேரம் காத்திருந்தபோது அவரது குழுவினரை பார்க்க நேர்ந்தது. ஒரு மாபெரும் யுத்தத்துக்கு தங்களையும் அறியாத அர்ப்பணிப்போடு ஆயத்தமாகிக்கொண்டிருப்பதைப் பார்க்கமுடிந்தது. அர்னாப் உள்ளே நுழைந்தபோது மெதுவாக உரையாடலில் ஈடுபட்டவாறே என்னுடைய தயார்நிலை குறித்து பார்வையால் எடைபோட்டார். அவரது திட்டங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.

image


வந்தார், பார்த்தார், வெற்றிக் கொண்டார்

இராணுவ அதிகாரியின் மகன் என்பதால் எப்போதும் இடம்பெயர்ந்துகொண்டே இருந்தனர். இந்தியாவின் அனைத்து பகுதியையும் தனக்கு சொந்தமாகவே நினைத்தார். இந்தியா முழுவதிலும் ஏழு பள்ளிகள் மாறியுள்ளார் அர்னாப். இறுதியாக ஜபல்பூரின் கேந்திரிய வித்யாலயாவில் சேர்ந்தார். அதன் பின் டெல்லியின் ஹிந்து கல்லூரியில் சமூகவியல் படித்தார். ஆக்ஸ்ஃபோர்டில் சமூக மானிடவியல் முடித்து, டெல்லி திரும்பியதும் சந்தையில் பணிக்கான வாய்ப்பு குறைவாக இருந்தால் வேலை தேடி கொல்கத்தா சென்றார். ’தி டெலிக்ராஃப்’ செய்தித்தாள் நிறுவனத்தில் சேர்ந்தது அர்னாபுக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஒன்பது மாதங்கள் அங்கே பணியாற்றினார். 

”செய்தி தொடர்பான பணியில் ஈடுபட விரும்பினேன். தொலைக்காட்சி துறையில் பணி தேடினேன். NDTV வளர்ச்சியடைந்து கொண்டிருந்த நேரம் அது. தினமும் தூர்தர்ஷனில் செய்தி நிகழ்ச்சி இடம்பெற்றது. நிருபர்களை தேடிக்கொண்டிருந்தனர். ’டிவி டுடே’-வில் தேர்வானேன். இருந்தும் அப்போதைய செய்தி எடிட்டர் அப்பன் மேனனை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் NDTV-ல் இணைந்துகொண்டேன். 

என்னை நிருபராக்கினார். தொகுப்பது, தகவலளிப்பது, எடிட் செய்வது, பின்னணிப்பணிகள், டெஸ்க் வேலை, நிகழ்ச்சிகளின் ப்ரொடக்‌ஷன் கையாள்வது, ஆராய்ச்சி, லாஜிஸ்டிக்ஸ் என அடுத்த ஒன்பதரை வருடங்கள் கடந்தது. அரசியலில் அதிக ஆர்வம் இருந்ததால் அதைச் சுற்றியே அனைத்தும் அரங்கேறியது,” என்றார் அர்னாப்.

ஒரு கடுமையான அரசியல் நிரூபராக மாறினார். சோனியா காந்தியுடனான நேர்காணலில் துவங்கி மற்ற சில முக்கிய பிரமுகர்களையும் சந்தித்தார். இதனிடையில் அவரது மனதில் ஒரு கனவு இருந்துகொண்டே இருந்தது. மக்கள் முக்கிய பிரமுகர்களை கேள்வியெழுப்ப வேண்டும். இதற்கு ஊடகம் பாரபட்சமின்றி அவர்களை இணைக்கவேண்டும். இதற்கான சாத்தியங்கள் குறித்து சிந்தித்துக்கொண்டே இருந்தார். 

”பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன். சிறந்த டிவி எப்படி உருவாகிறது என்பதை புரிந்துகொண்டேன். முழுமையாக இதில் இறங்க திட்டமிட்டேன். சொந்தமாக ஒரு சேனலை அறிமுகப்படுத்த சரியான வாய்ப்பைத் தேடினேன். இதுவே முதல் திட்டமாக (ப்ளான் A) இருந்தது.”

1999-ல் ஒரு சேனலின் எடிட்டராக தலைமையேற்க நினைத்தேன். ஆனால் 2002-ல் சொந்தமாக ஒரு சேனலை உருவாக்க நினைத்தேன், என்றார். 

தனிச்சையாக செயல்படவேண்டுமென்ற அவரது வலுவான விருப்பத்திற்கேற்ப எண்ணற்ற வாய்ப்புகளும் இருந்தது. சில வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அப்போது அவருக்கு ஹிந்தி தெரியாது என்பதால் ஹிந்தி சேனல்களின் வாய்ப்பை ஏற்க முடியவில்லை. அவரது கருத்தியலுடன் ஒன்றுபடாத காரணத்தால் சில வாய்ப்புகளை மறுத்துவிட்டார். எனினும் 2005-ல் டைம்ஸ் குழுவினர் வணிக சேனலை தொடங்கும் வாய்ப்பு குறித்து ஆராய்ந்தபோது அர்னாபை அணுகினர்.

 ”நாங்கள் சந்தித்து பேசினோம். அனைவரும் விவாதித்ததில் செய்தி சேனலை தொடங்க திட்டமிட்டோம். Reuters எங்களுக்கு PE முதலீடு செய்தது. மும்பை சென்றேன். பங்கு திரட்டும் முறைகள் குறித்து தெரிந்துகொண்டேன். கற்பதற்கான வாய்ப்பாக இது அமைந்தது. வணிக திட்டம் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை புரிந்துகொண்டேன். அந்த அனுபவம் சிறப்பாக இருந்தது. வெற்றிகரமாக நிதியும் கிடைத்தது.” என்றார்
image


அனுபவம்

சேனல் அறிமுகப்படுத்த பல திட்டங்கள் இருந்த போதும் அது சிறப்பாக அமையவில்லை என்றார் அர்னாப். “2006-ம் ஆண்டு மோசமான ஆண்டாகவே இருந்தது. எதுவும் சரியாக நடக்கவில்லை. ஆனால் 2007-ல் ஆண்டு நிலைமை தலைகீழாக மாறியது. சிறப்பான நிகழ்ச்சிகள். எனக்கேற்றவாறான சிறப்பான நேர்காணல்கள். சிறப்பான குழுக்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்தேன். அந்த நேரத்தில் கிட்டத்தட்ட 50,000 முதல் 60,000 நபர்களிடம் நேர்காணல் நடத்தினேன். வெவ்வேறு நிலையிலிருந்த 3,000 நபர்களுடன் பணியாற்றினேன். சர்வதேச ஊடகங்களுடனும் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. 

”2014-ம் ஆண்டில் மறுபடியும் எனக்குள் அதே நினைப்பு எழுந்தது. இவை அனைத்தையும் மற்றவர்களுக்காக என்னால் செய்யமுடிகிறதென்றால் நான் ஏன் எனக்காகவே செய்துகொள்ளக்கூடாது?” என்று நினைவுகூர்ந்தார்.

இந்த வெற்றிக்கதையில் பல வரையறுக்கப்பட்ட தருணங்கள் இருந்தது. இருப்பினும் ‘தி ந்யூஸ்ஹவர் டிபேட்’ வளர்ச்சி கிட்டத்தட்ட சேனலுடன் சேர்ந்தே ஒன்றாக நடைபெற்றது. இரண்டிற்கும் நேர்மறையான தொடர்பு இருந்தது எனலாம். ஒத்திசைந்த விவாதம் சார்ந்த அணுகுமுறையை NDTV-யில் பின்பற்றியது போலவே முதலில் ந்யூஸ்ஹவரிலும் பின்பற்றினேன். இந்த அணுகுமுறை எனக்கு வசதியாக இல்லை எனினும் அப்போது டிவியில் இப்படிப்பட்ட அணுகுமுறையே வழக்கத்தில் இருந்தது என்பதால் நான் அதையே தொடர்ந்தேன். 

அதன் பிறகு நிகழ்ச்சிகள் எனக்குள் பாதிப்பை உண்டாக்கியது. நாம் நம்பும் பிரச்சனைகள் மீது தெளிவான கடுமையான நிலையை எடுக்கவேண்டும் என்பதை உணர்ந்தேன். ஆகவே நான் நிகழ்ச்சிகளில் என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கைகளை சேர்க்கத் தொடங்கினேன். மக்கள் அதை வரவேற்றனர். நான் அதை எண்ணிக்கைக்காக செய்யவில்லை. பாதிப்பை ஏற்படுத்துவதற்காகவே செய்தேன். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் அதிகரித்தபோது மக்களுக்காக பேசும் செய்தி நிகழ்ச்சியின் தாக்கத்தைப் பார்த்தேன்.” என்றார்.

ஒரு தனிநபரின் இந்த நடவடிக்கையை பத்திரிக்கையாளர் சமூகம் உடனடியாக கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியது. உண்மையை அப்படியே வழங்கும் பத்திரிக்கைத்துறையை ஆதரிப்பவர்கள் ஒருபுறம். உண்மையை தெளிவாக்கி ஒரு நிலைப்பாட்டை அடையும் தனிநபர் மற்றொரு புறம் என இரண்டு குழுவாக உருவானது.

”உண்மையை கருத்துடன் இணைக்க விரும்புகிறேன். உண்மையை வெறுமனே தொகுக்க என்னால் முடியாது. அது பார்வையாளர்களுக்கு மதிப்புமிக்க பலன் எதையும் அளிக்காது. பத்திரிக்கை சமூகத்தினர் என்னுடைய இந்த அணுகுமுறையை ஒப்புக்கொள்ளவில்லை. என்னாலும் அவர்களது அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட 2008– 2009 முதல் என்னுடைய பத்திரிக்கை திறன் குறித்த அவர்களது மதிப்பீடு தேவையில்லை என்பதை உணர்ந்தேன். ஆகவே அவர்களிடமிருந்து விலகி நின்றேன். தற்போது ‘ரிபப்ளிக்’ என்ற என் தனிப்பட்ட சேனலை அறிமுகப்படுத்துவன் மூலம் முற்றிலுமாக விலகி இருக்கிறேன்.” என்றார்.

முக்கிய பிரமுகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது போலவே இவரது விவாதங்கள் இவரது முதலாளியிடமும் சலசலப்பை ஏற்படுத்தியது. ”அர்னாப்பின் ஸ்டைல் உலகெங்கிலும் இருப்பவர்களுக்குத் தெரியும்டமில் . டைம்ஸ் க்ரூப்பின் ஸ்டைலும் தெரியும். டைம்ஸ் க்ரூப்பின் ஸ்டைல் அர்னாப்பின் ஸ்டைல் அல்ல. இருதரப்பின் மனவேதனையை ஏன் மேலும் நீட்டிக்கவேண்டும்? பல மோசடிகளை நாங்கள் வெளிக்கொணர்ந்தோம் என்பதும் பல நிலைப்பாடுகளை எடுத்தோம் என்பதும் உங்களுக்கே தெரியும். அவை சேனலால் செய்யப்பட்டதே தவிர பேப்பரால் அல்ல. பாகிஸ்தானின் ராஜதந்திரத்தை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால் Aman Ki Asha பிரச்சாரத்தை நம்புவார்கள். 

”இருவரும் அவரவர் வழியில் பணியைத் தொடரும் நேரம் வந்துவிட்டது என்று நினைத்தேன். என்னுடைய பாணியில் பணியைத் தொடர பெரும் கார்ப்பரேட் குழுவின் பாரம்பரியம் எனக்குத் தேவையில்லை. அதனால் நான் என் வழியில் தொடர முடிவெடுத்தேன். என்னை நம்பும் மக்கள் ஆதரவு மட்டுமே எனக்குத் தேவைப்படும்.”
image


ரிபப்ளிக் உருவான கதை

நவம்பர் மாதம் அவரது மனைவியுடனும் மகனுடனும் பேசினார். மிக முக்கியமாக அவர் தனக்குள் நிறைய பேசிக்கொண்டார். ”இந்த முடிவினால் சில கேள்விகள் எழுப்பப்பட்டது. சரியான காரணத்திற்காக இதைச் செய்கிறோமா? தனிப்பட்ட ஆளுமை உணர்வை வெளிப்படுத்த இதில் ஈடுபடுகிறோமா? அல்லது அதைவிட உயர்ந்த நோக்கம் ஏதாவது உள்ளதா? அதாவது பத்திரிக்கை துறைக்கு எப்படிப்பட்ட பாரம்பரியத்தை விட்டுச் செல்லப் போகிறோம்? எப்படிப்பட்ட குழுவை ஒன்றிணைக்கப்போகிறோம்? 

என்னைப் பொருத்தவரை நான் இரண்டாவதாக குறிப்பிட்ட உயர்ந்த நோக்கமே இந்த முடிவிற்குக் காரணம். குழுவில் உள்ள அனைவரும் அணிதிரண்டு எதிர்க்கும் மாபெரும் சக்தியை எதிர்கொள்வோம். மாபெரும் சக்தியை விட சிறப்பாக சிந்தித்து செயல்படுவோம். முறையற்றதாகவோ அல்லது முட்டாள்தனமாக எடுத்த முடிவாகவோ தோன்றலாம். இருப்பினும் நாங்கள் நிச்சயம் வெல்வோம்.” என்றார்.

அவரது தரப்பிலிருந்து அவர் அமைதியான முறையிலேயே வெளியேறினார் என்பதை அழுத்தமாக பதிவுசெய்கிறார். ”நான் நிகழ்ச்சியை செய்யக்கூடாது என்றனர். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட அன்று என்னுடைய நிகழ்ச்சியை நடத்தினேன். அதன் பிறகு நடந்த ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் போன்றவை அதிக வரவேற்பை பெற்றது. ஏனெனில் பணமதிப்பிழப்பு குறித்த என்னுடைய பார்வை மிகத் தெளிவாக இருந்தது. அதற்கு பிறகு திடீரென்று ஸ்டுடியோவில் என்னை நுழைய வேண்டாம் என்றும் நிகழ்ச்சியை நடத்தவேண்டாம் என்றும் தெரிவித்தனர். நான் அதற்கும் சம்மதித்தேன்.” என்றார்.

இதில் பாரம்பரிய ஊடகங்கள் மிகப்பெரிய சக்தியாக (Goliath) பார்க்கப்படும்போது மக்களின் உரத்த குரலுடன் ஒரு அணியினர் (band of Davids) ஏன் ‘ரிபப்ளிக்கை’ உருவாக்க நினைக்கிறார்கள்? ஊடகத்தைச் சேர்ந்த பெரும் பகுதியினர் சமரசம் செய்துகொள்வதுதான் காரணம் என்கிறார் அர்னாப். 

”டெல்லியின் சில எடிட்டர்களின் வாழ்க்கைமுறை விசித்திரமாக உள்ளது. பண்ணைவீடுகளில் வாழ்கின்றனர். இதை நான் காழ்ப்புணர்வுடன் கூறவில்லை. ஒருவர் தனது சொந்த உழைப்பால் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே வாழ்க்கையை நடத்தவேண்டும். இது போன்றவர்களிடமிருந்து தள்ளியே இருக்கவேண்டும் என்றார் அர்னாப்.” 

”சில நிறுவனங்கள் அரசியல் கட்சிகளிடமிருந்து கூச்சமின்றி வெளிப்படையாகவே சன்மானங்கள் பெற்றுக்கொள்கின்றன. ஒரு நிறுவனம் மாநில அரசிடமிருந்து 50-100 ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொண்டுள்ளது. இவற்றை இலவசமாக பெற்றுக்கொண்டு நேர்வழியில் பத்திரிக்கை நடத்துகிறேன் என்று சொல்வதை நான் நம்பமாட்டேன் இவ்வாறு சமரசம் செய்துகொள்ளும் ஊடகங்கள் குறித்து அறியும் இளம் நிருபர்களின் ஊக்கம் குலைக்கப்பட்டு அவர்களது கருத்தியல் புதைக்கப்பட்டு விடுகிறது.” 

’ரிபப்ளிக்’ குறித்து அறிவித்தபோது அர்னாப்பிற்கு நிதியுதவி செய்தவர்களில் எம்.பி பொறுப்பிலுள்ள ராஜீவ் சந்திரசேகரும் ஒருவர். கருத்து வேறுபாடு காரணமாக அர்னாப் இது குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. “என்னுடைய முதலீட்டாளர்களிடம் கேள்வியெழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அவர்களிடம் நான் எவ்வித ஏற்பாடும் செய்துகொள்ளவில்லை. என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு முதலீட்டாளரும் என்னுடைய பார்வையாளர். என்னுடைய இதழியலில் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. மேலும் இது பொதுவாக வெளியிடப்படக்கூடிய ஆவணம். 

பல வருடங்களாக நஷ்டத்தை சந்தித்தபோதும் தொடர்ந்து இயங்கி வரும் நிறுவனங்களைப் போல என்னுடைய நிறுவனம் இல்லை. சேனல்கள் அவர்களது பணம் எங்கிருந்து வருகிறது என்பது குறித்த அறிவிப்பு கட்டாயம் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” 

”டெல்லியைத் தாண்டி கவனம் செலுத்துவதில்லை. ஊடகங்கள் டெல்லிப் பகுதியில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. பெங்களூரு, சென்னை போன்ற வளர்ந்துவரும் இகோசிஸ்டத்தில் பத்திரிக்கையாளர் கவனிக்கவேண்டிய பல நுணுக்கங்கள் உள்ளபோதும் அந்தப் பகுதிகளில் கவனம் செலுத்துவதில்லை. “

எங்களது சிறிய பெங்களூரு செய்திஅறையிலிருந்து நான் மக்களுடன் பேசியபோது அனைவரும் ஒரே கேள்வியை எழுப்பினர் – “ஏன் அனைத்து ஊடகங்களும் டெல்லியில் நடக்கும் நிகழ்வுகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்? நாங்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறோம்? இந்த பாகுபாடுகளை நான் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ரோட்டில் ஒரு சம்பவம் நடக்கும்போது அனைவரும் முலாயம் சிங் குறித்து அறிவிப்பார்கள். சென்னையில் ஜல்லிக்கட்டு, அம்மா மரணம் இவற்றைத்தாண்டி பல நிகழ்வுகள் உள்ளன. ஊடகங்களை கூட்டாச்சி முறையில் மாற்றவேண்டும்.” என்றார்.

அர்னாப், தான் யாரையும் எதிர்க்கவில்லை என்கிறார். பத்திரிக்கைத் துறையை ஒளிவுமறைவில்லாத ஒரு புதிய வடிவத்தில் உருவாக்க நினைக்கிறார். இது பல பதிப்பாளார்களுக்கு ஒரு இறுதி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

“மக்கள் எங்களை வரவேற்கும் விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஒரு ஊடக குழு ’எங்களை யாராலும் தகர்த்த முடியாது’ என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் நூறு வருடங்களாக செயல்பட்டுவரும் ஊடகம் என்றால் எங்களால் தகர்த்தப்படுவோம் என்று ஏன் அச்சப்படுகிறீர்கள்? என்று சுட்டிக்காட்டினார் அர்னாப்.

ஏப்ரல் மாதம் ’ரிபப்ளிக்’ அறிமுகப்படுத்தப்படும் என்கிற பயம் ஏற்பட்டதால், தோல்வியுற்று இதற்கு முன்பு இரண்டு முறை பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஒரு சேனலை ஒரு குறிப்பிட்ட ஊடக நிறுவனம் மறுபடி பெயர் மாற்றம் செய்துள்ளது என்கிற சந்தேகத்தை வெளிப்படுத்தினார் அர்னாப். 

“அந்த சேனல் இப்போது மூன்றாவது முறையாக தோல்வியடைந்துள்ளது. இவை தன்னைத்தானே அழித்துக்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகளாகும். சக்தி வாய்ந்த ஒரு போட்டியாளரை எதிர்ப்பதை விட்டுவிட்டு நம்மால் இயன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டும். நிலையாக இருப்பது குறித்து அவர்கள் சிந்திப்பதில்லை. இவர்ளது செயலைப் பார்க்கும்போது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.” என்றார்.

வளர்ச்சியை நோக்கி...

ஒரே நாளில் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க முடியாது. ஆனால் ‘ரிபப்ளிக்’ மொத்தம் 120 நாட்களில் அமைக்கப்படுகிறது. அவர்கள் ‘ரிபப்ளிக்கை’ அறிமுகப்படுத்த இன்னும் ஒரு மாத காலமே உள்ளது. தோல்வியுற்றிருக்கும் ஒரு சேனலை எடுத்து மறுப்ராண்ட் செய்யலாம். ஆனால் நாங்கள் சொந்தமாக உருவாக்கவே நினைக்கிறோம். மேலும் எங்களிடம் உலகத்தரம் வாய்ந்த விநியோகஸ்தர்கள் உள்ளனர். வாடிக்கையாளர்கள் எங்கள் சேனலுக்கு கட்டணம் செலுத்தவேண்டியதில்லை. பெரும்பாலான ஆங்கில சேனல்களுக்கு கட்டணம் செலுத்தவேண்டும். இதனால் அதிகம் பேரை சென்றடைவோம். எங்களைப் போல இதுவரை யாரும் அதிவேகமாக அறிமுகப்படுத்தியதில்லை, என்கிறார், 

ரிபப்ளிக் வலுவான டிஜிட்டல் பின்னணியை உருவாக்கிக் கொண்டிருந்தாலும் பல ஆண்டுகளாக இருந்து வருவதால் முதலில் டிவியில் கவனம் செலுத்தும் மாதிரியை உருவாக்குகிறார்கள் “டிஜிட்டல் அதிகம் ஊடுவியிருக்கும் மேற்கிலுள்ள வளர்ந்த சந்தைகளிலும் டிவிதான் தாக்கத்தை ஏற்படுத்துவது, மக்களை சென்றடைவது, வருவாய் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. உரையாடல்களை டிவியில் நிகழ்த்தி டிஜிட்டலில் சப்தத்தை அதிகரிக்கலாம் என்பதே திட்டமாகும்.” என்றார்.

ரிபப்ளிக் மக்களுக்கானது என்று விவரித்தார் அர்னாப். “சிலர் ‘நான் ரயில்வே அமைச்சகத்தை பார்த்துகொள்கிறேன் அல்லது வணிகத்தை பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லும் நாட்கள் மலையேறிவிட்டது. அந்த நாட்களில் தூதராக செயல்படும் நிருபர் தூதராக விரும்புவார், அரசியல் நிருபர் அரசியல்வாதியாக விரும்புவார், வணிக நிருபர் கார்ப்பரேட்டில் பணிபுரிய விரும்புவார். அப்படி ஒரு பாதையை நாங்கள் விரும்பவில்லை.“ 

எடிடோரியல் பகுதியில் இளமையானவர்கள், எதையும் பற்றிக்கொள்ளாமல் திறந்த மனதுடன் செயல்படுபவர்கள், டிஜிட்டல் நிபுணத்துவம் பெற்றவர்கள், அடுத்த ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு ஏதாவது புதுமையாக செய்யும் திறமையுள்ளவர்கள் போன்றவர்களே அணிதிரள்கின்றனர்.

தனது நோக்கம் லாபம் ஈட்டுவது அல்ல எனினும் நஷ்டமும் இல்லாமல் இருக்க விரும்புகிறேன் என்றார் அர்னாப். எனினும் அரசியல் விளம்பரங்களிலிருந்து விலகி இருக்கவே விரும்புகின்றனர். 

“நாங்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறோம். ஆனால் அதற்கு நிதி சுதந்திரமும் அவசியம். பெரும்பாலான மற்ற ஊடகங்கள் நிதித்திறன் இல்லாத காரணத்தால் அரசியல் விளம்பரங்களில் ஈடுபடுகின்றனர். ஒரு சிறந்த ப்ராடக்டை வழங்குவதன் வாயிலாகவே நாங்கள் வளர்ச்சியடைய விரும்புகிறோம். விளம்பரதாரர்களும் பார்வையாளர்கள்தான். எங்களது கண்டெண்ட் மூலமாகவே அவர்களை வரவேற்க விரும்புகிறோம்” என்றார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவுகள், ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் அதன் ஆச்சரிய முடிவுகள், குர்மெஹர் கவுரின் அறிக்கை போன்ற முக்கிய நிகழ்வுகள் குறித்த செய்திகளை தவறவிட்டு அர்னாப் அதிலிருந்து விலகி இருந்தாரா? 

உத்திரபிரதேச தேர்தல் முடிவுகள் வெளியானபோது அர்னாப் விநியோக ஒப்பந்தம் தொடர்பாக அஹ்மதாபாத் சென்றிருந்தார். ”என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று மற்றவர்களை கேட்டபோது எனக்கு விசித்திரமாக இருந்தது. சில நாட்கள் இப்படி விலகி இருந்ததாலும் ஒரு மாறுபட்ட கண்ணோட்டம் கிடைத்தது நன்றாகவே இருந்தது. நீங்கள் உங்களது பலம், பலவீனம் ஆகியவற்றை மதிப்பிடும் SWOT ஆய்வினை செய்துகொள்ளலாம். பதிலைப் பார்த்து எப்படிப்பட்ட குழப்பமான கலவையாக நாம் இருக்கிறோம் என்று தெரிந்துகொள்ளலாம்.” என்று சிரித்தார்.

அவர் இராணுவத்திற்கு ஆதரவானவர். இந்தியாவிற்கு அதரவானவர். “கலவரப் பகுதிகளில் இராணுவம் சட்ட ஒழுங்கை பாதுகாக்க சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவேண்டும். AFSPA-வை நீக்குவது என்னுடைய நோக்கமல்ல. காஷ்மீரில் இராணுவத்தை பலப்படுத்தவேண்டும் என்று விரும்புகிறேன். தியாகிகளின் குடும்பத்திற்கு உதவவேண்டும் என்று நினைக்கிறேன். நான் ஒரு இராணுவ அதிகாரியின் மகன். அங்கிருந்து தான் நான் உருவாவேன்.” என்றார்.

இதைக் கூறியதும் தான் எந்தவித அரசியல் கட்சிக்கும் ஆதரவாக பேசவில்லை என்கிறார். “ஒரு சமயம் ஹிந்தி ஊடகங்கள் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி குறித்து பேசிக் கொண்டிருந்தது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பலர் முன்னாள் பத்திரிக்கையாளர்கள் என்பது கூட காரணமாக இருக்கலாம். அனால் இதற்காக மட்டுமே ஒரு அரசியல் கட்சியை ஆதரிக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் ஏமாற்றமே மிஞ்சும். கடந்த இரண்டு வருடங்களில் மிகப்பெரிய மூன்று கட்சிகளை புறக்கணித்த ஒரே எடிட்டர் நான் மட்டும்தான்.” என்று கூறி முடித்தார்.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜால் ஷா

Add to
Shares
48
Comments
Share This
Add to
Shares
48
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக