பதிப்புகளில்

மேஜர் கவுஸ்துபின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று ஆயிரக்கணக்கானோர் மரியாதை!

YS TEAM TAMIL
14th Aug 2018
Add to
Shares
23
Comments
Share This
Add to
Shares
23
Comments
Share

29 வயதான மேஜர் கவுஸ்துப் ரானே ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள பந்திபுரா மாவட்டத்தின் எல்லைப் பகுதி அருகே தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிரிழந்தார். இந்த சண்டையில் உயிரிழந்த நான்கு ராணுவ வீரர்களில் இவரும் ஒருவர். தேசியக்கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டியில் மேஜர் ரானேவின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளால் மும்பை விமான நிலையத்தில் அவரது உடல் பெற்றுக்கொள்ளப்பட்டது.

image


இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற 69-வது குடியரசுதின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மேஜர் ரானேவிற்கு சேனா பதக்கம் வழங்கினார். மேஜர் ரானேவின் இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்படுவதற்காக அவரது உடல் ராணுவ வண்டியில் மிரா சாலையில் உள்ள ஷீட்டல் நகரில் இருக்கும் அவரது இல்லத்தை வந்தடைந்தது என ’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தெரிவிக்கிறது.

image


இந்த துயரச் சம்பவத்தால் மனம் கலங்கிய ஆயிரக்கணக்கானோர் மிராசாலையின் இருபுறமும் அணி வகுத்து நின்றனர். அவர் மீது மலர்கள் தூவியும், அவரை போற்றும் வகையில் கோஷங்களை எழுப்பியும், தேசியக் கொடியை அசைத்தும் இறுதி மரியாதை செலுத்தினர். அவரது இழப்பு அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.

பிரகாஷ் மற்றும் ஜோதி ரானே கவுஸ்துப்பின் பெற்றோர்கள். இவருக்கு காஷ்யபி என்கிற சகோதரியும் கனிகா என்கிற மனைவியும் அகஸ்தியா என்கிற இரண்டரை வயது மகனும் உள்ளனர்.

மேஜர் ரானே மும்பை மிரா சாலையில் உள்ள ஹை கிராஸ் கான்வெண்ட் மற்றும் ராயல் கல்லூரியில் பள்ளிப்படிப்பை முடித்தார். மும்பையின் மேற்கு புறநகர் பகுதியான தஹிசார் என்னும் இடத்தில் உள்ள சைலேந்திரா கல்லூரியில் பட்டப்படிப்பை மேர்கொண்டார் என ’தி க்விண்ட்’ தெரிவிக்கிறது.

image


பெற்றோருக்கு ஒரே மகனான மேஜர் ரானேவிற்கு ஆயுதப் படைகளில் சேரவேண்டும் என்பது சிறு வயது கனவாகும். புனேவில் ராணுவ பயிற்சி முடித்தார். பின்னர் 2011-ம் ஆண்டு சென்னை ராணுவ பயிற்சி அகாடமியில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்திய ராணுவத்தில் லெப்டினன்டாக நியமிக்கப்பட்ட மேஜர் ரானே கேப்டன் தகுதிக்கு பதவி உயர்த்தப்பட்டார். இந்த ஆண்டு துவக்கத்தில் 36-வது ராஷ்டிரிய துப்பாக்கிகள் படைப்பிரிவில் மேஜர் தகுதிக்கு பதவி உயர்த்தப்பட்டார். பணிக்குத் திரும்புவதற்கு முன்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பெற்றோரைச் சந்தித்து சிறிது நேரம் செலவிட்டுள்ளார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Add to
Shares
23
Comments
Share This
Add to
Shares
23
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக