பதிப்புகளில்

உலகின் இரண்டாவது இளம் ஆண்டிராய்ட் டெவலப்பர் ஆகி இருக்கும் 14 வயது மாணவர்!

20th Mar 2018
Add to
Shares
1.0k
Comments
Share This
Add to
Shares
1.0k
Comments
Share

மஹாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்தவர் 14 வயதான சுபம் பஞ்சால். இவர் சமீபத்தில் கூகுள் மற்றும் உடாசிட்டி (அமெரிக்கா) நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டாவது இளம் அசோசியேட் ஆண்டிராய்ட் டெவலப்பர் ஆகியுள்ளார்.

image


சான்றிதழுடன் கூடிய ஆண்டிராய்ட் டெவலப்பர் தேர்வு உலகம் முழுவதும் உள்ள ஆண்டிராய்ட் டெவலப்பர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

தானே போலீஸ் பள்ளியில் பள்ளியில் படித்த சுபம், ஒரு கோடிங் வகுப்பு வாயிலாகவே ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் டெவலப்மெண்ட் உலகிற்கு அறிமுகமானார். முதல் முறையாக அறிமுகமாகும் பலர் கோடிங் குறித்து அச்சம் கொள்கையில் சுபம் இதில் எண்ணற்ற வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்தார். சுபம் மிட் டே-க்கு தெரிவிக்கையில்,

"ஒரு பயனுள்ள செயல்முறையை உருவாக்குவதிலும் சிக்கலான பகுதியை மேம்படுத்துவதிலும் எனக்குக் கிடைத்த மகிழ்ச்சியே என்னைப் பெரிதும் கவர்ந்தது.”

சுபம் ஓராண்டில் 10 செயலிகளை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் தரவுகளை சேமிக்கும் முறையை எளிதாக்க ஒரு முழுமையான செயலியை உருவாக்கியுள்ளார். வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி கோட், டெபிட் / கிரெடிட் கார்ட் எண் போன்ற முக்கிய தகவல்களை சேமிக்க உதவும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த செயலி ஆதார் கட்டாயமாக்கப்பட்ட தற்போதைய காலகட்டத்திற்கு மாற உதவும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

சுபத்தின் அப்பா ஸ்டீல் உற்பத்தில் பிரிவில் பணியாற்றுகிறார். இவருக்கு கம்யூட்டர் பகுதியில் ஆர்வம் உள்ளது. சுபத்தின் அம்மா இல்லத்தரசி. இருவருக்குமே கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங் பின்னணி இல்லாததால் சுபம் தான் சந்தித்த பிரச்சனைகளை தானே சரிசெய்து கொள்ள வேண்டியிருந்தது. சுபம் மீடியம்-க்கு தெரிவிக்கையில்,

யூட்யூப் வாயிலாகவும் ஸ்டேக் ஓவர்ஃப்ளோ வாயிலாகவும் கோடிங் கற்கத் துவங்கினேன். என்னுடைய ஜாவா ப்ரோக்ராமிங்கில் பிழைகள் வந்தபோதெல்லாம் இதுவே எனக்கு உதவியது. தேர்வு முறை குறித்து எனக்கு தெரியாது என்பதால் சீனியர் அசோசியேட் ஆண்டிராய்ட் டெவலப்பரான ஜெஃபி லாசர் தேர்வு செயல்முறை குறித்து வழிகாட்டினார். இந்த வழிகாட்டல் எனக்கு பெரிதும் உதவியது.

இணையத்தில் தீவிரமாக ஆய்வு செய்த பிறகு சுபத்திற்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தது. ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா அசோசியேட் டெவலப்பர் தேர்வு அல்லது கூகுளின் அசோசியேட் ஆண்ட்ராய்ட் டெவலப்பர் தேர்வு. ஜாவா புதிது என்பதால் கூகுள் வழங்கும் தேர்வை தேர்ந்தெடுக்க தீர்மானித்தார்.

தேர்விற்கான அவரது ப்ராஜெக்டில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒலிக்கும் வகையிலான அலாரம், தகவல்கள் பட்டியலிடப்பட்டு காட்டப்படும் விதம் (RecyclerView-defined list), ஜேஎஸ்ஓஎன் பார்சிங், எஸ்க்யூலைட் தரவுத்தளம் போன்றவற்றை உருவாக்க வேண்டியிருந்தது. ப்ராஜெக்டை செய்து முடிப்பதில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார். இதற்கான காலக்கெடு 24 மணி நேரமாக இருந்தபோதும் 13 மணி நேரத்தில் தேர்விற்கான ப்ராஜெக்டை வெற்றிகரமாக செய்து முடித்தார்.

சுபம் தற்போது செயற்கை நுண்ணறிவு குறித்த பயிற்சியில் மும்முரமாக உள்ளார். ராக், பேப்பர், சிசர் விளையாட்டு செயலியை உருவாக்கவும் இதைப் பயன்படுத்தியுள்ளார். வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பகுதியில் செயல்பட விரும்புகிறார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Add to
Shares
1.0k
Comments
Share This
Add to
Shares
1.0k
Comments
Share
Report an issue
Authors

Related Tags